Thursday, October 25, 2012


கமலஹாசனும், நாயகனும், கொஞ்சம் நரகலும்

சமீபத்தில் திரு. கமலஹாசனின் நாயகன் பற்றிய ஹிந்து நாளிதழில் வெளியான கடிதம், அதன் தொடர்ச்சியான நாயகன் பட தயாரிப்பாளர் திரு. முக்தா ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அதனை தொடர்ந்த சர்ச்சை ஆகியவை பற்றியே எழுதுகிறேன்.

சாதாரண பதிவொன்றை எழுதி விட்டு அதை நால்வர் பாராட்டி விட்டாலே நமது உச்சி குளிர்ந்து போய் விடும். அப்படி இருக்கையில் டைம் பத்திரிக்கையினால் உலகின் தலை சிறந்த நூறு படங்களுள் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட, மூன்று தேசிய விருதுகள் வாங்கிய, இந்திய சினிமா ரசிகர்கள் பலரும் சிலாகிக்கும் படம் ஒன்றை கொடுத்துவிட்டு அதன் நினைவுகளை 25 ஆண்டுகள் கழிந்த பின்னர் நினைவு கூறுவது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்திருக்கும்.

ஆனால் என்ன, அந்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது போதை அதிகமாகி நடு வீட்டில் வாந்தி எடுப்பது போல சிலவற்றை தனது கடிதத்தில் வாந்தி எடுத்துவிட்டார் நமது கலைஞானி.

கமல் எழுதிய கடிதத்தை படிக்காதவர்கள் கீழே உள்ள சுட்டிக்கு சென்று கடிதத்தை முழுதும் படித்து விடுவது உத்தமம்.

Link : Of course Velu Nayakan doesn't dance

முதலில் கடிதத்தின் தொடக்கத்திலேயே தனது விக்ரம் படத்தை பற்றி சொல்லும் பொழுது கமல் மற்றும் சுஜாதாவின் அறிவு ஜீவித்தனம் கோடம்பாக்கத்தினால் அழிக்கப்பட்டுவிட்டதாக குறிப்பிடுகிறார், வசதியாக அப்படத்தின் திரைக்கதை தனது என்பதை நினைவு கூறாமல். மேலும் அப்படத்தை மணி இயக்கி இருக்க வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார். இது அதனை இயக்கிய ராஜசேகருக்கு உச்சகட்ட அவமானம்.

சரி அடுத்ததாக நாயகன் பற்றி அவர் குறிப்பிடும் பொழுது கடிதம் நெடுக அறிவுஜீவிகளான மணியும் கமலும் தயாரிப்பாளர் முக்தாவினால் அடைந்த மன உளைச்சல்கள் தான் இருக்கின்றன. சரி இவ்வளவு கஷ்டப்பட்டு படத்தினை எடுத்ததன் பலன் தான் நாயகன் திரைப்படம் என்பதை நினைவு கூறும் முயற்சியாக அதனை எடுத்துக் கொள்ள இயலவில்லை. அந்த கடிதத்தில் சாதித்து விட்ட பூரிப்போ அல்லது பெருமுச்சோ தெரியவில்லை. மாறாக முக்தாவின் ஒத்துழைப்பு இல்லாததினால் படத்திற்கு ஏற்பட்ட இழப்பின் காரணமான எரிச்சலே தெரிகிறது. அதன் உச்ச கட்டமாக மணிக்கு ஹார்ட் அட்டேக் வந்ததன் காரணமே முக்தாவின் கெடுபிடிகள் தான் என்ற தோற்றம் தருகிறது இந்த கடிதம்.

நான் தெரியாமல் தான் கேட்கிறேன் 10 ரூபாய் முதலீடு செய்து 20 ரூபாய் லாபம் சம்பாதிக்க நினைப்பது அவ்வளவு பெரிய குற்றமா? ஒரு தயாரிப்பாளர் எதற்கு கலை சேவை செய்ய வேண்டும்? நாடே போற்றும் ஒரு சிறந்த படத்தை தயாரிப்பதினால் அவருக்கு கிடைக்கும் நன்மை என்ன? அழகி, சேது, பிதாமகன் போன்ற படங்களை தயாரித்தவர்களின் நிலை என்ன? அப்படங்களில் நடித்தவர்களுக்கும் இயக்கியவர்களுக்கும் அடுத்தடுத்த படங்களில் சில பல கோடிகள் கிடைத்தன. ஆனால் தயாரித்தவர்களுக்கு.

ஏன்?, நாயகனையே எடுத்துக் கொள்வோம். அப்படத்தின் வெற்றியினால் அதிகம் நன்மை அடைந்தவர்கள் யார்? மணி மற்றும் கமல் தானே. நல்ல படத்தை தயாரித்த முக்தாவிற்கு என்ன கிடைத்தது? 25 ஆண்டுகளுக்கு பின்னர் வசை தானே கிடைத்தது.

எங்கே நான் கமலின் சில படங்களை குறிப்பிடுகிறேன், அவற்றின் தயாரிப்பாளர் யார் என்பதை படத்தின் DVD யின் உதவியோ அல்லது விக்கீபீடியாவின் உதவியோ இல்லாமல் உங்களால் கூற முடிகிறதா என்பதை பார்ப்போம். மூன்றாம் பிறை, மைக்கேல் மதன காம ராஜன், சிகப்பு ரோஜாக்கள், வாழ்வே மாயம், மஹாநதி ஆகிய படங்களின் தயாரிப்பாளர்கள் யார் என்பது தெரியுமா? அவ்வளவு ஏன்? பலர் சிலாகிக்கும் இந்த நூற்றாண்டில் வெளி வந்த அன்பே சிவம் படத்தின் தயாரிப்பாளர் யார் என்பது தெரியுமா? இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால் இப்படங்களினால் பெரிதும் லாபம் அடைந்தவர் கமல் தான். அவரின் நட்சத்திர அந்தஸ்து உயர்ந்தது. பல பக்கங்களில் இருந்தும் பாராட்டுகள் அவருக்கு வந்தன. ஒரு வேளை அப்படங்களினால் அவருக்கு வந்த பாராட்டுகளை அவர் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களோடு பகிர்ந்து கொண்டிருந்தால் அவர் விரும்பிய படி பல தயாரிப்பாளர்கள் வந்திருக்கலாம். அவ்வாறு அவர் செய்யாத போது தயாரிப்பாளர்களை லாப நோக்குடன் இருப்பதாக குற்றம் கூறுவது மிகவும் கேவலமானது.

சரி இவர் வியந்து பாராட்டும் இயக்குனர் பாலசந்தர் ஏன் திருமலை, திருவண்னாமலை போன்ற குப்பைகளை தயாரிக்கிறார். சொந்த பணத்தில் பேரரசு டைப் படங்களை எடுத்துவிட்டு அடுத்தவர் பணத்தில் திரைக் காவியங்களை எடுக்கும் போலி திரை மேதைகளைவிட 5 லட்சம் லாபம் சம்பாதிக்கும் படத்தினை தயாரிக்க முயன்ற முக்தா போன்றவர்கள் ஒன்றும் குறைந்து போய்விட வில்லை.

ஒரு தயாரிப்பாளர் லாபத்தை எதிர் பார்க்க கூடாது, கலை சேவை செய்ய வேண்டும், தன்னை வைத்து தான் எதிர் பார்த்தது போல படத்தினை எடுக்க வேண்டும், தான் எதிர்பார்த்த சம்பளமும் தனக்கு கொடுக்க வேண்டும், அதனால் நஷ்டம் வந்தால் சந்தோஷத்துடன் அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் அந்த படம் சிலாகிக்கப் படும் பொழுது மட்டும் அப்படத்தில் நடித்த நடிகர் வந்து அந்த பாராட்டுகளை எடுத்துக் கொள்வார். இது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம். அதனை தான் கமல் விரும்புகிறார்.

படம் எடுத்தாகி விட்டது, அது நன்றாக ஓடி பெரிய வெற்றி பெற்று விட்டது, பலர் அதனை பாராட்டுகிறார்கள், 25 ஆண்டுகளும் ஓடி விட்டது. இப்பொழுது வந்து படத்தின் தயாரிப்பாளர் வெஸ்ட்மோரை மேக் அப் செய்ய அனுமதிக்க வில்லை, ஜிம் ஆலனை சண்டை காட்சிகளை இயக்க அனுமதிக்க வில்லை, காஸ்ட்யூம் டிசைனுக்கு தனியாக ஆட்களை வைத்துக் கொள்ள அனுமதி தரவில்லை, கம்பி வைத்து உடைக்க காரை தரவில்லை என்றெல்லாம் கூறுவது வேடிக்கையாக மட்டும் இல்லை அசிங்கமாகவும் இருக்கிறது. அதன் உச்ச கட்டமாக படத்தின் காட்சிகளை எடுக்க பிலிம் ரோல்களை ரேஷன் செய்து கொடுத்தார் என்று சர்காஸத்துடன் கூறுவதாக நினைத்துக் கொண்டு கூறுவது பற்றி என்ன சொல்வது,

"Sorry Mr. Kamal Haasan. Not only your rationalism, this letter of yours is also nauseating."

பின்னர் சேர்த்தது:

திரு. முக்தா ஸ்ரீனிவாசன் அவர்கள் கமலின் கட்டுரைக்கு தனது பதிலை அளித்துள்ளார். அதனை கீழே உள்ள சுட்டிக்கு சென்று படியுங்கள்.

Link : Living in past glory

13 Comments:

வாலிபள் said...

அட போங்க சார்.
எல்லா படங்களிலும் ஆமை போல வாயைத் திறந்து, ஒரே பாணியிலேயே அழுது நடிக்கும் கமல் உங்களுக்கு உலக நாயகனா?

Vengu said...

கமலஹாசன் சிறந்த நடிகர்.ஆனால் மனித நேயத்தில், நன்றி கொண்டாடும் விசயத்திலும் குறுகிய மனத்தோடு நடந்து கொள்கிறார்.அவர் உயர்ந்த நடிகர் மட்டுமே என நிரூபித்திருக்கிறார்.

Vengu said...

நடிகர் கமலஹாசன் சிறந்த நடிகர்.ஆனால் மனித நேயம் குறைந்த மனிதர்.மேடையிலும் திரையிலும் நடிக்கலாம்.நிஜத்தில் முடியாது.மனித நேயத்தையும் வளர்த்தால் சிறந்த மனிதனாகலாம்.

வவ்வால் said...

சத்யன்,

லோகநாயகர் இப்படிலாம் பேசவில்லை என்றால் தான் ஆச்சர்யப்படனும் :-))

நாயகன் படம் எடுத்தக்காலத்தில் ,இவருக்கும், மணிக்குமே முட்டிக்கொண்டது என்றும், பின்னர் இன்னொரு படம் செய்ய மணி அனுகியும் மறுத்துவிட்டதாக எல்லாம் படித்துள்ளேன்.

இப்போது மணி சொந்தமாகிவிட்டார், எனவே ,தயாரிப்பாளரை காய்ச்சுகிறார் :-))

இத்தனைக்கும் சில கோடி( அப்போது ஒரு கோடியாவது செலவாகி இருக்கும்) முதலீடு செய்த தயாரிப்பாளர் வெறும் 5 லட்சம் லாபம் கிடைத்தால் போதும் என நினைக்கும் மன நிலையில் இருந்ததே ஒரு அபூர்வமான ஒன்று என சொல்லலாம்.

ஒரு கோடியை வங்கியில் போட்டுவிட்டு சும்மா உட்கார்ந்து இருந்தாலே 8.5% வட்டியில் 8.5 லட்சம் கிடைத்துவிடும் ,எதற்கு மண்டையை உடைத்துக்கொண்டு படம் எடுக்க வேண்டும் :-))

---------

மூன்றாம் பிறை, சிவப்பு ரோஜாக்கள் படம் கே.ஆர்.ஜி என நினைக்கிறேன்.

மகாநதி எஸ்.ஏ.ராஜ் கண்ணு , நீண்ட இடைவெளிக்கு பின் 16 வயதினிலே எடுத்துவிட்டு பின்னர் மகாநதி எடுத்து இருந்த காசையும் கமலால் இழந்தார்.

அன்பே சிவம் எடுத்த லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் ,சிறிய பட்ஜெட் படம் எடுத்து சேர்த்த காசை எல்லாம் இழந்தார்கள், படத்தின் நட்டம் சரி செய்ய என்னை வச்சே இன்னொரு படம் எடுங்க என லோகநாயகர் சொன்னாராம், அய்யயோ இன்னொரு தடவையா ஆளை விடுங்க சாமின்னு தயாரிப்பாளர் தரப்பு ஓடியதாம் :-))

இப்போ படமே தயாரிக்காம சும்மா இருக்காங்க.

பிரமிட் சாய்மீராவிற்கு ,மர்மயோகின்னு படம் எடுப்பதாய் சொல்லி ,படமே எடுக்காம 14 கோடி ஆட்டைய போட்டவர் தான் லோகநாயகர் :-))

விஸ்வரூபம் கூட விற்பனையாகமல் தான் கிடக்கு, அதன் தயாரிப்பாளர் படம் வந்ததும் பஞ்சாயத்து வைப்பார் என நினைக்கிறேன்.

லோகநாயகரால் போண்டியான தயாரிப்பாளர்கள் தான் நாட்டில் அதிகம். தாணு எல்லாம் எப்படியோ சமாளிச்சு வந்துவிட்டார், மற்றவர்கள் கதை எல்லாம் ரத்தக்கண்னீர் தான்!

Amudhavan said...

மூன்றாம்பிறை படத்தின் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்.

ravikumar said...

Very Good analysis about Kamal
whenever he produces it will be low budget in single flat. If any other producer makes it import all techique & technicians at others cost.

வருண் said...

வெறும் பொய்யும் புரட்டும் தற்பெருமையும்தான் இருக்கு. நெஜம்மாவே படு கேவலமாயிருக்கு இந்த ஹிந்து ஆர்ட்டிக்கிள். இந்தாளு திருந்தின மாரி தெரிந்தது, மறுபடியும் ரொம்ப கழண்டுடுத்துபோல இருக்கு.

What is he trying to do???

It is not uncommon producer goes thru financial problems. Even during muLLum malarum mahendran went thru trouble as the producer did not have enough money. The movie became a hit later.

ஒளறல் கமலஹாசன் is back again!!!

SathyaPriyan said...

வருகை தந்து கருத்து தெரிவித்த அனைவருக்கும் எனது நன்றிகள்.

unmaiyalan said...

இதே மாதிரி ரஜினி பற்றி எழுத துணிவிருக்கா ?........எழுதுவீர்கள் என்றால் கமல் செய்தது 100 தவறு .....இல்லை என்றால் ரஜினியோடு ஒப்பிடும் போது இது தவறே இல்லை ..................

unmaiyalan said...

இதே மாதிரி ரஜினி பற்றி எழுத துணிவிருக்கா ?........எழுதுவீர்கள் என்றால் கமல் செய்தது 100 தவறு .....இல்லை என்றால் ரஜினியோடு ஒப்பிடும் போது இது தவறே இல்லை ..................

SathyaPriyan said...

//
இதே மாதிரி ரஜினி பற்றி எழுத துணிவிருக்கா ?........எழுதுவீர்கள் என்றால் கமல் செய்தது 100 தவறு .....இல்லை என்றால் ரஜினியோடு ஒப்பிடும் போது இது தவறே இல்லை
//

ஏன் ரஜினி என்ன பெரிய புடலங்காயா? அவரை பற்றி எழுதினால் என்னை என்ன செய்து விடுவார்? இது ஒரு அபத்தமான கேள்வியாக உங்களுக்கு தெரியவில்லையா?

கீழே உள்ளது நன் கமலை பாராட்டி எழுதிய பதிவுகள். அப்போது வந்து கேட்க வேண்டியது தானே இதே போல் ஏன் ரஜினியை பற்றி எழுதவில்லை என்று.

கமலின் நடிப்புக்கு நான் ரசிகன். அவரது ஹிபோக்ரிஸிக்கு அல்ல.

கமல் - ஒரு சகாப்தம் :
சுட்டி - http://sathyapriyan.blogspot.com/2006/10/blog-post_16.html

தசாவதாரம் - கமலஹாசன் - ஒரு ரசிகனின் கடிதம்
சுட்டி -
http://sathyapriyan.blogspot.com/2008/06/blog-post_18.html

ஒரு ஒப்பீடு; ஒரு வேண்டுகோள்; ஒரு மனமகிழ்ச்சி
சுட்டி -
http://sathyapriyan.blogspot.com/2008/08/blog-post.html


saturn730 said...

http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-sundaymagazine/living-in-past-glory/article4039603.ece

முக்தாவின் பதிலடி.. 17.5 லட்சம் சம்பளம் வாங்கி விட்டு, 5 லட்சம் எதிர் பார்ப்பது ஒரு குற்றம் என்று சொல்ல எப்படி மனம் வருகிறதோ.. இதில் ராஜ் கமல் பிலிம்ஸ் எடுப்பதெல்லாம் கமர்சியல் படங்கள் மட்டுமே.. கலை படங்களை அவரே தயாரிக்க வேண்டியது தானே..

SathyaPriyan said...

முக்தாவின் பதிலை பதிவின் கடைசியில் இன்று காலையே சேர்த்து விட்டேன். கமல் தன்னை தானே அசிங்கப் படுத்திக் கொண்டார் என்பதை தவிர சொல்வதற்கு வேறு ஒன்றும் இல்லை.