Thursday, January 10, 2008


டாடாவின் புதிய கார்



என்றும் இல்லாத அளவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளில் டாடா நிறுவனம் பல சாதனைகள் புறிந்து வருகிறது. கோரஸ் நிறுவனத்தை பல ஆயிரம் கோடிகளுக்கு வாங்கியதை தொடர்ந்து உலகின் முன்னனி ஸ்டீல் நிறுவனங்களில் ஒன்றானது. பல ஹோட்டல்களையும் வாங்கியது. இதன் மூலம் தாஜ் ஹோட்டல் நிறுவனம் உலகின் முதல் 10 பெரிய ஹோட்டல் நிறுவனங்களில் ஒன்றானது. இப்பொழுது போர்டு நிறுவனத்தில் இருந்து ஜாகூவார் மற்றும் லான்ட்ரோவர் போன்ற கார்களின் தயாரிப்பையும் வாங்க முயற்சி மேற்கொண்டு இருக்கிறது. இதன் வரிசையில் தற்போதைய சாதனை ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள காரை வெளியிட்டுள்ளது. 2005 ஆம் ஆண்டு அவர்கள் இதற்கான முயற்சியை அறிவித்த போது எள்ளி நகையாடியவர்கள் பலர். சுசுகி நிறுவனத்தின் தலைவர் ஒசாமா சுசுகி போன்றவர்கள் அதில் அடக்கம். ஆனால் திரு. ரத்தன் டாடா அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது முயற்சியில் பின் வாங்காமல் தனது இலக்கை அடைந்து விட்டார்.

ஆனால் டாடா நிறுவனத்தின் மூலத்தை அறிந்தவர்களுக்கு இதில் ஒன்றும் ஆச்சரியம் இருக்க போவதில்லை. 1907 ஆம் ஆண்டு திரு. ஜாம்ஷெட்ஜி டாடா ஆங்கிலேயர்களால் நடத்தப்பட்ட இந்திய ரயில்வே துறைக்கு தண்டவாளங்கள் உற்பத்திசெய்து தர முன்வந்த போது ஸர் ப்ரெடரிக் அப்காட் எள்ளி நகையாடியதும் அல்லாமல் அவர்கள் அவ்வாறு செய்தால் அவர்கள் தயாரிக்கும் தண்டவாளங்களை விழுங்குவதாகவும் கூறினார்.

When Jamsetji Tata, the company’s founder, proposed making steel for the British run Indian railways in 1907, Sir Frederick Upcott, a colonial administrator scoffed. "Do you mean to say that Tatas propose to make steel rails to British specifications?" he asked. "I will undertake to eat every pound of steel rail they succeed in making."

இதனை போன்ற பல எள்ளி நகையாடுதல்களையும் கடந்தே டாடாவின் சாம்ராஜ்யம் நிறுவப்பெற்றுள்ளது.

இவர்கள் தயாரித்த இந்த மலிவு விலை கார்கள் இந்தியாவில் உள்ள மத்திய தர குடும்பத்தினருக்கு பெரும் வரமாக அமையும். இரண்டு பல்ஸர் பைக்குகள் வாங்கும் செலவில் ஒரு கார் வாங்கி விடலாம். இனி சில ஆண்டுகளில் குடும்பத்தலைவர்/தலைவி/இரண்டு குழந்தைகள் அனைவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் செல்லும் காட்சியை காண முடியாமல் போகலாம். நகரங்களில் இருசக்கர வாகனங்களினால் ஏற்படும் உயிரிழப்புகள் வெகுவாக குறையலாம்.

குறிப்பாக இந்த கார் ஆட்டோவிற்கு நல்லதொரு மாற்றாக அமையலாம். ஒரு லிட்டருக்கு சுமார் 25 கிலோமீட்டர்கள் அளிக்கும் இந்த காரினால் பல ஆட்டோ ஒட்டுனர்கள் இதனை வாடகைக்கு ஓட்ட முற்படலாம். ஓட்டுனர் தவிர நான்கு பேர் அமர முடியும் என்பதால் மக்களும் ஆட்டோவிற்கு பதில் இதில் பயனம் செய்ய முற்படலாம். ஆட்டோ ஓட்டுனர்களுக்கும் சிறிது பணம் அதிகம் கிடைக்கும்.

குறிப்பாக பள்ளி சிறுவர்களை/சிறுமிகளை ஆட்டோவிற்குள் புளி மூட்டை போல அடைத்து செல்லும் அவல நிலை மாறலாம்.

ஆனாலும் இதனால் ஒரு சில பாதகங்களும் இல்லாமல் இல்லை. பாதுகாப்பு அம்சங்களில் குறைபாடு பெரிய அளவிற்கு இல்லை என்பதால் நகரத்திற்குள் பயனிக்க மிகுந்த யோசனை தேவை இல்லை என்பது எனது கருத்து. ஆனாலும் வெளியூர்களுக்கு செல்ல இதனை பயன்படுத்துவதற்கு முன் சிறிது யோசனை தேவை. மேலும் நகரத்திற்குள் சாலைகளில் நெரிசல்கள் பல மடங்கு உயரும். பெங்களூரில் இதை நினைத்து பார்க்கவே எனக்கு பயமாக இருக்கிறது. மேலும் இதன் மூலம் சுற்று சூழல் அதிகம் மாசுபடலாம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

அனைத்தையும் கூட்டி கழித்து பார்த்தால், இந்த கார் இரு சக்கர வாகனங்களுக்கு மாற்றாக இருப்பதை விட ஆட்டோவிற்கு மாற்றாக இருப்பதே மேல் என்று எனக்கு தோன்றுகிறது.

13 Comments:

ஜீவி said...

நல்ல விவரங்களுடனான விரைவான பதிவு.
உங்கள் பொதுநல அக்கரைகள் பாராட்டுக்குரியன.
வாழ்த்துக்கள்.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இன்று தொ.கா வில் முக்கிய செய்தியாகக் காட்டினார்கள்.பிரான்சின்
கூட்டுத் தயாரிப்பென நினைக்கிறேன்.
சாதகம் பாதகம் தவிர்க்கமுடியாதது.

CVR said...

நம்ம ஊருல இப்போ இருக்கற போக்குவரத்துக்கே சாலைகள் பத்தல இதுல எல்லோரும் கார் வாங்க ஆரம்பிச்சுட்டா என்ன ஆகறது??
அதுவுமில்லாமல் அமெரிக்கா போன்ற நகரங்களில் எங்கு சென்றாலும் பெரிய பெரிய கார் பார்க்கிங் லாட்கள் அமைக்கப்பட்டிருக்கும்,ஆனால் நமது ஊரில் கார் பார்க்கிங் பார்ப்பதே பெரிது!!
இதை பற்றியெல்லாம் என்ன நினைக்கிறீங்க???

சுற்றுச்சூழல் மாசு மற்றொரு பிரச்சினை!
ஆனா, ஒரு மோட்டர் பைக் ஏற்படுத்தும் மாசை விட இந்த கார் கம்மியாகத்தான் மாசு விளைவிக்கும் என்று சொல்லி டாடா அந்த பிரச்சினைக்கும் பதில் கூறி விட்டார்!! :-)

Very good Subject selection and crisp presentation(as always)
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-)

SathyaPriyan said...

//
ஜீவி said...
நல்ல விவரங்களுடனான விரைவான பதிவு.
உங்கள் பொதுநல அக்கரைகள் பாராட்டுக்குரியன.
வாழ்த்துக்கள்.
//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஜீவி. தொடர்ந்து வாருங்கள்.

//
யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
இன்று தொ.கா வில் முக்கிய செய்தியாகக் காட்டினார்கள்.
//
ஆமாம் உலகின் மலிவான கார் தயாரித்தது ஒரு இந்திய நிறுவனம் என்பது மிகவும் முக்கியமான செய்தி தான். நாம் அனைவரும் பெருமை படலாம்.

//
சாதகம் பாதகம் தவிர்க்கமுடியாதது.
//
உண்மை. வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

//
CVR said...
நம்ம ஊருல இப்போ இருக்கற போக்குவரத்துக்கே சாலைகள் பத்தல இதுல எல்லோரும் கார் வாங்க ஆரம்பிச்சுட்டா என்ன ஆகறது?

அதுவுமில்லாமல் அமெரிக்கா போன்ற நகரங்களில் எங்கு சென்றாலும் பெரிய பெரிய கார் பார்க்கிங் லாட்கள் அமைக்கப்பட்டிருக்கும்,ஆனால் நமது ஊரில் கார் பார்க்கிங் பார்ப்பதே பெரிது!!
இதை பற்றியெல்லாம் என்ன நினைக்கிறீங்க???
//
உண்மை தல. ஆனால் அதற்காக நாம் மக்களை கார் வாங்க கூடாது என்று சொல்லுவதோ, நிறுவனங்களை குறைந்த விலையில் கார் தயாரித்து விற்க கூடாது என்று சொல்லுவதோ முடியுமா? பலரும் கார் வாங்கி இது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தால் அரசு கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு, தீர்வுகள் காணக்கூடும்.

மேலும் கிராமப்புறங்களில் எல்லாம் அதிக கார்கள் பயன்படுத்தப்படுமாயின் அங்கும் அதனை சார்ந்த தொழில்கள் உருவாகி பலர் பயனடைவர்.

//
சுற்றுச்சூழல் மாசு மற்றொரு பிரச்சினை!
ஆனா, ஒரு மோட்டர் பைக் ஏற்படுத்தும் மாசை விட இந்த கார் கம்மியாகத்தான் மாசு விளைவிக்கும் என்று சொல்லி டாடா அந்த பிரச்சினைக்கும் பதில் கூறி விட்டார்!! :-)
//
ஒரு மோட்டார் பைக்கை விட குறைவா? அல்லது தற்போது இருக்கும் கார்களை விட குறைவா? இரண்டாவது தான் அவர் சொன்னது என்று நினைக்கிறேன்.

//
Very good Subject selection and crisp presentation(as always)
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-)
//
மிக்க நன்றி.

CVR said...

Check this out!! :-)

http://economictimes.indiatimes.com/News/News_By_Industry/Auto/Automobiles/Interview_with_Ratan_Tata_Making_of_Nano/articleshow/msid-2690794,curpg-4.cms
///
Q: There has been some criticism that this car is going to choke the already congested roads in cities. Do you think that is an elitist criticism?

Yeah, I asked myself. We produced about 7 million two wheelers earlier. Today, we almost have about 60-70 million two to three wheelers in the country. We produced about 1.4 million cars and at some point we will exceed 2 million. Nobody said anything about that. It only happens to be this car that is being targeted. You may say well OK the two wheeler takes lesser space.

Our car pollutes if not less, then certainly not more than a two wheeler and I am not talking per passenger but as a vehicle. We conform to Euro IV in terms of our engine. Today Bharat III is required, we conform to Bharat III. All scooters and two wheelers are Bharat II today, not that they are not conforming, but that's what their standard is. So, all I want to say is that yes you may take a view that this small car will take less space than a large car.
////


////பெரிய பிரச்சினையாக உருவெடுத்தால் அரசு கூடுதல் முனைப்புடன் செயல்பட்டு, தீர்வுகள் காணக்கூடும்.////
Expecting that from indian politicians, you are one big optimist!! :-)

//மேலும் கிராமப்புறங்களில் எல்லாம் அதிக கார்கள் பயன்படுத்தப்படுமாயின் அங்கும் அதனை சார்ந்த தொழில்கள் உருவாகி பலர் பயனடைவர்.
////
fair enuf!! :-)
I know its a mixed bag,and i have not been able to decide whether to be happy or not! :-)

SathyaPriyan said...

//
CVR said...
Our car pollutes if not less, then certainly not more than a two wheeler and I am not talking per passenger but as a vehicle.
//
தெளிவுபடுத்தியதற்கு நன்றி.

//
Expecting that from indian politicians, you are one big optimist!! :-)
//
இல்லை CVR. நகர்புற கட்டமைப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டால் அரசுக்கு அது பெரிய தலை வலியாக மாறும். உதாரணத்திற்கு வெளி நாட்டு நிறுவனங்கள் தொழில் தொடங்கவோ இல்லை முதலீடு செய்யவோ தயங்கும். இருக்கும் உள்நாட்டு நிறுவனங்கள் புதிய கிளைகள் தொடங்க தயங்குவர். அது ஒரு புறம் என்றால் மக்களும் பெரிய அதிருப்திக்கு ஆளாகுவர். பணப்புழக்கம் குறையும்.

அரசியல் கட்சிகளின் ஓட்டு வங்கி பாதிக்கப்படலாம். கூட்டி கழித்து பார்த்தால் எனது நம்பிக்கை பொய்க்காது என்றே கருதுகிறேன்.

CVR said...

///Our car pollutes if not less, then certainly not more than a two wheeler and I am not talking per passenger but as a vehicle. /////
என்னமா வார்த்தைகளிலே விளையாடிருக்காரு பாத்தீங்களா??
ரெண்டு தடவை திர்ம்ப திரும்ப படிச்சா தான் புரியுது!! :-D

//கூட்டி கழித்து பார்த்தால் எனது நம்பிக்கை பொய்க்காது என்றே கருதுகிறேன்./////
பார்க்கலாம்!!
நல்லதே நடக்கும் என்று நம்புவோமாக!! :-)

கோபிநாத் said...

தல

நன்றாக அலசி இருக்கிங்க ...சூப்பர் ;)

\\\குறிப்பாக இந்த கார் ஆட்டோவிற்கு நல்லதொரு மாற்றாக அமையலாம்.\\

சரியாக சொல்லியிருக்கிங்க.
நிறைய வாய்ப்புகள் இருக்கு..;)

குறைப்பாடுகள் எல்லாத்திலும் தான் இருக்கு அதெல்லாம் கடந்து இது நம்ம ஊரு வண்டின்னு நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கு. ;))

கோபிநாத் said...

தல இதை பாருங்கள்

http://nallathunadakattum.blogspot.com/2008/01/blog-post.html

Dreamzz said...

நல்ல அலசல்!

SathyaPriyan said...

//
CVR said...
Our car pollutes if not less, then certainly not more than a two wheeler and I am not talking per passenger but as a vehicle.
என்னமா வார்த்தைகளிலே விளையாடிருக்காரு பாத்தீங்களா??
//
பல பில்லியன் டாலர்கள் மதிப்புபெற்ற நிறுவனத்தின் தலைவர் அல்லவா? ஒரு அரசியல் வாதிக்கு இருக்ககூடிய பேச்சு சாமர்த்தியத்தை காட்டிலும் பல மடங்கு அதிகம் இருக்க வேண்டுமே :-)

//
கோபிநாத் said...
நன்றாக அலசி இருக்கிங்க ...சூப்பர் ;)
//
நன்றி தல.

//
குறைப்பாடுகள் எல்லாத்திலும் தான் இருக்கு அதெல்லாம் கடந்து இது நம்ம ஊரு வண்டின்னு நினைக்கும் போது சந்தோஷமாக இருக்கு. ;))
//
நிச்சயமாக நாம் பெருமை அடையலாம்.

//
தல இதை பாருங்கள்
http://nallathunadakattum.blogspot.com/2008/01/blog-post.html
//
பார்த்தேன். அருமையான அலசல். அவர் குறிப்பிட்டது பலவும் நடக்க சாத்தியக் கூறுகள் உள்ளன. பின்னூட்டமும் இட்டு விட்டேன்.

//
Dreamzz said...
நல்ல அலசல்!
//
மிக்க நன்றி.

Arunkumar said...

even am not sure if i have to feel happy or not.. TIME will tell !!

SathyaPriyan said...

//
Arunkumar said...
even am not sure if i have to feel happy or not.. TIME will tell !!
//
ஆமாம் Arun. என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்?