Sunday, May 08, 2011


வாழ்க்கை பாடம்

உச்சத்தில் நின்று நொடிப் பொழுதில்
பாதாளம் பாயும் அருவியை போல
வெற்றியின் விளிம்பில் நின்று விட்டு
கண் சிமிட்டும் நேரத்தில் தோல்வியில் உழல்கிறேன்
கேள்வி கேட்பார் இல்லை பதில் சொல்வார் பலருண்டு
கேள்வியே இல்லாமல் பதில் எவ்வாறு வந்தென்று வினவினால்
உன் நிலையே கேள்விக்குறி தான் இனி என்று நகைக்கிறார்கள்
என் மீது உரிமை போராட்டம் நடக்கிறது
சில நேரம் இவரிடம் இருக்கிறேன்
சில நேரம் அவரிடம் இருக்கிறேன்
என் கண்மணிகள் நிலை அந்தோ பரிதாபம்
நான் நம்பி கைவிட்டவர்கள் பலருண்டு
என்னால் கைவிடப்பட்டவர்கள் யாரும் இல்லை
ஆனாலும் இன்று என்னை நம்புவோர் அரிதாகி விட்டனர்
பல்லாயிரம் பேருக்கு வாழ்க்கையாகி இருக்கிறேன்
இன்று சிலருக்கு செய்தியாகி தவிக்கிறேன்
என்னிடம் இருந்த போதி மரத்தில் பலர் ஞானம் பெற்றனர்
அம்மரத்தினால் பயனில்லை என்று இன்று தான் நான் கற்றேன்
பலருக்கு பாடம் சொன்ன பள்ளி நான்
வாழ்க்கை பாடத்தை நான் மறந்த நிலை ஏன்?




0 Comments: