Sunday, May 06, 2007


8. இந்தியப் போர்கள் - இறுதிப் பகுதி

சியாச்சின் போர் (1982)


சியாச்சின் பனிமலை பிரதேசம் உலகில் துருவப் பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் உள்ளவைகளில் இரண்டாவது மிகவும் நீளமான பனிமலை பிரதேசம். அது நூப்ரா மற்றும் ஷையோக் நதிகளால் உருவானது. ஷையோக் நதியிலிருந்து உருகும் பனியினால் ஆன நீர் தான் சிந்து நதியின் மூலமாக இருக்கிறது. அங்கு குளிர் காலங்களில் -50 டிக்ரீ செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும். அதனால் அப்பகுதியில் எல்லை பாதுகாப்பு என்பது மிகவும் கடினமான ஒன்று. இதை பயன்படுத்தி பாகிஸ்தான் அந்த பகுதியை தனது என கூறியது. அத்தகைய புகழ் பெற்ற பகுதியில் உள்ள பனிமலை சிகரங்களில் பல மலையேற்ற வீரர்கள் ஏறுவதற்கு பாகிஸ்தான் அரசினை அனுமதி கேட்டனர். அரசும் அவர்களுக்கு அனுமதி அளித்தது. அவர்களும் பாகிஸ்தானின் அனுமதியுடன் அந்த பகுதிக்கு வந்து மலை ஏற முயன்றனர். அதே நிலை தொடர்ந்ததால் மெல்ல மெல்ல அப்பகுதி முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டது பாகிஸ்தான். அமெரிக்காவின் உதவியுடன் தனது தேசிய வரை படத்தையும் திருத்தி வெளியிட்டுக் கொண்டது.

இதனை அறிந்த இந்திய அரசு, 1984 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி "Operation Meghdoot" என்ற திட்டத்தினை செயல்படுத்தியது. அதன்படி, கலோனல் N. குமார் அவர்களின் தலைமையில் ஒரு பட்டாளத்தை அனுப்பி அப்பகுதியில் இருந்த பாகிஸ்தானியர்களை முழுவதுமாக விரட்டி, அப்பகுதியில் முழு பாதுகாப்பிற்கு வித்திட்டது. அப்பகுதியை சேர்ந்த 900 சதுர மைல்கள் முழுவதுமாக இந்தியா வசம் மீண்டும் வந்தது.
நான் முன்னரே குறிப்பிட்ட தட்ப வெட்ப நிலை காரணமாக அப்பகுதியில் ஒருவரால் தொடர்ந்து பணியாற்ற இயலாதாகையால் வீரர்கள் சுழற்சி முறையில் அங்கு பணியாற்றுகிறார்கள். அப்பகுதியில் காவலில் இருக்கும் பொழுது நமது வீரர்கள் தட்ப வெட்பம் காரணமாகவோ இல்லை எதிரிகளின் தாக்குதல்களிலோ இறந்தால் அவர்களின் சடலங்களுக்கு அங்கேயே வீர மரியாதை அளிக்கப்பட்டு எரியூட்டப்படுகிறது. ஏனென்றால் அங்கிருந்து அவர்களின் சடலங்களை எடுத்து செல்வது கடினம். இவ்வளவு கஷ்டங்கள் இருந்தாலும், இன்றும் அப்பகுதியில் பணியாற்றுவதை நமது வீரர்கள் மிகப் பெரும் கவுரவமாக கருதுகிறார்கள். சர்ச்சைக்குறிய அப்பகுதியை பார்வையிட சென்ற முதல் இந்திய பிரதமர் மன்மோஹன் சிங் அவர்கள், முதல் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள். அப்பகுதியினை மீண்டும் மீட்க பாகிஸ்தான் 1990, 1995, 1996 மற்றும் 1999 (லாகூர் ஒப்பந்தத்திற்கு முன்னர்) ஆம் ஆண்டுகளில் நடத்திய தாக்குதல்கள் அனைத்தும் முறியடிக்கப்பட்டன.கார்கில் போர் (1999)


சியாச்சின் பனிமலை பிரதேசத்தை இந்தியா மீண்டும் அடைந்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பாகிஸ்தான் நடத்தியது தான் கார்கில் ஊடுறுவல். கார்கில் போரினை பற்றி பார்ப்பதற்கு முன் அப்பகுதியின் முக்கியத்துவத்தை பார்க்கலாம். கார்கில் பகுதி காஷ்மீரில் இந்திய பாகிஸ்தான் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்தியப் பகுதி. அதனால் எல்லையை கடந்து அப்பகுதிக்கு செல்வது எளிது. ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் சாலை கார்கில் வழியாகத்தான் செல்கிறது. அதனால் அப்பகுதியை கைப்பற்றினால் ஸ்ரீ நகரை எளிதாக மற்ற பகுதிகளில் இருந்து துண்டித்து விட முடியும். மேற்கூறிய காரணங்களினால் சர்வதேச எல்லையை தாண்டி ஊடுறுவி கார்கில் பகுதியை ஆக்கிரமிக்க முடிவு செய்தது பாகிஸ்தான் இராணுவம்.


அணுகுண்டு சோதனைகளால் சீர் கெட்டிருந்த இரு நாட்டு உறவை புதுப்பிக்கும் நல்லெண்ணத்துடன் வாஜ்பாய் கையெழுத்திட்ட லாகூர் ஒப்பந்தத்தை காற்றில் பறக்க விட்டு முன்னால் புன்னகையுடன் கை குலுக்கி பின்னால் கொலை வெறியுடன் முதுகில் குத்தும் ஈன செயலை கார்கிலில் செய்தது பாகிஸ்தான். அப்பொழுது இராணுவ தலைமையில் இருந்த முஷாரஃப் அவர்களின் திட்டப்படி ஆயுதம் தாங்கிய சுமார் 5000 பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்குள் 1999 ஆம் ஆண்டு மே மாதம் ஊடுறுவினர். அவர்களுடன் காஷ்மீர் தீவிரவாத குழுக்களை சேர்ந்த சுமார் 1000 தீவிரவாதிகளும் இணைந்தனர். நான் முன்னரே குறிப்பிட்ட ஸ்ரீ நகர் மற்றும் லடாக் பகுதிகளை இணைக்கும் NH-1A சாலையை ஒட்டியுள்ள மலை சிகரங்கள் பலவற்றை அவர்கள் கைப்பற்றினர். அதனால் அந்த சாலையில் பல பகுதிகள் முழுவதுமாக அவர்கள் கட்டுப்பாட்டில் வந்தது.

இதனை அறிந்த இந்தியப் படையினர் அங்கு விரைந்தனர். "Operation Vijay" என்ற அவர்களின் திட்டப்படி முதலில் அந்த சாலையை மீட்க முனைந்தனர். ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை. அப்பகுதி முழுவதும் பாகிஸ்தானியர்கள் கண்ணிவெடிகளை புதைத்திருந்தனர். இந்தியர்கள் முதலில் அவைகளை கண்டுபிடித்து நீக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 9000 கண்ணிவெடிகள் அப்புரப்படுத்தப் பட்டன. பாகிஸ்தானியர்கள் வசம் இருந்த ஒவ்வொரு சிகரமாக மீண்டும் கைப்பற்றி அந்த சாலையை மீண்டும் இந்திய கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
அதன் பிறகு ஊடுறுவிய பாகிஸ்தானியர்களை முழுவதுமாக எல்லைப் பகுதியில் இருந்து துரத்த அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் 1965 ஆம் ஆண்டு நிகழ்ந்ததைப் போன்று சர்வதேச எல்லையை இம்முறை எக்காரணம் கொண்டும் கடக்க கூடாது என்று முடிவு செய்யப் பட்டது. இந்திய விமான படையினர் வான் வழி தாக்குதலை தொடங்கினர். அதே நேரத்தில் இந்திய பீரங்கி படையினர் போஃபர்ஸ் மற்றும் ஹோவிட்ஸர் பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தானியர் வசம் இருந்த தளங்கள் ஒவ்வொன்றாக மீட்கத் தொடங்கினர்.சர்வதேச எல்லையை கடக்க கூடாது என்று முடிவு செய்தமையால் அவர்களை சுற்றி வளைப்பது இயலாமல் போனது. தாக்குதலினால் அவர்களை பின்வாங்க செய்வதே அவர்களை விரட்ட ஒரே வழியாகவும் இருந்தது. அதற்கு பெரிதும் உதவின இந்திய பீரங்கிகள். ஒரு சில தளங்களை எளிதாகவும், வேறு சிலவற்றை போராடியும் மீட்க வேண்டி இருந்தது. உதாரணத்திற்கு Tiger Hill என்ற மலை சிகரத்தை கடினமான போராட்டத்தின் பின்னரே இந்தியர்களால் அடைய முடிந்தது.அதன் தொடர்ச்சியாக நடந்த சண்டையில் இந்தியா மூன்று விமானங்களை இழந்தது. MiG-27 விமானம் இயந்திரப்ப கோளாரினால் கீழே விழுந்து நொறுங்கியது. MiG-21, Mi-8 ஆகிய விமானங்கள் பாகிஸ்தனியர்களால் சுட்டு வீழ்த்தப் பட்டன. இந்திய வான் எல்லைக்குட்பட்ட பகுதியில் பறந்து கொண்டிருந்த அந்த விமானங்களை அவர்கள் சுட்டது மிகவும் கேவலமான செயலாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினர் காராச்சி துறைமுகத்தை சுற்றி வளைத்து அதனை மற்ற கடல் பகுதிகளில் இருந்து துண்டித்தனர். இதுவும் இந்திய கடல் எல்லைப் பகுதியில் வைத்தே நடைபெற்றது.இந்தியர்கள் சுமார் 80 சதவிகித பகுதிகளை மீட்டெடுத்த நேரம், இன்னும் 6 நாள் போருக்கு தேவையான தளவாடங்களே பாகிஸ்தானியர்கள் வசம் இருந்தது. இதனால் பாகிஸ்தானியர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்த தீட்டிய திட்டம் அமெரிக்க உளவுத்துறையினரால் கண்டு பிடிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து கிளின்டன் கடுமையான எச்சரிக்கை ஒன்றை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் அவர்களுக்கு விடுத்தார். அந்த எச்சரிக்கையினால் வேறு வழி இல்லாமல் தனது படையினரை இந்தியப் பகுதிகளில் இருந்து திரும்ப அழைத்துக் கொண்டார் ஷெரிஃப்.ஷெரிஃப் அவர்களின் இந்த முடிவு பாகிஸ்தான் இராணுவத்தினரிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இராணுவ தலைவரான முஷாரஃப், ஷெரிஃப் அவர்களை பதவியிலிருந்து இறக்கி இராணுவ ஆட்சி அமைக்க வித்திட்டதும் இதுவே.பாகிஸ்தான் இராணுவத்தினர் வெளியேறினாலும், அவர்களுடன் சேர்ந்து ஊடுறுவிய United Jihad Council என்ற தீவிரவாதக் குழு வெளியேற மறுத்து போரை தொடர்ந்தது. அவர்கள் மீது இந்தியர்கள் நடத்திய தாக்குதலினால் ஒரே வாரத்தில் அவர்கள் முழுவதுமாக ஒழிக்கப் பட்டனர்.அதைத் தொடர்ந்து 1999 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 26 ஆம் தேதி 527 இந்திய உயிர்களையும், சுமார் 4000 பாகிஸ்தானிய உயிர்களையும் குடித்த பிறகு ஒரு வழியாக கார்கில் போர் முடிவிற்கு வந்தது. அப்பொழுது பாகிஸ்தான் ஊடுறுவிய இந்திய பகுதிகளில் இந்திய இராணுவ வீரர்கள் ஐவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே முகங்களில் இருந்து கண்கள் நோண்டி எடுக்கப்பட்டு பல வித சித்தரவதைகள் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பது மருத்துவ ஆய்வில் வெளியானது. போரில் சிறைக் கைதிகளை கண்ணியமாக நடத்த தவறிய பாகிஸ்தானின் செயல் உலக நாடுகளால் கண்டிக்கப்பட்டது. இந்தியப் பிரதமரின் லாகூர் நல்லினக்கப் பயனத்தையும், அவர் இந்திய பாகிஸ்தான் பேரூந்து போக்குவரத்து தொடங்கியதையும் மீறி சர்வதேச எல்லையை கடந்த பாகிஸ்தானியர்களின் செயல் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை கெடுத்தது. இதைப் பற்றி அமெரிக்க அதிபர் கிளின்டன் தனது சுயசரிதையில் "Sharif’s moves were perplexing" என்கிறார். ஒரு வேளை சர்வதேச எல்லையை கடப்பது என்று நாம் முடிவு செய்திருந்தால் இந்தியத் தரப்பில் நேர்ந்த உயிரிழப்புகளை வெகுவாக குறைத்திருக்கலாம். ஆனாலும் அந்த முடிவினால் அணுகுண்டு சோதனையின் பிறகு நாம் இழந்திருந்த வல்லரசு நாடுகளின் நன்மதிப்பை மீண்டும் பெற்றது இந்தியா. இதுவே இந்தியா சந்தித்த கடைசி போர் ஆகும். அதன் பிறகு அதிர்ஷ்டவசமாக இந்தியா எந்தவிதமானதொரு பெரிய போரையும் சந்திக்கவில்லை.
நண்பர்களே! போர் ஓய்ந்து விட்டாலும் முழூ அமைதி எல்லை பகுதிகளில் நிலவவில்லை. ஆங்காங்கே பல சலசலப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. எல்லை தாண்டிய பயங்கர வாதமும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இனி இது தொடர வேண்டாம். இதுவே இறுதியாக இருக்கட்டும். கார்கிலில் நடந்த போரே இந்தியா சந்தித்த இறுதிப் போராக இருக்கட்டும். பணி படர்ந்த அக்ஸாய் சின், சியாச்சின் பகுதிகளில் காவலில் இருக்கும் நமது இராணுவ வீரனை நினைத்து பாருங்கள். உயிருக்கு உத்திரவாதம் இல்லாத அவனது வாழ்வை நினைத்து பாருங்கள். இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் அவனது மனைவியை நினைத்து பாருங்கள். அவன் இறந்தால் அவனது உடலை கூட பார்க்க உத்திரவாதம் இல்லாத அவனது குடும்பத்தினரின் நிலையை நினைத்து பாருங்கள். தனது ஒப்பந்தம் முடிந்து வந்தால் அவனுக்கு காத்திருக்கும் செக்யூரிட்டி வேலையிலோ இல்லை காண்ஸ்டபிள் வேலையிலோ காலம் தள்ள வேண்டிய அவனது சூழ்நிலையை நினைத்து பாருங்கள். போரில் மட்டும் இல்லாமல் தினமும் நடக்கும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திலிருந்து மக்களை காப்பாற்றுவதிலும் அவன் தான் முதன்மையில் நிற்கிறான். மேலும் இயற்கை சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் இராணுவ வீரனின் உதவி மகத்தானது. இத்தகையவனுக்கும் அவனது வாரிசுகளுக்கும் இட ஒதுக்கீடு கேட்க இங்கே யாரும் இல்லை. அவன் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்து இட ஒதுக்கீடு கேட்கப் போவதும் இல்லை. அவனால் கொல்லப்பட்ட தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வரும் மனித உரிமை காப்பாளர்கள் தீவிரவாதியினால் அவன் கொல்லப்படும் போது வருவதில்லை. அந்த மனித உரிமை காப்பாளர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் கூட அவன் தான் காப்பாற்றுகிறான். அவன் தனது உயிரை பனையம் வைத்து தமக்கு அளிக்கும் பாதுகாப்பினை முழுவதுமாக அனுபவித்துக் கொண்டே இந்திய இறையாண்மைக்கு எதிராக சுலபமாக ஒரு சிலரால் செயல்பட முடிகிறது. அவன் அளிக்கும் அதே பாதுகாப்பினை அனுபவிக்கும் மற்றவர்கள் கை கட்டி, கண் மூடி, வாய் பொத்தி, செவி அடைத்து காந்தியின் குரங்குகளாக வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.


வாழ்க சமூக நீதி. வளர்க பாரதம்.


முற்றும்!


முடிவுரை: இத்தொடரை தொடர்ந்து படித்து வரும் வலையுலக அன்பு நெஞ்சங்கள் இந்நாட்டுக்காகவும், இந்நாட்டு மக்களுக்காகவும் தங்களது உயிரை தியாகம் செய்த நமது இராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் செய்ய விருப்பப்பட்டால் "Army Central Welfare Fund" என்ற பெயருக்கு வங்கி காசோலை எடுத்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலதிக தகவல்களுக்கு "Army Central Welfare Fund" என்று கூகிளாண்டவரிடம் முறையிடுங்கள்.


Army Central Welfare Fund,
Deputy Director (CW-8),
Adjutant General's Branch, Army Headquarters,
West Block-III, RK Puram,
New Delhi 110 066,
India


இத்தொடர் கட்டுரை அமைய உதவிய தளங்கள்:25 Comments:

Billa said...

மிக நேர்த்தியான சிந்தனையை தூண்டும் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் சத்யா!!!

SathyaPriyan said...

//
Billa said...
மிக நேர்த்தியான சிந்தனையை தூண்டும் பதிவு. தொடர்ந்து எழுதுங்கள் சத்யா!!!
//
மிக்க நன்றி Billa. பதிவின் முக்கியமான நோக்கங்களில் இதுவும் ஒன்று. நமது வீரர்களுக்கு நாம் உதவவில்லை என்றால் வேறு யார் செய்வார்கள்?

CVR said...

அட்டகாசமான தொடர்!!
தொடரின் ஒவ்வொரு பகுதியின் கடைசியிலும் அடுத்த பகுதி எப்பொழுது பதிவிடப்படும் என தாங்க முடியாத ஆவலை கிளப்பிவிட்டது.
இந்த தொடரை எழுத நீங்கள் போட்ட உழைப்பும் ஆராய்ச்சியும் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடிய வில்லை.
மேலும் இது போன்ற மிகச்சிறந்த பதிவுகள் பலவும் எழுதி எங்களை மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :-))

சிங்கம்லே ACE !! said...

அருமையான பதிவு, சத்யப்ரியன்.. வாழ்த்துக்கள்...

//அப்பொழுது இராணுவ தலைமையில் இருந்த முஷாரஃப் அவர்களின் திட்டப்படி ஆயுதம் தாங்கிய சுமார் 5000 பாகிஸ்தானியர்கள் இந்திய எல்லைக்குள் 1999 ஆம் ஆண்டு மே மாதம் ஊடுறுவினர்//

முஷாரஃப் என்னும் மூடனின் செயலை குறை சொல்வதுடன், நமது நாட்டின் ஒற்றர் படையின் (RAW) சுறுசுறுப்பின்மையும் இதற்கு ஒரு காரணம்.

//சர்வதேச எல்லையை இம்முறை எக்காரனம் கொண்டும் கடக்க கூடாது என்று முடிவு செய்யப் பட்டது//

இந்த தேவையில்லாத முடிவால், பல இந்தியர்கள் உயிர் இழந்ந்தது தான் மிச்சம்.. சர்வதேச நாடுகள், ஆகா இந்தியா செய்தது மிகவும் நன்று என்று ஒன்றிர்கும் உதவாத சான்றிதழ் கொடுத்தது தான் மிச்சம் :( :( பாகிஸ்தானை அனைவரும் கண்டனம் செய்தனர்.. அவ்வளவு தான்...

அதற்கு, LOC கடந்து சென்று, போரினை சீக்கிரமே முடித்து, இந்திய உயிர்களையும், பொருள் விரயத்தையும் தவிர்த்திருக்கலாம்.. என்ன, அவ்வாறு செய்திருந்தால், மற்ற நாடுகள், இந்தியா LOC கடந்து விட்டது என்று கூப்பாடு போடுவார்கள்.. போகட்டும் என்று விட்டிருக்க வேண்டும்..


இதை எல்லாம் விட கொடுமை, முஷாரப் இந்த கீழ்தரமான செயலை, பெருமையுடன், புத்தகமாய், போட்டிருப்பது.. :( :(

சிங்கம்லே ACE !! said...

//அவர்கள் உயிருடன் இருக்கும் பொழுதே முகங்களில் இருந்து கண்கள் நோண்டி எடுக்கப்பட்டு பல வித சித்தரவதைகள் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்கள் என்பது மருத்துவ ஆய்வில் வெளியானது//

இதையே சில ஆண்டுகளுக்கு முன் வங்காளதேசமும் செய்தது.. வெளியுறவு துறை மூலம், கண்டனமும் தெரிவிக்க பெற்றது.. :( :(


உங்களின் விறுவிறுப்பான தொடர், முடிவுக்கு வந்தது வருத்தமே.. ஆயினும் இனி போர் எதுவும் இல்லை என்பதில் சற்றே நிம்மதி.. :) :)

இனி இந்தியா எந்த போரையும் சந்திக்காது என்று நம்புவோம்.. :) :)

SathyaPriyan said...

//
CVR said...
அட்டகாசமான தொடர்!!
தொடரின் ஒவ்வொரு பகுதியின் கடைசியிலும் அடுத்த பகுதி எப்பொழுது பதிவிடப்படும் என தாங்க முடியாத ஆவலை கிளப்பிவிட்டது.
இந்த தொடரை எழுத நீங்கள் போட்ட உழைப்பும் ஆராய்ச்சியும் என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடிய வில்லை.
மேலும் இது போன்ற மிகச்சிறந்த பதிவுகள் பலவும் எழுதி எங்களை மகிழ்விக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்!!! :-))
//
தங்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது CVR. அனைத்து பகுதிகளுக்கும் தவறாமல் வந்து தந்த ஆதரவிற்கு நன்றி நன்றி நன்றி.

//
சிங்கம்லே ACE !! said...
அருமையான பதிவு, சத்யப்ரியன்.. வாழ்த்துக்கள்...
//
மிக்க நன்றி ACE.

தங்களது கருத்துக்கள் அனைத்துடனும் 1000 (No Typo) சதவிகிதம் ஒத்துப்போகிறேன்.

//
உங்களின் விறுவிறுப்பான தொடர், முடிவுக்கு வந்தது வருத்தமே.. ஆயினும் இனி போர் எதுவும் இல்லை என்பதில் சற்றே நிம்மதி.. :) :)
//
மீண்டும் நன்றி.

Cheran Parvai said...

நல்ல தொடர் சத்யா...சிங்கம்லே ACE !! சொன்னது போல சரியான கருத்துக்கள், நல்ல பெயர் வைத்துக் கொண்டு ஒன்றும் செய்ய முடியாது.
Israel இராணுவம் போல செயல் பட்டிருக்க வேண்டும்.அதற்கு சரியான அரசியல் முதுகெலும்பு??(Political willpower) தேவை.

~சேரன்

கீதா சாம்பசிவம் said...

Kargil waril India adaintha vetriyaik kuda kondada manasu illatha Manmohan singhai paratti irukka vendam. avarukku munnaleye George Fernandez Kargil ponarnu padicha ninaivu. irunthalum verify seyyanum. parkalam. Ellaame romba nalla pathivukal. arumaiyaka cover seythirukinga.

SathyaPriyan said...

//
Cheran Parvai said...
நல்ல தொடர் சத்யா
//
மிக்க நன்றி.

//
கீதா சாம்பசிவம் said...
avarukku munnaleye George Fernandez Kargil ponarnu padicha ninaivu. irunthalum verify seyyanum. parkalam.
//
நான் கார்கில் பகுதியை குறிப்பிடவில்லை, சியாச்சின் பகுதிக்கு முதலில் சென்றதை தான் குறிப்பிட்டேன்.

//
Ellaame romba nalla pathivukal. arumaiyaka cover seythirukinga.
//
மிக்க நன்றி.

jekan said...

இலங்கயில் நடத்திய போர்பற்றி எதுவும் எளுதவில்லை!!!!!.

jekan said...

//இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் அவனது மனைவியை நினைத்து பாருங்கள்//
றொம்ப தப்புங்க

SathyaPriyan said...

//
jekan said...
இலங்கயில் நடத்திய போர்பற்றி எதுவும் எளுதவில்லை!!!!!.
//
நீங்கள் நிஜமாகவே கேட்கிறீர்களா? இல்லை வேடிக்கைக்காக கேட்கிறீர்களா? என்பது தெரியவில்லை. உண்மையில் சுதந்திர இந்தியா இலங்கையுடனோ, இல்லை ஈழ தமிழ் சகோதரர்களுடனோ எந்த யுத்தமும் நிகழ்த்தவில்லை.

நீங்கள் IPKF (Indian Peace Keeping Force) பற்றி குறிப்பிடுகிறீர்கள் என்றால், அது போர் செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டதில்லை. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இந்தியாவால் அனுப்பி வைக்கப்பட்ட குழு. கடைசியில் முன்னாள் பிரதமரின் கொலையில் முடிந்தது. இதைப் பற்றிய விவாதங்களை தயவு செய்து இங்கே தொடர வேண்டாமே.

//
/இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் அவனது மனைவியை நினைத்து பாருங்கள்/
றொம்ப தப்புங்க
//
தங்களின் நகைச்சுவை உணர்வு இதில் வெளிப்படுவது கண்டு வேதனைப்படுகிறேன். நன்றி.

மணி ப்ரகாஷ் said...

சத்யா,

எப்படி சொல்வது.இந்தியனாய் தெரியவேண்டிய விடயங்கள் தெரியாமலே போகின்ற வேளையினில் ,மிகவும் சிரத்தையாய்,நல்ல கோர்வையாய் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த பதிவினாய் கொணர்ந்தமைக்கு முதலில் நன்றி.

மணி ப்ரகாஷ் said...

முதல் பதிவினில்,
//இப்பதிவுகளை "Compilation & Translation" என்ற அளவில் மட்டுமே நோக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். //

இவ்வாறு குறிப்பிட்டு இருந்தீர்கள்.ஆனால் இந்த Compilation and Translation அதற்கு அப்பாலும் சென்று தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.

8 பகுதிகளும் மிகவும் நன்று.

மணி ப்ரகாஷ் said...

8 பகுதிகளில் நீங்கள் நிறைய எழுதி இருந்தாலும்,அந்த பகுதிகளை விட 8 வது பகுதியின் கடைசி பத்தி,நிறைய தாக்கங்களை,நிறைய கேள்விகளை எழுப்புகிறது.ஆம், ஒரு சாதரண பிரஜையாய் இருக்கும் நமக்கு இதை படித்தவுடன் எழுவது ஒரு அரசியல் வாதிகளுக்கு ஏன் வரமறுக்கிறது..?

யுத்தத்தில் பயன்படுத்தும் ஆயுதத்தில் ஊழல்,இராணுவ இரகசியங்களை வெளியிடல்,என் பெயருக்காக ,என் புகழுகுக்காக நாட்டினை போருக்கு கொண்டு செல்லுதல், தீவிரவாதங்களை தன் அரசியல் லாபங்களுக்காக மாற்றிக் கொள்ளுதல்
என எதற்காக,எங்கே மாறுகிறான் அரசியல் வாதி...

இவன் மட்டும் சிந்திக்க தொடங்கிவிட்டால்....?

மணி ப்ரகாஷ் said...

இது பதிவுகளின் நுட்பம் பற்றி

1. தொடருன் இணைத்து இருந்த வரைபடங்களை இன்னும் கொஞ்சம் பெரியதாய் கொடுத்து இருந்து இருக்கலாம்.சில வரைபடங்கள் தெளிவாக தெரியவில்லை.

2.அந்த அந்த போர்க்காலங்களில் இடுபட்டு இருந்த யுத்த தளவாடங்களின் பெயர்களையும் கூடுதலாய் இருந்து இருந்தால் என்ன மாதிரி ஒன்னும் தெரியாத பையன்களுக்கு இன்னும் தெரிந்து இருக்கும்..
அவ்வளவுதான் சத்யா....

நல்ல முயற்சி.வாழ்த்துகள்.

அப்புறம் பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது..
நானும் திருச்சியில் 3 வருடம் அழகாய் ஊர் சுற்றினேன்..

ambi said...

அடடா! நான் இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டேனே! பரவாயில்ல, எல்லாத்தையும் மெதுவா படிக்கிறேன்.

மேலும் ஒரு தகவல்:
ஆப்பரேஷன் விஜய்க்கு நமது விமான படை பயன்படுத்திய விமானத்தின் பெயர் மிராஜ் - 2000. பிரான்ஸிலிருந்து 4 விமானம் வாங்கினோம்.
லேசர் மற்றும் ரிமோட் கைடன்ஸ் மூலமா துல்லியமா இலக்கை தாகி அழிக்க முடியும் 20000 அடி உயரத்தில் பறந்து கொண்டு.

என்னோட மாமா கல்யாணம் ஆகி 20 நாளில் இந்த ஆப்ரேஷன் விஜய்க்கு போனார் கார்கில் பகுதிக்கு. He is a Aeronautical Engineer for this Mirag -2000.
Now he is serving in kanpur. felt nostolgic.

ரொம்ப உணர்ச்சி பூர்வமா எழுதி இருக்கீங்க சத்யா. NSG கமேண்டொஸ் பத்தி எழுதனும்!னு எல்லா தகவல்களும் சேமிச்சு வெச்ருக்கேன். என்ன தமிழில் எழுத டைம் தான் இல்லை. கல்யானம் எல்லாம் வருது. பார்க்கலாம். :)

jekan said...

//
/இந்தியாவின் தென் கோடியில் இருக்கும் அவனது மனைவியை நினைத்து பாருங்கள்/
றொம்ப தப்புங்க
//
தங்களின் நகைச்சுவை உணர்வு இதில் வெளிப்படுவது கண்டு வேதனைப்படுகிறேன். நன்றி.//


தவறு இருந்தால் மன்னிக்கவும், நான் உங்களைப் புண்படுதுவதற்காக எழுதவில்லை

jekan said...

வன்காள தேசப்போரில் பலஆயிரம் பெண்கள் கற்பளிக்கப்பட்டதாக கேள்வி, அது உன்மையா?

Syam said...

//அதன் பிறகு அதிர்ஷ்டவசமாக இந்தியா எந்தவிதமானதொரு பெரிய போரையும் சந்திக்கவில்லை.
//
இனியும் இதே நிலை தொடரும் என்று நம்புவோம்...5,6,7,8 எல்லாம் ஒன்னா படிச்சுட்டேன் சத்யா...நிறைய homework பண்ணி இருக்கீங்க போல இருக்கு...ஒரு சலாம் & டாங்கீஸ் :-)

SathyaPriyan said...

//
மணி ப்ரகாஷ் said...
8 பகுதிகளும் மிகவும் நன்று.
//
மிக்க நன்றி மணி.

//
8 பகுதிகளில் நீங்கள் நிறைய எழுதி இருந்தாலும்,அந்த பகுதிகளை விட 8 வது பகுதியின் கடைசி பத்தி,நிறைய தாக்கங்களை,நிறைய கேள்விகளை எழுப்புகிறது.
//
எனது எண்ணமும் அதுவே.

//
1. தொடருன் இணைத்து இருந்த வரைபடங்களை இன்னும் கொஞ்சம் பெரியதாய் கொடுத்து இருந்து இருக்கலாம்.சில வரைபடங்கள் தெளிவாக தெரியவில்லை.
//
படங்களை சுட்டினால் பெரிதாக தெரிய வேண்டுமே. தெரியவில்லையா?

//
2.அந்த அந்த போர்க்காலங்களில் இடுபட்டு இருந்த யுத்த தளவாடங்களின் பெயர்களையும் கூடுதலாய் இருந்து இருந்தால் என்ன மாதிரி ஒன்னும் தெரியாத பையன்களுக்கு இன்னும் தெரிந்து இருக்கும்..
//
நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன். பின்னர் too much technical ஆகி விடுமோ என்று பயந்து விட்டு விட்டேன்.

//
அப்புறம் பதிவிற்கு சம்பந்தம் இல்லாதது..
நானும் திருச்சியில் 3 வருடம் அழகாய் ஊர் சுற்றினேன்..
//
நீங்கள் திண்டுக்கல் தானே. நம்ம ஊருக்கு பக்கத்தில் தான். கொடைகானல் போகும் போதெல்லாம் வத்தலகுண்டிலோ இல்லை உங்கள் ஊரிலோ தான் சிறிது நேரம் தங்குவோம்.

//
ambi said...
அடடா! நான் இத்தனை நாளா மிஸ் பண்ணிட்டேனே! பரவாயில்ல, எல்லாத்தையும் மெதுவா படிக்கிறேன்.
//
அவசியம் படியுங்கள் ambi. புதிய பல தகவல்களுகு நன்றி. தங்கள் பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

//
கல்யானம் எல்லாம் வருது. பார்க்கலாம். :)
//
Join the club. All the best.

//
jekan said...
தவறு இருந்தால் மன்னிக்கவும், நான் உங்களைப் புண்படுதுவதற்காக எழுதவில்லை
//
நான் தான் தங்களை தவறாக எண்ணி விட்டேன் jekan. மன்னிப்பிற்கு அவசியம் இல்லை. தொடர்ந்து வாருங்கள்.

//
வன்காள தேசப்போரில் பலஆயிரம் பெண்கள் கற்பளிக்கப்பட்டதாக கேள்வி, அது உன்மையா?
//
முக்திபாஹிணி தொன்ற முதற் காரனமே பாகிஸ்தான் இராணுவத்தினரின் அத்தகைய செயல்கள் தான் என்று படித்துள்ளேன். ஆனாலும் நான் செய்திகளை சேகரித்த தளங்க்ளில் அதை பற்றிய தகவல்கள் இல்லை.

நான் சிறுவனாக இருந்த போது இதை மையமாக கொண்டு "அன்பே அகிலா!" என்ற ஒரு கதை படித்திருக்கிறேன். அகிலா என்ற முக்திபாஹிணி படை போராளியின் கதை. அவள் கதையில் கற்பழிக்கப்படுவாள். பின்னர் போராடுவாள்.

//
Syam said...
நிறைய homework பண்ணி இருக்கீங்க போல இருக்கு...ஒரு சலாம் & டாங்கீஸ் :-)
//
நன்றி Syam.

Priya said...

சத்யா, உங்க ப்ளாகுக்கு மட்டும் இல்ல. யார் ப்ளாகுக்குமே கொஞ்ச நாளா வரல. history class கெல்லாம் பயம் இல்ல. நீங்க தான் டெஸ்ட் கிடையாதுனு சொல்லிட்டிங்களே..

முதல் 2 பாகம் படிச்சிட்டேன். முழுக்க படிச்சிட்டு கமெண்டறேன் :)

துளசி கோபால் said...

அருமையான தொடர்.

இந்தமாதிரி சரித்திர சம்பந்தமுள்ளதை எழுத எவ்வளவு
கடின உழைப்பு வேணுமுன்னு எனக்கு நல்லாத் தெரியும்.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

SathyaPriyan said...

//
Priya said...
சத்யா, உங்க ப்ளாகுக்கு மட்டும் இல்ல. யார் ப்ளாகுக்குமே கொஞ்ச நாளா வரல.
//
ஏங்க? ஆணி அதிகமா?

//
முதல் 2 பாகம் படிச்சிட்டேன். முழுக்க படிச்சிட்டு கமெண்டறேன் :)
//
மெதுவா படிச்சுட்டு வாங்க.

//
துளசி கோபால் said...
அருமையான தொடர்.
மனமார்ந்த பாராட்டுக்கள்.
//
மிக்க நன்றி.

Ban said...

padikum pothe kangalil kanner varugirathu ............... sathyapriyanuku mikka nandri .........