Tuesday, May 20, 2008


தேவை எச்சரிக்கை!

பதிவுலக நண்பர்களே!

Orkut இணையதளத்தில் சோனியா காந்திக்கு எதிரான ஒரு கருத்துக் களத்தில் கிருஷ்ணகுமார் என்ற 22 வயது இளைஞர் அவரை பற்றி தவறான கருத்து ஒன்றினை தெரிவித்துள்ளார். அவர் குர்கானில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணி செய்பவர்.

அதனை கண்ட பூனா காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் அவரது IP கண்டுபிடிக்கப்பட்டு அவர் இன்று கைது செய்யப்பட்டார். அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் 5 ஆண்டுகள் வரை சிறைவாசம் இருக்க நேரிடும்.

அவர் சோனியா காந்தியினை பற்றி என்ன எழுதினார் என்பது தெரியாத நிலையில் அவரது கைது சரியா அல்லது தவறா என்று கூற இயலவில்லை. ஆனாலும் இணையம் தரும் கட்டற்ற சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதற்கு இதனை விட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு வேறு இல்லை.

வலைப்பதிவு என்பது தனியொரு மனிதனின் நாட்குறிப்பு என்று இருந்த காலம் மாறிவிட்டது. அச்சு ஊடகங்கள் வலைப்பதிவுகளை கூர்ந்து கவனிக்க தொடங்கிவிட்டன. இவ்வாறு அச்சு ஊடகத்திற்கு மாற்றாக இணைய ஊடகம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் வலைபதிவாளர்கள் பலரும் பல செய்திகளுக்கு எதிர்வினை ஆற்றுகிறோம். Orkut தளத்திலும் பல குழுமத்தில் இருக்கிறோம். நமது கருத்துக்களையும் பல இடங்களில் பதிவு செய்கிறோம். இந்த நிலையில் இணையத்திற்கு இருக்கும் முக்கியத்துவத்தை உணர்ந்து யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் பொறுப்புணர்ச்சியுடன் செயல்படுவதே நல்லது.

ஆகவே நண்பர்களே இணையத்தில் எழுதும் பொழுது இன்னும் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுவோம்.

மேலும் தகவல்களுக்கு இங்கே செல்லுங்கள்.

9 Comments:

ILA (a) இளா said...

கிருஷ்ணகுமார் என்கிற போலின்னு தலைப்பு வெச்சிருந்தா TRP ரேட் எகியிருக்குமே

SathyaPriyan said...

//
ILA said...
கிருஷ்ணகுமார் என்கிற போலின்னு தலைப்பு வெச்சிருந்தா TRP ரேட் எகியிருக்குமே
//

நான் என்ன செய்யக் கூடாது என்று எச்சரிக்கை விடுத்தேனோ அதனையே செய்ய சொல்கிறீர்களே. தனிப்பட்ட தாக்குதல் என்பது சோனியா மீது இருந்தால் என்ன? சக பதிவர்கள் மீது இருந்தால் என்ன? இரண்டுமே தவறு அல்லவா.

மற்றபடி TRP எனது நோக்கம் அல்ல ILA. எனது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும் நான் பரபரப்பிற்காகவோ இல்லை பின்னூட்டங்களுக்காகவோ எழுதுபவன் அல்ல என்று.

அனைவருக்கும் குடும்பம் உள்ளது. அந்த 22 வயது இளைஞனின் எதிர்காலம் இப்பொழுது கேள்விக் குறி. இதனை போன்ற ஒரு சிக்கலில் எலி பொறியில் மாட்டிக் கொள்வதை போன்று நண்பர்கள் யாரும் மாட்டிக் கொள்ள கூடாது என்பதற்காகவே பதிவினை எழுதினேன்.

உண்மையில் ஆர்வக் கோளாரினால் முன் பின் யோசிக்காமல் இவ்வாறு எழுதி விட்டு பின்னர் புலம்புவதினால் என்ன பயன்?

மற்றபடி வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

ILA (a) இளா said...

சத்யா இப்பவே சொல்றேன். இந்தப் பதிவு எகிறும், காரணம் சொல்லித்தான் தெரியனுமா?

மாயாவதி பேர்ல போலி ஒன்னு இதே மாதிரி வந்துச்சு. அப்போ ஏன் இந்த அரசு கண்டுக்கல? சோனியாவின் ஆட்சி(?!)ங்கிறதால அதிகாரம் பாய்ஞ்சு இருக்கு.

அப்புறம் சும்மா ஒரு வேகத்துல போட்டது முதல் பின்னூட்டம், அது உங்க மனசை வருத்தி இருந்தா மன்னிச்சுக்குங்க.

SathyaPriyan said...

//
ILA said...
சத்யா இப்பவே சொல்றேன். இந்தப் பதிவு எகிறும், காரணம் சொல்லித்தான் தெரியனுமா?
//
:-)

//
மாயாவதி பேர்ல போலி ஒன்னு இதே மாதிரி வந்துச்சு. அப்போ ஏன் இந்த அரசு கண்டுக்கல? சோனியாவின் ஆட்சி(?!)ங்கிறதால அதிகாரம் பாய்ஞ்சு இருக்கு.
//
உண்மை தான். ஆனாலும் அவர் என்ன எழுதினார் என்று தெரியவில்லை. அவரின் பிறப்பினை பற்றிய அநாகரீகமான விஷயங்களும் அங்கே விவாதிக்கப்படுகின்றன. அதுவும் தவறல்லவா.

//
அப்புறம் சும்மா ஒரு வேகத்துல போட்டது முதல் பின்னூட்டம், அது உங்க மனசை வருத்தி இருந்தா மன்னிச்சுக்குங்க.
//
அட என்னங்க நீங்க. மன்னிப்பெல்லாம் மிகப் பெரிய வார்த்தைங்க. அதையெல்லாம் எனக்கு எதுக்கு? ஆனால் உங்கள் பின்னூட்டத்தை பிடித்து யாரும் தொங்கக் கூடாதே என்பதற்காக அந்த பதிலை கூறினேன். :-)

இராசகுமார் said...

நல்ல பதிவு. TRP Rating,Hit Rate எல்லாம் பத்தி கவலைபடாம "ஊருக்கு நல்லது சொல்வேன்"ங்கிற உங்க முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.வாழ்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி

Ramya Ramani said...

Social Topics-பற்றி எழுதும்போது கவனமாக இருப்பது எப்போழுதுமே நல்லது தான். தகவலுக்கு நன்றி சத்யப்ரியன்!

SathyaPriyan said...

//
இராசகுமார் said...
நல்ல பதிவு.
//
மிக்க நன்றி இராசகுமார்.

//
TRP Rating,Hit Rate எல்லாம் பத்தி கவலைபடாம "ஊருக்கு நல்லது சொல்வேன்"ங்கிற உங்க முயற்சி பாராட்டுதலுக்கு உரியது.
//
என்னை அதிகமாக பாராட்டுகிறீர்கள். என்னை காட்டிலும் அதிக சமூக பொறுப்புணர்ச்சியுடன் எழுதும் பதிவர்கள் இங்கே ஏராளம்.

//
வாழ்துக்கள்.தொடர்ந்து எழுதுங்கள்.நன்றி
//
மீண்டும் நன்றிகள். முதல் முறை எனது பதிவிற்கு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

//
Ramya Ramani said...
Social Topics-பற்றி எழுதும்போது கவனமாக இருப்பது எப்போழுதுமே நல்லது தான். தகவலுக்கு நன்றி சத்யப்ரியன்!
//
ஆம் Ramya. அந்த இளைஞர் அதனை எழுதும் பொழுது கொஞ்சம் கூட இத்தகைய எதிர் விளைவுகளை எதிர் பார்த்திருக்க மாட்டார். கல்லூரி முடிந்து வாழ்வின் அடுத்த கட்டத்தில் அடியெடுத்து வைக்கும் வேளையில் இதெல்லாம் தேவையா?

Kumiththa said...

Very good post. Its good to be careful when talk about famous peoples...

SathyaPriyan said...

//
Kumiththa said...
Very good post. Its good to be careful when talk about famous peoples...
//
Yeah.... that was what I was trying to say. People do not understand the differences between commenting and abusing. The consequences of abusements are very high.