இரண்டாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1965)
சீனாவிற்கு எதிரான போரில் இந்தியாவின் படு தோல்வியினால் உற்சாகம் அடைந்த பாகிஸ்தானியர்கள் இந்தியா மீது மீண்டும் போர் தொடுக்க முயற்சி செய்தனர். அதன் ஆரம்பமாக 1965 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் "Rann Of Kutch" பகுதியில் சுமார் 3500 சதுர மைல்கள் தனது எல்லையில் வருகிறது என்று பாகிஸ்தான் அறிவித்தது. அதைத் தொடர்ந்து எல்லை பாதுகாப்பு படையினர்களுகிடையே நடந்த சண்டையில் பாகிஸ்தானியர்கள் கை ஓங்கியது. இதனால் எல்லாம் இந்தியர்களை குறைத்து மதிப்பிட்ட பாகிஸ்தானியர்கள் "Operation Gibraltar" என்ற திட்டத்தினை செயல்படுத்தினர்.
அத்திட்டத்தின் படி அதே ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆயுதம் தாங்கிய சுமார் 600 பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுறுவினர். அந்த ஊடுறுவலை தடுக்க, ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதலை அறிவித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் இரண்டாவது போர் தொடங்கியது.
போர் தொடங்கிய முதல் இரு வாரங்களில் இரு நாடுகளும் சம நிலையிலேயே இருந்தன. இந்தியாவை சேர்ந்த Tithwal, Uri மற்றும் Punch பகுதிகளை பாகிஸ்தானும், POK பகுதியில் மூன்று முக்கியமான இராணுவத் தளங்களை இந்தியாவும் கைபற்றின. மேலும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி ஜம்முவை சேர்ந்த Akhnoor பகுதியை நோக்கி பாகிஸ்தான் முன்னேறியது. பாகிஸ்தானியர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாமல் போகவே, இந்திய விமானப் படையினர் உதவிக்கு அழைக்கப்பட்டனர். உடனே பாகிஸ்தானியர்களும் தங்கள் விமானப் படையை போரில் ஈடுபடுத்தினர். ஆனாலும் இந்திய விமானப் படையின் தாக்குதலினால் பாகிஸ்தானியர் Akhnoor பகுதியை கைப்பற்ற முடியாமல் திரும்பினர்.
அதன் பிறகு வேறு வழி இல்லாமல் இந்தியப் படையினர் சர்வதேச எல்லையை செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி கடந்தனர். இரண்டாம் உலகப் போரில் ஈடுபட்ட மேஜர் ஜெனரல் பிரஸாத் தலைமையில் ஒரு சிறு படையினர் Ichhogil கால்வாயின் வடக்கு கரையில் பாகிஸ்தானியர்களை முறியடித்தனர். அதன் பிறகு Barki மற்றும் Batapore பகுதிகளையும் கைப்பற்றினர். லாகூருக்கு மிக சமீபத்திய பகுதிகளை கைப்பற்றியதால் அவர்கள் லாகூர் சர்வதேச விமான நிலையத்தையும் கைபற்றி தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. அந்நிலையில் அமெரிக்கா லாகூர் மக்கள் தங்கள் இருப்பிடத்தை காலி செய்யும் வரை அவகாசம் அளிக்குமாறு இந்தியாவை வேண்டியது. இந்தியாவும் அதற்கு ஒப்புதல் அளித்தது.
அதே நாளில் பாகிஸ்தான விமானப் படையினர் Pathankot பகுதியில் நடத்திய வான் வழி தாக்குதலில் சுமார் 10 இந்திய விமானங்கள் தகர்க்கப்பட்டன. அதே போன்றதொரு தாக்குதலை Halwara பகுதியிலும் நடத்த முயன்று தோல்வி அடைந்தன. பாகிஸ்தான விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பின்னர் செப்டம்பர் மாதம் 10 ஆம் தேதி Beas நதியைக் கடந்து இந்தியாவில் Amristar பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான பீரங்கிப் படையினர் முயன்றனர். ஆனால் அவர்களால் எல்லையில் உள்ள Khemkaran பகுதி வரை மட்டுமே வர முடிந்தது. இந்தியப் படையினர் சுற்றி வளைத்ததால் சுமார் 100 Patton Tanks எனப்படும் அமெரிக்கா அளித்த பீரங்கிகளை விட்டு விட்டு அவர்கள் ஓட நேர்ந்தது.
அதுவரை இப்போரினால் இந்தியத்தரப்பில் 3000 உயிரிழப்புக்களும், பாகிஸ்தான் தரப்பில் 3800 உயிரிழப்புக்களும் நேர்ந்தன. மேலும் பாகிஸ்தானின் சுமார் 20 விமானங்கள் மற்றும் 200 பீரங்கிகள் தகர்க்கப்பட்டன. பாகிஸ்தான் வட பகுதியில் சுமார் 210 சதுர மைல்கள் இந்தியப் பகுதிகளையும், இந்தியா சுமார் 810 சதுர மைல்கள் பாகிஸ்தானிய பகுதிகளையும் கைப்பற்றின.
அந்நிலையில் செப்டம்பர் மாதம் 22 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை இரு நாடுகளையும் நிபந்தனையற்ற போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டது. அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இந்தியப் பிரதமர் ஷாஸ்த்திரி அவர்களும், பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் அவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இருநாடுகளும் தங்கள் படையினரை தங்கள் எல்லைப் பகுதிக்கே திரும்பபெற முடிவு செய்தனர்.
புயலுக்கு பின் அமைதி என்பது போல போர் முடிந்த அடுத்த 6 ஆண்டுகளுக்கு அமைதி நிலவியது. அந்த 6 ஆண்டுகளில் கையெழுத்தான அமைதி ஒப்பந்தத்தை பாகிஸ்தான் 585 முறை மீறியது என்று இந்தியாவும், இந்தியா 450 முறை மீறியது என்று பாகிஸ்தானும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். ஆனாலும் அத்தகைய சிறு சிறு சலசலப்புகளைத் தவிர எல்லைப் பகுதி அமைதியாகவே இருந்தது 1971 வரை.
இன்னும் வரும்...
7 Comments:
சூப்பர்!!
நீங்க முடிக்கற விதமே அடுத்த பதிவு எப்போ வரும்னு ஆவலை தூன்டுது!!
நிறைய ஆராய்ச்சி எல்லாம் பண்ணி,சுருக்கமா அழகா எழுதி இருக்கீங்க!!
வாழ்த்துக்கள்!! :-)
// அதன் தொடர்ச்சியாக ரஷ்யாவில் இந்தியப் பிரதமர் ஷாஸ்த்திரி அவர்களும், பாகிஸ்தான் அதிபர் அயூப் கான் அவர்களும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்//
திறைமறைவில் இந்தியா வின் "Iron Lady" பதவிக்கு வந்ததை மற்ந்து விட்டீர்கள்.
அடுத்த பகுதியின் நாயகி ஆயிற்றே...
//
CVR said...
நீங்க முடிக்கற விதமே அடுத்த பதிவு எப்போ வரும்னு ஆவலை தூன்டுது!!
//
நன்றி தலைவா.
//
Cheran Parvai said...
திறைமறைவில் இந்தியா வின் "Iron Lady" பதவிக்கு வந்ததை மற்ந்து விட்டீர்கள்.
அடுத்த பகுதியின் நாயகி ஆயிற்றே...
//
உண்மை ஆனாலும் அவருக்கும் இந்த போருக்கும் எந்த தொடர்பும் இல்லை. 1965 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளிவந்த டைம் பத்திரிக்கை "New war in Asia between Pakistan's Ayub and India's Shastri" என்று தான் விவரிக்கிறது. அதன் அட்டைப் படம் Copyrighted என்பதால் வெளியிடவில்லை.
an unbiased report...i am surprised.
//
பிரபு ராஜதுரை said...
an unbiased report
//
Thank you.
//
i am surprised.
//
Most of the events have been recorded in India's official war history. India is always known for the courageous acceptance of her failures.
Please do visit often.
நன்றாக போகிறது தொடர்....இந்தியர்கள் எப்போதுமே அமைதி விரும்பிகள் என்று நிரூபிக்கறது தொடர்.....
//
Radha Sriram said...
நன்றாக போகிறது தொடர்....இந்தியர்கள் எப்போதுமே அமைதி விரும்பிகள் என்று நிரூபிக்கறது தொடர்.....
//
நன்றி Radha.
Post a Comment