Wednesday, September 28, 2011


பொடிமாஸ் - 09/29/2011


பேய்க்கு பயந்து பிசாசிற்கு வாழ்க்கை பட்ட கதையாகிவிட்டது தமிழக மக்களின் கதை. அம்மையார் ஆட்சிக்கு வந்தால் ஏதாவது மக்களுக்கு நல்லது செய்வார் என்று எதிர் பார்த்து காத்திருந்தால் அவரோ திமுகவினர் மீது வழக்கு தொடுப்பதிலேயே குறியாக உள்ளார். சுமார் 2500 வழக்குகளுக்கு மேல் பதிவாகி உள்ளன. பதவிக்கு வந்த உடன் அவர் அளித்த பேட்டியில் இருந்த தன்னடக்கம் தற்பொழுது இல்லை. ஊராட்சி தேர்தலில் கூட்டணி முறிந்து விட்டது. இதனை சட்ட மன்ற தேர்தலுக்கு முன்னரே செய்திருந்தால், தேமுதிக, மதிமுக, இரு கம்யூனிஸ்டுகள் மூன்றாவது அணி கண்டிருந்தால், திமுக எதிர்ப்பு ஓட்டுகள் பிரிந்து நிச்சயம் கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்திருப்பார். ஒருவேளை ஊராட்சி தேர்தலில் அதிமுக கடும் தோல்வி அடைந்தால் அவரது நிலை மாறினாலும் மாறலாம். ஆனால் நான்கு முனை போட்டி என்பதால் தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஆனாலும் ஒன்று, நிச்சயம் இந்த ஆட்சி கடந்த ஆட்சியைவிட நல்ல ஆட்சியாக அமையும் என்ற நம்பிக்கை இதுவரை எனக்கு இருக்கிறது. என்ன செய்வது?, கலைஞரின் கடந்த ஆட்சி அப்படி.ஏழாம் அறிவு டிரைலர் பார்த்தாலே அசத்தலாக இருக்கிறது. பார்த்தே ஆகவேண்டிய கட்டாயத்தை தூண்டுகிறது. இம்மாதிரி டிரைலர்கள் அமைப்பதில் ஷங்கர் தான் கிங். முருகதாஸும் அதில் சேர்ந்ததில் மகிழ்ச்சி. சூர்யா மற்றும் முருகதாஸ் பற்றி சொல்ல ஒன்றும் புதிதாக இல்லை. ஷ்ருதிஹாசன் நடித்த லக் திரைப்படத்தை பார்த்திருக்கிறேன். படு திராபையான நடிப்பு. இதில் எப்படி நடித்திருக்கிறார் என்று பார்க்க வேண்டும். முருகதாஸ் மீது நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.சமீபத்தில் நான் பல முறை கேட்பது எங்கேயும் எப்போதும் படத்தின் "சொட்ட சொட்ட" பாடல் தான். சின்மயீ குரலில் மனதை பிசைக்கிறது அந்த பாடல். தொடக்கதில் வரும் புல்லாங்குழல் அட்டகாசம். அதனை ரிங்டோனாக வைக்க வேண்டும். இந்த வார இறுதியில் நேரம் கிடைக்குமா என்று பார்க்க வேண்டும். நான் விரும்பும் மற்றொரு பாடல் மங்காத்தாவில் "நீ! நான்!". அட்டகாசமான மெலடி. SPB சரன் மற்றும் பவதாரிணியின் குரலில் காதில் தேனாக பாய்கிறது.இந்த மாத தொடக்கத்தில் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் AVP-HR ஆக இருந்த ஈஷான் ஜோஷி பதவி விலக்கப்பட்டு விப்ரோவின் வாசுதேவ் நாயக் அந்த பொறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளார். சமீப காலமாக இன்ஃபோஸிஸ் நிறுவனத்தின் பல வீசா முறைகேடுகள் மீது குற்றங்கள் சாட்டப்பட்டதாலும், சில வழக்குகள் போடப்பட்டதாலும் இந்த முடிவை நிறுவனம் எடுத்திருக்கின்றது. சுமார் 13 ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் உழைத்தவர், அப்பொழுது HR - Head ஆக இருந்த ஹேமா ரவிசந்தர் அவர்கள் இன்ஃபோஸிஸ் நிறுவனத்தை விட்டு விலகிய பின்னர் unanimous choice ஆக அந்த பொறுப்பிற்கு வந்தவர், HR பாலிஸிகளில் பல மாற்றங்களை செய்தவர், அவருக்கு இந்த நிலை என்றால் சிறிது கஷ்டமாக இருக்கிறது. அதற்கும் மேலாக தனிப்பட்ட முறையில் எனது ஆஃபர் லெட்டரில் கையெழுத்து போட்டவர் என்பதால் அந்த கஷ்டம் சிறிது அதிகரிக்கிறது."ஹாரிஸ் ஆன் தி எட்ஜ்" concert ற்காக காத்திருக்கிறேன். ARR, ராஜா, யுவன் அனைவருடையதும் பார்த்திருக்கிறேன் என்றாலும், ஹாரிஸின் soft romantic numbers are mind blowing. All the best Harris. Blow our heads off.இந்த சனிக்கிழமை விஜய் டிவியில் இனிது இனிது திரைப்படம் ஒளிபரப்பினார்கள். முதல் முறை பார்க்கிறேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கல்லூரி நினைவுகளில் முழுகி விட்டேன். It was nostalgic. படம் ஏன் தோல்வி அடைந்தது என்று தெரியவில்லை.

4 Comments:

சாணக்கியன் said...

திராபையான - பொருள் என்னவோ?

SathyaPriyan said...

//
சாணக்கியன் said...
திராபையான - பொருள் என்னவோ?
//

வருகைக்கு நன்றி சாணக்கியன். திராபை என்றால் பயனற்ற என்று பொருள் சொல்கிறது அகராதி. நான் அதை மோசமான/கேவலமான என்ற பொருளில் இங்கே பயன்படுத்தி உள்ளேன்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள சுட்டிகளுக்கு செல்லுங்கள். நன்றி.

அகரமுதலி

அகராதி

தமிழ் விக்சனரி

ஜோதிஜி திருப்பூர் said...

கேபிள் சங்கர் தளத்தில் கொடுத்த விமர்சனம் மூலம் இங்கே வந்தேன். இது போன்ற வலைதள அமைப்பை நான் கண்டதே இல்லை. வித்யாசமாக அற்பதமாக உள்ளது.

நிறைய படிக்க ருசிக்க.

நன்றி.

SathyaPriyan said...

முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஜோதிஜி திருப்பூர். தொடர்ந்து வாருங்கள். தங்களது கருத்தினை பதிவு செய்யுங்கள்.