Tuesday, June 19, 2007


முதலாம் ஆண்டு நிறைவு

சென்ற 2006 ஆம் ஆண்டு ஜனவரியில், நான் அமெரிக்கா வந்த உடன் ஏற்பட்ட ஒரு விதமான தனிமையால், என்ன செய்வது?; தமிழுடன், தமிழ்நாட்டுடன், இந்தியாவுடன் விட்டுப் போன தொடர்பை மீண்டும் எவ்வாறு ஏற்படுத்திக்கொள்வது? என்று அஞ்சிய பொழுது எனக்கு அறிமுகமானது தமிழ்மணம். அதற்கு முன்பு எனக்கு தமிழில் வலை பதிவுகள் இருப்பதே தெரியாது. ஒரு ஆறு மாத காலம் பிறர் பதிவுகளை படித்து மேய்ந்து கொண்டிருந்துவிட்டு, நாமும் ஏன் பதிய கூடாது? என்ற கேள்வி என்னுள் எழ பிறந்ததுதான் எனது வலைப்பூ. [டேய்! பரதேசி! அந்த கேள்விக்கு நான் வேண்டாம், வேண்டாம்னு கத்தினேனேடா!]

இதோ வலைப்பூ தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற்றது. பதிவுகளின் எண்ணிக்கை என்று பார்த்தால் 31 பதிவுகளை தான் பதிந்துள்ளேன் (இது 32 ஆவது பதிவு). சராசரியாக மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள். ஆனால் பதிவுகளின் எண்ணிக்கையோ அல்லது பின்னூட்டங்களின் எண்ணிக்கையோ என்னை மகிழ்விப்பதில்லை. நான் எழுதிய "கமல் ஒரு சகாப்தம்" என்ற பதிவு அதிகபட்சமாக 38 பின்னூட்டங்களை பெற்றது. ஆனால் நான் மிகவும் மனம் நொந்து பம்பாய் இரயில் குண்டு வெடிப்பிற்கு பின்னர் எழுதிய "ஒரு மகன், ஒரு கணவன், ஒரு சகோதரன் - ஒரு மரணப்போராட்டம்" என்ற பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை. "கமல் ஒரு சகாப்தம்" பதிவை திரட்டிய பூங்கா இதழ் எனது "குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்!" என்ற நேதாஜியைப் பற்றிய பதிவையோ அல்லது இந்தியப் போர்களைப் பற்றிய தொடர் பதிவுகளையோ ஒன்றை கூட திரட்டவில்லை. அதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் கூடத்தான். [அடங்குடா! நல்லா இருந்தா திரட்டி இருப்பாங்க. அதுக்காக கமல் பதிவு நல்லா இருக்குன்னு நினைச்சுக்காதே. பூங்காலே யாரோ ரஜினி ஃபேன் இருக்காங்க. கமல கேவலப்படுத்த வேற வழி இல்லாம உன்னோடத யூஸ் பண்ணி இருக்காங்க.]

இதற்கிடையில் தமிழ்மண நட்சத்திரமாக என்னை தேர்வு செய்து என்னை கை தூக்கி விட என் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் தமிழ்மண நிர்வாகத்தினர் எனது ஒப்புதலை கோரினர். ஆனால் நான் அன்புடன் மறுத்து விட்டேன். [இதெல்லாம் ஒவர் டா! அவங்க பாவம் என்னடா பன்னுவாங்க. இருக்கறது 100 பேர். வாரா வாரம் ஒருத்தர்னா உனக்கு ஒரு சான்ஸ் வந்து தானேடா ஆகனும். ஆனா ஒன்னுடா, வேணாம்னு சொன்னே பாரு, அதான் சூப்பர். ஏன் சொல்றேன்னா? நட்சத்திர பதிவர்னா முகப்புலேயே ஃபோட்டோலாம் தெரியுமாம். உன்னோட ஃபோட்டோலாம் போட்டா உருப்புட்ட மாதிரி தான்.] ஒரே வாரத்தில் ஏழு பதிவுகள் எழுத நேரம் ஒதுக்க முடியாததே காரணம். அதே பொழுதில் வாய்ப்பு கிடைத்து விட்டதே என்பதற்காக ஏனோ தானோ என்று பதிவுகள் பதிந்து கிடைத்த வாய்ப்பையும் அவர்களது நம்பிக்கையையும் வீணடிக்க நான் விரும்ப வில்லை. இதுவும் ஒரு காரணம். [சோம்பேறித் தனத்த எவ்வளோ பெருமையா சொல்றான் பாரு நாதாரி.]

எனது மன அமைதிக்காகவே பதிவு எழுதத் தொடங்கினேன். ஆனால் தமிழ் வலையுலகமோ அதனினும் அதிகமாக, மன அமைதியுடன் பல நல்ல நண்பர்களையும் சேர்த்துக் கொடுத்தது. வலையுலகின் மூலம் எனக்கு அறிமுகமான Syam, Priya, Arun Kumar, Adiya, மு.கா., வெட்டிப்பயல், CVR, Radha Sriram, மணி ப்ரகாஷ், மாயவரம் சிவா, ஷைலஜா போன்றவர்களின் நட்பை சம்பாதித்ததில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்களில் Syam, Priya தவிர்த்து மற்றவர்களின் பதிவுகளில் நான் அதிகம் பின்னூட்டியதில்லை. ஆனாலும் அவர்கள் எனது பதிவை படித்து பின்னூட்ட தவறியதில்லை. [டேய் பேரிக்கா மண்டையா! Syam மும், Priya வும் இன்னும் கமென்ட் மாடரேஷன் பன்னலேடா. அதுனாலே தான் உன்னோட கமென்ட் எல்லாம் அவங்க பதிவுலே தெரியுது. மத்தவங்க எல்லாம் உன்னோட பேர பாத்தோன்னயே Spam க்கு அனுப்பி, Shift+Delete பன்னி, குப்ப தொட்டி, கக்கூஸ் வழியா ஸெப்டிக் டாங்குக்கு அனுப்பிடறாங்க.]

மேலும் இன்னொரு காரணத்திற்காகவும் நான் வலையுலகிற்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். இட ஒதுக்கீடு, ஆரிய - திராவிட சிந்தனைகள், பார்ப்பணீயம், இந்துத்வா, இஸ்லாம், ஈழ சகோதரர்களின் நிலை, இந்திய மற்றும் தமிழக அரசியல், கம்யூனிஸம் போன்ற பலவற்றை பற்றிய எனது கருத்துக்களை மாற்றியது வலையுலகு. நான் மேலே கூறியவைகளில் பலவற்றில் நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலையில் இப்பொழுது இல்லை. இவை அனைத்திலும் இரு தரப்பு வாதங்களையும் கூர்ந்து கவனித்து, உள் வாங்கிக் கொள்கிறேன். அதை மனதினில் அசை போட்டு தெளிவு பெறுகிறேன். [வேணாம்; வேணாம்; ஆட்டோ வருது சொல்லிட்டேன்.]

பள்ளி முடித்த பிறகு எனக்கு தமிழ் எழுதுவதற்கான வாய்ப்புகள் இல்லை. மேலும் தமிழ் தட்டச்சு செய்து பழக்கம் இல்லை. அதனால் எனது தமிழில் பல எழுத்து பிழைகள், சில இலக்கண பிழைகள் வந்த போது அதை அன்புடன் சுட்டிக் காட்டிய வலையுலகினர் அனைவருக்கும் நன்றி கூற கடமைப் பட்டிருக்கிறேன். அது வரை ஏனோ தானோ என்று பதிந்து கொண்டிருந்த நான், அவர்கள் சுட்டிக் காட்டிய பிறகு சிறிது கவனமாக பதிய தொடங்கினேன். இதனால் எனது தமிழ் மேம்பட்டது. [மவனே! இருடி உன்னோட "மேம்பட்ட தமிழ்" லட்சனத்த பாக்கறேன். இந்த பதிவுலேயே ஆயிரம் தப்பு கண்டு பிடிச்சு செருப்பால அடிக்க போறாங்க.]


இதுவரை நான் எழுதியவை யார் மனதையும் புண் படுத்தவில்லை என்றே நினைக்கிறேன். அவ்வாறு புண்பட்டு இருப்பின் தங்களது மன்னிப்பை கோருகிறேன். வரும் ஆண்டில், நேதாஜியின் சொற்பொழிவுகளை தொகுப்பாக பதிய வேண்டும் என்று ஆசை. அப்படியே பாரதி பற்றியும், விவேகானந்தரை பற்றியும் எழுத வேண்டும் என்றும் ஆசை. Greek Mythology பற்றியும் எழுத வேண்டும். கன்னி முயற்சியாக ஒரு கதை எழுதலாம் என்றும் நினைக்கிறேன். [கதையா? யூ மீன் லைக் "பாப்பா போட்ட தாப்பா","மல்கோவா மாமி" etc. ஐ லைக் இட் யா.]

ஒரு வருட காலமாக தொட்டிலில் கையையும் காலையும் ஆட்டிக் கொண்டு இருந்த நான், இரண்டாம் ஆண்டில் மெல்ல தவழ தொடங்கி இருக்கிறேன் உங்கள் வாழ்த்துக்களுடன். [நல்ல வேள. தொட்டில்ல மூச்சா போனது, கக்கா போனது இதெல்லாம் சொல்லாம விட்டான்.]

நன்றி. [அடேய் கீ போர்டுவாயா! பெரிய திண்டுக்கல் பூட்டா வாங்கி உன்னோட ப்ளாகுக்கு போடுடா. அவங்க எல்லாரும் "நன்றி!" உனக்கு சொல்லுவாங்க.]

21 Comments:

SathyaPriyan said...

புதிய ப்ராஜெக்டில் ஆணிகள் கப்பல் கப்பலாக வந்து கொண்டிருப்பதால் இன்னும் சில நாட்களுக்கு எனது இம்சை இருக்காது. Enjoy!

மயிலாடுதுறை சிவா said...

வணக்கம் சத்யன்

உங்களது பல எழுத்துகளை விடாமல் படித்து வருபவன் நான். பெங்களூரைப் பற்றி நீங்கள் முதன் முதல் எழுதியது இன்னமும் என் மனதில் அப்படியே உள்ளது.

அதுமட்டும் அல்ல, கமல் பதிவை நின்று நிதானமாக எழுதியதும் பாராட்டுக்கு உரியது.

ஏதாவது நாம் தமிழ் மணத்தில் எழுத வேண்டும் என்று நினைப்பதே "நமக்கும் தமிழ் மணத்திற்கும்" உள்ள பந்தம்.

உங்களை போலவே நானும் எத்தனையோ எழுத்துகளை படித்து உள்வாங்கி அசைப் போட்டு இருக்கிறேன்.

இந்த அமெரிக்க வாழ்வில் தமிழ் மணம் நமக்கு கற்று கொடுத்துள்ளது என்றால் அது மிகை அல்ல.

பூங்கா திரட்டவில்லை என்று வருத்த்ப் பட வேண்டாம். உங்கள் கட்டுரைகளைப் போல பல விடுபட்டுள்ளது.

எனது பெயரை குறிப்பிட்டதற்கு நன்றிகள் பல...

மயிலாடுதுறை சிவா...

வடுவூர் குமார் said...

என்னது 1 வருடத்துக்கு 30+ தானா?
ரொம்ப குறைவாக இருக்கே!!
தொடர்ந்து எழுத முயலுங்கள்,வாழ்த்துக்கள்.

CVR said...

அண்ணாத்த!!!
என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்!!!

உங்களுக்கு ஏன் உங்க மேலேயே ஏன் இந்த தற்கொலை வெறி???
நாமலே நம்மல கலாச்சிட்டா வரவனுங்க எல்லாம் இவன் பாவம்னு புகழ்ந்து கொட்டிடுவாங்கன்ற திட்டமா???
படா ஆளுயா நீங்க!! :-D

உங்கள் இந்திய போர்கள் தொடர் தமிழ்மணத்தில் நான் பெரிதும் விரும்பி படித்த தொடர். அதன் இடுகைகளில் நீங்கள் சுறுக்கமாகவும் அதே சமயம் மேலதிக தகவல்களை சுவையாக படைத்த விதம் என்னை மிகவும் கவ்ர்ந்திருந்தது.

ஆணிகள் தொல்லை நீங்கள் திரும்பவும் வலையுலகில் சேர்த்து வைத்து இடுகைகளை பதிவிட வாழ்த்துக்கள்!! :-)

Anonymous said...

சத்தியா பிரியன் நான் எல்லாம் உங்க பதிவு பக்கம் அடிக்கடி வருவேன்.ஆனா மறுமொழிகள் எல்லாம் போட்டது இல்லை.

//இதோ வலைப்பூ தொடங்கி ஒரு ஆண்டு நிறைவு பெற்றது. பதிவுகளின் எண்ணிக்கை என்று பார்த்தால் 31 பதிவுகளை தான் பதிந்துள்ளேன் (இது 32 ஆவது பதிவு). சராசரியாக மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று பதிவுகள். ஆனால் பதிவுகளின் எண்ணிக்கையோ அல்லது பின்னூட்டங்களின் எண்ணிக்கையோ என்னை மகிழ்விப்பதில்லை. நான் எழுதிய "கமல் ஒரு சகாப்தம்" என்ற பதிவு அதிகபட்சமாக 38 பின்னூட்டங்களை பெற்றது. ஆனால் நான் மிகவும் மனம் நொந்து பம்பாய் இரயில் குண்டு வெடிப்பிற்கு பின்னர் எழுதிய "ஒரு மகன், ஒரு கணவன், ஒரு சகோதரன் - ஒரு மரணப்போராட்டம்" என்ற பதிவிற்கு ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை. "கமல் ஒரு சகாப்தம்" பதிவை திரட்டிய பூங்கா இதழ் எனது "குருதியை தாருங்கள்; சுதந்திரம் அளிக்கிறேன்!" என்ற நேதாஜியைப் பற்றிய பதிவையோ அல்லது இந்தியப் போர்களைப் பற்றிய தொடர் பதிவுகளையோ ஒன்றை கூட திரட்டவில்லை. அதில் எனக்கு எனது மன அமைதிக்காகவே பதிவு எழுதத் தொடங்கினேன். ஆனால் தமிழ் வலையுலகமோ அதனினும் அதிகமாக, மன அமைதியுடன் பல நல்ல நண்பர்களையும் சேர்த்துக் கொடுத்தது.//

நல்ல பதிவுகள்,மறுமொழிகளை வைத்து அதன் தரத்தை எடை போடுவது இல்லைங்க.உங்க அனைத்து பதிவுகளும் நன்றாக இருந்தது.அதுவும் உங்க நண்பர் சிவிஆர் உங்களை பதிவுகளை பற்றி பேசிக்கிட்டே இருப்பார்.

//வலையுலகின் மூலம் எனக்கு அறிமுகமான Syam, Priya, Arun Kumar, Adiya, மு.கா., வெட்டிப்பயல், CVR, Radha Sriram, மணி ப்ரகாஷ், மாயவரம் சிவா, ஷைலஜா போன்றவர்களின் நட்பை சம்பாதித்ததில் தான் எனக்கு மகிழ்ச்சி அதிகம்கொஞ்சம் வருத்தம் கூடத்தான்.//

இதை படித்துவிட்டு சிவிஆர் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்துக் கொண்டிருகின்றார் :)
உங்க பாச மழை எல்லாம் பார்த்து கண்ணு கட்டுதே சாமீ :)

ஒரு வருடத்தை வெற்றியோடு கடந்து வந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

உங்களுடையது அனைத்துமே அருமையான பதிவுகள் சத்யா. தொடர்ந்து எழுதுங்கள். முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெறுங்கள் எழுத்துலகில்.

ACE !! said...

வாழ்த்துக்கள்!!! மிகவும் பிடித்தது இந்திய போர் பற்றிய பதிவு.. மேலும் எழுத வாழ்த்துக்கள்..

Porkodi (பொற்கொடி) said...

nijamaveva ungalukku unnale unnale pidichudhu nu solringa??! :O

first anniversaryku vaazthukkal! :)

Arunkumar said...

கங்காருலேஷன்ஸ் சத்யா.. கலக்கிப்போட்டீங்க போங்க..

உங்க பதிவுகள் எல்லாமே எனக்கு பிடிக்கும்.. நிறைய டைம் எடுத்துக்கிட்டு பல விஷய்ங்கள சொல்றீங்க.. மேலும் தொடருங்க..

வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை, வணங்குகிறேன் :)

அப்பறம் நம்ம பேரையும் போட்டு உங்க பாசத்த காமிச்சிட்டீங்க.. தேங்க் யூ வெரி மச் :-)

Karthika said...

Vaalthukal Sathya Priyan. Been reading all your posts, just that I forget to write a comment on it. Innimel kandipa comment panna muyarchi seiren. Apparam namma oru Trichy pathi eppo pathivu pooda poorenga?

- Karthika

SathyaPriyan said...

//
மயிலாடுதுறை சிவா said...

உங்களது பல எழுத்துகளை விடாமல் படித்து வருபவன் நான். பெங்களூரைப் பற்றி நீங்கள் முதன் முதல் எழுதியது இன்னமும் என் மனதில் அப்படியே உள்ளது.

அதுமட்டும் அல்ல, கமல் பதிவை நின்று நிதானமாக எழுதியதும் பாராட்டுக்கு உரியது.
//
மிக்க நன்றி சிவா.

//
ஏதாவது நாம் தமிழ் மணத்தில் எழுத வேண்டும் என்று நினைப்பதே "நமக்கும் தமிழ் மணத்திற்கும்" உள்ள பந்தம்.

இந்த அமெரிக்க வாழ்வில் தமிழ் மணம் நமக்கு கற்று கொடுத்துள்ளது என்றால் அது மிகை அல்ல.
//
முற்றிலும் உண்மை. வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல.

//
வடுவூர் குமார் said...
என்னது 1 வருடத்துக்கு 30+ தானா?
ரொம்ப குறைவாக இருக்கே!!
தொடர்ந்து எழுத முயலுங்கள்,வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி குமார். எழுதுவதற்கு ஏதாவது விஷயம் இருக்க வேண்டுமே? :-)

//
CVR said...
அண்ணாத்த!!!
என் உளம் கனிந்த வாழ்த்துக்கள்!!!
//
நன்றி CVR.

//
உங்கள் இந்திய போர்கள் தொடர் தமிழ்மணத்தில் நான் பெரிதும் விரும்பி படித்த தொடர். அதன் இடுகைகளில் நீங்கள் சுறுக்கமாகவும் அதே சமயம் மேலதிக தகவல்களை சுவையாக படைத்த விதம் என்னை மிகவும் கவ்ர்ந்திருந்தது.
//
மீண்டும் நன்றி.

//
ஆணிகள் தொல்லை நீங்கள் திரும்பவும் வலையுலகில் சேர்த்து வைத்து இடுகைகளை பதிவிட வாழ்த்துக்கள்!! :-)
//
அநேகமாக அடுத்த வாரமே வேறு இடத்திற்கு மாறி விடுவேன் என்று நினைக்கிறேன். I just can't take it any longer :-(

//
துர்கா|†hµrgåh said...
சத்தியா பிரியன் நான் எல்லாம் உங்க பதிவு பக்கம் அடிக்கடி வருவேன்.ஆனா மறுமொழிகள் எல்லாம் போட்டது இல்லை.

நல்ல பதிவுகள்,மறுமொழிகளை வைத்து அதன் தரத்தை எடை போடுவது இல்லைங்க.உங்க அனைத்து பதிவுகளும் நன்றாக இருந்தது.
//
மிக்க நன்றி துர்கா. படித்தால் போதும். அதுவே மகிழ்ச்சி.

//
அதுவும் உங்க நண்பர் சிவிஆர் உங்களை பதிவுகளை பற்றி பேசிக்கிட்டே இருப்பார். இதை படித்துவிட்டு சிவிஆர் விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்துக் கொண்டிருகின்றார் :)

உங்க பாச மழை எல்லாம் பார்த்து கண்ணு கட்டுதே சாமீ :)
//
இலவச விளம்பரம் தந்த தலைக்கு மீண்டும் நன்றி. இந்திய போர்கள் தொடருக்கு அவரும் திரு. சேரன் பார்வை அவர்களும் அளித்த ஊக்கத்திற்கு நன்றி சொன்னால் மட்டும் போதாது.

இந்த சந்தர்பத்தில் அவர்கள் இருவருக்கும் மீண்டும் நன்றிகள் கூறிக்கொள்கிறேன்.

//
ஒரு வருடத்தை வெற்றியோடு கடந்து வந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
//
தொடர்ந்து வாருங்கள் துர்கா.

//
கீதா சாம்பசிவம் said...
உங்களுடையது அனைத்துமே அருமையான பதிவுகள் சத்யா. தொடர்ந்து எழுதுங்கள். முதலாண்டு நிறைவுக்கு வாழ்த்துக்கள். வெற்றி பெறுங்கள் எழுத்துலகில்.
//
மிக்க நன்றி கீதா மேடம். ஆணிகள் தொல்லையால் பல பதிவுகள் விட்டுப் போய்விட்டன. உங்களதும் அதில் அடக்கம். விரைவில் படித்து விடுகிறேன்.


//
சிங்கம்லே ACE !! said...
வாழ்த்துக்கள்!!! மிகவும் பிடித்தது இந்திய போர் பற்றிய பதிவு.. மேலும் எழுத வாழ்த்துக்கள்..
//
நன்றி ACE. எனக்கும் அவைதான் மிக்க மன நிறைவு அளித்த பதிவுகள்.

//
பொற்கொடி said...
nijamaveva ungalukku unnale unnale pidichudhu nu solringa??! :O
//
உண்மைங்க. அதற்கான காரணம் அதிலேயே சொல்லி இருக்கிறேனே.

//
first anniversaryku vaazthukkal! :)
//
நன்றி.

//
Arunkumar said...
கங்காருலேஷன்ஸ் சத்யா.. கலக்கிப்போட்டீங்க போங்க..

உங்க பதிவுகள் எல்லாமே எனக்கு பிடிக்கும்.. நிறைய டைம் எடுத்துக்கிட்டு பல விஷய்ங்கள சொல்றீங்க.. மேலும் தொடருங்க..
//
நன்றி Arun.

//
வாழ்த்துக்கள் சொல்ல வயதில்லை, வணங்குகிறேன் :)
//
ஆமாங்க ரொம்ப சின்ன வயசு தான் உங்களுக்கு அதுனாலே கல்யானத்த இன்னும் ஒரு 15 வருஷத்துக்கு தள்ளி போடலாம் :-)

//
Karthika said...
Vaalthukal Sathya Priyan. Been reading all your posts, just that I forget to write a comment on it. Innimel kandipa comment panna muyarchi seiren.
//
மிக்க நன்றி Karthika. அவசியம் பன்னுங்க. நீங்க திருச்சியில் எங்கே? நான் கே.கே.நகர் மற்றும் திருவரங்கம் இரண்டிலும் இருந்திருக்கிறேன்.

//
Apparam namma oru Trichy pathi eppo pathivu pooda poorenga?
//
புதிய பிராஜக்டில் ஒரு நாளைக்கு 100 மைல்கள் பயனம் செய்கிறேன் Karthika. சிங்கத்த சாச்சுப்புட்டாங்க. கூடிய விரைவில் எழுதுகிறேன்.

Cheranz.. said...

சத்யா,
வெற்றிகரமாக முதல் வருடம் முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!!!
~சேரன்

Cheranz.. said...

And btw a ச்ad news,Director Jeeva is no more!Guess you were his good fan!
~சேரன்

Priya said...

சத்யா, வாழ்த்துக்கள். எண்ணிக்கை கம்மியா இருந்தாலும் உங்க பதிவுகள் ஒவ்வொண்ணும் அருமை. ஒவ்வொண்ணுக்கும் நீங்க பண்ணின homework அதுல தெரியும்.

quality should be ahead of quantity ங்கற பாலிஸில எழுதறிங்க.

Priya said...

என் பேர போட்டு பாசத்த காட்டிட்டிங்க.

Priya said...

உங்க மனசாட்சி உங்கள நல்லா நக்கல் பண்ணுது.

Muthukrishnan Rajaram said...

congrats da !
:) Muthu.

SathyaPriyan said...

//
Cheran Parvai said...
சத்யா,
வெற்றிகரமாக முதல் வருடம் முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!!!
//
மிக்க நன்றி சேரன்.

//
Priya said...
சத்யா, வாழ்த்துக்கள். எண்ணிக்கை கம்மியா இருந்தாலும் உங்க பதிவுகள் ஒவ்வொண்ணும் அருமை. ஒவ்வொண்ணுக்கும் நீங்க பண்ணின homework அதுல தெரியும்.
//
மிக்க நன்றி Priya.

//
Muthukrishnan Rajaram said...
congrats da !
:) Muthu.
//
Thank you.

நண்பர்களே! தாமதமான நன்றிக்கு மன்னிக்கவும். ஆணிகள் தொல்லை நீங்க வில்லை.

வெற்றி said...

சத்தியப்பிரியன்,
ஓராண்டுப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள்.
உங்களின் பல பதிவுகளைப் படித்திருந்தாலும் வழமையான பஞ்சியால்[சோம்பல்] பின்னூட்டங்கள் எழுதவில்லை.

உங்களின் பதிவுகளில் மிகவும் நான் இரசித்த விடயம் நீங்கள் ஆங்கிலச் சொற்களையோ அன்றி தமிங்கிலிஸ் சொற்களையோ புழங்காது எளிமையான தமிழ்ச் சொற்களைப் புழங்குவதுதான்.

நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் எழுதி
எம்மை மகிழ்விக்க தமிழன்னையை வணங்கி நிற்கிறேன்.

deepamtimes said...

திருவண்ணாமலையிலிருந்து ‍ஜெயக்குமார்
வெற்றிகரமாக முதல் வருடம் முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!!!

உங்கள் முயற்சி தொடரட்டும்
இன்னும் எழுதுங்கள்

aravind199900@gmail.com

SathyaPriyan said...

//
வெற்றி said...
ஓராண்டுப் பூர்த்திக்கு வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி.

//
உங்களின் பதிவுகளில் மிகவும் நான் இரசித்த விடயம் நீங்கள் ஆங்கிலச் சொற்களையோ அன்றி தமிங்கிலிஸ் சொற்களையோ புழங்காது எளிமையான தமிழ்ச் சொற்களைப் புழங்குவதுதான்.
//
மீண்டும் நன்றி.

//
deepamtimes said...
திருவண்ணாமலையிலிருந்து ‍ஜெயக்குமார்
வெற்றிகரமாக முதல் வருடம் முடித்தமைக்கு வாழ்த்துக்கள்!!!
//
மிக்க நன்றி.