2008 நவம்பர் மாதம் 26 அன்று விதைத்த பலனை நான்கு ஆண்டுகள் கழித்து 2012 நவம்பர் 21 அன்று அறுவடை செய்தான் அஜ்மல் கசாப். இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அவனது தூக்கை உறுதி செய்ததை ஒட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7:30 மணிக்கு அவன் தூக்கிலிடப்பட்டான்.
மிகுந்த மன மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், இனி இவ்வாறு மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க துர்சம்பவம் செய்தவனோடு மட்டும் இல்லாமல் அதற்கு உதவிய துரோகிகளுக்கும் இதே போல தண்டனை கிடைக்கும் என்று நம்புவோம்.
Wishing you many more happy returns of today.
மிகுந்த மன மகிழ்ச்சியுடன் இதை ஏற்றுக் கொள்ளும் அதே வேளையில், இனி இவ்வாறு மற்றொரு சம்பவம் நடக்காமல் இருக்க துர்சம்பவம் செய்தவனோடு மட்டும் இல்லாமல் அதற்கு உதவிய துரோகிகளுக்கும் இதே போல தண்டனை கிடைக்கும் என்று நம்புவோம்.
Wishing you many more happy returns of today.
3 Comments:
அஜ்மல் கசாப் தூக்கிலிடப்பட்ட அன்று என் மலையாளி நண்பர் கேட்டார். இது உங்கள் மாநிலத்தில் நடந்திருந்தால் இவ்வளவு நாள் இவன் உயிரோடு இருந்திருக்க மாட்டான் என்றார், ஏன் என்று கேட்டதற்கு அடுத்த நாளே என்கவுண்டரில் சுட்டு தள்ளியிருப்பர்கள். நான் சொன்னேன் அதில் தப்பே இல்லை. இவனையெல்லாம் வச்சு சோறு போட்டுக்கிட்டு யாரு தண்ட செலவு பண்ணுவது என்று.
நீங்க சொல்லுங்க நான் சொன்னது சரியா என்று.
நீங்கள் சொன்னது தான் சரி அஜீம் பாய். கடுமையான சட்டங்களும் தண்டனைகளும் இருப்பதால் தான் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளில் குற்றங்கள் குறைவாக நடக்கின்றன.
ஆனால் இவன் வெறும் அம்பு மட்டுமே. 1250 அமெரிக்க டாலர்கள் தனது குடும்பத்திற்கு கிடைப்பதற்காக தனது உயிரை பொருட்படுத்தாமல் இந்த காரியத்தை செய்தவன். இவன் ஒருவன் செத்தால் இவனை எய்தவர்களுக்கு இன்னும் பல அம்புகள் கிடைக்கும்.
எய்தவனை ஒழிப்பதால் மட்டும் கூட இதனை ஒழித்துவிட முடியாது. உண்மையில் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் போன்ற நாடுகள் பொருளாதாரத்தில் உயர்ந்து, அந்நாட்டு இளைஞர்கள் கல்வி பெற்று வாழ்வில் உயர்ந்து வாழ்வதாலும், சகோதரத்துவத்தை இரண்டு நாடுகளும் பரப்புவதாலும் மட்டுமே இது முடியும்.
பள்ளியில் இருந்தே அடுத்த நாட்டை எதிரியாக சித்தரித்து பாடங்கள் வைத்தால் வேறு என்ன கிடைக்கும்? இம்மாதிரி தாக்குதல்கள் தான்.
நமது பேரன் பேத்திகள் காலத்திலாவது நமது நாட்டில் அமைதி வந்தால் நாம் கொடுத்து வைத்தவர்கள்.
வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.
Post a Comment