Thursday, March 27, 2008

ரங்க பவனம் - I

டிஸ்கி 1: நண்பர்களே! இது எனது முதல் கதை முயற்சி. முதல் முயற்சியில் பெரும்பாலானவர்களை போல நானும் ஒரு உண்மை சம்பவத்தின் அடிப்படையிலேயே கதையை எழுதி இருக்கிறேன். இக்கதையில் நிகழும் சம்பவங்கள் அனைத்தும் பெரும்பாலும் உண்மையானவை. அங்கங்கே மானே! தேனே! பொன் மானே! எல்லாம் சேர்த்திருக்கிறேன்.

டிஸ்கி 2: இது சத்தியமாக என்னுடைய கதை அல்ல. (இது தங்கமணிக்கு)



"Bharghav! இன்னிக்கு night என்ன plan? Are you going out somewhere?" என்றாள் தீபா. தீபா நாராயணன் அந்த பொறியியல் கல்லூரியில் முதல் ஆண்டு ECE பிரிவில் படிக்கும் மாணவி. பார்கவ் நடராஜன் அதே கல்லூரியில் முதல் ஆண்டு Computer Science படிக்கும் மாணவன்.

பார்கவ், தீபா இருவரும் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருச்சியில் தான். பார்கவ் திருச்சி திருவாணைக்காவல் பகுதியில் வசிப்பவன். தீபா திருவரங்கத்தில் வசிப்பவள். இவன் படித்தது திருச்சி R.S.K. பள்ளியில். அவள் படித்தது திருச்சி S.V.S. பள்ளியில். பார்கவினுடைய தந்தை திருச்சியில் உள்ள ஒரு பெரிய மகளிர் கல்லூரியின் தாளாளர். அது போக அவருக்கு முன்று பள்ளிகளும் ஒரு ஆண்கள் கலை கல்லூரியும் கூட இருந்தது. திருச்சியில் அவர் ஒரு VIP. இவன் அவருக்கு ஒரே மகன். நல்ல வசதியான குடும்பம். தீபாவின் தந்தை நியூசிலாந்தில் ஆக்லாந்து பல்கலைகழகத்தில் பேராசிரியராக இருப்பவர். வருடம் ஒரு முறை விடுமுறைக்கு இந்தியா வருவார். தீபா, அவளது அக்கா சௌம்யா மற்றும் அவளது தாயார் மூவரும் மட்டும் திருச்சியில் வசிக்கிறார்கள். சௌம்யா திருச்சி SRC கல்லூரியில் B.Com. இறுதி ஆண்டு படிப்பவள்.

வேறு வேறு துறையாக இருந்தாலும் முதல் ஆண்டில் அனைத்து பிரிவினரும் கலந்தே வகுப்பில் சேர்க்கப்படுவார்கள். இரண்டாம் ஆண்டில் தான் தத்தம் பிரிவுகளுக்கு செல்வார்கள். அவ்வாறு ஒரே வகுப்பில் சேர்க்கப் பட்டவர்கள் தீபாவும் பார்கவ்வும்.

முதல் நாளில் பார்த்து "Hi" சொல்லிக் கொண்டாலும் பெரிதாக நட்பு ஒன்றும் அவர்களுக்கிடையில் அமையவில்லை. ஆனால் இருவரின் பெயரும் அகர வரிசையில் அடுத்தடுத்து வந்தமையால், அனைத்து லேப் களிலும் இருவரும் ஒரே குழுவில் இருக்க வேண்டியதாயிற்று. அப்படியே பேசிப் பழகி ஒரே மாதத்தில் இருவரும் இணைபிரியா நண்பர்களாகி விட்டனர்.

"எதுக்கு Deepi? I don't have any plans.", என்றான் பார்கவ். அவன் 'Deepi' என்று தான் அவளை அழைப்பது வழக்கம். "இல்லே, அப்பா ஊர்லேந்து வந்துருக்காரு. அதான். If you are free, can you join us for the dinner?" "Sure. ஆனா இப்போ என்ன திடீர்னு வந்துருக்காரு? Normal ஆ spring break July - August லே தானே வரும்? நீ படிச்சது போதும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு வந்துட்டாரா?" "அய்யே, ஜோக்காக்கும். ஏதோ summer school break ஆம் பா. உன்னை பார்க்கனும்னு சொன்னாரு. சௌம்யா கூட project முடிஞ்சு இங்கே வந்துட்டா. அவளும் உன்னை பார்த்தது இல்லையே. Can you come?"

தீபாவுடன் பழகிய இந்த மூன்று மாதங்களில் பல முறை அவளது வீட்டிற்கு அவனும் அவனது வீட்டிற்கு அவளும் வந்திருந்தாலும், அவளது தாயாரை தவிர வேறு யாரையும் அவன் பார்த்ததில்லை. சௌம்யா ஏதோ project சம்பந்தமாக அப்பொழுது சென்னை சென்றிருந்தாள். "சரி Deepi, ரெண்டு பேரும் வந்துருக்காங்க இல்லே. கட்டாயம் வர்றேன்." "Okie Bharghav, Let's meet at 7 O' Clock. வீட்டுக்கு வந்துடு." "Sure".

அன்று மாலை கல்லூரி விட்ட உடன் நேராக வீட்டிற்கு வந்தான் பார்கவ். "என்னடா! மழை வர மாதிரி இருக்கு? இன்னிக்கு எங்கயும் பொறுக்காம சீக்கிரம் வந்துட்ட" என்ற பாட்டியின் நக்கலை அவன் பொருட்படுத்தவில்லை. "டேய்! Paramesh phone பண்ணினான். ஏதோ பேசனுமாம்." என்று சமையலறையிலிருந்து வந்த அம்மாவின் குரலையும் அவன் சட்டை செய்யவில்லை.

சீக்கிரமே தனது அறைக்கு சென்று குளித்து விட்டு வந்த அவன் "அம்மா! இன்னிக்கு Deepa dinner க்கு கூப்பிட்டுருக்கா. அவ அப்பாவும் அக்காவும் வந்துருக்காங்களாம். போய்ட்டு வந்துடறேன். Bye!" "டேய்! உனக்காக வாழைப்பூ பருப்புசிலியும், மோர் குழம்பும் பண்ணி இருக்கேன்டா. சாப்பிடலேன்னு சொன்னா என்ன அர்த்தம்?" என்ற அவனது தாயாரின் குரல் அவனது வேகத்தை சற்றும் குறைக்கவில்லை. வேகமாக தனது யமஹாவை உதைத்து சாலையில் இறங்கி தீபாவின் வீட்டிற்கு விரைந்தான் பார்கவ்.

Sunday, March 02, 2008

மார்ச் மாத PIT புகைப்பட போட்டிக்கு

இம்மாத கரு: பிரதிபலிப்புகள்/பிரதிபிம்பங்கள் (Reflections)


முதல் புகைப்படம்:



இந்த புகைப்படம் சென்ற ஆண்டு நாங்கள் Las Vegas சென்றிருந்த போது எடுத்தது. படத்தில் இருப்பது Bellagio Dancing Fountains.

இரண்டாம் புகைப்படம்:



இதுவும் அப்பொழுது எடுத்தது தான். படத்தில் இருப்பது Las Vegas அருகில் இருக்கும் Hoover Dam.

நம்ம கேமரா கவிஞன் தல CVR "பழைய படங்களை போட்டிக்கு அனுப்புவதை விட புதிய படங்களை அனுப்புவதே சிறந்தது" என்று கூறிவிட்டதன் விளைவுதான் கீழே உள்ள மூன்று புகைப்படங்களும். என்னை நானே P.C.ஸ்ரீராம் என்று நினைத்துக் கொண்டு கேமராவும் கையுமாக சனிக்கிழமை முழுவதும் அலைந்து திரிந்து ஒரு வழியாக எடுத்து முடித்தது.

மூன்றாம் புகைப்படம்:



இந்த புகைப்படம் எங்கள் ஊரில் இருக்கும் ஒரு Shopping Mall வளாகத்தினுள் எடுத்தது.

நான்காம் புகைப்படம்:



இந்த புகைப்படம் எனது காரின் வெளிப்புற ஜன்னல் கண்ணாடியில் தெரிந்த பிரதிபலிப்பினை படமெடுத்தது.

ஐந்தாம் புகைப்படம்:



இந்த புகைப்படம் எனது குளியலறையில் எடுத்தது.

Photoshop/Picasa போன்ற மென்பொருட்களில் கொஞ்சம் விளையாட தெரிந்திருந்தால் படங்கள் இன்னமும் நன்றாக வந்திருக்கும் என்று நினைக்கிறேன். அதெல்லாம் தெரியாததால் படங்களில் எந்த பிற்சேர்க்கையும் செய்ய முடியவில்லை.

படைப்புகளைப் பற்றிய நடுவர்களின் விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் என்னை தேடித் தேடி படமெடுக்க செய்த PIT குழுவினருக்கு எனது நன்றிகள். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

"நீ வாங்கற இந்த அஞ்சுக்கும் பத்துக்கும் உனக்கு எதுக்கு இந்த விளம்பரம்?", அப்படீன்னு நீங்க கேக்கறது காதுல விழுது. அதையே மனசுக்குள்ள கேக்காம பின்னூட்டமா கேளுங்க உங்களுக்கு புண்ணியமா போகும் :-)

Saturday, March 01, 2008

அஞ்சலி!!!


பிரிவோம் சந்திப்போமின் மதுமிதா இனி பிறக்கப்போவதில்லை. தற்கால இளைஞர்களின் கனவுகளில் இனி ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் வரப்போவதில்லை. கொலையுதிர் காலம் இலையுதிர் காலமானது. கணேஷும் வசந்தும் இனி குற்றப் புலனாய்வு செய்யப் போவதில்லை. கனவுத் தொழிற்சாலை கனவாகி போனது.

இவருக்கெல்லாம் மரணம் வருமா? அதனால் என்ன? இவர் உருவாக்கிய பாத்திரங்களும் படைப்புகளும் கடைசி தமிழனின் நினைவுகளில் வாழும்.