Friday, March 02, 2007


அமெரிக்கா பிடிச்சுருக்கா?

நான் அமெரிக்கா வந்ததிலிருந்து இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படாத உரையாடல்களை விரல் விட்டு எண்ணி விடலாம். சக இந்தியர்களிடம், அமெரிக்கர்களிடம், உறவினர்களிடம், நண்பர்களிடம் யாரிடம் பேசும் போதும் இந்த கேள்வி இடம் பெற்று விடும். அதற்கு நானும் "ம்...", "Yeah, Good", "Ofcourse", "Kind Of", "Okie", "ரொம்பவே" போன்ற பதில்களை எனது மனநிலைக்கு ஏற்ற வாரு அளிப்பேன். இதே கேள்வியை நான் இந்தியாவில் இருந்த போது அமெரிக்கா சென்ற/சென்று திரும்பிய பலரிடம் கேட்டிருக்கிறேன். இது ஒரு வழக்கமான கேள்வி என்பதையும் தாண்டி ஒவ்வொரு முறை இந்த கேள்வி என்னிடம் கேட்கப்படும் போதும் என்னுள் எதையோ தொலைத்த ஒரு உணர்வு ஏற்படும். அதிலும் சமீபத்தில் ப்ரியாவின் "அப்பா" என்ற பதிவை படித்த உடன் அந்த உணர்வு அதிகரிக்க தொடங்கியது.

நான் பார்த்த வரை அமெரிக்கா வரும் இந்தியர்களை மூன்று வகையாக பிரிக்கலாம். ஒன்று இந்தியாவில் கல்லூரிப்படிப்பை முடித்து விட்டு, அமெரிக்காவில் மேல்படிப்பு படிக்க வருபவர்கள். இவர்கள் தங்களது மேல் படிப்பிற்கு அதிகம் செலவு செய்து விட்டதால் அமெரிக்காவிலேயே வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிறார்கள். அமெரிக்காவிற்கு இளம் வயதிலேயே (21) வந்து விடுவதாலும், அமெரிக்க வாழ்க்கை முறை பழகி விட்டதினாலும், இந்தியாவின் முன்னேற்றதை அறியாததாலும் அவர்களுக்கு இந்தியா செல்வது என்றால் வேப்பங்காயாக இருக்கிறது. 10 ஆண்டுகளாக இங்கே இருக்கும் ஒருவர் இந்தியாவில் Flexi Timings, Working From Home, Calling by Name இதெல்லாம் இருக்கிறது என்பதை நம்ப கூட மறுத்து விட்டார். அவர் என்னிடம் கூறியது, "I know people call their managers by names in India. But do they call them by name?"

அவரை சொல்லி குற்றமில்லை. அவரைப் போன்ற பலரை நான் பார்த்திருக்கிறேன். இந்தியாவின் வளர்ச்சியை மாற்றத்தை அறியாதவர்கள் அவர்கள். அவர்களை பொருத்தவரை மேல் படிப்பு படிக்கும் போது அவர்களின் லட்சியம் ஒரு வேலையும் H1B ஸ்பான்ஸரும். வேலை கிடைத்த உடன் அவர்களின் லட்சியம் GC. அதன் பிறகு அமெரிக்க குடியுரிமை. அடித்து பிடித்து இதை பெருவதற்கு 10 - 15 ஆண்டுகள் ஆகிவிடும். அவரை போன்றவர்களிடம் சென்று கேட்டால் யோசிக்காமல் சொல்வார்கள் "அமெரிக்கா தான் பிடிக்கும்; அமெரிக்கா மட்டும் தான் பிடிக்கும்" என்று.

அடுத்தது இங்கே Onsite Deputee யாக வரும் நம் நாட்டவர்கள். ஒரு நிலையிலிருந்து பார்த்தால் இவர்கள் பரிதாபமானவர்கள். இவர்கள் வந்த உடன் இவர்களுக்கு இங்கே அத்தியாவசிய தேவையான கார், ஒட்டுநர் உரிமம், கைத் தொலைபேசி, கடன் அட்டை, மடிக் கணிணி போன்றவற்றுள் பல இருக்காது. மேலும் இவர்களுக்கு கடன் வரலாறு (Credit History க்கு தமிழில் என்ன?) கூட இருக்காது. யாராவது தெரிந்தவர்கள் அதே ஊரில் கார் வைத்திருந்தால் தப்பித்தார்கள். இல்லையென்றால் அவர்கள் பாடு திண்டாட்டம் தான். இவ்வளவு ஏன்? ஒரு சிலருக்கு பேசுவதற்கு கூட ஆள் இருக்காது. அதிலும் குறிப்பாக இந்தியாவில் பல நண்பர்களுடன் இருந்து விட்டு இங்கே வந்து நாலு சுவருக்குள் இருக்கும் அவர்களின் நிலை பரிதாபமானது.

அட எல்லாம் கிடைத்து விட்டது. போய் ஒரு நல்ல TV, கார் வாங்கலாம் என்றால், எவ்வளவு நாட்கள் எங்கே இருக்கப் போகிறார்கள் என்பது அவர்களுக்கே தெரியாது. இருக்கும் குறைந்த நாட்களில் பணம் சேமிக்க தான் அவர்கள் விரும்புவார்கள்.

மற்றொரு நிலையிலிருந்து பார்த்தால் இவர்கள் குடுத்து வைத்தவர்கள். ஏனென்றால் அவர்களுக்கு அமெரிக்கா மீது ஒரு பிடிப்பு ஏற்படுவதில்லை. எந்த நிலையிலும் அவர்கள் இந்தியா செல்ல தயாராகவே இருக்கிறார்கள்.

அவர்களை அமெரிக்காவில் பிடித்து வைதிருப்பது பணம், பணம், பணம் மட்டுமே. அமெரிக்காவிற்கு வருவதற்கு முன்பு தாம்புக் கயிற்றினால் கட்டப்பட்ட அந்த பிடிப்பு, நாளாக நாளாக வெறும் நூலினால் கட்டப்பட்ட பிடிப்பாகிறது. 3 மாதங்கள் அமெரிக்காவில் இருந்தவர் ஒருவரிடம் கேட்டால், "ம்... சூப்பரா இருக்கு" என்று பதில் வரும். அதுவே ஒரு வருடம் ஆனவரிடம் கேட்டால், "பரவாயில்லை" என்று பதில் வரும். இரண்டு வருடத்திற்கு பிறகோ, "எப்போடா இந்தியா போலாம்? என்று இருக்கு" என்பது பதிலாக இருக்கும்.

நாளாக நாளாக முதல் வகையினருக்கு பிடித்து போகும் அமெரிக்கா, ஏன் இவர்களுக்கு கசக்கிறது? என்று கேட்டால், இவர்கள் நான் முன்னரே கூறியது போல அமெரிக்காவில் வாழ அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வது இல்லை.

அடுத்தது என்னை போன்ற ரெண்டுங் கெட்டான்கள். இந்தியாவில் ஒரு சில ஆண்டுகள் வேலை பார்த்து விட்டு இங்கே வந்தவர்கள். இந்தியாவிற்கும், அமெரிக்காவிற்கும் வாழ்க்கை தரத்தை தவிர வேறு வேறுபாடு எதுவும் இல்லை என்பதை உணர்ந்தவர்கள். ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் என்பதை போல இந்திய வாழ்க்கையும் பிடித்து, அமெரிக்க வாழ்க்கையையும் விட முடியாமல் இருப்பவர்கள்.

எங்களைப் போன்றோரிடம் இந்த கேள்வி கேட்கப்படும் போது, குறிப்பாக என்னிடம் கேட்கப்படும் போது, என்னால் எந்த ஒரு பதிலையும் தர முடியவில்லை. இந்தியாவா இல்லை அமெரிக்காவா என்ற கேள்விக்கு, அமெரிக்கா என்பது எனது பதிலானால், நல்ல சம்பளம், இரு சக்கர வாகனம், கைத் தொலைபேசி, நல்ல நண்பர்கள், ஒவ்வொரு வெள்ளி இரவும் திரைப் படம், மாதத்திற்கு ஒருமுறை ஏன் சில சமயம் மாதத்திற்கு இரு முறை கூட ஊர்ப் பயணம், அத்தகைய பயணங்களில் சந்திக்கும் பழைய நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள், உறவினர்கள், நண்பர்களின் திருமணங்கள் போன்ற அனைத்தையும் தந்தது இந்தியா அல்லவா? மாறாக இந்தியா என்பது எனது பதிலானால், வாழ்க்கை தரத்தில் முன்னேற்றம், இந்தியாவில் இருக்கும் பெற்றோர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு பொருளாதார உதவிகளை செய்யக் கூடிய நிலை, அதிக மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை போன்றவற்றை தந்தது அமெரிக்கா அல்லவா? இதில் எதை கூற? எதை விட? பல முறை யோசித்தும் எது சிறந்தது என்பதை என்னால் கூற முடியவில்லை.

இன்றோ நாளையோ என் தந்தை என்னிடம் மறுபடியும் கேட்கும் இந்த கேள்விக்கு நான் கூறப்போகும் பதில், "I love it". புரைதீர்ந்த நன்மை பயக்கும் என்றால், பொய்மையும் வாய்மையாகத் தானே கருதப் படும்.

30 Comments:

பூபா said...

Nice. I liked this article.

Wyvern said...

This comment is not on the topic but your generalization of indian's living/visinting US (which takes most part of the article)

I came here to do my master's in 2001. In 4 more years iam going back to india...yow are taking one scenario and saying thats the only scenario. Thats the worst thing you can do as a writer. It shows limited knowledge on the subject you write. Its a myth that guys doing masters here spend a lot on tuition. Not always true. Lot of peoples get aid like me.

It all boils down to an individual's personality. Strong characters doesn't get influenced. They know what they want. On the other hand, weak characters doesn't know what they want....probably get influenced easily.

SathyaPriyan said...

//
பூபா said...
Nice. I liked this article.
//
Thanks பூபா. Thank you for your visit and comments.

//
Wyvern said...
This comment is not on the topic but your generalization of indian's living/visinting US (which takes most part of the article).
//
Where did I? All I said is about the people I met and interacted with. Please read the below statement. நான் பார்த்த வரை அமெரிக்கா வரும் இந்தியர்களை மூன்று வகையாக பிரிக்கலாம்.

//
I came here to do my master's in 2001. In 4 more years iam going back to india...
//
So? I know many people who keep on saying that they are going back to India in next couple of years. This statement never changes. Just like "நாளை கடன்." board in shops.

//
yow are taking one scenario and saying thats the only scenario. Thats the worst thing you can do as a writer.
//

Just a correction. I am not a writer. Writing is not my profession. I earn my bread through other ways. I am just a blogger. I write what ever comes to my mind without hurting the sentiments of others.

//It shows limited knowledge on the subject you write.
//
I cannot complete a doctorate about Indian American Living before writing this.

//
Its a myth that guys doing masters here spend a lot on tuition. Not always true. Lot of peoples get aid like me.
//
Good that you got the aid. But not many from my college got.

//
It all boils down to an individual's personality. Strong characters doesn't get influenced. They know what they want. On the other hand, weak characters doesn't know what they want....probably get influenced easily.
//
Where do strong and weak come here? Who are you to define those who like US living more than Indian living are weak and those who like Indian living more than US living are strong? It is you who is doing the generelization here?

Finally, my thoughts can be totally wrong and I have rights to think that way. Thank you for your visit and comments.

சிறில் அலெக்ஸ் said...

good post.. Liked it.
I have mixed feelings about living here too.
:)

may be will post someday

Priya said...

aha... en posta mention panni irukkingale!

Neenga solra broad classification correct dhan. ana, mudhal vagai ellarukkum america pidikkumnum, 2nd vagai ellarukkum pidikkadhunum solla mudiyadhu. adhellam individual personality ya poruthadhu.

Ellarukkum US la pidicha vishayangalum, india la pidicha vishayangalum irukku.. Edha compromise panna ok vo adhukku etha madhiri inga irukkaradha poradhanu decide panna vendiyadhu dhan.

12,15 years munnadi inga vandhavangala thirumbi poravanga romba kammi %. Ana, ippa the trend has changed, owing to the growth in IT sector in India.

Innoru classification vittutingale? kalyanam panni inga vara girls..

Priya said...

onsite deputation la varavanga nilama kashtam dhan.. ingaye settle agara madhiri ellam vangavum mudiyadhu, onnum vangamayum inga irukka mudiyadhu..
indian companies kudukkara salary patha aniyayama emathuvanga. H1 la kootitu vandha min salary cap irukkunu L1 la kootitu varuvanga.

tester72 said...

Hi Sathyapriyan,

It is a nice article. Keep up the good work.

Kishore.

இலவசக்கொத்தனார் said...

உங்க அலைன்மெண்ட் ஜஸ்டிபய்டா இருக்கறதுனால நெருப்பு நரி உலாவியில் படிக்க முடியலை. அதை மாத்துவீங்களா?

வடுவூர் குமார் said...

நான் சிங்கையில் இருப்பதால் அவ்வளவாக சொல்வதிற்கில்லை.
ஆனால் பல விஷயங்கள் இங்கும் கூட ஒத்துப்போகிறது.
பின்னூட்ட மக்களே தமிழில் போடுங்கப்பா!!
ஆங்கிலத்தை அந்த மாதிரி எழுத/படிக்க ஆரம்பித்துவிடுவேனோ என்று பயமாக இருக்கிறது.:-))

Arunkumar said...

நல்ல எழுதியிருக்கீங்க சத்யா...

நானும் உங்க வகை தான். 5 வருஷம் இந்தியால பெரிய MNCல இருந்துட்டு அமெரிக்க கனவுகளோட client exposure/dollar salary/peer pressureல இங்க வந்தேன். எனக்கு இங்க பிடிச்சிருக்கு ஆனா நம்ம ஊரு மாதிரி வராதுனு இந்த 10 மாசத்துல தெரிஞ்சிக்கிட்டேன்.

அதுக்காக உடனே போகவும் முடியாது. போகனும்னும் தோனல... ஒரு வருஷத்துக்குள்ள போறதுக்கா ஏதோ ஒரு bodyshopperக்கு 1 லட்சம் குடுத்து h1 apply பண்ணி வந்தோம்னு தோனும் !!!

கஷ்டமான கேள்வி தான்.. இங்க settle ஆக வேண்டாங்குறதுல மட்டும் கொஞ்சம் தெளிவா(??) இருக்கேன் :-)

Ur answers to Wyvern is spot on.

SathyaPriyan said...

//
சிறில் அலெக்ஸ் said...
good post.. Liked it.
I have mixed feelings about living here too.
:)

may be will post someday
//
Thanks சிறில். Good to know that you liked it. I am waiting for your post.

//
Priya said...
mudhal vagai ellarukkum america pidikkumnum, 2nd vagai ellarukkum pidikkadhunum solla mudiyadhu. adhellam individual personality ya poruthadhu.

Ellarukkum US la pidicha vishayangalum, india la pidicha vishayangalum irukku
//
Correct Priya. ஆனால் நான் பார்த்த வரையில் பெரும்பாலும் முதல் வகையினருக்கு அமெரிக்க வாழ்க்கையும், இரண்டாம் வகையினருக்கு இந்திய வாழ்க்கையும் தான் பிடித்திருக்கிறது.

//
Innoru classification vittutingale? kalyanam panni inga vara girls..
//
அத்தகையவர்களிடம் நான் அதிகம் பழகியதில்லையே.
அதை பற்றி நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

//
onsite deputation la varavanga nilama kashtam dhan..
//
Infosys இல் பணி செய்ததால் அங்கே இருந்து இங்கு அவ்வாறு வந்த நண்பர்கள் ஏராளம். அவர்களின் நிலைமை உண்மையிலேயே கஷ்டம் தான்.

//tester72 said...
It is a nice article. Keep up the good work.
Kishore.
//
Thanks Kishore. Thanks for visiting.

//
இலவசக்கொத்தனார் said...
உங்க அலைன்மெண்ட் ஜஸ்டிபய்டா இருக்கறதுனால நெருப்பு நரி உலாவியில் படிக்க முடியலை. அதை மாத்துவீங்களா?
//
அச்சசோ. எல்லா பதிவுகளும் அப்படித்தானே இருக்கின்றன. தமிழ்மண கருவிப் பட்டையில் உள்ள PDF இறக்கியை பயன் படுத்த இயலுமா? படித்து விட்டு கருத்து சொல்லுங்க கொத்ஸ் (எல்லாரும் அப்படித்தானே கூப்பிடறாங்க)

//
வடுவூர் குமார் said...
நான் சிங்கையில் இருப்பதால் அவ்வளவாக சொல்வதிற்கில்லை.
ஆனால் பல விஷயங்கள் இங்கும் கூட ஒத்துப்போகிறது.
//
எல்லா இடமும் ஒன்று தான் :-) ஆனால் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என்று சொல்லவில்லையே. வருகைக்கு நன்றி.

//
Arunkumar said...
நல்ல எழுதியிருக்கீங்க சத்யா...

நானும் உங்க வகை தான். 5 வருஷம் இந்தியால பெரிய MNCல இருந்துட்டு அமெரிக்க கனவுகளோட client exposure/dollar salary/peer pressureல இங்க வந்தேன். எனக்கு இங்க பிடிச்சிருக்கு ஆனா நம்ம ஊரு மாதிரி வராதுனு இந்த 10 மாசத்துல தெரிஞ்சிக்கிட்டேன்.

அதுக்காக உடனே போகவும் முடியாது. போகனும்னும் தோனல... ஒரு வருஷத்துக்குள்ள போறதுக்கா ஏதோ ஒரு bodyshopperக்கு 1 லட்சம் குடுத்து h1 apply பண்ணி வந்தோம்னு தோனும் !!!

கஷ்டமான கேள்வி தான்.. இங்க settle ஆக வேண்டாங்குறதுல மட்டும் கொஞ்சம் தெளிவா(??) இருக்கேன் :-)
//
அப்படியே எனது எண்ணத்தை பிரதிபலிக்கும் கருத்துக்கள் Arunkumar.

//
Ur answers to Wyvern is spot on.
//
:-) நான் என்னவோ அமெரிக்கா பிடிக்கும் என்று சொல்வதை குற்றம் கூறுவதை போல் அவர் நினைத்துக் கொண்டார். அமெரிக்கா பிடிக்கிறது என்று ஒருவன் கூறுவதில் தவறு என்ன இருக்கிறது? தனக்கு கல்வி குடுத்து, தனது பொருளாதாரத்தை உயர்த்தும் ஒரு நாடு பிடித்திருக்கிறது என்று கூறுவதற்கு கூட இவர்கள் ஏன் வெக்கப் படுகிறார்கள்? வருகைக்கு நன்றி.

Shakthi said...

நீங்க சொல்ரது உண்மை தான்.ஆனா எனக்கு தெரிந்தவர்கள் indiaவுக்கே போயிடாங்க.i think its based on each and everyones situation.என்ன சொல்ரீங்க...

யாழினி அத்தன் said...

சத்யப் பிரியன்,

உங்க பதிவைப் படித்தேன். இது காலங்காலமா இந்தியர்களுக்கு ஒரு பிரச்சினை.

இதைப் பத்தி "அமெரிக்க ஊஞ்சல்" தலைப்பில் ஒரு கவிதை எழுதிருக்கிறேன். Publish பண்ணிட்டு போடலாம்னு இருக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரையில் எல்லாருமே ஏதாவது "compromise" பண்ணிட்டுதான் இருக்காங்க. பிடிச்சிருக்கா-ன்னு ஒரு கேள்விக்கு யாராவது ஒரு வார்த்தையில பதில் சொல்ல முடியுமான்னு தெரியல. காலம் செல்ல செல்ல உங்க perception மாறலாம். என்னொட பதில் இத பத்தி ரொம்ப குழப்பிக்காதீங்க. அந்த அந்த் விஷயங்கள அப்படியே பாருங்க- Comparison பண்ணாம...

perry said...

It all boils down to an individual's personality. Strong characters doesn't get influenced. They know what they want. On the other hand, weak characters doesn't know what they want....probably get influenced easily.

v well stated

periasamy

தமிழ்ப்பிரியன் said...

மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க..நான் மேல்படிப்புக்கு வந்த கேஸ் :) எய்ட் எல்லாம் இல்லை...இருக்கும் கட்டாயம் அவ்வளவே..
பிடித்திருக்கா?? கஷ்டமா இருக்கும் போது பிடித்தல் கடினம்...பழகிக்க வேண்டியது தான்...போக போக எப்படியோ தெரியாது...wyvern solra mathri strong/weak ellam chumma...
சூழ்நிலைகள் அவருக்கு சாதகமா இருந்து இருக்கு அதான் அப்படி பேசுறார்.. :)

SathyaPriyan said...

//
Shakthi said...
நீங்க சொல்ரது உண்மை தான்.ஆனா எனக்கு தெரிந்தவர்கள் indiaவுக்கே போயிடாங்க.i think its based on each and everyones situation.என்ன சொல்ரீங்க...
//
ரொம்ப சரி Shakthi. சூழ்நிலை என்று அழகாக சொன்னீர்கள். அதையே தான் நானும் கூறினேன். வருகைக்கு நன்றி.

//
யாழினி அத்தன் said...
இதைப் பத்தி "அமெரிக்க ஊஞ்சல்" தலைப்பில் ஒரு கவிதை எழுதிருக்கிறேன். Publish பண்ணிட்டு போடலாம்னு இருக்கிறேன்.
//
தங்களது கவிதையை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

//
என்னொட பதில் இத பத்தி ரொம்ப குழப்பிக்காதீங்க. அந்த அந்த் விஷயங்கள அப்படியே பாருங்க- Comparison பண்ணாம...
//
முயற்சி செய்கிறேன். வருகைக்கு நன்றி. எல்லாம் ப்ரியாவால் வந்த விணை.

//
perry said...
It all boils down to an individual's personality. Strong characters doesn't get influenced. They know what they want. On the other hand, weak characters doesn't know what they want....probably get influenced easily.

v well stated
//
I have already answered this in my comment Perry. Please read my answer. Strong, Weak என்று categorize செய்ய வேண்டாமே. அமெரிக்க வாழ்க்கை பிடித்து போவதில் குற்றம் என்ன இருக்கிறது? அதை நேர்மையாக ஒப்புக் கொள்ளளாமே. அது எப்படி weak ஆகும்? வருகைக்கு நன்றி.

//
தமிழ்ப்பிரியன் said...
மிகவும் அழகாக சொல்லி இருக்கீங்க..நான் மேல்படிப்புக்கு வந்த கேஸ் :) எய்ட் எல்லாம் இல்லை...இருக்கும் கட்டாயம் அவ்வளவே..
பிடித்திருக்கா?? கஷ்டமா இருக்கும் போது பிடித்தல் கடினம்...பழகிக்க வேண்டியது தான்...போக போக எப்படியோ தெரியாது...wyvern solra mathri strong/weak ellam chumma...
சூழ்நிலைகள் அவருக்கு சாதகமா இருந்து இருக்கு அதான் அப்படி பேசுறார்.. :)
//
Aid கிடைப்பதற்கு கல்லூரியும், பல்கலைக் கழகமும் பெரும் பங்கு வகிக்கின்றன என்று கேள்விப் பட்டேன். எனது கல்லூரியில் படித்த பலருக்கு Aid கிடைக்கவில்லை. வருகைக்கு நன்றி.

Wyvern said...

cool down dude. Jesus..u may get a freaking heart attack

"Finally, my thoughts can be totally wrong and I have rights to think that way. Thank you for your visit and comments"

Nice backdoor. It would have been nice if you have stood by your comments all the way.

Your last statement was incomplete. I am sure u thought about it..but never got to print it

"Finally, my thoughts can be totally wrong and I have rights to think that way. Thank you for your visit and comments. BUT, DON'T EVEN DREAM ABOUT COMING BACK AGAIN"

There, I fixed it for you....lmao

SathyaPriyan said...

//
"Finally, my thoughts can be totally wrong and I have rights to think that way. Thank you for your visit and comments"

Nice backdoor. It would have been nice if you have stood by your comments all the way.
//
Again where did I? I still back my thoughts (even if they are proved wrong).

//
Your last statement was incomplete. I am sure u thought about it..but never got to print it

"Finally, my thoughts can be totally wrong and I have rights to think that way. Thank you for your visit and comments. BUT, DON'T EVEN DREAM ABOUT COMING BACK AGAIN"
//
Come on. I have a comment moderation enabled in my blog. If that was my intention, I need not have published your very first comment.

Is this called rolling fire ball effect? Throw a fire ball over some one and when it gets back, bend.

//
There, I fixed it for you....lmao
//
You have enough rights to do so. I have not fixed anything for you. Your குப்பன் post was hilarious.

நாம என்ன முடிய பிடிச்சுகிட்டு சண்டையா போட்டோம்? Just an heated arguement. Good luck.

Wyvern said...

dude...pal...buddy...brotha...kanna...raja paiya...nanba...mams..machi

I am not sure about anything in my life. Except one thing. Iam 1000% (no..that was not a typo...it is 1000%) sure about this one thing.

"I don't bend to any one in my life. Iam 'straight' all the way man...like the freaking eifel tower or Mt. Everest"

LOL (thought about putting LMAO...but for some reason I thought that wouldn't be politically correct given my above statement:) )

PS: all the pun in the world intended

தென்றல் said...

"அமெரிக்கா பிடிச்சுருக்கா?" -னு யாராவது என்னிடம் கேட்டால், தயக்கமில்லாமல்
"பிடிச்சுருக்கு" -னு தான் சொல்வேன். ஏன்னு கொ சம் யோசிச்சி பார்த்தா.....
குழந்தைகளுக்கு கிடைக்கும் தரமான அடிப்படை கல்வி,
வயதானவர்களுக்கு அரசாங்கமும், மற்ற நிர்வாகங்களும் செய்யும் வசதிகளும், சலுகைகளும்,
physically challenged (தமிழ்-லில்?) -ஆனவங்களுக்கு அவர்களாகவே எங்கும் செல்லக்கூடிய வசதி,
பொது இடங்களில் வரிசை-யில் செல்ல வேண்டும் என்ற எண்ணம்,
நேரம் தவறாமை
நீங்க சொன்ன மாதிரி,அதிக மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை
-னு இங்கேயும் "கொ சம்" நல்ல விசயம் இருக்கதான் செய்யுது....

ஆனா, "இந்தியா-வை விடவா?"-னு கேட்டா, "இல்ல"-னு தான் மனசு சொல்லுது. ஏன்..
இருபத்தைந்சி வருஷம்.......ம்ம்ம்
நமக்காகவே வாழுற அந்த இரண்டு ஜீவன்களான நம்ம அம்மா, அப்பா....
நம் மண்ணில் நமக்கு கிடைத்த வரங்களான நம் நண்பர்கள் ....
(எத்தனை நண்பர்கள் கிடைத்தாலும், பால்ய கால நட்பு மாதிரி வருமா?)
கல்வி ....
-னு எல்லாம் நமக்கு கிடச்சதுக்கப்புறம் அதை அவ்வளவு சீக்கிரமா மறந்துட்டு வரக்கூடிய விசயமா...?

திரும்பி போய் அந்த இரண்டு ஜீவன்களுக்காக வாழ்ந்தா ....
நம்ம மண்ணுக்கு நம்மலால முடி சத பண்ணினா...-னு

சில கேள்விகள் மனசில அலை-யாய் வந்துட்டு போகதான் செய்யுது.....

ஒண்னு இழந்தா தான் ஒண்னு கிடைக்கும்-கிறது தானே இயற்கையின் நியதி...

எந்த இழப்பு பெரிய இழப்பு-னு தெரி சி கிட்டோம்-னா, நாம எங்க இருக்கணும்-னு தெளிவாயிரும்-னு தோணுது...


சத்யப் பிரியன், ரொம்ப குழப்பிடேனா?

Syam said...

நல்ல பதிவு சத்யா...நானும் உங்கள மாதிரி வந்தவன் தான்...அங்க இருக்கும் போது அமெரிக்கா போறேன் அமெரிக்கா போறேன்னு பந்தா விட்டுட்டு வந்தாச்சு...எனக்கு எல்லாம் இது ஒத்து வராதுனு வந்த கொஞ்ச நாள்ல தெரிஞ்சுக்கிட்டேன்...இருந்தாலும் $ வருதே...அதுனால கொஞ்ச நாள் கஷ்டபட்டு காசு சேத்துக்கிட்டு ஊருக்கு போலாம்னு பிளான் பண்ண...இவிங்க முன்னாடி குடுத்து பின்னாடி பிடுங்கிக்கறாங்க...இங்கயும் இருக்க முடியாம ஊருக்கும் போக முடியாம...என்னடா வாழ்க்கைனு இருக்கு...சரி இதுவும் கடந்து போகும்.... :-)

வாசன் said...

//அமெரிக்காவிற்கு இளம் வயதிலேயே (21) வந்து விடுவதாலும், அமெரிக்க வாழ்க்கை முறை பழகி விட்டதினாலும், இந்தியாவின் முன்னேற்றதை அறியாததாலும் அவர்களுக்கு இந்தியா செல்வது என்றால் வேப்பங்காயாக இருக்கிறது..//

:))

என்னை உங்களுக்குத் 1/2 கூட தெரிந்திருக்க நியாயமில்லை, ஆனால் மேலே சரி பாதி என்னைப் பற்றி சரியாக எழுதியுள்ளீர்கள்.
21 வயதாக 3 வாரங்கள் இருக்கும் போது மூட்டையைக் கட்டிக் கொண்டு ஓடிவந்தேன்.

நான் இந்தியா போய் 10 வருடங்கள் ஆகிறது. போவதற்கு திட்டமும் இல்லை ( இப்படி சொல்லும் முகூர்த்தத்தில் போக
வேண்டி வந்தாலும் வரும்! )

நான் இந்தியா போக விரும்பாததற்கு காரணம்

1. பிறர் உதவியைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது எனக்கு முற்றிலும் அன்னியமாகிவிட்ட பழக்கம்.

2. உணவு பழக்கங்களில் மாறுபாடுகள். உசத்தி (உயர்வு?) மட்டம் என்றில்லை. ஆனால் கலம்,கலமாக சோற்றை கொட்டிக்
கொள்ள என்னால் இயலவில்லை; மற்றும் இந்திய உணவு வாரத்திற்கு 2 நாட்களுக்கு மேல் தாங்காது. இட்லி நான் பெரிதும் வெறுக்கும் உணவு.

3. அன்புடன் நான் பெரிதும் மதிக்கும் உறவுகள் இன்னமும் சாதி போன்ற இழிவுகளிலிருந்து விட்டு விலகாதது.
சாப்பிடும் உணவு வகையை வைத்து உசத்தி/மட்டம் பார்க்கிற இழிவான போக்குகள்.

4. சென்னைக்குப் போகாமல் சொந்த ஊருக்கு போக முடியாதது. 97 ல் சென்னையில் தங்க ஒரு நாள் இரவு
விடுதி கட்டணம் 70,80 அமேரிக்க $ ஆனது, தூய்மை குறைவு இருந்தும். இதைவிட முக்கியமாக, தாங்க
முடியாத குற்ற உணர்வு. உறவினர்கள் வீடுகளில் தங்க கருத்து # 1 இடம் கொடாது.

5. 24 வருடமாக ஈரப்பதம் வெகு குறைவான 5000 + அடி உயரத்தில் வசித்துவிட்டு, வங்காளவிரிகுடா
அருகாமையில் போய் இருக்க வேண்டியிருப்பது, பொத்த(ல்) பூசணிக்காயாய் உணர வைத்து உயிரை
வாங்கிவிடும்.. 97 ல் வீட்டிலிருந்த குளிரி மின்சார கோளாறுகளால் சரிவர இயங்கவில்லை.

6. இது கொஞ்சம் அல்பமான விஷயம்தான்,இருந்தாலும் சொல்லாமல் இருக்க முடியவில்லை.
" சாலைகள் " - நான் முக்கால்வாசி தங்க வேண்டிய, வடக்கே சிதம்பரம் தொடங்கி தெற்கே திருவாரூர்
வரை சாலைகள் மோசமானவை. இந்திய உறவுகள், இப்போதெல்லாம் அப்படி இல்லை என்கிறார்கள்.
நம்ப முடியவில்லை.

7.தமிழ்த் தொலைக்காட்சிகள், திரைப்படங்கள்.


பின்னூட்டம் நீள்கிறது. நிறுத்திவிட்டேன்.

பூபா said...

திருமணத்திற்கு முன் அமெரிக்காவிற்கு வந்திருக்கிறேன். அப்போது மிக மிக பிடித்திருந்தது. திருமணம் ஆன பிறகு கொஞ்ச நாள் சிங்கப்பூர் வாழ்க்கை. சிங்கப்பூரின் பண மதிப்பு அமெரிக்க டாலரை விட கம்மி என்றாலும் வெகு நிம்மதியான வாழ்க்கை. 99% சுத்தமான தமிழ்நாடாக தான் சிங்கப்பூர் இருந்தது. என் தமிழ் தாகத்திற்கு நல்ல நாடு. திரும்ப அமெரிக்கா வந்த பிறகு, அதுவும் பேமிலியுடன், அமெரிக்கா சுத்தமாக பிடிக்கவில்லை என்ன தான் கார், டாலர், நல்ல வேலையென்று இருந்தாலும். இன்னொரு வாய்ப்பு கிடைத்தால் சிங்கப்பூர் செல்ல தான் விரும்புவேன்.

ஆயிரம் ஊர்களுக்கு சென்று வந்தாலும் என்னால் இந்தியாவில் கால் வைத்த மறு நிமிடமே மேலை நாடுகளின் வாழ்க்கையை மறந்துவிடுவேன். என்னால் இன்னும் 12B, 37, 47 களிலும் பயணம் செய்ய முடியும். 25 வருட இந்திய வாழ்க்கை 7 வருட மேலை நாட்டு வாழ்க்கை என்னத்த பிடுங்கி விட முடியும். தெம்பு இருக்கும் வரை திக்கெட்டிலும் சென்று பொருள் சேர்த்து என் கடைசி மூச்சி இந்தியாவில் தான் பிரிய வேண்டும். I love India.

SathyaPriyan said...

//
Wyvern said...

I am not sure about anything in my life. Except one thing. Iam 1000% (no..that was not a typo...it is 1000%) sure about this one thing.

"I don't bend to any one in my life. Iam 'straight' all the way man...like the freaking eifel tower or Mt. Everest"
//
Forget it. Let us agree to disagree in this matter. :-)

//
தென்றல் said...

சத்யப் பிரியன், ரொம்ப குழப்பிடேனா?
//
எண்ண சமநிலையில், வேறு வேறு துருவங்களில் இருப்பவர்கள் ஒருவரை ஒருவர் குழப்பலாம். உங்களால் என்னை எப்படி குழப்ப முடியும். நாம் ஒத்த கருத்து உள்ளவர்கள் அல்லவா? உங்களுக்கு இருப்பதை போன்று தானே அப்பா, அம்மா, உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் எனக்கும் இருக்கிறார்கள். வருகைக்கு நன்றி.

//
Syam said...
இங்கயும் இருக்க முடியாம ஊருக்கும் போக முடியாம...என்னடா வாழ்க்கைனு இருக்கு...
//
இப்போ முகில் குழந்தை Syam. அவன் பள்ளிக்கு செல்லும் பொழுது நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ அங்கே settle ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். சரி தானே.

// சரி இதுவும் கடந்து போகும்.... :-) //
அது தானே வாழ்க்கை.

//
வாசன் said...

நான் இந்தியா போய் 10 வருடங்கள் ஆகிறது. போவதற்கு திட்டமும் இல்லை ( இப்படி சொல்லும் முகூர்த்தத்தில் போக
வேண்டி வந்தாலும் வரும்! )
//
உங்கள் கருத்துகளுடன் நான் ஒத்துப் போகிறேனா? இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால், பிறர் தவறாக நினைப்பார்கள் என்று தனது கருத்துக்களுக்கு தங்க முலாம் பூசி நல்லவர் வேஷம் போடும் பலரிடையே, அதைப் பற்றிய கவலை இல்லாமல், தங்களின் கருத்தை நேர்மையாக உரைக்கும் தீரத்திற்கு தலை வனங்குகிறேன். ஆனால் உங்களை போல் நினைப்பவர்கள் தவறானவர்கள், அமெரிக்கா பிடிக்கிறது என்று கூறுவது தவறானது என்று ஏன் மக்கள் நினைக்கிறார்கள்? வருகைக்கு நன்றி.

//
பூபா said...
25 வருட இந்திய வாழ்க்கை 7 வருட மேலை நாட்டு வாழ்க்கை என்னத்த பிடுங்கி விட முடியும். தெம்பு இருக்கும் வரை திக்கெட்டிலும் சென்று பொருள் சேர்த்து என் கடைசி மூச்சி இந்தியாவில் தான் பிரிய வேண்டும். I love India.
//
கருத்து சொல்ல என்ன இருக்கிறது? முழுமையாக ஒத்துப் போகிறேன். வருகைக்கு நன்றி.

தென்றல் said...

//நாம் ஒத்த கருத்து உள்ளவர்கள் அல்லவா?
//
உண்மை தான், சத்யா!

பூபா said...

//இன்னும் 12B, 37, 47 களிலும் பயணம் செய்ய முடியும்//

நமக்கு சரிங்க! நம்ம குழந்தெக என்ன சொல்லுவாங்க?

வாசன், நீங்க ரொம்ப தெளிவா இருக்கிறீங்க.

இந்த பிரச்சனைலாம், என்னைப் போன்ற ரெண்டாங் கெட்டான்களுக்கு தான்...

போன வாரம் வீட்டுக்கு phone பண்ணப்ப...

நான்: "எப்படிம்மா இருக்கிறீங்க? பாதம் வலிக்கிது-னு சொன்னீங்களே, டாக்டரை போய் பார்த்தீங்களா?"

அம்மா: "பார்த்தேன்-பா. அதே மாத்திரை, மருந்துதான்-ப்பா குடுத்து இருக்காங்க."

நான்: "ஏம்மா, அப்பா-வை மதுரை-ல உள்ள பெரிய டாக்டரை போய் பாக்கலாம்-ல ம்மா?"

அம்மா: "அப்பா-வுக்கு யிற்று கிழமை மட்டும் தான் rest-ப்பா. ம்ம்ம்.. போணும்-ப்பா... சரி.. என் பேத்தி, மருமக எப்படி இருக்காங்க?"

நான்: "நல்லா இருக்காங்கம்மா. ....இந்தா, பாட்டி கிட்ட பேசு..."

வீட்டுக்கு பேசினதுக்கப்புறம் மனசு என்னமோ பண்ணுது...

Wyvern said...

man....you took my last comments in a serious way....i was just trying to be funny.(i never do a good job on that) please read it again.....bending and being straight can have other meaning. I came back today to check whether u had any nice comebacks...u know.. some funny sarcastic comebacks...

peace out dawg...

Adiya said...

hey

me 2 have that strange feeling and ஒரு உருத்தல் இருந்துகிடெ இருக்கு. being vinoths mate u might know my experiance category .. i made this move to work for my dream. ya certain things are perfectly blending and certain are not. by all means we are sailing the same boat.

parkalam.. :) with Big Question Mark. people out here saying it happens to every body and u will be used to it. i donna :)

சந்தோஷ் aka Santhosh said...

நல்லா எழுதி இருக்கிங்க சத்தியபிரியன், நீங்க சொன்னது மிகச்சரி.

பொன்ஸ்~~Poorna said...

நல்லா எழுதி இருக்கீங்க சத்தியப்ரியன். மூன்று மாத விசாவில் அமெரிக்கா போய் திரும்பிவந்து ஆறு மாசமாச்சு. திரும்பி அங்க போகச் சொல்றாங்க. எனக்கு ரெண்டுமே ஒண்ணாத் தான் தெரியுது. முக்கியமா, அமெரிக்காவில் கிடைக்கும் கட்டற்ற சுதந்திரம், "யாரோ நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்ற எண்ணமே இல்லாத வாழ்க்கை, நமக்கு நாமே திட்டத்தில் எல்லாவற்றையும் சுலபமாக செய்ய முடிவது என்று எல்லாமே பிடித்திருக்கிறது. உறவுகள், புத்தகங்கள், நண்பர்கள் என்ற உலகத்தை இழப்பது என்று வரும்போது, இந்தியாவிலேயே இருந்துவிட ஆசை தான்.. பார்க்கலாம்.. இரண்டு ஊருமே பிடித்திருக்கிறது.

SathyaPriyan said...

//
தென்றல் said...
நமக்கு சரிங்க! நம்ம குழந்தெக என்ன சொல்லுவாங்க?
//
கண்டிப்பாக அவர்களால் இந்தியாவில் இருக்க முடியாது என்று தான் நான் நினைக்கிறேன்.

//
வீட்டுக்கு பேசினதுக்கப்புறம் மனசு என்னமோ பண்ணுது...
//
அதை படித்த பிறகு எனக்கும் தான் :-(

//
Wyvern said...
man....you took my last comments in a serious way
//
நிஜமாகவே இல்லை. நான் "Agree to Disagree" அப்படின்னு சொன்னது உங்கள் கருத்துக்கு தான். அந்த Comment ற்கு இல்லை. அமைதி நிலவட்டும். :-)

//
Adiya said...
people out here saying it happens to every body and u will be used to it. i donna :)
//
Fingers crossed?

//
சந்தோஷ் aka Santhosh said...
நல்லா எழுதி இருக்கிங்க சத்தியபிரியன், நீங்க சொன்னது மிகச்சரி.
//
வருகைக்கு நன்றி சந்தோஷ்.

//
பொன்ஸ் said...
நல்லா எழுதி இருக்கீங்க சத்தியப்ரியன்.
//
வருகைக்கு நன்றி பொன்ஸ்.