மக்களே பதிவுலகில் வலம் வந்து நெடு நாட்கள் ஆகிவிட்டபடியால் இதனை பற்றி யாரேனும் எழுதி இருக்கிறார்களா என்று தெரியவில்லை. இருந்தாலும் என் பங்கிற்கு இவரை பற்றி சொல்லி விடுகிறேன். இவர் தான் "Quick Gun முருகன்".
தென் இந்திய கௌ பாயான குவிக் கன் முருகனுக்கும், ரைஸ் ப்ளேட் ரெட்டியான நாசருக்கும் இடையே நடக்கும் போராட்டமே கதை. குவிக் கன் முருகனாக நடித்துருப்பது டாக்டர் ராஜெந்திர பிரஸாத் என்று IMDB கூறுகிறது. இவரை பார்த்தால் பழைய கமல், ரஜினி படங்களில் வில்லனாக நடித்தவர் போல தோன்றுகிறது. இதில் மேங்கோ டோலியாக நம் தொடையழகி ரம்பாவும் இருக்கிறார்.
Fox Studios தயாரிப்பில் இது ஹிந்தியில் வெளியிடப்படும் என்று நினைக்கிறேன். Youtube இல் தேடிப் பார்த்ததில் ஒரு சில தமிழ் வசனங்களையும் கேட்க முடிகிறது. Youtube இல் இருக்கும் பல படக் காட்சிகள் வயிற்றை பதம் பார்க்கின்றன. படம் அட்டகாசமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி வெளியீடு என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.
Promo க்கள் எல்லாம் நகைச்சுவையுடன் இருந்தாலும் படம் ஏதேனும் ஒரு ஸீரியஸான விஷயத்தை பற்றி கூறும் என்றே நினைக்கிறேன். தென் இந்திய கௌ பாய் என்பது ஒன்றும் நமக்கு புதிது இல்லை. தலைவரின் தாய் மீது சத்தியம் போன்ற படங்கள் அதற்கு உதாரணம். இருந்தாலும் இந்தப் படம் ஒரு விதமான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
முன்னரே லவ் ஆஜ் கல், நியூ யார்க், உன்னை போல் ஒருவன், கந்த சாமி, ஆயிரத்தில் ஒருவன் என்று நீண்டு கொண்டிருக்கும் பட்டியலில் இதுவும் சேர்க்கப்படுகிறது. நான் இருக்கும் இடத்தில் படம் வெளி வருமா என்பது தெரியவில்லை. வெளியிடப்படாவிட்டால் DVD யில் மட்டுமே பார்க்க முடியும்.
படம் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.