Friday, May 20, 2011

வாழ்த்துக்கள்

ஐம்பத்தெட்டாவது தேசிய விருதுகள் பெற்றவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் நடிகர் தனுஷ் அவர்கள் சிறந்த நடிகராக ஆடுகளம் படத்தில் நடித்ததற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தென்மேற்கு பருவக் காற்று படத்தில் நடித்ததற்காக திருமதி. சரண்யா பொன்வண்ணன் அவர்களுக்கும், ஆடுகளம் இயக்குனர் வெற்றி மாறன் அவர்களுக்கும் இன்னும் பலருக்கும் விருது கிடைத்துள்ளது. எந்திரன் இரண்டு விருதுகளையும், ஆடுகளம் ஆறு விருதுகளையும் பெற்றுள்ளன.

அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Friday, May 13, 2011

தேர்தல் கார்ட்டூன்ஸ்

நல்லதொரு தொடக்கம்


2011 ஆம் ஆண்டு தமிழ்நாட்டு சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், ஒன்றே ஒன்று தான் சொல்ல தோன்றுகிறது.

பணம், இலவசங்கள் அனைத்தையும் வாங்கிக் கொண்டு ஓட்டை விற்கும் முதுகெலும்பில்லாதவன் தமிழன் இல்லை என்பது தான் அது. இந்த தேர்தலில் மக்கள் மிகவும் சரியானதொரு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். பண பலம், ஆட்சி பலம் அனைத்தையும் கடந்து அதிமுக இந்த வெற்றியை பெற்றுள்ளது.

இந்த தேர்தலில் பின் வரும் காரணிகளே வெற்றியை தீர்மானிக்கும் என்று நான் முன்னர் ஊகித்தேன்.

1. மின் வெட்டு
2. 2G ஊழல்
3. விலைவாசி உயர்வு
4. தமிழக மீனவர்கள் பலி
5. சட்டம் ஒழுங்கு
6. தமிழ் சினிமாவில் குடும்ப ஆதிக்கம்
7. மணல் கொள்ளை

சுமார் 80 சதவிகித ஓட்டு பதிவு என்ற உடனேயே எனக்கு எனது எண்ணம் வலுப்பட்டது.

ஆனாலும் 140 இடங்கள் அதிமுக விற்கு கிடைக்கும் என்றே நான் நினைத்தேன். அதிலும் முக்கிய திமுக அமைச்சர்கள் பெரும்பாலானவர்கள் தோல்வி அடைவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இன்று திமுக பிரதான எதிர் கட்சி என்ற அந்தஸ்தையும் தேமுதிக விடம் இழந்து விட்டது. சென்னை, திருச்சி, மதுரை, கோவை போன்ற நகரங்களில் அதிமுக பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

குறிப்பாக கலைஞர், ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன், வடிவேலு, குஷ்பு, சிதம்பரம், ஜெயந்தி நடராஜன், வாசன், பீட்டர் அல்போன்ஸ், சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்றவர்களின் பிரச்சாரம், திமுக ஊடகங்கள் செய்த விஜயகாந்தின் மீதான தாக்குதல் போன்ற பலவற்றையும் மீறி கிடைத்திருக்கும் இந்த வெற்றி சதாரணமானது அல்ல. அதிமுக தரப்பில் ஜெயலலிதா மற்றும் தா. பாண்டியன் தவிர்த்து வேறு ஒருவரின் பேச்சையும், பிரசாரத்தையும் காது கொடுத்து கேட்க முடியாது.

அவ்வாறு இருந்தும் மக்கள் அதிமுகவிற்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் அவர்களுக்கு திமுக ஆட்சி மீதிருந்த வெறுப்பே காரணம்.

நிச்சயமாக அதிமுக வின் இந்த அமோக வெற்றி எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. திமுக ஆட்சி நிச்சயமாக போக வேண்டிய ஆட்சி.

1. 2G ஊழல் எல்லாம் நகரத்தில் தான் எடுபடும்.
2. கிராமத்தில் ஒரு ரூபாய் அரிசியை வைத்தே ஜெயித்து விடலாம்.
3. நகரத்தில் ஒருவரும் வந்து ஓட்டு போடப்போவதில்லை.
4. இலவசங்களையும், பணத்தையும் கொடுத்து ஓட்டை விலைக்கு வாங்கிவிடலாம்.
5. மின் வெட்டிற்கு காரணம் முந்தைய அதிமுக ஆட்சி தான் என்று மக்களை நம்ப வைத்து விடலாம்.

என்றெல்லாம் திமுக தலைமை நினைத்ததை பொய்யாக்கி விட்டார்கள் தமிழ் மக்கள்.

திருக்குறளுக்கு உரை எழுதிய கலைஞர், பின்வரும் குறள்களை ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு முறையாவது படித்திருக்கலாம்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில்.


எது எப்படியோ திமுக வின் இந்த தோல்வியிலிருந்து அடுத்து வரப்போகும் ஆட்சியாளர்கள் பாடம் கற்று, நல்லாட்சி தருவார்கள் என்று நம்புவோம்.

வாழ்த்துக்கள் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களே. வாருங்கள், நல்லாட்சி தாருங்கள்.

பின்னர் சேர்த்தது: இங்கு அமெரிக்காவில், 10 மணிநேர பின்னடைவில் தான் செய்திகள் ஒளிபரப்பப்படும். இப்பொழுது தேர்தல் முடிவுகள் தெரிந்த நிலையில், நக்கீரன் கோபால் கலைஞர் டிவியில் தங்களது தேர்தல் கணிப்புகள் தான் சிறந்தது, திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று வடிவேலு ரேஞ்சிற்கு காமெடி செய்து கொண்டிருக்கிறார்.

Sunday, May 08, 2011

வாழ்க்கை பாடம்

உச்சத்தில் நின்று நொடிப் பொழுதில்
பாதாளம் பாயும் அருவியை போல
வெற்றியின் விளிம்பில் நின்று விட்டு
கண் சிமிட்டும் நேரத்தில் தோல்வியில் உழல்கிறேன்
கேள்வி கேட்பார் இல்லை பதில் சொல்வார் பலருண்டு
கேள்வியே இல்லாமல் பதில் எவ்வாறு வந்தென்று வினவினால்
உன் நிலையே கேள்விக்குறி தான் இனி என்று நகைக்கிறார்கள்
என் மீது உரிமை போராட்டம் நடக்கிறது
சில நேரம் இவரிடம் இருக்கிறேன்
சில நேரம் அவரிடம் இருக்கிறேன்
என் கண்மணிகள் நிலை அந்தோ பரிதாபம்
நான் நம்பி கைவிட்டவர்கள் பலருண்டு
என்னால் கைவிடப்பட்டவர்கள் யாரும் இல்லை
ஆனாலும் இன்று என்னை நம்புவோர் அரிதாகி விட்டனர்
பல்லாயிரம் பேருக்கு வாழ்க்கையாகி இருக்கிறேன்
இன்று சிலருக்கு செய்தியாகி தவிக்கிறேன்
என்னிடம் இருந்த போதி மரத்தில் பலர் ஞானம் பெற்றனர்
அம்மரத்தினால் பயனில்லை என்று இன்று தான் நான் கற்றேன்
பலருக்கு பாடம் சொன்ன பள்ளி நான்
வாழ்க்கை பாடத்தை நான் மறந்த நிலை ஏன்?
Thursday, May 05, 2011

நிழலாய் துரத்தும் நிஜங்கள்


என் பெயர் சிவநேசன். என்னை நீங்கள் எங்கும் தேட வேண்டியதில்லை. பேரூந்தில், ரேஷன் கடையில், ரங்கனாதன் தெருவில், அரசு அலுவலகங்களில் நீங்கள் பார்த்தும் பார்க்காமல் போகும் சாமான்யன் தான் நான். என்னை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள தேவை ஒன்றும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. நன்றாக குடித்துவிட்டு, கொத்து பரோட்டா சாப்பிட்டுவிட்டு, பின்னர் வாசனை தெரியாமல் இருக்க ஆஃப் பாயிலை உடைத்து சாப்பிட்டு விட்டு, உயரமான படிகளில் ஏறி இருக்கிறீர்களா? அப்பொழுது வயிற்றை பிரட்டிக் கொண்டு வாந்தி வருவது போல இருக்கும், ஆனால் வந்து தொலையாது. வாந்தி எடுத்து தொலைத்து விட்டால் நன்றாக இருக்கும் என்ற நிலையில் வாயில் கை விட்டு எடுத்து விடும் ஒரு விதமான மனோ நிலையில் தான் நான் இப்பொழுது இருக்கிறேன். அதனால் தயவு செய்து என்னை பற்றி நான் சொல்வதை கேட்டு விட்டு செல்லுங்கள்.

எனக்கு அப்பொழுது 11 அல்லது 12 வயதிருக்கும். எனது தந்தையுடன் ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். சென்னை மைலாப்பூரில் இருக்கும் ஏதோ ஒரு திருமண மண்டபம் என்பதாக நினைவு. வழக்கம் போல மண்டபத்தில் இருக்கும் என் வயதொத்த குழந்தைகளுடன் திருமண மண்டபத்தின் மாடியில் இருக்கும் சாப்பாட்டு கூடத்தில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது திடீரென்று பந்து ஒன்றிருந்தால் நன்றாக விளையாடலாம் என்ற எண்ணம் உதிக்கவே எனது தந்தையிடம் சென்று இரண்டு ரூபாய் பணம் பெற்று பந்து ஒன்று வாங்க பக்கத்தில் இருந்த கடைக்கு சென்றோம். பந்தினை வாங்கி விட்டு திரும்புகையில் கடைக் காரர் எனக்கு மட்டும் இரண்டு சாக்லேட்டுகள் அளித்து விளையாடிய பிறகு கடைக்கு வர சொன்னார். நானும் சிறிது விளையாடிய பின்னர் அவரது கடைக்கு சென்றேன். உள்ளே என்னை அழைத்த அவர் சிறிது நேரம் என்னை பற்றியும் எனது தந்தை மற்றும் குடும்பத்தினரை பற்றியும் அழகான ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டார். மெட்ரிகுலேஷன் பள்ளியிலேயே சிறு வயது முதல் படித்துக் கொண்டிருந்ததால் அவரது கேள்விகளுக்கு நானும் ஆங்கிலத்திலேயே எளிதாக விடையளித்துக் கொண்டிருந்தேன். சிறிது நேரம் கழித்து தனது கையை எடுத்து எனது தொடை மீது வைத்த அவர் அதனை தடவிய படியே எனக்கு ஒரு முத்தம் கொடுத்தார். எனது தாயார் கூட எனது உதட்டில் அது வரை முத்தம் இட்டதில்லை. இது என்னை என்னவோ செய்தது. பிறகு அவர் எனது கையை எடுத்து அவரது வேட்டியின் மீது வைத்துக் கொண்டார்.

எனக்கு உடனே அங்கிருந்து எழுந்து போய்விட வேண்டும் என்று தோன்றியது. அவர் ஏதோ தவறு செய்கிறார் என்றும் அவர் நல்லவர் இல்லை என்றும் மனம் கூறியது. ஆனாலும் அங்கிருந்து நான் கிளம்பவில்லை. அது ஏன் என்று இப்பொழுது யோசித்தாலும் விடை தெரியவில்லை.

எனது குழப்பத்தினை சரியாக புறிந்து கொண்ட அவர் (அவர் என்ன அவர். குழந்தையை புணரும் மிருகத்திற்கு என்ன மரியாதை தேவை இருக்கிறது?) அவன் அதன் பிறகு சிறிது கடையின் வாசலை மூடிவிட்டு என்னை உள்ளே அழைத்து சென்று இயங்க தொடங்கினான். சிறிது நேர இயக்கத்திற்கு பிறகு அவனது பசி அடங்கியதும் எனது கையில் இன்னும் இரண்டு சாக்லேட்டுகளை கொடுத்து என்னை அனுப்பி வைத்தான்.

எனக்கோ வலியுடன் கலந்த முதல் விந்து வெளியேற்றம் சொல்ல முடியாத உணர்ச்சிகளை தருவித்தது. வெளியே சொன்னால் வெட்க கேடு. அடுத்த நாள் நானே அவனது கடைக்கு தனியாக சென்றேன். எனது நல்ல நேரமோ என்னவோ அவன் கடை திறக்கவில்லை.

அதன் பிறகு பல தனித்த இரவுகளில் அதனை நினைத்துக் கொண்டே உறங்கி இருக்கிறேன். இது நடந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கடந்த பின்னும் அந்த ஒரு நாள் உறவின் நினைவுகள் என்னை நிழல் போல துரத்திக் கொண்டிருந்தன.

ஆனால் இது எதுவுமே எனது நல்லொழுக்கத்தையோ அல்லது படிப்பினையோ பாதிக்கவே இல்லை. கடவுளின் அருள் என்று தான் நான் நினைக்கிறேன்.

பின்னர் நான் பத்தாவது வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது NTSC தேர்வு எழுத சென்னை செல்ல வேண்டி இருந்தது. என்னுடன் நன்றாக படிக்கும் சில மாணவர்களும் இரு ஆசிரியர்களும் பயணம் செய்தனர். அன்று இரவு நான் வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த உணவினை உண்ட பின்னர் கை கழுவுவதற்காக செல்லும் பொழுது ஒருவன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தான்.

என்ன நினைத்தானோ தெரியவில்லை என்னிடம் வந்து எனது பெயரினை கேட்டான். நான் சொன்ன உடன் சரி என்று கூறி விலகி சென்றான். எனக்கு ஒன்றுமே புறியவில்லை. சிறிது நேரம் கழித்து நான் சிறுநீர் கழிப்பதற்காக வந்தேன். அப்பொழுதும் அங்கேயே நின்று கொண்டிருந்தவன் அப்பா அம்மா அனைவரும் தூங்கி விட்டார்களா என்று வினவினான். நான் அதற்கு பெற்றோர்கள் வரவில்லையென்றும் ஆசிரியர்களுடன் வந்திருக்கிறேன் என்றும் கூறினேன்.

உடனே அவன் எனது கை பிடித்து கழிவறைக்குள் சென்றான். எனக்கு உடனே அவன் என்ன செய்யப் போகிறான் என்பது விளங்கி விட்டது. எனது மனதினுள் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தூங்கிக் கொண்டிருந்த மிருகம் விழித்துக் கொண்டது.

சுமார் அரை மணிநேரத்திற்கு பின்னர் வெளியே வந்தோம். வந்த உடன் ஒன்றும் நடக்காததை போல அவன் சென்று படுத்து உறங்க தொடங்கினான். ஆனால் எனக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சியினை சொல்ல வார்த்தைகள் இல்லை. வேகமாக சென்று எனது இடத்தில் படுத்து அழ தொடங்கியவன் அழுகையினை நிறுத்தவே இல்லை. அழுது அழுது முகம் வீங்கி அய்யோ அதனை எப்படி கூறுவேன் சுமார் மூன்று மணிக்கு வண்டியின் வாசலுக்கு சென்று தற்கொலை செய்யவும் துணிந்தேன். ஆனால் எனக்கு அதற்கான உறுதி வரவில்லை. பயந்து பின்வாங்கி விட்டேன். எதிர் பார்த்தது போலவே அந்த தேர்வில் என்னால் பெரிதாக ஒன்றும் மதிப்பெண்கள் வாங்க முடியவில்லை.

பின்னர் 11 ஆம் வகுப்பில் படிக்கும் பொழுது ஒரு நாள் எனது ஆசிரியர் AIDS பற்றிய விழிப்புணர்வு பாடம் ஒன்றை நடத்தினார். மாணவர்களுக்காக பல நல்ல கருத்துக்களை பாடத்தினூடே சொல்லும் தாவரவியல் ஆசிரியர் அவர். அதில் அமெரிக்க ஆண் ஓரினசேர்க்கையாளர்கள் மூலமே AIDS பரவ தொடங்கியது என்று அவர் குறிப்பிட்டதை தொடர்ந்து நான் அடைந்த பீதிக்கு அளவே இல்லை.

எனக்கு அந்த நோய் வந்து விட்டது என்றே முடிவு செய்து பேய் அரைந்தது போல வீட்டிற்கு சென்றேன். வீட்டில் பயத்தில் உளறத் தொடங்கினேன். பள்ளியில் நடந்த சம்பவங்களை பற்றி அறிந்த எனது தந்தை எனது பள்ளியில் அவருக்கு இருந்த செல்வாக்கால் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தார். மாணவர்களுக்கு தேவையில்லாததை கூறி அவர்களை பீதியடைய செய்தமைக்காக அவருக்கு கடும் தண்டனை வழங்க பட்டது. இது எனது மன உளைச்சலை மேலும் அதிகமாக்கியது.

யாருக்கு தெரியாவிட்டாலும் எனது தவறுகள் கடவுளுக்கும் எனது மனசாட்சிக்கும் தெரியும் அல்லவா. கடவுளையும் மனசாட்சியையும் ஏமாற்ற முடியாதே. அதன் பிறகு ஒவ்வொரு முறை அந்த ஆசிரியரை பார்க்கும் பொழுதும் எனது குற்ற உணர்ச்சியும் மன உளைச்சலும் பல மடங்கு அதிகரித்து ஒருவிதமான மன அழுத்தத்திற்கு ஆளானேன்.

இவ்வளவு நடந்தும் எனது படிப்பு சிறிதும் பாதிக்கப்படவில்லை. அதற்கு கடவுளுக்கு நன்றி கூறியே ஆக வேண்டும். 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் மூன்றாவதாக தேர்ச்சி பெற்றேன். தமிழகத்தின் சிறந்த கல்லூரி ஒன்றில் பொறியியல் படிப்பில் சேர்ந்தேன்.

சேர்ந்த பின்பும் எனது கடந்த கால நினைவுகளினால் ஆண் நண்பர்களுடன் பேசும் பொழுது ஏற்படும் ஒரு விதமான கிளர்ச்சியினை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. ஆனாலும் முன் போல தவறுகள் ஏதும் நடக்கக் கூடாது என்ற காரணத்தினால் ஆண் நண்பர்களுடன் பேசுவதை கூட தவிர்த்து வந்தேன். இயல்பாகவே இருக்கும் கூச்சத்தின் காரணமாக பெண்களுடன் பேசுவதும் கிடையாது. இதனால் 'Psycho' என்றும் 'பருப்பு' என்றும் இன்னும் பல பட்டப் பெயர்கள் என்னை வந்தடைந்தன. எதற்கும் நான் கவலைப் படவில்லை.

ஒரு வழியாக படிப்பினை நல்லபடியாக முடித்து ஹைதராபாத்தில் இருக்கும் பெரிய நிறுவனம் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கும் நன்றாக உழைத்து ஆறே வருடங்களில் மிகப் பெரிய பதவிக்கு உயர்ந்தேன். வீட்டில் பெற்றோர்கள் திருமணத்திற்கு என்னை கட்டாயப்படுத்தினர். 29 வயது வரை சமாளித்த என்னால் அதற்கு பின்னும் எனது பெற்றொர்களை சமாளிக்க இயலவில்லை. அவர்களிடம் உண்மையை சொல்ல வழி இல்லாமல் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். அது தான் நான் செய்த பெரும் தவறானது.

திருமணத்திற்கு பின்னர் எனக்கு தாம்பத்திய உறவில் எந்த ஒரு ஈடுபாடும் இல்லாமல் போனது. இயல்பான ஆசைகளுடன் என்னை திருமணம் செய்து கொண்ட என்னவளோ (அவளது மலத்தில் ஒரு புழுவாக அடுத்த பிறவியில் நான் பிறக்கலாம்.) சுமார் இரண்டாண்டுகள் வரை அவளால் ஆன அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டவள் அதன் பின்னர் விதியை நொந்து தனது அலுவலில் அதிக ஆர்வம் காட்டத் தொடங்கினாள்.

இப்படியாக திருமணம் ஆகி சுமார் 8 வருடங்கள் கடந்து விட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பரஸ்பர நல விசாரிப்புகளுக்கிடையே "எப்பொழுது குழந்தை?" என்ற கேள்வி வரும் பொழுதெல்லாம் ஏதோ ஒன்று கூறி சமாளித்து ஏதோ வாழ்க்கை அதன் போக்கில் போய்க்கொண்டிருக்கும் பொழுது தான் அந்த நிகழ்வு நடந்து என்னை முற்றிலும் ஒடுக்கிவிட்டது.

வாழ்க்கை இப்படியே போய்க்கொண்டிருக்க முடியாது என்பதால் எனது மனைவிக்கு தெரியாமல் ரகசியமாக மன நல மருத்துவரை அனுகத் தொடங்கினேன். ஆறு மாதங்களில் எனது மனதில் சிறிது மாற்றம் ஏற்பட்டது. மூலையில் எங்கோ நம்பிக்கைப் பூ பூக்கத் தொடங்கியது. வாழ்வில் ஒரு பிடிப்பு ஏற்பட்டது. மன உளைச்சல் பெருமளவு குறைந்தது.

அது ஒரு அழகான மாலைப் பொழுது. எனது அலுவல் நண்பரின் குழந்தைக்கு பிறந்த நாள் விழா. உவப்புடன் விழாவில் கலந்து கொண்டு அனைவரும் குழந்தையை வாழ்த்திக் கொண்டிருக்கும் வேளையில் எனது மனைவியை பார்க்கவே கூடாத நிலையில் பார்த்து விட்டேன். அதிக வெளிச்சம் இல்லாத இருட்டான கார் நிறுத்தத்தில் அவளது மற்றொரு அலுவல் நண்பருடைய நெருக்கமான அணைப்பில் சில முத்தங்களை பரிமாறிக் கொண்டிருந்த நிலையில் அவளை பார்த்து விட்டேன். எனது நிலை எப்படி இருந்திருக்கும் என்று நீயே ஊகித்துக்கொள்.

அந்த நிலையிலும் என்னால் அவளை குறை கூற இயலவில்லை. தவறு முழுதும் என் மீது தான் என்பதே உண்மையல்லவா. நல்ல வேளை நான் பார்த்ததை அவள் பார்க்க வில்லை. பார்த்திருந்தால் அவள் குற்ற உணர்ச்சியில் குன்றிப் போயிருப்பாள். இவ்வளவு நடந்தும் நான் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முன் போலவே எனது வாழ்க்கை போய்க்கொண்டிருக்கிறது. மன நல மருத்துவரை அனுகுவதை மட்டும் நிறுத்தி விட்டேன். இனி அதனால் என்ன பயன்?

Life, as Kennedy noted, is unfair.