Sunday, December 16, 2012


பொடிமாஸ் - 12/16/2012

அமெரிக்க துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து ஆளுக்காள் அமெரிக்க வாழ்க்கையின் பாதுகாப்பின்மை குறித்து கருத்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள், வசதியாக நான்கு நாட்களுக்கு முன்னர் சென்னையில் நான்கு மாணவர்கள் பேரூந்து விபத்தில் இறந்ததை மறந்து விட்டு. இறந்த குழந்தைகளின் ஆசிரியைகள் இருவர் குழந்தைகளை பாதுகாக்க அவர்களை தனி அறையில் அடைத்துவிட்டு, குழந்தைகளுக்கும் கொலைகாரனுக்கும் நடுவில் நின்று, துப்பாக்கி குண்டுகளை தாங்கள் வாங்கிக் கொண்டு இறந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்திருந்தால் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி இருக்கலாம்.

சம்பளத்துக்காக வேலை செய்கிறோம் என்றாலும், தங்களது வேலையின் கடமையை உணர்ந்து கொண்டு வேலை செய்யும் இவர்களை போன்றவர்கள் நிச்சயம் கொலைகாரர்களை விட அதிக எண்ணிக்கையில் தான் எந்த ஒரு சமூகத்திலும் இருக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் இருக்கும் வரை எந்த சமூகமும் பாதுகாப்பான சமூகம் தான். இறந்தவர்களுக்கு எனது அஞ்சலிகள்.


வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியா குறித்து ஏதாவது கருத்து தெரிவித்தால் உடனே, "இந்தியாவை விட்டு ஓடிப் போனவர்களுக்கு இந்தியா குறித்து என்ன கவலை?" என்ற தேய்ந்த ரெக்கார்டையே தேய்ப்பது சிலருக்கு ஃபேஷனாக இருக்கிறது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இந்தியாவில் உள்ள குடும்பத்தினருக்கு மாதா மாதம் பணம் அனுப்பலாம், இந்தியாவில் வீடு, விவசாய நிலம் போன்ற சொத்துக்களை வாங்கலாம், அவற்றை வாடகைக்கு/குத்தகைக்கு விட்டு பணம் சம்பாதிக்கலாம், ஏதாவது தொழில் தொடங்கி பலருக்கு வேலை வாய்ப்பு அளிக்கலாம், அப்படி சம்பாதிக்கும் பணத்திற்கு வருமான வரி கட்டலாம், இந்திய வங்கிகளில் கடன் வாங்கி மாதா மாதம் வட்டியுடன் அசலை சேர்த்து அடைக்கலாம், இந்திய ஷேர் மார்கெட்டில் இன்வெஸ்ட்மென்ட் செய்யலாம் இப்படி இன்னும் பல செய்யலாம்கள் இருக்கும் போது ஒரு சிலர் பொத்தாம் பொதுவாக வெளிநாட்டில் வசிப்பவர்களால் இந்தியாவிற்கு ஒரு நன்மையும் இல்லை என்ற ரீதியில் பேசுவது மிகவும் துரதிருஷ்டவசமானது.


விஸ்வரூப தொலைக்காட்சி வெளியீடு நிச்சயம் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் தான் என்பேன். குறைந்த பட்ஜெட் படங்கள் தயாரித்தவர்களுக்கு அப்படத்தை வெளியிட முடியாத சூழ்நிலை வந்தால் இம்மாதிரி மாற்று வெளியீட்டு முயற்சி மிக்க பலன் தரும். ஆனால் அதே நேரத்தில் நூறு கோடி, நூற்றைம்பது கோடி என்ற பட்ஜெட்டில் படம் எடுத்தவர்களுக்கு இதனால் எந்த வகையில் நன்மை கிடைக்கும் என்பது தெரியவில்லை. ஆயிரம் ரூபாய் கொடுத்து எவ்வளவு பேர் தொலைக்காட்சியில் படம் பார்ப்பார்கள்?, அமெரிக்கா போன்ற வெளி நாடுகளில் பலர் தங்களது இல்லத்தில் HD ப்ரொஜெக்டர், HD ஸ்க்ரீன், சவுண்ட் சிஸ்டம் என்று அட்டகாசமான காட்ஜெட்டுகளை வைத்திருப்பார்கள். அதனால் தியேட்டரில் படம் பார்க்கும் எஃபெக்ட் ஓரளவுக்கு கிடைக்கும் ஆனால் இந்தியாவில் எவ்வளவு பேர் வீட்டில் அப்படி இருக்கும்? குறிப்பாக தமிழகத்தில் எவ்வளவு பேர் வீட்டில் அப்படி இருக்கும்? 50 ரூபாய் கொடுத்து DVD யில் படம் பார்க்கும் போது எனக்கு தியேட்டர் எஃபெக்ட் தேவை இல்லை என்று நான் கருதலாம் ஆனால் ஆயிரம் ரூபாய் கொடுத்து பார்க்கும் போது எப்படி நான் அது தேவை இல்லை என்று கருத முடியும்? SOC என்ற டெக்னாலஜியின் மூலம் ஒளிபரப்பாகும் படத்தை ரெக்கார்ட் செய்ய முடியாமல் தடை செய்ய இயலும், ஆனால் தியேட்டரில் செய்வது போல வீடியோ கேமரா கொண்டு படத்தை ரெக்கார்ட் செய்வதை யாரால் தடுக்க முடியும்? இப்படி பல கேள்விகள் இருக்கின்றன. விஸ்வரூபம் விரைவில் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை சொல்லும் என்று நம்புவோம்.


நீதானே என் பொன் வசந்தம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இறுதி அரை மணி நேரம் அட்டகாசம். கிளைமேக்ஸில் ஜீவா மற்றும் சமந்தாவின் நடிப்பு அருமை. இருவரையும் பிரித்து தொலைத்து விடாதே என்று மனதுக்குள் கத்திக் கொண்டே இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். இப்படத்தின் மிகப் பெரிய லெட் டவுன் ராஜாவின் இசை. பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னணி இசை படு சொதப்பல். எனக்கு இப்படம் எனது பள்ளி மற்றும் கல்லூரி கால வாழ்க்கையை, அனுஷா, தீபா, காயத்ரி மற்றும் பலரை நன்றாக நினைவுபடுத்தியது. என் வாழ்வில் நடந்த டியூஷன் காட்சிகள், கல்ச்சரல் காட்சிகள் என்று அனைத்தும் என் கண் முன்னே வந்து போனது. எனக்கு இது மீண்டும் ஒரு ஆட்டோகிராஃப். It was nostalgic.

நீதானே என் பொன் வசந்தம் என்று இல்லை, இந்த வருடத்தில் வெளிவந்த பல பலருக்கும் பிடிக்காத படங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தாண்டவம், பில்லா 2 போன்ற படங்கள் உதாரணம். எனது ரசனை மாறிவிட்டது என்று நினைக்கிறேன்.


கிருஸ்துமஸ் விடுமுறையில் குடும்பத்துடன் ஆர்லான்டோ செல்கிறோம். ஐந்து நாட்கள். டிஸ்னி வோர்ல்ட், யுனிவர்சல் கிங்டம் என்று பல இடங்கள் இருக்கின்றன. LA சென்ற போது முன்னரே பார்த்திருந்தாலும் ஆர்லான்டோவில் இதுவே முதல் முறை. இந்த வருடம் எங்களுக்கு இது மூன்றாவது வெக்கேஷன். இந்த வருட தொடக்கத்தில் பஹாமாஸ் சென்றோம், பின்னர் இந்தியா, இப்போது ஆர்லான்டோ. புகைப்படங்களை வந்த பின்பு பகிர்ந்து கொள்கிறேன். வந்த பிறகு புத்தாண்டுக்கு மீண்டும் நான்கு நாட்கள் விடுமுறை. புத்தாண்டு விடுமுறைக்கு எங்கும் செல்வதாக திட்டம் இல்லை.


சென்ற வாரம் முழுவதும் இந்தியாவில் கால் பதிக்க வால்மார்ட் லஞ்சம் கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில் பாராளுமன்றம் ஸ்தம்பித்தது. இது பணிப்பாறையின் துளி மட்டும் தான். சில்லறை வியாபாரிகள் விவசாயிகளை சுரண்டுகிறார்கள் என்பவர்கள் சில்லறை வியாபாரிகளை விட குறைந்த விலைக்கு பொருளை ஒருவன் தர வேண்டும் என்றால் அவர்களை விட அதிகமாக விவசாயிகளை சுரண்டினால் தான் முடியும் என்பதை மறந்தது விந்தை தான்.


ரிக்கி பான்டிங் ஓய்வு பெற்றதை தொடர்ந்து மீண்டும் சச்சின் ஓய்வு கூச்சல் தொடங்கி இருக்கிறது. லாரா, டிராவிட், பான்டிங் வரிசையில் மீதி இருப்பது காலிஸ் மற்றும் சச்சின். காலிஸின் தற்போதைய ஃபார்மை பார்த்தால் அவர் இன்னும் மூன்று ஆண்டுகளுக்காவது தொடர்ந்து விளையாடுவார் என்று தோன்றுகிறது. எஞ்சி இருப்பது சச்சின் தான். சச்சின் போன்ற காலிபர் உள்ளவர்கள் வெளியேற வேண்டும், வெளியேற்றப்படக் கூடாது. பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.


இந்த வார இறுதியில் மாண்டிக்கு ஐந்து வேக்சீன்ஸ் கொடுக்க வேண்டி இருந்தது. மருத்துவரிடம் கொண்டு சென்றேன். அடுத்து ஓராண்டுக்கு கவலை இல்லை. இனி கொடுக்க வேண்டியவை அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் தான். அவனது பற்களில் மஞ்சள் சற்று அதிகமாகவே படிந்துள்ளது. டென்டிஸ்டிடம் ஜனவரி மாதம் கொண்டு செல்ல வேண்டும். அவனது பற்களை அவர்கள் சுத்தம் செய்து விடுவார்கள்.


மாண்டியை பற்றி பேசும் போது சென்ற வாரம் நடந்தது நினைவுக்கு வருகிறது. ஒரு பின்னூட்டத்தில் பொதுவாக மற்றவர்களை 'நாய்' என்று சொல்லிவிட்டேன் என்று நினைத்து ஒரு பதிவர் வானுக்கும் பூமிக்குமாக குதி குதி என்று குதித்தார். அப்போது அதற்கு காரணம் எனக்கு புரியவில்லை. இப்போது தான் அது புரிகிறது.

சக மனிதர்களை நாய் போல் நடத்தும் சமூகத்தில் வாழ்பவர்களுக்கு 'நாய்' என்றால் கோபம் வரத்தான் செய்யும். நாயை மனிதர்கள் போல் நடத்தும் சமூகத்தில் வாழும் என் போன்றவர்களுக்கு அது புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்.

8 Comments:

சமுத்ரா said...

good one

Avargal Unmaigal said...

///சக மனிதர்களை நாய் போல் நடத்தும் சமூகத்தில் வாழ்பவர்களுக்கு 'நாய்' என்றால் கோபம் வரத்தான் செய்யும். நாயை மனிதர்கள் போல் நடத்தும் சமூகத்தில் வாழும் என் போன்றவர்களுக்கு அது புரிவது கொஞ்சம் கஷ்டம் தான். //


Good one4

Senthil Kumaran said...

//
சக மனிதர்களை நாய் போல் நடத்தும் சமூகத்தில் வாழ்பவர்களுக்கு 'நாய்' என்றால் கோபம் வரத்தான் செய்யும். நாயை மனிதர்கள் போல் நடத்தும் சமூகத்தில் வாழும் என் போன்றவர்களுக்கு அது புரிவது கொஞ்சம் கஷ்டம் தான்.
//
செருப்படி. ஆனால் சில ஜென்மங்களுக்கு இதெல்லாம் புரியும் என்று நினைக்கிறீர்கள்?

வருண் said...

I live in US but I am not sure I can justify whatever happened to 20 innocent children and 6 adults.
There is no point in fingering at Indians and their carelessness at this time! That will never justify whatever happened here!

It is a shame it happened in a civilized society.

It should not happen again because this is not an accident!

You will also notice one thing during Obama and other nfl game prayers for the victims. They left out the mom who died and son who killed everyone and killed himself. The total is 28! They were praying only for 26! I believe they consider them as "evil"! They dont even want to think them as Americans or what?!

That boy had autistic problems. His mom should not have owned three guns! How can someone shoot just like that without proper practice? I cant shoot someone even if I had a gun because I never used a gun before!

I am not going to run away from America because of this. At the same time I am not going to justify this. I never can! :(

SathyaPriyan said...

வருகைக்கு நன்றி சமுத்ரா, அவர்கள் சார், மற்றும் செந்தில் குமரன்.

@வருண்,
நீங்கள் சொல்லியதுடன் வரிக்கு வரி உடன் படுகிறேன். நான் இங்கே நடந்ததை நிச்சயம் ஜஸ்டிஃபை செய்ய முயலவில்லை.

//
There is no point in fingering at Indians and their carelessness at this time! That will never justify whatever happened here!
//
இது நிச்சயம் எனது நோக்கம் அல்ல. எனது பதிவு அப்படி உங்களுக்கு ஒரு தோற்றம் ஏற்படுத்தி இருந்தால் அதற்கு எனது சிந்தனைகளை சரியாக எழுத்தில் கொண்டு வருவதற்கான ஆற்றல் இல்லாமையே காரணம்.

நான் சொல்ல வந்தது, ஸைக்கோக்கள் எல்லா சமூகத்திலும் இருப்பார்கள். தனது உயிரை கொடுத்து ஒரு மூன்றாம் மனிதரின் குழந்தைகளை காப்பாற்றிய அந்த ஆசிரியை போன்றவர்களும் எல்லா சமூகத்திலும் இருப்பார்கள். இரண்டாமவர்களின் எண்ணிக்கை முதல் பிரிவினரின் எண்ணிக்கையை விட எல்லா சமூகத்திலும் அதிகம் இருக்கும்.

பாதி க்ளாஸ் காலியாக இருப்பதை நினைத்து வருத்தம் கொள்வதை விட, பாதி க்ளாஸ் பால் இருப்பதை நினைத்து மகிழ்வதே சிறந்தது.

நான் இங்கே இந்தியாவில் நடந்த விபத்தை இழுத்ததற்கான காரணம் அனைவரும் இந்தியா சொர்க பூமி, அமெரிக்கா நரக பூமி என்ற ரீதியில் எழுதியது தான். சமீபத்தில் கூட ஒரு பதிவரின் சகோதரர் (பதிவர் பெயர் மறந்து விட்டது) டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட அவரை புதுக்கோட்டையிலிருந்து திருச்சி கொண்டு சென்று மருத்துவமணை மருத்துவமணையாக ஏறி இறங்கி இறுதியாக அவரை அரசு மருத்துவமணைக்கு சென்று சேர்த்திருக்கிறார்கள்.

எப்படி இந்த ஒரு சம்பவத்தை வைத்து இந்தியா நரகம் என்று கூறிவிட முடியாதோ, அப்படியே அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவத்தை மட்டும் வைத்து அமெரிக்கா நரகம் என்று கூறி விட முடியாது.

//
The total is 28! They were praying only for 26!
//
இந்த கோணத்தில் நான் சிந்திக்க வில்லை. புதிய கோணத்தில் சிந்திக்க தூண்டிய உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி.

வருண் said...

Sathyapriyan: I did not mean to say, you are justifying. As you know, few weeks earlier I was irritated when people trying to project US is not a good place to raise your children.

Because of that argument we had, I should make my stand clear that I am not going to justify whatever happened in US despite the fact that I prefer living here, EVEN NOW!

-----------
இங்கே உள்ளவர்களிடம் பேசும்போது என்ன சொல்றாங்கன்னா

1) மனவியாதினு வந்துட்டா இண்சூரன்ஸ் கவரேஜ் நல்லாயில்லைனு சொல்றாங்க (கோ பே மெண்ட் அதிகம்). இதனால் மக்கள் ஒழுங்கா ட்ரீட்மெண்ட் எடுப்பதில்லை

2) கன் கண்ட்ரோல் நிச்சயம் கொண்டு வரணும்..

----------

அந்தம்மா 3 கன் வைத்திருந்தது மட்டுமல்லாமல், அந்த பையனுக்கு சுடுவதற்கு பயிற்சி க்ளாஸ் கொடுத்து இருக்காம்!

அவனுக்கு மனநிலை சரியில்லைனு தெரிந்த உடனாவது துப்பாக்கிகளை அகற்றியிருக்கணும்!

It is puzzling..

He killed his mom at his home. It is not clear why he went to that school. It is not clear his mom was still working there as a full time teacher. There are lots of conflicting reports till now!

அஜீம்பாஷா said...

பாஸ் நடந்தது , நடப்பது எல்லாம் மறந்துட்டு விடுமுறையை சந்தோஷமா கொண்டாடுங்க .

SathyaPriyan said...

ரொம்ப நன்றி அஜீம் பாய். நீங்களும் உங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் மகிழ்ச்சியாக இருக்க இந்த தேவதூதனின் பிறந்த நாள் உதவட்டும்.