Wednesday, August 29, 2012

பொடிமாஸ் - 08/29/2012

பதிவர் சந்திப்பு நன்றாக நடந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது. இனி வரும் காலங்களின் இது மாதிரியான சர்ச்சைகள் ஏற்படாமல் பதிவர் சந்திப்புகள் நடக்கும் என்று நம்புவோம். இந்த சந்திப்பினை மிகவும் நன்றாக நடத்தி முடித்த பதிவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.


சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. கொலராடோவில் தொடங்கியது, விஸ்கான்ஸின் சீக்கிய படுகொலை, நியூயார்க் எம்பயர் ஸ்டேட் பில்டிங் படுகொலை, பால்டிமோர் துப்பாக்கி சூடு என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புவோம். ஆனால் இவை அனைத்திலுமே காவல் துறையினர் தங்கள் உயிரை பெரிதாக நினைக்காமல் போராடி துப்பாக்கி சூடி நடத்தியவர்களை கொன்றிருக்கிறார்கள் இல்லை உயிருடன் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.


அமெரிக்காவில் பிரபலமான சிபோட்லே மெக்ஸிகன் உணவகத்தில் பில்லை ரவுண்ட் ஆஃப் செய்யும் பொழுது அதிக தொகைக்கு செய்கிறார்கள் என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது நீங்கள் செலுத்த வேண்டிய தொகை $9.24 என்றால் உங்கள் பில் $9.25 என்று காட்டும். இதை பலரும் ஆட்சேபிக்கிறார்கள். நம்ம கேபிள் சங்கர் உணவகத்தில் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக சண்டையிடும் பொழுது அவரை பற்றி கேவலமாக பதிவுகளில் திட்டியவர்கள் இனி அமெரிக்கர்களும் அதனை செய்வதால் இதை ஒரு ஸ்டேட்டஸ் ஸிம்பலாக கருத தொடங்குவார்களோ? எனது நிலை இதில் இது தான், "நமது காசு, ஒரு பைசாவோ கோடி ரூபாயோ, நாமாக விரும்பி கொடுக்காமல் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ அவர்களாகவே எடுத்தால் அது திருட்டு தான்."


சமீபத்தில் நான் அதிகம் கேட்பது முகமூடி படத்தின் "வாய மூடி சும்மா இருடா" பாடல் தான். மதன் கார்க்கி யின் வரிகள் ஆலாப் ராஜுவின் குரலில் காதில் தேனாக பாய்கிறது.

கீழே உள்ள வரிகள் ஒரு உதாரணம்.

கன்னம் சுருங்கிட நீயும்;
மீசை நரைத்திட நானும்;
வாழ்வின் கரைகளைக் காணும்;
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும் அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

நாளை மறுநாள் இங்கே படம் வெளியாகிறது. வார இறுதியில் கட்டாயம் பார்த்து விடுவேன். படம் மொக்கையாக இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும்.


டான்ஸ் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டதற்காக தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் 17 பேரின் தலையை வெட்டி கொன்றிருக்கிறார்கள். டான்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்வது இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானதாம். அதனால் இஸ்லாமிய முறையில் தண்டனை அளித்திருக்கிறார்களாம்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் தான் சராசரி மனிதர்களை இஸ்லாத்தின் மீது வெறுப்படைய செய்கிறது. இணையத்தில் மார்கத்தை பரப்பும் தோழர்கள் இதை பற்றியெல்லாம் ஒன்றும் பேசியதாக தெரியவில்லை. Choosing to ignore problems is rarely a good way to solve them. தயவுசெய்து இதை பற்றியெல்லாம் பேசுங்கள். அதை செய்வதை விட்டு விட்டு "சினிமாவில் இஸ்லாமியர்களை தவறாக காட்டுகிறார்கள்; இணையத்தில் எங்களை ஒதுக்குகிறார்கள்;" என்றெல்லாம் கூறுவது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.


சென்ற வாரம் வீட்டில் ஸ்மார்ட் ஹோம் ஸிஸ்டம் இன்ஸ்டால் செய்தோம். இனி கைதொலைபேசியின் உதவி கொண்டு வீட்டில் உள்ள ஹீட்டர் மற்றும் ஏசி ஆகியவற்றை கட்டுப் படுத்த முடியும். வீட்டில் உள்ள வீடியோ கேமராவில் படமாவதை பார்த்துக் கொள்ள முடியும். விட்டின் தாழ்பாளை கை தொலை பேசியினை கொண்டு திறக்க/மூட முடியும். வீட்டில் உள்ள விளக்குகளை கட்டுப் படுத்த முடியும். வீட்டில் உள்ள ஸ்மோக், ஃப்ளட் மற்றும் பர்க்ளர் அலார்ம்களை கட்டுப் படுத்த முடியும். டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்.


இங்கிலாந்து அணிக்கு ஆப்படித்து சென்ற வாரம் தென் ஆப்ரிக்கா அணி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திற்கு சென்றுவிட்டது. T20 போட்டிகளின் வரிசையில் அது முன்னரே முதல் இடத்தில் தான் இருந்தது. நேற்று நடை பெற்ற ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தை மீண்டும் வெற்றி கொண்டு ஒரு நாள் போட்டிகளின் தர வரிசையிலும் முதல் இடத்திற்கு சென்று விட்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று தர வரிசையிலும் முதல் இடத்தை பெற்ற அணி என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா அணி பெற்று விட்டது. அவர்களின் மகுடத்தில் உலக கோப்பை வெற்றி மட்டும் தான் இல்லை. அடுத்த முறை அதையும் வெல்வார்கள் என்று நம்புவோம். வாழ்த்துக்கள் ஸ்மித் மற்றும் டீ வில்லர்ஸ்.இந்தியா நியூஸியை வென்றதை வைத்து எல்லாரும் இந்திய அணியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். இப்பொழுது தான் தொடர்ந்து எட்டு டெஸ்ட் போட்டிகளின் தோற்றுவிட்டு வந்தோம். அது மறந்து விட்டது என்று நினைக்கிறேன். நியூஸி அணி ஒரு புள்ள பூச்சி. அதை அடித்துவிட்டு "நானும் ரவுடி தான்" என்று கூவுவது கேவலமாக இருக்கிறது. பார்ப்போம் இங்கிலாந்துக்கு எதிராக என்ன நடக்கிறது என்று.


நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த திருநாள் உங்களுக்கு மன மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் கொடுக்கட்டும்.

Wednesday, August 22, 2012

விகடன் வலையோசையில் என் பதிவு

நண்பர்களே,

ஆனந்த விகடன் - என் விகடனின் திருச்சி பதிப்பில் என்னை பற்றிய ஒரு சிறு குறிப்புடன் எனது பதிவுகள் மூன்றை தேர்ந்தெடுத்து வெளியிட்டிருக்கிறார்கள்.

பதிவெழுதத் தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் தமிழகத்தின் முதன்மை வார இதழ் ஒன்றில் எனது படைப்புகளை பார்ப்பது மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.இந்த அங்கீகாரம் இப்படியே நின்று விடாமல் படிப்படியாக பத்திரிக்கை, சினிமா, அரசியல், MLA, MP என்று உயர்ந்து எனது வாழ்வை சுபிட்சமாக்கி மக்கள் தொண்டு செய்ய உங்கள் வாழ்த்துக்களை வேண்டி விடை பெறுகிறேன்.

நன்றி,
வணக்கம்.

Sunday, August 12, 2012

கொஞ்சம் சிரிங்க
Tuesday, August 07, 2012

செருப்பால் அடிக்கப்பட்ட தருணங்கள்

வாழ்க்கையில் சில நேரங்களில் சில விஷயங்களை ஏன் செய்தோம்?, எதற்காக செய்தோம்? என்று பின்னர் யோசிப்போம் இல்லையா? அப்படி ஒரு செயலை தான் நேற்று நான் செய்தேன்.

நேற்று எனது மகனை கடுமையாக திட்டி விட்டேன். பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை. அவன் சரியாக சாப்பிடவில்லை. இந்த "சரியாக சாப்பிடவில்லை" என்பதே ஒரு ரிலேடிவ் டெர்ம் தான். அவன் சிறு வயதில் இருந்தே சாப்பாட்டு விஷயத்தில் சிறிது மந்தம் தான். அன்டர் வெயிட் குழந்தை.

இரண்டு வயதாகியும், ஆறு மாத உடைகள் இன்னும் பத்துகின்றன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். சாப்பாடும் சாப்பிடுவதில்லை, பாலும் குடிப்பதில்லை, இப்படி இருந்தால் ஒரு தகப்பனின் மன நிலை எப்படி இருக்கும். எல்லாம் இருந்தும் ஒன்றும் இல்லாத மாதிரியான நிலை.

இந்நிலையில் நேற்று அவன் சாப்பிடும் துளி சப்பாட்டை கூட சாப்பிடாமல் ஒரே அடம். ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி கோபத்தின் உச்சியில் அவனை கடுமையாக திட்டி விட்டேன். அலுவல் டென்ஷனும் உடன் சேர்ந்து கொண்டது. கோபத்தில் திட்டுகிறேன் என்பது அவனுக்கு தெரிகிறது. ஆனால் அதற்கான காரணம் தெரியவில்லை. அவனது அழுகை அதிகமானது.

சாப்பாடு கொடுப்பதை நிறுத்திய உடன் அழுகை இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனது. சிரித்துக் கொண்டே என் அருகில் வந்து என்னை கட்டிப் பிடித்துக் கொள்கிறான். எவ்வளவு திட்டினாலும் உடனே அதை மறந்து அருகில் வந்து என்னை கொஞ்சுவது மாண்டியும் இவனும் தான். அந்த வரையில் நான் அதிர்ஷ்டசாலியே. இந்த உறவுகள் கூட இல்லாமல் எவ்வளவோ பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நான் பல நேரங்களில் இம்மாதிரியான மன நிலை பெரியவர்களுக்கு இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இன்பமயமாக இருக்கும் என்று நினைத்து பார்ப்பதுண்டு.

அடுத்த மாதத்தில் இருந்து இங்கே இருக்கும் ஒரு டே கேருக்கு போகப் போகிறான். இங்கே குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டி எல்லாம் விட மாட்டார்கள். குழந்தைகளே எடுத்து சாப்பிட்டால் தான் உண்டு. இனி இவனது நிலை கொலை பட்டினி தான். ஆனால் டே கேரில் உள்ளவர்களோ மற்ற குழந்தைகளை பார்த்து எளிதாக தானே சாப்பிட கற்றுக் கொண்டு விடுவான் கவலை இல்லை என்கிறார்கள். பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இதுவரை வாழ்க்கையை பற்றிய பயம் எனக்கு இருந்ததே இல்லை. திருமணத்தை கூட எந்த வித நெர்வெஸ்னஸும் இல்லாமல் எடுத்துக் கொண்டேன். முதல் நாள் பள்ளி, முதல் நாள் கல்லூரி, முதல் நாள் வேலை என்று எதுவும் எனக்கு பெரிதாக நினைவில்லை. ஆனால் எனது மகனின் முதல் நாள் டே கேர் எனக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கிறது. மனதிற்குள் சொல்ல முடியாத ஏதோ ஒரு சோகம்.

இப்பொழுது வாழ்க்கையை பற்றி முதல் முறையாக பயப்படுகிறேன். ஒரு தகப்பனாக நான் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது, என் தந்தையிடம் நான் மிகவும் நேசித்தது, அவரிடம் எனக்கு பிடிக்காதது என்று மனது பெரிய பட்டியலே போடுகிறது. நட்பு வட்டத்தில் தந்தையிடம் மிகவும் பாசத்துடன் இருக்கும் குழந்தைகளை பார்க்கும் பொழுது அவர்களது நடவடிக்கைகளை கூர்ந்து கவனிக்கிறேன். அவர்களை போலவே நடந்து கொள்ள முயல்கிறேன். தம்மையும் தண்ணியையும் விட்டு விடலாம் என்று யோசிக்கிறேன்.

"Let's cross the bridge when we get there" என்ற மன நிலையிலேயே இவ்வளவு நாட்கள் இருந்து விட்ட பிறகு அதிலிருந்து சட்டென்று விலகுவது சிறிது கஷ்டமாக இருக்கிறது. எனக்குள் நானே அல்லாமல் ஒரு புதிய நான் வந்து விட்டதை போல உணர்கிறேன்.

எதையோ எழுத நினைத்து எதையோ எழுதிக் கொண்டிருக்கிறேன். பதிவின் தலைப்புக்கும் பதிவுக்கும் ஒரு சம்பந்தம் கூட இல்லாமல் பதிவு பெரிதாகிக் கொண்டே வருகிறது. வேறு ஒன்றும் எழுதுவதற்கு இல்லை என்பதால் என்னை போன்றே இரண்டுங்கெட்டான் மன நிலையில் இருந்த, இருந்து கொண்டிருக்கும் தகப்பன்களுக்கு இந்த பதிவினை சமர்பித்து இத்துடன் இதை முடித்துக் கொள்கிறேன். நன்றி.

Friday, August 03, 2012

கோவா புகைப்படங்கள்

Goa (Varca Beach)

Goa (varca Beach)

Goa (varca Beach)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)

Goa (Fort Aguada)