Friday, April 20, 2007


அழகுகள் ஆறு!

அழகைப் பற்றி பதிவிட வேண்டுமென்று ப்ரியா உத்தரவிட்டு விட்டார். மீற முடியுமா? நான் அழகைப் பற்றி சொல்வதற்கு முன், அழகைப் பற்றி ஔவைப்பாட்டி என்ன அழகாக கொன்றை வேந்தனில் சொல்லியிருக்கிறார் என்று முதலில் பாருங்கள். "மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு". ஆஹா! ஔவையார் வாழ்க. அவர் புகழ் ஓங்குக.


இனி நமது அழகிற்கு வருவோம். ப்ரியா சொல்லியது போல், வாழ்வில் அழகான மூன்று பருவங்கள், குழந்தை பருவம், விடலைப் பருவம், இளமைப் பருவம் அனைத்துமே திருச்சியில் தான் என்னிடம் வந்தடைந்தன (இப்போவும் இளமையா தாங்க இருக்கேன். தங்கமணி தான் ஒத்துக்க மாட்டேங்கராங்க.). அதனால் எனக்கு அழகென்றால் அது திருச்சி தான்.


1. பின் மாலை நேர மலைக் கோட்டை


திருச்சியில் இருப்பவர்கள் ஒப்புக் கொள்வார்கள். சிலு சிலு வென்ற காற்று, ஊரைச் சுற்றி ஓடும் காவிரி, அதன் மேல் காவிரிப் பாலம், கார்த்திகை விளக்கை ஏற்றி வைத்தது போன்று பாலத்தின் மீது வரிசையாக வாகனங்கள், மலைக் கோட்டையை சுற்றி சிறு சிறு பொம்மைகளாய் வீடுகள், அவற்றின் அருகில் மனித நடமாட்டங்கள். ஆஹா என்ன அருமையான காட்சி. சட்டென்று அவற்றின் முன் நாம் உயர்ந்து விட்டது போன்ற ஒரு மாயத் தோற்றம். அழகு என்றால் எனது முதல் ஒட்டு பின் மாலை நேர மலைக் கோட்டைக்கு தான்.


2. இரவு நேர காவிரிப் பாலம்


திருச்சியிலே இருப்பவர்களுக்கு இது தான் மெரினா பீச். மாலையும், இரவும் கை கோர்க்கும் வேளையில் இங்கு வந்து விட்டால் போதும். கீழே அகண்ட காவிரிப் பிரவாகம். இங்கும் 'உள்ளேன் ஐயா!' என்று அட்டென்டன்ஸ் குடுக்க வரும் சிலு சிலு காற்று. இங்கும் அங்கும் எங்கு திரும்பினாலும் காதல் ஜோடிகள். ஆனால் சென்னை மெரினாவிற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் என்னவென்றால், இங்கே யாரும் தனிமை தேடி அலைவதில்லை. அதனால் தனிமை தரும் அநாகரீக அத்துமீறல்கள் இங்கு இல்லை. அதே நேரம் யாரும் அடுத்தவரின் சுவருகளில் அநாகரீகமாக நுழைவதில்லை. அடுத்தவர்களிடையே நடக்கும் உரையாடல்களை எளிதாக நீங்கள் அங்கே கேட்க முடியும். ஆனால் விரும்பி அவைகளை கேட்பவர்கள் குறைவு. காவிரிக் கரையில் எனது பள்ளி இருந்த காரணத்தினால் இப்பாலம் எனக்கு ஒரு உற்ற நண்பனைப் போல. நண்பர்கள் அழகு தானே.


3. திருச்சியில் நான் பிறந்து வளர்ந்த இல்லம்


திருச்சியில் உடையாண்பட்டி என்ற நகரத்து வாசம் முழுதும் வீசாத கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன் நான். திருச்சியில் வீடு வாங்க வேண்டும் என்று நினைத்த எனது தந்தை சதுர அடி 10 பைசாவிற்கு கிடைக்க அந்த கிராமத்தில் நிலம் வாங்கி வீடு கட்டி விட்டார். இது நடந்தது 1973 ஆம் ஆண்டு. நான்காயிரம் சதுர அடி நிலத்தில் கிட்டதட்ட 2000 சதுர அடி வீடு (இரு தளங்கள்). வீட்டை சுற்றி ஐந்து தெண்ணை மரங்கள், மூன்று வேப்ப மரங்கள், இரு மா மரம், ஒரு கொய்யா மரம். ஒரு கிணறு. வீட்டிற்கு சமீபத்தில் ஓடும் காவிரியின் கிளை ஆறான கோரையாறு. விடுமுறை நாட்களில் அங்கு குளிக்க சென்று விடுவோம். ஆழம் இல்லாத பகுதிகளில் குளிப்போம். நீச்சல் நன்கு தெரிந்தவர்கள் இக்கரையிலிருந்து அக்கரை செல்வார்கள். சில நேரங்களில் அருகில் இருக்கும் சாத்தனூர் ஏரிக்கும் செல்வதுண்டு. எனது குழந்தை பருவ நினைவுகளை அரவணைத்து பாதுகாக்கும் இந்த இல்லமும் எனக்கு அழகு தான்.


4. தஞ்சை பெரிய கோவில்


தஞ்சையில் கல்லூரியில் படித்த காரணத்தினால் பல நேரங்களில் எனக்கு புகலிடம் அளித்த இடம். வழிபடுவதற்காக இல்லாவிட்டாலும் பல நேரங்களில் மன அமைதிக்காக நான் செல்லும் இடம். இதைப் பற்றி புதியதாக சொல்ல என்ன இருக்கிறது? It is an Architectural Marvel.


5. பெங்களூர் இரவு வாழ்க்கை


வாரத்தில் ஐந்து நாட்களும் ஆணி புடுங்கிவிட்டு வெள்ளி மற்றும் சனி இரவுகள் வந்தால் காதலியிடம் செல்லும் காதலனைப் போல எனது மனம் திரையரங்கை நோக்கி செல்லும். 10:30 மணிக்கு தொடங்கும் இரவு காட்சி முடிந்து இரவு இரண்டு மணிக்கு வீடு திரும்பி, இரவின் எஞ்சிய பொழுதை சீட்டுடன் கழிக்கும் வாழ்க்கை இருக்கிறதே, அதற்கு ஈடு சொல்ல இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை.


6. கிங்ஸ்


கல்லூரியில் மூன்று ஆண்டுகள், பின்னர் நான்கு ஆண்டுகள் ஆக மொத்தம் ஏழு ஆண்டுகள் எனது வலது கையில் ஆறாம் விரலாய் என்னுடன் இருந்த எனது உற்ற நண்பன். ஒரு நாளில் ஒன்று என்று தொடங்கி, ஒரு பாக்கெட் என்று வளர்ந்து, இன்று என்னால் முழுவதுமாக விரட்டியடிக்கப் பட்டவன். எனது உதட்டுடன் உறவாடிய ஒரே நண்பன் என்பதாலோ என்னவோ இவன் எனக்கு அழகனே.


இப்போ நான் அழக அழகா சொல்ல கூப்பிடறது,

1.Syam (பாவம் நயன்தாராவ யாரும் சொல்லலேன்னு வருத்தப் பட்டாரு. அதான். ஆமா, ஏன் அவர யாரும் இன்னும் டேக் பன்னலே?)

2.Radha Sriram (நம்ம ஊரு. மாட்டிவிடாம இருந்தா எப்படி?)


இவங்க இரண்டு பேரும் தான். நான் கூப்பிட நினைத்த பலரும் எழுதி விட்டதால், மூணாவது யாரும் இல்லை.


மக்கா நாம சொன்னத மட்டும் எடுத்துக்காதீங்க. "ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு" என்றும் கூட ஔவைப்பாட்டி சொல்லி இருக்கிறார்.

28 Comments:

Syam said...

அவ்வ்வ்வ்வ்வ்.....போட்டு தள்ளிட்டீங்களே சத்யா...இதே டேக்க ஏற்கனவே சுமதி என்ன பண்ணிட்டாங்க...அதுபோக ஒரு கண்டெய்னர் நிறைய டேக் மிச்சம் இருக்கு...:-)

Syam said...

Radha Sriram ரொம்ப நல்லவங்க...அவங்க பாருங்க உடனே இந்த டேக் பண்ணிடுவாங்க :-)

Syam said...

மீதி நாளைக்கு படிச்சிட்டு கமெண்டறேன் :-)

மு.கார்த்திகேயன் said...

இது வருகைப் பதிவு.. முழுசா படிசிட்டு வர்றேங்க சத்யா

MyFriend said...

உங்கள் அழகு பதிவு நன்றாக இருக்கின்றது.. :-)

MyFriend said...

//Syam (பாவம் நயன்தாராவ யாரும் சொல்லலேன்னு வருத்தப் பட்டாரு. அதான். ஆமா, ஏன் அவர யாரும் இன்னும் டேக் பன்னலே?)//

ரைட்.. இவருகிட்டவா டேக் கொடுத்தீங்க..

இவர் அழகுன்னு எழுதுறதுக்கு 6 பத்தாதே.. நயன், பாவனா, பக்கத்து வீட்டு பெண், ஆபிஸ்ல பக்கத்து சீட்டுல உட்கார்ந்திரூக்கிற பெண், பஸ்ஸுல அவர் பக்கத்துல உட்கார்ந்த பெண், நடந்து வரும்போது அவரை பார்த்து சிரிச்ச பெண்ணுன்னு வரிசையா போட போறாரு நம்ம நாட்டாமை..

அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நாட்டமை. :-)

MyFriend said...

//Syam said...
Radha Sriram ரொம்ப நல்லவங்க...அவங்க பாருங்க உடனே இந்த டேக் பண்ணிடுவாங்க :-)
//

ஆக மொத்ததுல, நீங்க பண்ண போறது இல்லைன்னு சொல்றீங்க.. ஆமாதானே? :-P

Radha Sriram said...

சத்யன் அழைப்புக்கு நன்றி......இரண்டு நாள் டைம் வேண்டும்.....உங்கள் இரண்டு மடலுமே கிடைத்தது.....

நம்மூர பத்தி எல்லத்தையுமே எழுதிட்டு அப்புரமா என்னையும் எழுத சொன்னா நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்க??ம்ம்ம்??

காவிரி பாலமும் மலைகோட்டையும் மறக்க முடியுமா?? ஒஹ் உடையான்பட்டியா நீங்க?

ஷ்யாமுக்கு ரொம்பதான் லொள்ளு!!

SathyaPriyan said...

//
Syam said...
அவ்வ்வ்வ்வ்வ்.....போட்டு தள்ளிட்டீங்களே சத்யா...இதே டேக்க ஏற்கனவே சுமதி என்ன பண்ணிட்டாங்க...அதுபோக ஒரு கண்டெய்னர் நிறைய டேக் மிச்சம் இருக்கு...:-)
//
முடியலேன்னா விட்டுடுங்க Syam. எப்படியும் மை ஃபிரண்ட் சொன்ன மாதிரி தான் நீங்க சொல்ல போறீங்க. அப்பரம் வீட்டில் நாலு பூரிக் கட்ட உடையும்.

//
மு.கார்த்திகேயன் said...
இது வருகைப் பதிவு.. முழுசா படிசிட்டு வர்றேங்க சத்யா
//
ரைட் மு.கா. பதிவேட்டில் மார்க் போட்டாச்சு.

//
மை ஃபிரண்ட் ::. said...
உங்கள் அழகு பதிவு நன்றாக இருக்கின்றது.. :-)
//
நன்றி. முதல் முறை வந்துருக்கீங்க. தொடர்ந்து வாங்க.

//
Radha Sriram said...
சத்யன் அழைப்புக்கு நன்றி
//
மாட்டிவிட்டதுக்கு போய் நன்றி சொல்றீங்களே.

//
இரண்டு நாள் டைம் வேண்டும்.....
//
Please take your time.

//
நம்மூர பத்தி எல்லத்தையுமே எழுதிட்டு அப்புரமா என்னையும் எழுத சொன்னா நான் என்ன பண்ணுவேன் சொல்லுங்க??ம்ம்ம்??
//
திருச்சிய பத்தி எழுத இன்னும் எவ்வளவோ இருக்கே. மேலும் ஊர பத்திதான் எழுதனும்னு இல்லையே. அழகான எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம்.

//
ஒஹ் உடையான்பட்டியா நீங்க?
//
உங்களுக்கு உடையாண்பட்டி தெரியுமா? பலருக்கு தெரியாது. நான் கே.கே.நகர் என்று தான் அறிமுகப்படுத்திக் கொள்வேன்.

//
ஷ்யாமுக்கு ரொம்பதான் லொள்ளு!!
//
ரிப்பீட்டே......

மு.கார்த்திகேயன் said...

//எனது உதட்டுடன் உறவாடிய ஒரே நண்பன் என்பதாலோ என்னவோ இவன் எனக்கு அழகனே.
//

அட அட அட என்ன ஒரு விளக்கம் சத்யா

Cheranz.. said...

காவேரியில் பிரவாகம்....
நினைத்து பார்தாலே இனிக்கிறது இப்பொழுது நீர் வரத்து எப்படி?

~சேரன்

SathyaPriyan said...

//
மு.கார்த்திகேயன் said...
அட அட அட என்ன ஒரு விளக்கம் சத்யா
//
நன்றி.

//
Cheran Parvai said...
காவேரியில் பிரவாகம்....
நினைத்து பார்தாலே இனிக்கிறது இப்பொழுது நீர் வரத்து எப்படி?
//
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தால் நீர்வரத்து அதிகமாக இருந்தது. மற்றபடி ஆடி மாதம் பாசனத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீர், வடகிழக்கு பருவ மழை பொய்க்காமல் இருந்தால் மார்கழி மாதம் வரை இருக்கும். இல்லையென்றால் ஐப்பசி மாதமே வடிந்து விடும்.

நான் பள்ளியில் படிக்கும் காலங்களில் கண்டிருக்கிறேன். சில நேரங்களில் திருவரங்கம் கோவில் யானையை காவிரியில் குளிப்பாட்டுவார்கள். அம்மா மண்டபம் படிக்கட்டுகளின் அருகில் ஒரு சில அடி எடுத்து வைத்த உடன் யானை முழுவதுமாக முழுகி விடும். நீரோட்டம் அவ்வளவு ஆழம் இருக்கும். ஆனால் இன்று?

Syam said...

//நயன், பாவனா, பக்கத்து வீட்டு பெண், ஆபிஸ்ல பக்கத்து சீட்டுல உட்கார்ந்திரூக்கிற பெண், பஸ்ஸுல அவர் பக்கத்துல உட்கார்ந்த பெண், நடந்து வரும்போது அவரை பார்த்து சிரிச்ச பெண்ணுன்னு வரிசையா போட போறாரு நம்ம நாட்டாமை..//

மை பிரண்ட், நான் எழுதலாம்னு நினைச்சு இருந்தத நீங்க சொல்லிட்டீங்க...கொஸ்டின் பேப்பர் அவுட் ஆன மாதிரி ஆகிடுச்சு :-)

Syam said...

//ஆக மொத்ததுல, நீங்க பண்ண போறது இல்லைன்னு சொல்றீங்க.. ஆமாதானே?//

மை பிரண்ட், இப்படி கொல வெறியோட சுத்தறீங்களே :-)

Syam said...

//ஷ்யாமுக்கு ரொம்பதான் லொள்ளு!!//

Radha Sriram, நானும் காவிரியோட கிளை நதியான அமராவதி தண்ணி குடிச்சு வளந்தவன் தான் :-)

Syam said...

//அப்பரம் வீட்டில் நாலு பூரிக் கட்ட உடையும்//

இப்படியே உசுப்பேத்தி விட்டு என்ன ரனகளம் பண்ணாம விட மாட்டீங்க போல....சரி வீரத்துக்கு சோதனைனு வந்துட்ட அப்புறம் நம்ம எல்லாம் 10 பூரிக்கட்டை உடைஞ்சா கூட கவல பட மாட்டோம் இல்ல :-)

Priya said...

சத்யா, என் சொந்த ஊர் தஞ்சாவூர். சின்ன வயசுல பெரிய கோவில்ல ஓடி விளையாடினது இன்னும் ஞாபகம் இருக்கு. ரொம்ப அழகு தான்.

என் சித்தி ரொம்ப நாள் திருச்சில இருந்ததால மலைக் கோட்டையும் காவிரி பாலமும் மறக்க முடியாதது. மலைக் கோட்டைய சுத்தி இருக்கற திருச்சியோட ரங்கநாதன் தெருவையும் மறக்க முடியாது. பல விடுமுறைகளை அங்க எஞ்சாய் பண்ணியிருக்கேன்.

Priya said...

//எனது உதட்டுடன் உறவாடிய ஒரே நண்பன் என்பதாலோ என்னவோ இவன் எனக்கு அழகனே.
//

விளக்கம் எல்லாம் அழகா தான் இருக்கு.

Priya said...

//ஆமா, ஏன் அவர யாரும் இன்னும் டேக் பன்னலே?//

இப்ப உங்களுக்கே தெரிஞ்சிருக்குமே.. உங்களுக்கு இது முதல் அனுபவம் போல.

Karthika said...

YOu made me nostalgic about the Cauvery Paalam and Malai Kottai. Ennathan USla irunthalum MainGuardla shopping porathu mathiri irukave irukaathu. Romba arumaiya eluthireenga. Trichy pathi oru sirapu post unna podungalen.

- Karthika

SathyaPriyan said...

//
Priya said...
சத்யா, என் சொந்த ஊர் தஞ்சாவூர்.

என் சித்தி ரொம்ப நாள் திருச்சில இருந்ததால மலைக் கோட்டையும் காவிரி பாலமும் மறக்க முடியாதது.
//
திருச்சியும் தஞ்சையும் என் கால் நூற்றாண்டு கால வாழ்வின் நினைவுகளை சுமக்கும் ஊர்கள் Priya.

//
விளக்கம் எல்லாம் அழகா தான் இருக்கு.
//
வேற என்ன நல்லா இல்லை?

//
உங்களுக்கு இது முதல் அனுபவம் போல.
//
ஆம். இதுவே முதல் முறை.

//
Karthika said...
YOu made me nostalgic about the Cauvery Paalam and Malai Kottai.
//
Me too had the same feeling when I wrote this.

//
Romba arumaiya eluthireenga.
//
Thank you so much.

//
Trichy pathi oru sirapu post unna podungalen.
//
அவசியம் பதிகிறேன். தற்போது இந்தியப் போர்களை பற்றிய ஒரு தொடர் கட்டுரை எழுதும் முயற்சியில் உள்ளேன். அது முடிந்ததும் திருச்சி பற்றிய ஒரு பதிவு பதிகிறேன்.

Karthika! First being Radha, you are the second blogger from Trichy, I found :-) I am happy that this post brings many of us together

Arunkumar said...

வழக்கம்போல அழகா சொல்லியிருக்கீங்க தல...

Arunkumar said...

பெங்களூர் வாழ்க்கைய நானும் மிஸ் பண்றேன். :(

நான் திருச்சி ஒரே ஒரு தடவ தான் வந்துர்க்கேன் :-(

இந்தியால,தமிழ்நாட்லயே எவளவோ நல்ல இடங்கள் இருக்கு. ஹ்ம்ம் ,அங்க இருந்தப்போ தான் எனக்கு அதனோட அருமை தெரியல :(

Arunkumar said...

//
எனது உதட்டுடன் உறவாடிய ஒரே நண்பன் என்பதாலோ என்னவோ இவன் எனக்கு அழகனே.
//

அட்ரா சக்க அட்ரா சக்க... தங்கமணிக்கு இல்ல இல்ல பூரிக்கட்டைக்கு பயந்து விட்டாச்சா?

ஸ்யாம் மாதிரி எல்லாத்துக்கும் ஒரு perseverance வேணாமா? :-)

Thiru said...

Hi Sathiyapriyan,

Nice posting. Interesting to read.
I would like to know how to get the tamil transliteration widget you have installed in your blog.

Also I would like to bring it to your attention that, the current template and font you are using is not properly displayed in Firefox browser.

SathyaPriyan said...

//
Arunkumar said...
அட்ரா சக்க அட்ரா சக்க... தங்கமணிக்கு இல்ல இல்ல பூரிக்கட்டைக்கு பயந்து விட்டாச்சா?

ஸ்யாம் மாதிரி எல்லாத்துக்கும் ஒரு perseverance வேணாமா? :-)
//
அவர மாதிரி முடியுமா? தங்கமணிக்கு பயந்து இல்ல Arun, ஒரு முறை கேன்சர் நோயாளிகளை பற்றிய ஒரு ஆவனப்படத்தை பார்த்தேன். உடனே விட்டு விட்டேன்.

//
Thiru said...
Nice posting. Interesting to read.
//
Thank you.

//
I would like to know how to get the tamil transliteration widget you have installed in your blog.
//
The font is the Unicode font. You do not need to install any fonts to view this.

Please try doing the following in your IE.

Go to View --> Encoding --> Unicode (UTF8) Or User Defined


To get the widget, please do the following.

Right Click --> View Source --> Get the function fnTranslate(). You can easily build on your own using the script.

//
Also I would like to bring it to your attention that, the current template and font you are using is not properly displayed in Firefox browser.
//
That is becuse my alignment is justfied. If you make the text left aligned, we can view it in firefox browser as well.

Adiya said...

hey

u made me nostalogic.. mm.. time to relax.

thanks ma

SathyaPriyan said...

Me To Adiya.