Friday, May 04, 2007


7. இந்தியப் போர்கள்

மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் (1971) தொடர்ச்சி...


இருதலை கொள்ளி எறும்பாக இந்திரா தவித்துக் கொண்டிருந்த போது டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் இந்தியா மீது போர் ஒன்றை அறிவித்தார். மேலும் அவரின் திட்டப்படி சுமார் 50 பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவின் விமானத் தளங்கள் மீது சுமார் 180 குண்டுகள் பொழிந்தன. ஓடு தளங்கள் பல தகர்க்கப்பட்டன. ஆனாலும் இதில் இந்திய விமானங்களுக்கு சேதம் ஒன்றும் இல்லை. 1967 ஆம் ஆண்டு இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது இதே போன்றதொரு தாக்குதலை நடத்தி பெரும் வெற்றி பெற்றது. ஆனால் பாகிஸ்தானின் தாக்குதல் அவ்வளவாக பலனளிக்க வில்லை.
இந்தியாவின் மீது போரை பாகிஸ்தான் முதலில் தொடங்கியதால் அமெரிக்காவினால் இனி இந்தியாவை நிர்பந்திக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இந்தியா தனது பதில் தாக்குதலை நடத்த தயாரானது. கிழக்கு பகுதியில் முக்திபாஹிணியுடன் இணைந்து மித்ருபாஹிணியாகவும், மேற்கு பகுதியில் தனியாகவும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது இந்தியா. மேற்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் மற்றும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் போன்ற பல பகுதிகளை இந்தியர்கள் கைப்பற்றினர்.அதே நேரத்தில் இந்திய கப்பல் படையினரால் கராச்சி துறைமுகம் கைப்பற்றப்பட்டது. இந்திய விமானப் படையோ பல பாகிஸ்தான் விமானங்களையும், விமானத் தளங்களையும் தகர்த்தது. கிழக்கு பகுதியிலோ மித்ருபாஹிணி படையினரின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல் பின் வாங்கியது பாகிஸ்தான் இராணுவம். மேற்கு பாகிஸ்தானிற்கும், கிழக்கு பாகிஸ்தானிற்கும் இடையே தொடர்பு முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. போர் இன்னும் நீடித்தால் பாகிஸ்தான் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று அஞ்சிய பாகிஸ்தான் அதிபர் சரணடைவதாக அறிவித்தார்.


அதைத் தொடர்ந்து பங்களாதேஷ் தனி நாடாக உருவானது. இராணுவ அதிபர் யாஹ்யா கான் தனது பதவியை இராஜினாமா செய்தார். அவரை அடுத்து பதவிக்கு வந்த சுல்ஃபிகார் அலி புட்டோ அவர்கள் சிறையிலிருந்த முஜிபுர் ரெஹ்மான் அவர்களை விடுதலை செய்தார். முன்னாள் அதிபர் யாஹ்யா கான் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார்.


இரண்டு வாரங்கள் நடைபெற்ற மூன்றாம் இந்திய - பாகிஸ்தானிய போர் ஒரு வழியாக முடிவிற்கு வந்தது. இப்போரில் 93000 பாகிஸ்தானியர்கள் இந்திய அரசால் சிறை படுத்தப்பட்டனர். அவர்களில் 79676 பேர் இராணுவ வீரர்கள். மேலும் இந்தியா 5500 சதுர மைல்கள் பாகிஸ்தானிய பகுதிகளை கைப்பற்றியது. பாகிஸ்தானின் மொத்த இராணுவத்தில் 50 சதவிகித கப்பல் படையினர்களும், 25 சதவிகித விமானப் படையினர்களும், 30 சதவிகித தரைப்படையினர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இது இரண்டாம் உலகப் போருக்கு பின் வேறு எந்த ஒரு நாட்டிற்கும் கிடைக்காத மிகப் பெரும் வெற்றியாகும்.


ஆனாலும் 1972 ஆம் ஆண்டு கையெழுத்தான சிம்லா ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா கைப்பற்றிய இராணுவ வீரர்களும், பாகிஸ்தான் பகுதிகளும் அவர்களிடமே ஒப்படைக்கப் பட்டன. சிறைப்படுத்தப்பட்டவர்களில் சுமார் 200 பேர் மீது போரில் கொடுஞ்செயல் புறிந்ததற்கான வழக்குகள் இந்திய இராணுவ நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன. இருப்பினும் அவ்வழக்குகளை தள்ளுபடி செய்து அவர்களையும் விடுவித்தது இந்திய அரசு. இது இந்தியாவின் பெருந்தன்மையை உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டியது. மிகப்பெரும் தோல்வியை சந்தித்ததும் 11 ஆண்டுகளுக்கு மேலாக அமைதி காத்த பாகிஸ்தான், மீண்டும் 1982 ஆம் ஆண்டு தனது கைவரிசையைக் காட்டியது.


இன்னும் வரும்...


18 Comments:

CVR said...

வந்தாச்சு வந்தாச்சு!! :-)

அகா!! இவ்வளவு மாபெறும் வெற்றி பெற்ற அப்புறமும் அப்போவே கஷ்மீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து பிரச்சினைக்கும் முழுமையான தீர்வு காணாமல் விட்டது நம் நாட்டின் மிக பெரிய தவறு.
இவ்வளவு அசிங்கமாக உதை பட்ட பிறகும் நம்மை திரும்பவும் சீண்ட பாகிஸ்தானுக்கு எப்படி தைரியம் வந்தது??
இப்போவும் கூட இந்தியாவோடு சம பலம் பொருந்திய நாடு போல பாகிஸ்தான் நடந்து கொள்வதற்கு என்ன காரணம்??
இவை பற்றி உங்கள் வரப்போகும் பதிவுகளில் சொல்வீர்கள் என நம்புகிறேன்!! :-)

Arunkumar said...

எல்லா போர்களையும் சீக்கிரமா படிச்சிட்றேன் சத்யா... நிறைய மிஸ் பண்ணிட்டேன் :-(

கீதா சாம்பசிவம் said...

nethike comment koduthene? varalaiya? mmmmm, oru vithathil Indiavukku ulaka nadukal mathiyile oru mariyathai erpada karanama iruntha por ithunu sollalam. nalla ezuthittu varinga. nalla irukku. vaazhthukkal.

SathyaPriyan said...

//
CVR said...
இப்போவும் கூட இந்தியாவோடு சம பலம் பொருந்திய நாடு போல பாகிஸ்தான் நடந்து கொள்வதற்கு என்ன காரணம்??
//
CVR நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் பாகிஸ்தானும் மிகுந்த பலம் பொருந்திய நாடு தான். அவர்களிடம் குறைந்த பட்சம் 5 அணுகுண்டுகளாவது இருக்க வேண்டும் என்பது இந்திய உளவுத்துறையினரின் கணிப்பு. மேலும் அவர்களிடம் தொலை தூர ஏவுகணைகள் இருக்கின்றன. அதைக் கொண்டு அவர்களால் கராச்சியிலிருந்து மதுரையை தாக்க முடியும். அனைத்தும் அமெரிக்கா அளித்தவை.

இரு நாடுகளுக்கும் போர் என்று வந்தால், உலக நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு தவிர்க்கப்பட்டால், இரு நாடுகளுக்கும் சேதம் மிகுதியாக இருக்கும்.

//
Arunkumar said...
எல்லா போர்களையும் சீக்கிரமா படிச்சிட்றேன் சத்யா... நிறைய மிஸ் பண்ணிட்டேன் :-(
//
பொருமையா படிச்சுட்டு வாங்க.

//
கீதா சாம்பசிவம் said...
nethike comment koduthene? varalaiya?
//
வரவில்லையே மேடம்.

//
nalla ezuthittu varinga. nalla irukku. vaazhthukkal.
//
மிக்க நன்றி.

Vino said...

எனக்கு உங்களோட எழத்து நடை ரொம்ப பிடிச்சு இருக்கு..

--வினோ

சிங்கம்லே ACE !! said...

அந்த பெருந்தன்மையினால் இந்தியாவிற்கு என்ன கிடைத்தது..

கார்கில் போரிலும், வெளிநாட்டு ஆதரவு வேண்டுமென, LOC தாண்டாமல் சண்டையிட்டு பல்லாயிரம் வீரர்கள் மாண்டது தான் மிச்சம்.

வங்காளதேசத்திற்கு இத்தனை உதவி புரிந்தும், நமது எல்லையில், தேவையில்லா சச்சரவு செய்கிறார்கள்..

இதையெல்லாம் பார்த்தால், பெருந்தன்மை பாராட்டுவது மடத்தனம் என்றே தோன்றுகிறது.. நாளை என்றோ ஒரு நாள், ஐ.நா சபையில் இந்தியா பெருந்தன்மயுடன் நடந்தது என்று பேசலாம்.. வேறு எதாவது லாபம் உண்டா?? :(:(

சிங்கம்லே ACE !! said...

http://www.subcontinent.com/1971war/episodes.html

இந்த இடுகையை ரொம்ப நாளைக்கு முன் படித்தது.. உங்கள் தொடரை படித்தவுடன், ஞாபகம் வந்தது.. கூகுள் துணை கொண்டு தேடி எடுத்தேன்.. இயன்றால் படித்து பாருங்கள்.. :) :)

SathyaPriyan said...

//
Vino said...
எனக்கு உங்களோட எழத்து நடை ரொம்ப பிடிச்சு இருக்கு..
//
மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

//
சிங்கம்லே ACE !! said...
அந்த பெருந்தன்மையினால் இந்தியாவிற்கு என்ன கிடைத்தது..

கார்கில் போரிலும், வெளிநாட்டு ஆதரவு வேண்டுமென, LOC தாண்டாமல் சண்டையிட்டு பல்லாயிரம் வீரர்கள் மாண்டது தான் மிச்சம்.

வங்காளதேசத்திற்கு இத்தனை உதவி புரிந்தும், நமது எல்லையில், தேவையில்லா சச்சரவு செய்கிறார்கள்..

இதையெல்லாம் பார்த்தால், பெருந்தன்மை பாராட்டுவது மடத்தனம் என்றே தோன்றுகிறது.. நாளை என்றோ ஒரு நாள், ஐ.நா சபையில் இந்தியா பெருந்தன்மயுடன் நடந்தது என்று பேசலாம்.. வேறு எதாவது லாபம் உண்டா?? :(:(
//
வேறு வழி இல்லை ACE. சோஷியலிஸ கொள்கைகளால் ரஷ்யாவுடன் இணைந்து இந்தியா அரங்கேற்றிய காமெடிகள் பல. அதனால் அமெரிக்காவிற்கு எதிரான நிலை ஏற்பட்டு விட்டது.

ரஷ்யாவிற்கு தலை வலி தர அமெரிக்கா தூக்கி விட்ட தலிபான்கள் இன்று அவர்களுக்கு எதிராகவே திரும்ப அவர்களும் தீவிரவாதத்தின் வலி உணர்ந்தார்கள்.

ஒரு அடி அடித்ததற்கு நூறு அடி என்று திருப்பி தந்தார்கள். இங்கு? தீவிரவாதி கைது செய்யப்பட்டு அவனுக்கு தண்டனை கொடுத்தும் அதை நிறைவேற்ற முடியாமல் மனித உரிமை காப்பாளர்கள் வந்து விடுகிறார்கள். POTA சட்டம் ரத்து செய்யப் படுகிறது. அதற்கு காரனம் அச்சட்டம் வந்த பிறகும் தீவிரவாதம் தொடர்கிறதாம். கொலை, கொள்ளை, கற்பழிப்புகள் கூடத்தான் தொடர்கின்றன. அதையும் ரத்து செய்து விடலாமே?

வேண்டாம் இதையெல்லாம் பேசினால் BP தான் ஏறும்.

//
http://www.subcontinent.com/1971war/episodes.html

இந்த இடுகையை ரொம்ப நாளைக்கு முன் படித்தது.. உங்கள் தொடரை படித்தவுடன், ஞாபகம் வந்தது.. கூகுள் துணை கொண்டு தேடி எடுத்தேன்.. இயன்றால் படித்து பாருங்கள்.. :) :)
//
சுட்டிக்கு நன்றி.

வருத்தப்படாத வாலிபன். said...

நண்பர் CVR கேட்ட கேள்விக்கு இந்த பதில். மற்ற விசயங்களில் எப்படியோ ஆனால் போர் தளவாடங்கள்,ஏவுகணைகள் மற்றும் ராணுவ தொழில்நுட்பங்கள் இவற்றில் பாகிஸ்தான் நாடு இந்தியாவுக்கு எந்த விததிலும் குறைந்தது இல்லை.உண்மையை ஒப்புக் கொள்வதானால் அவர்களது விமானப் படை நமது விமானப் படையை விடவும் நவீன தொழில்நுட்பம், ரேடார் மற்றும் ஏவுகணைகளை கொண்டுள்ளது.நமது விமான படை விமானங்களின் எண்ணிக்கை மற்றும் விமானிகளின் திறமை , தைரியம் இவற்றால்தான் சிறந்துள்ளது.

நண்பர் சத்யப்பரியன் ,தொடர் மிக சிறப்பாக உள்ளது.வாழ்த்துககள்

SathyaPriyan said...

//
வருத்தப்படாத வாலிபன். said...
பாகிஸ்தான் நாடு இந்தியாவுக்கு எந்த விததிலும் குறைந்தது இல்லை.உண்மையை ஒப்புக் கொள்வதானால் அவர்களது விமானப் படை நமது விமானப் படையை விடவும் நவீன தொழில்நுட்பம், ரேடார் மற்றும் ஏவுகணைகளை கொண்டுள்ளது.
//
முற்றிலும் உண்மை.

//
நண்பர் சத்யப்பரியன் ,தொடர் மிக சிறப்பாக உள்ளது.வாழ்த்துககள்
//
மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

சேரன் பார்வை, எங்கே சென்றீர்கள்? மத்த பதிவுகளுக்கெல்லாம் முதலாவதாக வந்து விடும் நீங்கள், நீங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பதிவில் காணவில்லையே? உங்கள் எதிர் பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லையா? காற்று போன பந்து போல் ஆகிவிட்டீர்களா? :-)

Radha Sriram said...

அட்டகாசமாக போகிறது தொடர் சத்யா!!

இந்த போரில் இந்தியா "knot" விமானங்களையும் பாகிஸ்தான் "supersonics" விமாங்களையும் உபகோகித்தது என்றும்.knot விமானங்கள் easily manuevarable என்பதால் இந்தியாவிற்கு பெரிய பலமாக இஉந்த்தது என்று என்கேயோ கேட்ட நியாபகம். எவ்வளவு தூரம் உண்மை தெரியவில்லை இதை பற்றி எதாவது தெரியுமா??

SathyaPriyan said...

//
அட்டகாசமாக போகிறது தொடர் சத்யா!!
//
நன்றி.

//
இந்த போரில் இந்தியா "knot" விமானங்களையும் பாகிஸ்தான் "supersonics" விமாங்களையும் உபகோகித்தது என்றும்.knot விமானங்கள் easily manuevarable என்பதால் இந்தியாவிற்கு பெரிய பலமாக இஉந்த்தது என்று என்கேயோ கேட்ட நியாபகம். எவ்வளவு தூரம் உண்மை தெரியவில்லை இதை பற்றி எதாவது தெரியுமா??
//
அவை "Knot" இல்லை ராதா "Gnat". இந்திய விமானப் படை வீரர்கள் ராய் மாஸ்ஸேய், M.A. கணபதி மற்றும் டாண் லஸாரஸ் ஆகியோர் "Gnat" விமானங்களில் பாகிஸ்தானியர்கள் மீது நடத்திய தாக்குதல் பிரசித்தி பெற்றது.

மேலும் MIG-21 விமானங்களில் பொருத்தப்பட்ட K-13 ஏவுகணைகள் கொண்டு வானில் பறக்கும் போதே பாகிஸ்தான் விமானங்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதுவும் மிகப் பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

Ravi Balachandran said...

தொடருக்கு நன்றி. இவ்வளவு வெற்றிக்குப் பின்னாலும் ஆக்கிரமிக்கபட்ட் காஷ்மிர் நிலங்களை (POK)மிட்கமுடியவில்லையே?

Radha Sriram said...

அட ஆமாம், இப்பொ புரியுது! gnat" என்ற பெயர் காரணம்.gnat என்றால் சின்ன ஈக்கள்.....அது போல கண்ணுக்கு தெரியாமல் பறந்து தாக்கும் விமானத்தை gnat விமானம் என்று பெயர் வைத்த்ருப்பார்கள் போல இருக்கு!! இத்தனை நாள் தவறாகவே நினைத்து இருந்திருக்கேன். தெரிய படுத்தினதுக்கு நன்றி சத்யன்.

SathyaPriyan said...

//
Ravi Balachandran said...
தொடருக்கு நன்றி. இவ்வளவு வெற்றிக்குப் பின்னாலும் ஆக்கிரமிக்கபட்ட் காஷ்மிர் நிலங்களை (POK)மிட்கமுடியவில்லையே?
//
தொடரின் முதல் இரு பகுதிகளை படித்தீர்களா? நம்மால் முழூ காஷ்மீரையும் 1948 ஆம் ஆண்டிலேயே அடைந்திருக்க முடியும். ஆனால் நேரு அப்போழுது செய்த தவறு தான் அதற்கு காரனம்.

தொடர்ந்து வாருங்கள்.

//
Radha Sriram said...
gnat என்றால் சின்ன ஈக்கள்.....
//
அப்படியா. அதன் பொருள் எனக்கு தெரியாது. தெரியப் படுத்தியமைக்கு நன்றி.

Cheran Parvai said...

சத்யா நன்றாக எழுதியிருக்கிங்க...

நாம் வலிமை உடன் இருந்த காலத்தில் காஷ்மிர் பிரச்சனை முடித்திருக்கலாம்.

இந்த போர் இந்தியா...வின் சரித்திரத்தை மாற்றியது.நாம் Nuclear power ஆக மாற வேண்டிய் கட்டாயத்துக்கும் உள்ளானோம்.

~சேரன்

SathyaPriyan said...

//
Cheran Parvai said...
சத்யா நன்றாக எழுதியிருக்கிங்க...
//
நன்றி. எனது முந்தைய பின்னூட்டத்தை பார்த்தீர்களா? தங்களை காணாமல் தேடியிருந்தேன்.

//
நாம் வலிமை உடன் இருந்த காலத்தில் காஷ்மிர் பிரச்சனை முடித்திருக்கலாம்.
//
அப்பொழுதும் எல்லை தாண்டிய தீவிரவாதம் நடந்து கொண்டு தான் இருந்திருக்கும் சேரன்.

Cheran Parvai said...

சத்யா...weekend சோம்பேறித்தனம்..
தொடர் நன்றாக வந்து கொண்டிருக்கிறது.மேலும் இந்த போரின் போது INS Vikraant vs pak submarine(Ghazni or Ghazi),US Task force போன்ற் உப கதைகளும் உண்டு..