Thursday, April 26, 2007


3. இந்தியப் போர்கள்

இந்திய - சீன போர் (1962)


ஆம். 1962 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு எதிர்பாராத பொழுதில் சீனாவின் வடிவில் வந்தது ஒரு மெகா சைஸ் ஆப்பு. அதற்கு காரணம் திபெத். 1914 ஆம் ஆண்டு சிம்லாவில் நடைபெற்ற மாநாட்டில் திபெத் இந்திய அரசால் தனி நாடாக அங்கீகரிக்கப்பட்டது. ஆனாலும் சீனா அதை ஒப்புக் கொள்ளவில்லை. அப்பொழுது மூன்று நாடுகளுக்கு இடையே எல்லை கோடாக "மக் மோஹன் எல்லை" தீர்மானிக்கப் பட்டது.
இந்தியாவை பொருத்தவரை அது சீனாவை என்றுமே ஒரு எதிரியாக நினைத்தது இல்லை. 1949 ஆம் ஆண்டு சீனா ஒரு தனி குடியரசாக உருவானதை தொடர்ந்து அதை முதலில் அங்கீகரித்த நாடுகளில் இந்தியாவும் ஒன்று. 1950 ஆம் ஆண்டு கொரிய யுத்தத்தில் சீனா தலையிட்டதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவற்றின் அதிருப்திக்கு ஆளானது. ஆனால் அந்நிலையிலும் இந்தியா சீனாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தது. 1951 ஆம் ஆண்டு அமெரிக்காவில் கொரிய யுத்தத்தை நிறுத்த நடந்த அமைதி பேச்சு வார்த்தையை சீனா அழைக்கப்படவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இந்தியா கலந்து கொள்ளாமல் புறக்கனித்தது.
இந்த அளவிற்கு வெளிப்படையாக தனது ஆதரவையும் நட்பையும் வெளிப்படுத்திய இந்தியாவிற்கு சீனா செய்தது பச்சையான நம்பிக்கை துரோகம். 1950 ஆம் ஆண்டு சீனா திபெத் மற்றும் சிஞ்சியாங் பகுதிகளுக்கு இடையே சுமார் 1200 கிலோமீட்டர் நீளமான சாலை ஒன்றை இட்டது. அச்சாலை இந்திய எல்லைப் பகுதியில் (அக்ஸாய் சின்) சுமார் 180 கிலோமீட்டர் சென்றது. 1954 ஆம் ஆண்டு சீனா வெளியிட்ட தனது நாட்டு மேப்பில் சுமார் 120000 சதுர கிலோமீட்டர்கள் இந்தியப் பகுதிகளை தனது பகுதிகளாக காட்டி இருந்தது. காஷ்மீரை சேர்ந்த அக்ஸாய் சின் பகுதியையும், அருணாச்சல பிரதேசத்தையும் தனது நாட்டின் பகுதிகளாக காட்டியது. மேலும் அக்ஸாய் சின் பகுதியில் சில இடங்களை தனது இராணுவத்தைக் கொண்டு முழுவதுமாக ஆக்கிரமித்து கொண்டது சீனா. அப்பொழுதும் இந்திய அரசு அது சீனாவின் தவறால் நடைப்பெற்ற ஒரு நிகழ்ச்சி என்று தான் நம்பியது. மேலும் இந்திய அரசு இந்தியாவிற்கும் சீனாவிற்குமான ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வர்த்தக மற்றும் கலாச்சார தொடர்புகளை நினைவுபடுத்தி "இந்தி - சீனி பாய் பாய்" என்றது. சீனாவின் மீது அதீத நம்பிக்கை வைத்து சீனப் பிரதமர் எடுத்து வைத்த பஞ்சசீலக் கொள்கைகளில் கையெழுத்திட்டது இந்திய அரசு. ஆனால் மனிதாபிமான அடிப்படையில் 1959 ஆம் ஆண்டு இந்திய அரசு தலாய் லாமா அவர்களுக்கும் அடைக்கலம் கொடுத்தது சீனாவின் கோபத்தை தூண்டியது.


1961 ஆம் ஆண்டு கோவாவை போர்த்துகீஸியர்களிடமிருந்து மீட்க இந்தியப் படையினரின் உதவியை நாடியது இந்திய அரசு. "சீனா தனது படையினரை இந்தியப் பகுதிகளிடமிருந்து திரும்பப் பெறவில்லை என்றால் கோவாவில் நடந்தது மீண்டும் நடக்கும்" என்று அந்நாளைய இந்திய உள்துறை அமைச்சர் கூறியதாக ஒரு செய்தி சீனாவிற்கு கிடைத்தது. அதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் சீர்கெட்டது. உலக நாடுகள் இந்தியாவையும் சீனாவையும் பேச்சு வார்த்தை நடத்த தூண்டினர். இந்தியாவோ சீனா இந்தியப் பகுதிகளில் இருந்து தனது படையினரை முழுவதுமாக விலக்கி கொள்ளாத வரை பேச்சு வார்த்தை நடத்த முடியாது என்று தெளிவாக அறிவித்து விட்டது.


இதன் உச்ச கட்டமாக 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி எல்லை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 50 இந்தியப் படையினரை 1000 பேர் கொண்ட சீனப்படை சுத்தி வளைத்து படு கொலை செய்தது. அதில் இந்திய இராணுவத்தினர் சுமார் 25 பேர் இறந்தனர். மீதம் இருந்த 25 பேர் சிறைபடுத்தப் பட்டனர். அதைத் தொடர்ந்து இந்தியப் படையினர் அப்பகுதிக்கு விரைந்து நடத்திய எதிர் தாக்குதலில் 33 சீனர்கள் கொல்லப்பட்டனர். அதுவரை இந்தியா சீனா தன் மீது போர் தொடுக்காது என்று உறுதியாக நம்பியது. மேலும் அணி சேரா நாடுகளுக்கு இந்தியா தலைமை தாங்கியதால் அமெரிக்காவும், ரஷ்யாவும், பிரிட்டனும் தனது பாதுகாப்பிற்கு வரும் என்றும் நினைத்துக் கொண்டிருந்தது. அதனால் போருக்கு தம்மை தயார் படுத்திக்கொள்ளவில்லை. ஆனால் அதே பொழுதில் கியூபாவில் தனது அணு அயுதக்கிடங்கை ரஷ்யா எழுப்பியதால் தொடர்ந்த சர்ச்சையில் உலக நாடுகளின் கவனம் திசை திருப்பப்பட்டது.

இந்தியாவும், சீனாவும் ஒன்றினைந்து மேற்கத்திய நாடுகளுக்கு நிகராக பெரும் வல்லரசுகளாக உருவாகலாம் என்று நினைத்து கொண்டிருந்த நேருவின் நம்பிக்கை சுவர்கள் அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக இடிந்து விழ வேறு வழி இல்லாமல் ஆசியாவின் மிகப் பெரிய வலிமை வாய்ந்த படையுடன் இந்தியா மோத முடிவு செய்தது. ஆசியாவின் இரு பெரும் நாடுகள் மோதிக் கொள்ள தயாராயின.


இன்னும் வரும்...9 Comments:

CVR said...

//1961 ஆம் ஆண்டு கோவாவை போர்த்துகீஸியர்களிடமிருந்து மீட்க இந்தியப் படையினரின் உதவியை நாடியது இந்திய அரசு.//

புரியலை!!

மத்தபடி எப்பவும் போல கலக்கியிருக்கீங்க. அடுத்த பகுதிக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறேன்!! :-)

SathyaPriyan said...

//
CVR said...
/1961 ஆம் ஆண்டு கோவாவை போர்த்துகீஸியர்களிடமிருந்து மீட்க இந்தியப் படையினரின் உதவியை நாடியது இந்திய அரசு./

புரியலை!!
//
அதாவது தல! பிரிட்டிஷ்காரர்கள் வசம் இருந்த பகுதிகளுக்கு 1947 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்து விட்டது. ஆனால் ஒரு சில பகுதிகள் ஃபிரென்சுகாரர்களிடமும் (உதாரணம் : பாண்டி, மாஹே, யேணாம். அதனால் தான் பாரதி பிரிட்டிஷ்காரர்களிடம் இருந்து தப்ப அங்கு சென்றான்.), வேறு சில பகுதிகள் போர்த்துகீஸியர்களிடமும் (உதாரணம் : கோவா, டாமண், டையூ) இருந்தன.

போர்த்துகீஸியர்கள் வசம் இருந்த பகுதிகளை இந்திய பகுதிகள் ஆக்க இந்திய இராணுவம் 1961 ஆம் ஆண்டு கோவா சென்று போரில் அவர்களை தோர்க்கடித்து கோவாவை நமது நாட்டுடன் இணைத்தது.

Cheran Parvai said...

அக்ஸாய் சீன்....நேருவினால் நாம் இழந்த பகுதி....

~சேரன்

Radha Sriram said...

படித்துவிட்டேன்! தொடர் நன்றாக போகிறது!

அரவிந்தன் நீலகண்டன் said...

அருமை. சீன யுத்தம் குறித்து இன்னும் சில சீன-உள்குத்துக்கள் இருக்கின்றன. சீனாவுக்கு ஏன் இந்த போர் தேவைப்பட்டது என்பதும் அதில் சோவியத்துகள் நம் முதுகில் குத்தியதும் நம்மூர் காம்ரேட்கள் சீன தளபதிக்கு சிவப்பு கம்பளம் விரித்ததும் உண்டு.

Priya said...

மூணா? வாரக் கடைசில படிக்கறேன் சத்யா.

SathyaPriyan said...

//
Cheran Parvai said...
அக்ஸாய் சீன்....நேருவினால் நாம் இழந்த பகுதி....
//
ஆம் உண்மை. அது அடுத்த பதிவில்.

//
Radha Sriram said...
படித்துவிட்டேன்! தொடர் நன்றாக போகிறது!
//
நன்றிங்கோவ்.

//
அரவிந்தன் நீலகண்டன் said...
அருமை.
//
வசிஷ்டர் வாயால்? நன்றி அரவிந்தன். தாங்கள் தொடர்ந்து இப்பதிவை படிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நிகழ்வுகளின் கால கட்டங்களில் நான் வாழாத காரனத்தினால் நினைவிலிருந்து எதையும் எழுதவில்லை. பல தளங்களில் இருந்து செய்திகளை சேகரித்தே எழுதுகிறேன்.

//
சீன யுத்தம் குறித்து இன்னும் சில சீன-உள்குத்துக்கள் இருக்கின்றன. சீனாவுக்கு ஏன் இந்த போர் தேவைப்பட்டது என்பதும் அதில் சோவியத்துகள் நம் முதுகில் குத்தியதும் நம்மூர் காம்ரேட்கள் சீன தளபதிக்கு சிவப்பு கம்பளம் விரித்ததும் உண்டு.
//
சில தளங்களில் அதைப் பற்றியும் செய்திகள் இருந்தது. அதனை ஒதுக்கி விட்டேன்.

//
Priya said...
மூணா? வாரக் கடைசில படிக்கறேன் சத்யா.
//
Take your time Priya. ஆனால் அவசியம் படியுங்கள். நமது நாடு சந்தித்த போர்களை பற்றி நாம் அறிந்து கொள்ள வேண்டாமா?

அது சரி, நமக்கு வெள்ளிக் கிழமையே வாரக் கடைசி தானே Priya?

கீதா சாம்பசிவம் said...

intha Goa viduthalai por paththi Thirumathi Rajam Krishnan avarkal "valaiakkaram" enra oru novel ezuthi irukkanga. athu kidaichal padichu parkavum. appoo iruntha oru paattiyoodavum peti eduthu potirukanga.

SathyaPriyan said...

//
கீதா சாம்பசிவம் said...
intha Goa viduthalai por paththi Thirumathi Rajam Krishnan avarkal "valaiakkaram" enra oru novel ezuthi irukkanga. athu kidaichal padichu parkavum. appoo iruntha oru paattiyoodavum peti eduthu potirukanga.
//
Thank you. Useful information.