Thursday, April 19, 2012


பொடிமாஸ் - 04/19/2012

IPL போட்டிகள் தொடங்கிவிட்டன. எனக்கு பெரிதாக ஈடுபாடு ஒன்றும் இல்லை. ஒரு விதமான சலிப்பே ஏற்படுகிறது. இம்முறை ராஜஸ்தான் ஜெயித்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன். ட்ராவிட் கோப்பையை வென்றால் நன்றாக இருக்கும் என்ற எனது ஆசையே காரணம். பெரிதாக வேறு ஒன்றும் இல்லை. சென்னையில் டிக்கெட் விலை ஆயிரம் ரூபாயிலிருந்து இருபதாயிரம் ரூபாய் வரை போகிறது என்று கூறுகிறார்கள். அதே நேரத்தில் கூட்டம் குறைவாகவே இருக்கிறது என்றும் TRP யும் சரிந்து விட்டது என்றும் கூறுகிறார்கள். IPL என்பது பொன் முட்டையிடும் வாத்தை போன்றது. BCCI தனது பேராசையினால் அதனை அறுக்காமல் இருக்க வேண்டும்.



ஷாருக் கான் அமெரிக்காவில் மீண்டும் சோதனை செய்யப்பட்டதில் இருந்து பலரும் உளறிக் கொட்டி வருகிறார்கள். லேட்டஸ்ட் உளறல் நம்மவர் கமல ஹாசனிடம் இருந்து. ஒரு நாட்டில் யாரை உள்ளே விட வேண்டும் விடக் கூடாது என்று முடிவு செய்வது அந்த நாட்டின் உரிமை. ஷாருக் இந்தியாவில் பெரிய சுண்டைக்காயாக இருக்கலாம். அமெரிக்காவில் அவரும் ஒரு சராசரி பயணி அவ்வளவுதான். ஒன்று பொத்திக் கொண்டு சோதனைக்கு தன்னை உட்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் இந்த நாட்டுக்கு வரக் கூடாது. அமெரிக்கா என்ன இந்தியாவா?, தீவிரவாதிகளை உள்ளே விட்டுவிட்டு அவர்கள் பல நூறு அப்பாவி இந்தியர்களை கொன்ற உடன் தீவிரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்று உள்துறை அமைச்சர் பேட்டி மட்டும் கொடுப்பதற்கு.



மேற்கு வங்காளத்தில் மம்தாவை குறிவைத்து கல்லூரி பேராசிரியர் ஒருவர் ஏதோ ஒரு கார்ட்டூனை தனது ஃபேஸ் புக் தளத்தில் வெளியிட அதனால் வந்து வினை. அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முதலமைச்சர்களை கேலி செய்தால் சிறை தண்டனை என்றால் கலைஞரை கேலி செய்ததற்காக சோ போன்றவர்கள் பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து தொலைக்க வேண்டி இருந்திருக்கும். நல்ல வேளை நாம் தமிழகத்தில் இருக்கிறோம். மம்தா அந்த கார்ட்டூன் உங்களை கேலி செய்யவில்லை, உங்கள் நடத்தை தான் உங்களை கேலி செய்கிறது.



இப்பொழுதெல்லாம் தமிழ் மணத்தை திறப்பதற்கே பயமாக இருக்கிறது. எந்த ஜாதியை சேர்ந்தவன் தமிழன், எந்த மதத்தை சேர்ந்தவன் தமிழன், எந்த இனத்தை சேர்ந்தவன் தமிழன், எந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு விருது கொடுக்க வேண்டும், எந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு வீடு கொடுக்க வேண்டும், எந்த ஜாதியை சேர்ந்தவனுக்கு இதையெல்லாம் கொடுக்க கூடாது..... இப்படி இன்னும் பல. அப்பப்பா கொடுமையடா. ஜாதியை பூதக் கண்ணாடி வைத்துக் கொண்டு தேடி அலைகிறார்கள்.

அது சரி.

"சாதிக் கொடுமைகள் வேண்டாம்; அன்பு
தன்னில் செழித்திடும் வையம்;
ஆதர வுற்றிங்கு வாழ்வோம்; தொழில்
ஆயிரம் மாண்புறச் செய்வோம்."


என்று பாடியவனையே ஜாதி வெறியன் என்று கூறும் உலகு தானே இது. வாழும் குறைந்த காலமான அறுபது எழுபது ஆண்டுகளில் ஒருவரை ஒருவர் வெறுக்காமல் அன்பு செலுத்தி வாழ்வது அவ்வளவு கஷ்டமா?



இந்த லட்சணத்தில் நாளை முதல் தமிழகத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு வேறு நடக்க இருக்கிறது. எடுத்து என்ன புடுங்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. முன்னரே இருக்கும் ஆயிரம் பிரிவினைகளை லட்சமாக்காமல் விட மாட்டார்கள் போல் இருக்கிறது. "வேற்றுமையில் ஒற்றுமை" என்று படிப்பதற்கு வேண்டுமானால் நன்றாக இருக்கிறது. ஆனால் உண்மையில் ஒற்றுமை எங்கே இருக்கிறது. வேற்றுமை மட்டுமே மிஞ்சி இருக்கிறது.



நேற்று முதல்வர் அறிவித்துள்ள அறிக்கையின் படி திருச்சி தஞ்சை வழித்தடத்தில் உள்ள செங்கிப்பட்டியில் புதிய அரசு பொறியியல் கல்லூரி ஒன்று திறக்கப்படும் என்று தெரிகிறது. திருச்சியில் முன்னரே உள்ள IIM, NIT, BIM, KAPVGMC போன்ற உயர் கல்லூரிகளுக்கு மத்தியில் இதுவும் வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு கல்லூரி என்பதால் கட்டணம் அதிகம் இருக்காது. பல ஏழை குழந்தைகள் படித்து பயன் பெற எனது வாழ்த்துக்களை இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்.



"ஒரு கல் ஒரு கண்ணாடி" இன்னும் இங்கே வெளியிடப்படவில்லை. DVD வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது நான் பெரிதும் எதிர் பார்ப்பது ராம் கோபால் வர்மாவின் டிபார்ட்மென்ட். அமிதாப், சஞ்சய் தத், ரணா தக்குபத்தி, அபிமன்யூ சிங் என்று ஒரு பட்டாளமே நடிக்கிறது. ட்ரைலரின் தொடக்கத்தில் அமிதாப் "மேன் இல்லீகலீ லீகல் காம் கர்தா ஹூன், லீகலி இல்லீகல் காம் நஹீ." என்று கூறுவது அசத்தல். டிப்பிகல் RGV படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். RGV படங்களில் என்ன பிரச்சனை என்றால் ஒன்று படம் அட்டகாசமாக இருக்கும், இல்லை படம் படு கேவலமாக இருக்கும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலை என்பதே கிடையாது.



அதே படத்தில் நடாலியா கவுர் என்ற ஒரு ப்ரேஸில் நாட்டு அழகியை ஒரு பாடலுக்கு ஆட விட்டிருக்கிறார். கம்பெனி படத்தில் கல்லாஸ் பாடலில் இஷா கோபிகரை அட்டகாசமாக இவர் காட்டியதை நாம் மறந்திருக்க முடியாது. இந்த பாடலின் கூடுதல் சிறப்பு இது தலைவரின் ஆசை நூறு வகை பாடலின் தழுவல். அதையும் பார்த்து ரசியுங்கள்.



7 Comments:

Anonymous said...

மம்தாவின் பேச்சும் சிறுபிள்ளைத்தனம்...Times named her in its TOP 100 most influential...a surprise...but we will take it...

Senthil Kumaran said...

//
லேட்டஸ்ட் உளரல் நம்மவர் கமல ஹாசனிடம் இருந்து.
//
கமல் ஒரு சகாப்தம் என்றெல்லாம் பதிவு எழுதிவிட்டு இப்பொழுது இப்படி கமலை திட்டுகிறீர்கள்? கட்சி மாறி விட்டீர்களோ?

SathyaPriyan said...

//
ரெவெரி said...
மம்தாவின் பேச்சும் சிறுபிள்ளைத்தனம்...Times named her in its TOP 100 most influential...a surprise...but we will take it...
//
சரியாக சொன்னீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அந்த பதவிக்கு கவுரவம் சேர்க்க வேண்டும். அந்த பதவியை பார்த்து மற்றவர்கள் சிரிக்கும் படி நடக்க கூடாது.

//
Senthil Kumaran said...
/லேட்டஸ்ட் உளரல் நம்மவர் கமல ஹாசனிடம் இருந்து./
கமல் ஒரு சகாப்தம் என்றெல்லாம் பதிவு எழுதிவிட்டு இப்பொழுது இப்படி கமலை திட்டுகிறீர்கள்? கட்சி மாறி விட்டீர்களோ?
//
உளரல்???? மாற்றி விட்டேன். எழுத்து பிழையை சுட்டாமல் சுட்டிக் காட்டியதற்கு முதல் நன்றி.

கமல் என்ற நடிகனின் மீது நான் கொண்ட பற்று, அபிமானம், மரியாதை எல்லாம் அப்படியே தான் இருக்கின்றன. நான் அவரின் தீவிர ரசிகன்.

ஆனால் அதற்காக அவர் கூறும் அனைத்துக்கும் தலையாட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லையே. எனக்கு என்று சுய சிந்தனையும் கருத்தும் இருக்கக் கூடாதா என்ன? இன்னும் சொல்லப் போனால் அவரது நடிப்பு மற்றும் கலை சார்ந்த கருத்துக்களை தவிர்த்து மற்ற பல கருத்துக்களுக்கும் நான் உடன்படுபவன் கிடையாது.

வவ்வால் said...

மம்தா நடந்து கொண்டது ஒரு மோசமான முன்னுதாரணம், ஆனால் அரசு பல்கலையில் பணிப்புரிபவருக்கு என ஒரு நடத்தை விதி இருக்கு அதையும் அந்த பேராசிரியர் மீறி இருக்கார். அதைப்போய் சோ ராம சாமியுடன் ஒப்பிடும் உங்கள் அறிவும் அபரிமிதமானது. சோ ராமசாமி என்ன அரசு ஊழியரா?

ஜாதவ்பூர் பல்கலை பேராசிரியரை பணி இடை நீக்கம் செய்திருக்கலாம், அதற்கு வழி இருக்கிறது, ஆனால் காவல்துறை மூலம் கைது செய்திருப்பது அவசரப்புத்தியே.

-----
சிங்கிப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி வருவது நல்லதே ஆனால் திருச்சியில் ஐ.ஐ.எம் இருக்கா?

SathyaPriyan said...

//
வவ்வால் said...

ஆனால் அரசு பல்கலையில் பணிப்புரிபவருக்கு என ஒரு நடத்தை விதி இருக்கு அதையும் அந்த பேராசிரியர் மீறி இருக்கார்.
//
அந்த பேராசிரியர் கைது செய்யப்பட்டது 2000 ஆண்டின் இபிகோ தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி. சைபர் க்ரைம் குற்றங்களே அவர் மீது சாட்டப்பட்டன. அதிலும் அவர் வாரண்ட் இல்லாமல் கைது செய்யப் பட்டுள்ளார். அதனாலேயே அவருக்கு ஜாமீன் எளிதாக கிடைத்துள்ளது. அதில் பேராசிரியர், அரசு ஊழியர்கள் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. இது சரி என்றால், கார்ட்டூன் போடும் யார் மீது வேண்டுமானாலும் அந்த சட்டம் பாயலாம். உங்கள் மீதும் என் மீதும் கூட.

ஜனநாயக நாட்டில் யாரும் யாரையும் நாகரீகமான முறையில் விமர்சனம் செய்யலாம். அதற்கெல்லாம் சிறை என்றால் சிறையில் இடமே இருக்காது.

//
அதைப்போய் சோ ராம சாமியுடன் ஒப்பிடும் உங்கள் அறிவும் அபரிமிதமானது. சோ ராமசாமி என்ன அரசு ஊழியரா?
//
சோ என்பது ஒரு உதாரணம் மட்டுமே. முன்னரே குறிப்பிட்டது போல இதை எந்த ஒரு சாமான்யன் செய்திருந்தாலும் மம்தா அவனை சிறையில் வைத்திருப்பார்.

சோ வை எதற்கு இங்கே இழுத்தேன் என்றால் அவரை போல தொடர்ந்து கலைஞருக்கு எதிராக கார்ட்டூன் போட்டவர்கள் யாரும் இல்லை. அதை ஒரு ஸூப்பர்லெட்டிவ் கம்பேரிஸனாக மட்டும் பாருங்கள்.

//
ஆனால் திருச்சியில் ஐ.ஐ.எம் இருக்கா?
//
இருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இயங்குகிறது.

Senthil Kumaran said...

வவ்வால் தலைகீழாகவே தொங்கிக் கொண்டிருந்தால் உங்களுக்கு அறிவு தெரியாது. பிட்டம் தான் தெரியும்.

Vetirmagal said...

Lovely reading after a long time. I had lost contact.