Wednesday, August 29, 2012


பொடிமாஸ் - 08/29/2012

பதிவர் சந்திப்பு நன்றாக நடந்தது குறித்து மிகவும் மகிழ்ச்சி. அதனால் ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது. இனி வரும் காலங்களின் இது மாதிரியான சர்ச்சைகள் ஏற்படாமல் பதிவர் சந்திப்புகள் நடக்கும் என்று நம்புவோம். இந்த சந்திப்பினை மிகவும் நன்றாக நடத்தி முடித்த பதிவர்களுக்கு எனது நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.


சமீப காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. கொலராடோவில் தொடங்கியது, விஸ்கான்ஸின் சீக்கிய படுகொலை, நியூயார்க் எம்பயர் ஸ்டேட் பில்டிங் படுகொலை, பால்டிமோர் துப்பாக்கி சூடு என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இது விரைவில் ஒரு முடிவுக்கு வரும் என்று நம்புவோம். ஆனால் இவை அனைத்திலுமே காவல் துறையினர் தங்கள் உயிரை பெரிதாக நினைக்காமல் போராடி துப்பாக்கி சூடி நடத்தியவர்களை கொன்றிருக்கிறார்கள் இல்லை உயிருடன் பிடித்திருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள்.


அமெரிக்காவில் பிரபலமான சிபோட்லே மெக்ஸிகன் உணவகத்தில் பில்லை ரவுண்ட் ஆஃப் செய்யும் பொழுது அதிக தொகைக்கு செய்கிறார்கள் என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. அதாவது நீங்கள் செலுத்த வேண்டிய தொகை $9.24 என்றால் உங்கள் பில் $9.25 என்று காட்டும். இதை பலரும் ஆட்சேபிக்கிறார்கள். நம்ம கேபிள் சங்கர் உணவகத்தில் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக சண்டையிடும் பொழுது அவரை பற்றி கேவலமாக பதிவுகளில் திட்டியவர்கள் இனி அமெரிக்கர்களும் அதனை செய்வதால் இதை ஒரு ஸ்டேட்டஸ் ஸிம்பலாக கருத தொடங்குவார்களோ? எனது நிலை இதில் இது தான், "நமது காசு, ஒரு பைசாவோ கோடி ரூபாயோ, நாமாக விரும்பி கொடுக்காமல் நமக்கு தெரிந்தோ தெரியாமலோ அவர்களாகவே எடுத்தால் அது திருட்டு தான்."


சமீபத்தில் நான் அதிகம் கேட்பது முகமூடி படத்தின் "வாய மூடி சும்மா இருடா" பாடல் தான். மதன் கார்க்கி யின் வரிகள் ஆலாப் ராஜுவின் குரலில் காதில் தேனாக பாய்கிறது.

கீழே உள்ள வரிகள் ஒரு உதாரணம்.

கன்னம் சுருங்கிட நீயும்;
மீசை நரைத்திட நானும்;
வாழ்வின் கரைகளைக் காணும்;
காலம் அருகினில் தானோ?
கண் மூடிடும் அவ்வேளையும்
உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்!

நாளை மறுநாள் இங்கே படம் வெளியாகிறது. வார இறுதியில் கட்டாயம் பார்த்து விடுவேன். படம் மொக்கையாக இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும்.


டான்ஸ் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டதற்காக தாலிபான்கள் ஆஃப்கானிஸ்தானில் 17 பேரின் தலையை வெட்டி கொன்றிருக்கிறார்கள். டான்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்வது இஸ்லாமிய சட்டங்களுக்கு எதிரானதாம். அதனால் இஸ்லாமிய முறையில் தண்டனை அளித்திருக்கிறார்களாம்.

இம்மாதிரியான நடவடிக்கைகள் தான் சராசரி மனிதர்களை இஸ்லாத்தின் மீது வெறுப்படைய செய்கிறது. இணையத்தில் மார்கத்தை பரப்பும் தோழர்கள் இதை பற்றியெல்லாம் ஒன்றும் பேசியதாக தெரியவில்லை. Choosing to ignore problems is rarely a good way to solve them. தயவுசெய்து இதை பற்றியெல்லாம் பேசுங்கள். அதை செய்வதை விட்டு விட்டு "சினிமாவில் இஸ்லாமியர்களை தவறாக காட்டுகிறார்கள்; இணையத்தில் எங்களை ஒதுக்குகிறார்கள்;" என்றெல்லாம் கூறுவது சிறுபிள்ளை தனமாக இருக்கிறது.


சென்ற வாரம் வீட்டில் ஸ்மார்ட் ஹோம் ஸிஸ்டம் இன்ஸ்டால் செய்தோம். இனி கைதொலைபேசியின் உதவி கொண்டு வீட்டில் உள்ள ஹீட்டர் மற்றும் ஏசி ஆகியவற்றை கட்டுப் படுத்த முடியும். வீட்டில் உள்ள வீடியோ கேமராவில் படமாவதை பார்த்துக் கொள்ள முடியும். விட்டின் தாழ்பாளை கை தொலை பேசியினை கொண்டு திறக்க/மூட முடியும். வீட்டில் உள்ள விளக்குகளை கட்டுப் படுத்த முடியும். வீட்டில் உள்ள ஸ்மோக், ஃப்ளட் மற்றும் பர்க்ளர் அலார்ம்களை கட்டுப் படுத்த முடியும். டெக்னாலஜி ஹேஸ் இம்ப்ரூவ்ட் ஸோ மச்.


இங்கிலாந்து அணிக்கு ஆப்படித்து சென்ற வாரம் தென் ஆப்ரிக்கா அணி டெஸ்ட் தர வரிசையில் முதல் இடத்திற்கு சென்றுவிட்டது. T20 போட்டிகளின் வரிசையில் அது முன்னரே முதல் இடத்தில் தான் இருந்தது. நேற்று நடை பெற்ற ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தை மீண்டும் வெற்றி கொண்டு ஒரு நாள் போட்டிகளின் தர வரிசையிலும் முதல் இடத்திற்கு சென்று விட்டது. இதன் மூலம் ஒரே நேரத்தில் மூன்று தர வரிசையிலும் முதல் இடத்தை பெற்ற அணி என்ற பெருமையை தென் ஆப்ரிக்கா அணி பெற்று விட்டது. அவர்களின் மகுடத்தில் உலக கோப்பை வெற்றி மட்டும் தான் இல்லை. அடுத்த முறை அதையும் வெல்வார்கள் என்று நம்புவோம். வாழ்த்துக்கள் ஸ்மித் மற்றும் டீ வில்லர்ஸ்.



இந்தியா நியூஸியை வென்றதை வைத்து எல்லாரும் இந்திய அணியை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்கள். இப்பொழுது தான் தொடர்ந்து எட்டு டெஸ்ட் போட்டிகளின் தோற்றுவிட்டு வந்தோம். அது மறந்து விட்டது என்று நினைக்கிறேன். நியூஸி அணி ஒரு புள்ள பூச்சி. அதை அடித்துவிட்டு "நானும் ரவுடி தான்" என்று கூவுவது கேவலமாக இருக்கிறது. பார்ப்போம் இங்கிலாந்துக்கு எதிராக என்ன நடக்கிறது என்று.


நண்பர்கள் அனைவருக்கும் ஓணம் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த திருநாள் உங்களுக்கு மன மகிழ்ச்சியும், உடல் ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் கொடுக்கட்டும்.

5 Comments:

வவ்வால் said...

சத்யன்,

பொடிமாஸ் நன்றாகத்தான் இருக்கு.

# இதுவரைக்கும் பதிவர் சந்திப்பை பிராபல்யப்பதிவர்,சராசரிப்பதிவர் என அனைவரும் ஒன்றாக கூடி இழுத்த தேர் என நினைத்தேன், இப்போது தான் அவர்கள் அளித்த கணக்கினைபார்த்து பொங்கிட்டு வரேன்.

மொத்தம் 74,052 ரூபாயில் 27,199 ரூ விழா நடந்த இடத்துக்கு வாடகை எனப்போட்டிருந்தார்கள், இத்தனை பிராபல்யங்கள் இருக்கும் போது அவர்கள் இன்புளுயன்சில் குறைவான வாடகையில் இடம் பிடிக்க முடியாத எனக்கேட்டு வந்துள்ளேன்.

எனக்கு 27,000 செலவு செய்வார்கள் என தெரிந்தால் , குறைவாகவோ அல்லது இலவசமாக ஒரு ஆடிட்டொரியம் ஏற்பாடு செய்து கொடுத்து இருப்பேன்.

லாப நோக்கற்ற அமைப்பு நடத்தும் நிகழ்வுக்கு இடத்துக்கே இத்தனை செலவு என்பது ஏற்க கூடியதல்ல என்பது எனது கருத்து.

----------

அந்த தாலிபான் தலைத்துண்டிப்பு குறித்தும் பதிவில் பேசிட்டேன், இஸ்லாமில் சொல்லாதது செய்தால் தண்டனைக்கொடுத்தால் தப்பில்லை என்கிறார், மேலும் அது அமெரிக்க அரசின் சதியாம். எல்லாம் மதவாதப்பதிவர்கள் சொல்வது தான்.

இரட்டைக்கோபுரமே சி.ஐ.ஏ சதின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க :-))

---------------

நான் எதற்கும்,யாருக்கும் பயப்படுவதில்லை, கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல , அவ்வளவு தான் :-))

முரளிகண்ணன் said...

பொடிமாஸில் இன்னும் கொஞ்சம் காரம் தூக்கலாப் போடலாமே?

வவ்வால் said...

//பொடிமாஸில் இன்னும் கொஞ்சம் காரம் தூக்கலாப் போடலாமே?//

காரத்தை நல்லா கையை தூக்கி உசரத்தில இருந்து போடணும் அப்போ தான் தூக்கலா இருக்கும் :-))

அதான் நானே காரத்தைப்போட்டுடேனே ,அந்த முதல் பத்தி வேற இடத்தில போட வேண்டியது இங்கே தவறி வந்துடுச்சு,ஆனாலும் பொறுத்தமா தான் இருக்கு எனவே பிரச்சினை இல்லை.

ஆனாலும் இப்பவும் வாடகைக்கே அந்த பணம் செலவானதில் வருத்தமே.

----------

கமெண்ட் மாடரேஷன் வச்சு இருக்கிங்க ,என்ன [இன்னூட்டம் போட்டு ,வரப்போகுதுன்னே தெரிவதில்லை. இனிமேல் இங்கே பின்னூட்டம் இட வேண்டாம் என முடிவெடுத்துள்ளேன்.

உங்கள் வசதி உங்களூக்கு ,என் வசதி எனக்கு,நன்றி!

புதுகை.அப்துல்லா said...

சத்யன்ணே, இந்த வருஷம் நீங்க எழுத வேண்டிய கோட்டாவை ஆகஸ்ட்லயே அச்சீவ் செஞ்சிட்டீங்க போல :)

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வவ்வால், சமுத்ரா, முரளிகண்ணன், அப்துல்லா. தொடர்ந்து வாருங்கள்.

அப்துல்லா அண்ணாத்தே, ஒரு வருஷம் என் பதிவுக்கு வரும் கூட்டம் இப்பொவே வந்துடுச்சு :-)

"20000 ஹிட்ஸ்களை வழங்கி என்னை கவுரவித்த வாசக நெஞ்சங்களுக்கு நன்றி" அப்படின்னு முதல் பக்கத்துல போடலாம்னு இருக்கேன்.