Monday, May 14, 2007


உன்னாலே! உன்னாலே!


பொதுவாகவே இயக்குனர் ஒளிப்பதிவாளர் ஜீவாவின் திரைப் படங்கள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. சேது, காதல், பிதாமகன், பருத்தி வீரன் போன்ற படங்களை விட என் மனதை அதிகம் பிசைவன அவரின் திரைப்படங்கள். பெரிதாக காரணம் ஒன்றும் இல்லை, என்னால் அவரது படங்களை எனது வாழ்க்கைக்குள் புகுத்தி பார்க்க முடிகிறது. அது ஒரு காரணமாக இருக்கலாம்.அவரது 12B பார்த்து விட்டு ப்ரியாவை நினைத்து வருந்தி இருக்கிறேன். கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காரணத்தினால் எனது அனுபவத்தில் ப்ரியாவைப் போன்றவர்களை நான் பார்த்ததில்லை என்றாலும் ஜோ, சக்திவேல் போன்றவர்களை அதிகம் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு இடையே நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் என்னால் வேறொரு சந்தர்பத்தில் அருகில் இருந்து பார்க்கப்பட்டவை.உள்ளம் கேட்குமே இறுதிக் காட்சியில் பூஜாவுடன் ஷ்யாம் இணையும் பொழுது என்னை அறியாமல் ஒரு பெரு மூச்சு வந்தது உண்மை. கல்லூரி முடிந்த பிறகு பார்த்த அந்த திரைப் படம் அந்த வாழ்வின் நினைவுகளை பசுமையாக முன்னிறுத்தியது. கல்லூரி நண்பர்களில் பூஜா யார்? இமான் யார்? ஷ்யாம் யார்? ப்ரியா யார்? ஐரின் யார்? என்றெல்லாம் மனம் கேள்வி கேட்டது. அதற்கு மனமே ஒவ்வொரு நண்பர்களாக அடையாளமும் காட்டியது.இதோ நேற்று நான் பார்த்த உன்னாலே உன்னாலே படம் மீண்டும் என் மனதை பிசைந்து விட்டது. மனம் ஜான்ஸியை நினைத்து வருந்துகிறது. அவளது முடிவு சரியா? இல்லை தவறா? என்ற கேள்வியையும் தாண்டி நான் பார்த்து பழகிய, நான் அறிந்த ஜான்ஸிகள் நிலைமையும் அதுதானோ? என்று கேள்வி எழுகிறது. காதலில் Obsessive என்பது ஒருவகை, Over Possessive என்பது இன்னொரு வகை. தமிழ் சினிமா பொதுவாகவே முதல் வகை காதலைதான் (வாலி, படையப்பா, வல்லவன், உயிர் வரை) அதிகம் காட்டி இருக்கிறது. ஆனால் இந்த படத்தில் இரண்டாம் வகை காதலை அழகாக ஜீவா காட்டி இருக்கிறார்.படத்தின் கதை என்று பார்த்தால் ஒன்றும் பெரிதாக இல்லை. தமிழ் சினிமா முன்னரே பலமுறை மென்று துப்பிய சாதாரன முக்கோண காதல் கதை. ஆனால் இதற்கு அழகு சேர்ப்பது சம்பவங்களின் தொகுப்பாக அழகாக பின்னப்பட்ட திரைக்கதை. பொதுவாகவே யதார்த்தம் என்ற பெயரில் அதீத சோகங்களையே அதிகம் காட்டும் தமிழ் சினிமா இயக்குனர்களிடையே, நகரத்து மேல்தட்டு மக்களின் வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளை அழகாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.படத்தில் இயக்குனர் ஜீவாவை விட அதிகம் பாராட்டு பெறுபவர் ஒளிப்பதிவாளர் ஜீவா. கண்ணுக்கு குளிர்ச்சியான சென்னையையும், ஆஸ்திரேலியாவையும் அழகாக காட்டுகிறது அவரின் கேமரா.புதுமுகம் விணய், தனூஜா இருவரும் புதுமுகம் என்று சொல்ல முடியாதபடி அருமையாக நடித்திருக்கிறார்கள். விணயின் முக பாவங்களும், தனூஜாவின் குறும்புகளும் ரசிக்க வைக்கின்றன. சதாவின் நடிப்பை பற்றி சொல்லியே ஆக வேண்டும். குறிப்பாக தனூஜாவின் காரில் விணய் சென்ற உடன் அமைதியாக உட்கார்ந்து உணர்ச்சிகளை வார்த்தைகள் இல்லாமல் அவர் வெளிப்படுத்தும் காட்சி, simply out of the world. Keep up the good work Sada.அடுத்ததாக படத்தில் அதிகம் என்னை கவர்ந்தது ராஜூ சுந்தரத்தின் நகைச்சுவை. மொழி படத்தில் பிரகாஷ் ராஜின் நகைச்சுவை போன்றே அழகாக கதையுடன் கலந்து வந்து சிரிப்பூட்டுகிறார். ஹேரிஸ் ஜெயராஜின் இசையில் உன்னாலே உன்னாலே, ஜூலை காற்றே பாடல்கள் மிகவும் அருமையாக இருக்கின்றன. பின்னனி இசையும் அபாரம். படத்தில் வசனங்களும் நன்றாக இருக்கின்றன. "முகம் மாறினால் மனம் மாறும், மனம் மாறினால் அவன் வருவான்" இது என்னை மிகவும் கவர்ந்த வசனம்.மொத்தத்தில் மீண்டும் ஒரு நல்ல திரைப்படத்தை அளித்தமைக்கு ஜீவா அவர்களுக்கு நன்றி. ஆனாலும் இந்த படம் என்னுள் பல கேள்விகளை எழுப்பிவிட்டதை மறுப்பதற்கில்லை. ஜான்ஸி செய்த தவறு என்ன? காதலில் possesiveness என்பது தவறா? Possesiveness என்பது அன்பின் வெளிப்பாடு தானே? அவ்வாறு இருப்பவர்களுக்கு எல்லாம் இது தான் முடிவா? இந்த கேள்விகளுக்கெல்லாம் பதில் தேடுவதில் பயன் இல்லை. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கோ இல்லை வேறொரு நல்ல படத்தை பார்க்கும் வரையிலோ இந்த கேள்விகள் தானே எதிரொலித்து பின்னர் தேய்ந்து மறைந்து விடும்.

17 Comments:

CVR said...

படம் tragedy-ஆ???
ஏன்னா மனதை கஷடப்படுத்தும் படங்கள் என்றாலே நான் காத தூரம் ஓடிப்போய்விடுவேன்!! :-)
இந்த ஒரு காரணத்துக்காகவே தான் நான் "Titanic" படத்தையே பார்க்கவில்லை என்றால் நீங்களே யோசித்து பாருங்களேன்!! :-)

Arunkumar said...

man, looks like movie gave u a lasting impression...

i never felt like that.. it was just another movie for me. actually i didnt like it that much... maybe because i couldn't relate to it as much as u did...

songs are awesome , dance and picturization is good but i felt hero just didnt have any role in that movie other than to go behind girls... he doesn't react to any situation.. like a dumbster !!!
one just feels if he ever loved sada or for that matter, is he loving thanuja? basically, therz no enuf justification to the story. sada's acting has improved.. yes but not like 'out of the world' :)

just my opinions..

Cheran Parvai said...

உங்களை நம்பி படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன்.பார்த்து விட்டு வந்து கமெண்டுறேன்....
~சேரன்

Syam said...

//ஆனால் இதற்கு அழகு சேர்ப்பது//

கஜோலின் தங்கை மட்டுமே :-)

SathyaPriyan said...

//
CVR said...
படம் tragedy-ஆ???
ஏன்னா மனதை கஷடப்படுத்தும் படங்கள் என்றாலே நான் காத தூரம் ஓடிப்போய்விடுவேன்!! :-)
//
அதெல்லாம் ஒன்னும் இல்லை CVR. ஜாலியான படம் தான்.

//
இந்த ஒரு காரணத்துக்காகவே தான் நான் "Titanic" படத்தையே பார்க்கவில்லை என்றால் நீங்களே யோசித்து பாருங்களேன்!! :-)
//
This is a too much.

//
Arunkumar said...
man, looks like movie gave u a lasting impression...
//
உண்மை தான் Arun. இந்த படத்திலும் பல சம்பவங்கள் என்னால் வேறு சந்தர்பங்களில் அருகில் இருந்து பார்க்கப்பட்டவை. It was mind blowingly refreshing :-)

படத்துலே நான் பிடிச்சுருக்குன்னு சொன்னதெல்லாம் உங்களுக்கு பிடிக்கலையே :-) காரி துப்பிட்டீங்க.

//
Cheran Parvai said...
உங்களை நம்பி படத்தை பார்க்கலாம் என்று இருக்கிறேன்.பார்த்து விட்டு வந்து கமெண்டுறேன்....
//
சேரன் என்ன நம்பினா உருப்புட முடியாது. நானெல்லாம் குட்லக் அப்படீங்கர பிரஷாந்த்-ரியா சென் நடிச்ச படத்து முதல் நாள் முதல் ஷோ தஞ்சாவூர் சாந்தி-கமலா லே பார்த்த ஆளு. மேலே இருக்கற Arun comments பார்த்துட்டு படம் பாருங்க.

//
Syam said...
/ஆனால் இதற்கு அழகு சேர்ப்பது/
கஜோலின் தங்கை மட்டுமே :-)
//
அப்புறம் என்னையா இங்கே கூட்டம்? அதான் தீர்ப்பு சொல்லியாச்சு இல்லே? போங்க போங்க.

வேதா said...

என்னுடைய கருத்தும் அருணின் கருத்தை தான் ஒத்திருக்கிறது. எப்பொழுதும் பெண்கள் பின் அலையும் காதலனை எந்த பெண் பொறுத்துக்கொள்வாள்? அதுவும் தவிர வினய்,சதா காதலுக்கும் வினய் தனுஜா காதலுக்கும் சரியான காரணங்கள் தெளிவாக சொல்லப்படவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது. தவிரவும் படங்களில் பல காட்சிகள் 'கல் ஹோ நா ஹோ' என்ற இந்தி படத்தை நினைவுப்படுத்துகின்றன :) ஆனால் ஒரு முறை பார்க்கலாம் :)

வேதா said...

உங்க வலைப்பக்கத்தில் தமிழில் மாற்று என்ற பெட்டகம் வைத்திருக்கிறீர்களே அதை எப்படி வடிவமைக்கவேண்டும்?:)

SathyaPriyan said...

//
வேதா said...
என்னுடைய கருத்தும் அருணின் கருத்தை தான் ஒத்திருக்கிறது. எப்பொழுதும் பெண்கள் பின் அலையும் காதலனை எந்த பெண் பொறுத்துக்கொள்வாள்?
//
நான் வினயின் செயல்களுக்கு சப்பைகட்டு கட்டவில்லை வேதா. இன்னும் சொல்லப் போனால் சதாவை நினைத்து வருந்தியதால் தான் இந்த பதிவே. சதாவின் possessiveness தவறு இல்லை என்று தான் சொல்லி இருக்கிறேன்.

//
அதுவும் தவிர வினய்,சதா காதலுக்கும் வினய் தனுஜா காதலுக்கும் சரியான காரணங்கள் தெளிவாக சொல்லப்படவில்லை என்றே எனக்கு தோன்றுகிறது.
//
படம் எனக்கு மிகவும் பிடிக்க காரணம் பல சம்பவங்கள் என்னால் முன்னரே நேரில் இருந்து பார்க்கப் பட்டவை. I felt nostalgic. :-)

//
தவிரவும் படங்களில் பல காட்சிகள் 'கல் ஹோ நா ஹோ' என்ற இந்தி படத்தை நினைவுப்படுத்துகின்றன
//
I remember seeing that movie back to back in Oorvasi theatre, Bangalore when it got released.

//
வேதா said...
உங்க வலைப்பக்கத்தில் தமிழில் மாற்று என்ற பெட்டகம் வைத்திருக்கிறீர்களே அதை எப்படி வடிவமைக்கவேண்டும்?:)
//
உங்கள் மின்னஞ்சல் முகவரியை பின்னூட்டமாக தர முடியுமா? மின்னஞ்சல் செய்கிறேன்.

முதல் முறை வருகிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

SathyaPriyan said...

Veda's comments after editing.

At Friday, May 18, 2007 10:46:00 PM, வேதா said...
/சதாவின் possessiveness தவறு இல்லை என்று தான் சொல்லி இருக்கிறேன்./
yeah satya i agree with that :)
my mail id is '***EDITED BY SATHYAPRIYAN***' and thanks :)

மணி ப்ரகாஷ் said...

nan innun padam pakkala,,,pathuthu vanthu karuthu solrenn..

aamae inimel nan karuthu solli yar ketka pora.. ???????

மு.கார்த்திகேயன் said...

//அவர்களுக்கு இடையே நிகழும் நிகழ்வுகள் அனைத்தும் என்னால் வேறொரு சந்தர்பத்தில் அருகில் இருந்து பார்க்கப்பட்டவை.//

சில சமயங்கள் நான் சில சந்தர்ப்பங்களை அனுபவித்தும் இருக்கின்றேன் சத்யா..

மு.கார்த்திகேயன் said...

//உள்ளம் கேட்குமே இறுதிக் காட்சியில் பூஜாவுடன் ஷ்யாம் இணையும் பொழுது என்னை அறியாமல் ஒரு பெரு மூச்சு வந்தது உண்மை.//

சத்யா..லைலாவுடன் தானே ஷ்யாம் ஒன்று சேருவார் படத்தில்

மு.கார்த்திகேயன் said...

//அதற்கு மனமே ஒவ்வொரு நண்பர்களாக அடையாளமும் காட்டியது. //

உண்மை தான் சத்யா..

இன்னும் படத்தை பார்க்கவில்லை சத்யா.. பார்த்துவிட்டு சொல்கிறேன்..

SathyaPriyan said...

//
வேதா said...
yeah satya i agree with that :)
//
நன்றி வேதா. தங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டேன்.

//
மணி ப்ரகாஷ் said...
nan innun padam pakkala,,,pathuthu vanthu karuthu solrenn..

aamae inimel nan karuthu solli yar ketka pora.. ???????
//
பார்த்துட்டு திட்டாதீங்க. :-)

//
மு.கார்த்திகேயன் said...

சில சமயங்கள் நான் சில சந்தர்ப்பங்களை அனுபவித்தும் இருக்கின்றேன் சத்யா..
//
அவ்வாறு இருக்கும் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

//
சத்யா..லைலாவுடன் தானே ஷ்யாம் ஒன்று சேருவார் படத்தில்
//
படத்தில் ஷ்யாமின் பெயர் ஷ்யாம் தான் மு.கா. லைலாவின் பெயர் பூஜா. அசின் பெயர் ப்ரியா. ஆர்யாவின் பெயர் இமான். பூஜாவின் பெயர் ஐரின்.

கதா பாத்திரங்களின் பெயரை தான் குறிப்பிட்டேன்.

//
இன்னும் படத்தை பார்க்கவில்லை சத்யா.. பார்த்துவிட்டு சொல்கிறேன்..
//
மணிக்கு சொன்னதே தான் உங்களுக்கும் மு.கா. பார்த்துட்டு திட்டாதீங்க.

தம்பி said...

sethu -Rathnavelu
kathal - vijay milton
pithamakan - balasubramaniyam
paruthi veeran - Ramji

SathyaPriyan said...

என்ன சொல்லி இருக்கிறீர்கள் என்பது புரிகிறது தம்பி. ஆனால் இந்த ஒளிப்பதிவாளர்கள் பட்டியலின் உட்கருத்து என்ன என்று புரியவில்லையே?

மன்னிக்கவும் நம்ம புத்தி வாழமட்டை மாதிரி.

முதல் முறை வருகிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

Kumiththa said...

I like the movie too...As you said the story is not new but Jeeva made it in a new and innovative way...

It is really sad that Jeeva is not with us anymore. I will definetly miss his movies.