சில படங்களின் டிரைலர் பார்த்தாலே படம் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வரும். சில படங்களின் டிரைலர் படத்தை தொலைக்காட்சியில் கூட பார்க்க கூடாது என்ற எண்ணத்தை தரும். நிச்சயமாக 180 முதல் வகை. சுமார் 7 ஆண்டுகளுக்கு பின் சித்தார்த் தமிழில். பாய்ஸ், ஆயுத எழுத்து, ரங் தே பஸந்தி என்று என்னை பெரிதும் கவர்ந்த இளம் நடிகர் சித்தார்த். ஆரண்ய காண்டம் இங்கே வெளியிடப்படாததால் எங்கே இந்த படத்தையும் DVDயில் மட்டுமே பார்க்க நேரிடுமோ என்று அஞ்சிக் கொண்டிருந்த வேளையில் என் வயிற்றில் பீர் வார்த்தது போல இங்கே வெளிவந்தது 180 ரூல்ஸ் கிடையாது.
முதல் காட்சியில் காசியில் சித்தார்த் தனது அப்பாவிற்கு திதி கொடுக்க வரும் சிறுவனிடம் நானும் மனோவாக இருக்க ஆசைப் படுகிறேன் என்று சொன்னதும் நிமிர்ந்து உட்கார வைக்கிறது திரைக்கதை. அடுத்த காட்சியில் சென்னையில் ஆட்டோ ஓட்டுனரிடம் இரு விரலை நீட்டி அதில் ஒன்றை தொடச் சொல்லி டி. நகர் என்று கூறும் போது டாப் கியரில் செல்கிறது.
நன்கு படித்து, பட்டம் பெற்று, நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் சென்னையின் மேல் நடுத்தர இளைஞனை கதையின் நாயகனாக ஒரு தமிழ் படத்தில் பார்த்தே நீண்ட நாட்கள் ஆகின்றன. அதற்கே இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
பீச்சில் சுண்டல் விற்று, இஸ்திரி போட்டு, வீடு வீடாக சென்று பேப்பர் போட்டு, தெருவில் இருக்கும் சிறுவர்களுடன் விளையாடி, வீட்டு உரிமையாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி என்று முதல் பாதி முழுதும் தனக்கென்று ஒரு இலக்கே இல்லாத மனிதனாக வாழ்த்து கொண்டிருக்கும் மனோவிற்கு மனதில் நெருடும் முள்ளாக ஒரு ஃபிளாஷ் பேக். அதனை தனியாக சொல்லாமல், நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளின் ஊடே எண்ண ஓட்டங்களாக சொன்ன விதம் அருமை.
இம்மாதிரி முயற்சியை தமிழில் முதலில் தொடங்கியவர் மணிரத்னம். ஆனாலும் அலைபாயுதேவில் கூட ஒரு வித ஜெர்க் இருக்கும். இதில் அது கூட இல்லை. இதனை போன்ற திரைக்கதைகள் இரண்டு புரவிகள் பூட்டிய வண்டியை போன்றது. ஒரு புரவி ஒரு வழியில் பயணிக்க, மற்றொரு புரவி வேறு வழியில் பயணிக்கும். பயணம் செய்யும் நமக்கு ஆயாசம் வராமலும், சுவாரசியமாகவும் இருக்க திரைக்கதையமைப்பும், எடிட்டிங்கும் மிகவும் முக்கியம். இதில் இது இரண்டுமே அருமை.
Casting மிகவும் அருமை. மௌலி, கீதா, லக்ஷ்மி, வித்யா மேனன், ப்ரியா ஆனந்த், சித்தார்த்தின் அமெரிக்க நண்பர் என்று ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தை உணர்த்து நடித்திருக்கிறார்கள்.
குறிப்பாக சித்தார்த். தனது தாயின் மரணத்தை சாதாரணமாக எடுத்துக் கொண்டு திருமணத்திற்கு தயாராகும் அவர், தனது மரணத்தை கண்டு நடுங்கும் இடத்தில் பிரமிப்பூட்டுகிறார். இத்தனைக்கும் அவர் ஒரு மருத்துவர்.
வாழ்வை அணு அணு வாக ரசிக்கும் ஒருவனுக்கு மரண பயம் இப்படிதான் இருக்கும் என்பதை இதை விட அழகாக வெளிப்படுத்தி விட முடியாது.
அடுத்தது கேமரா. யாரோ பால சுப்ரமணியன் என்றொருவர். யார் சார் நீங்கள்? இதற்கு முன்னர் எங்கிருந்தீர்கள்? கை கொடுங்கள் சார். இது போன்ற கேமரா கோணங்களை தமிழில் நான் பார்த்ததே இல்லை. அருமையான locales, lighting மற்றும் picturization.
இசைதான் எனக்கு பிடிக்கவில்லை. பாடல்கள் நன்றாகவே இருந்தன. ஆனால் பின்னணி இசை சற்று இரைச்சல்.
மற்றபடி இயக்குனர் சிறிது சறுக்கி இருப்பது இரண்டாம் பகுதியில் மற்றும் கதையில். கதை பலமுறை பலர் மென்று துப்பிய பழைய புளித்த பழம் தான் என்றாலும், என்னை பொருத்த வரை திரைப்படம் என்பது ஒரு visual medium. கதையே இல்லாவிட்டாலும், நிகழ்வுகளின் காட்சிக் கோர்வை நம்மை பிணைத்து வைத்தால் அதுவே திரைப்படத்தின் வெற்றி.
எனக்கு ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு பயண அனுபவம். நம்முடனே படத்தின் அனைத்து கதாபாத்திரங்களும் பயணிக்கிறார்கள். அவர்களில் யாருடனாவது நம்மால் பொருந்த முடிந்தால் அந்த பயணம் இனிமையானதாகவே அமையும். அதில் ஒரு சிலர் நாமாகவே இருந்தால் அந்த பயணத்தை மறக்கவே முடியாது.
இந்த படத்தை பொருத்த வரை, நான் தான் AJ. AJ தான் நான். AJ விற்கு ஏற்பட்டதை போன்றே ஒரு அனுபவம் எனக்கு ஏற்பட்டால் நான் நிச்சயம் மனோவாக இருக்கவே விரும்புகிறேன்.
நிச்சயமாக 180 ரூல்ஸ் கிடையாது is a stylish visual treat to watch. Go without any expectations.