Monday, January 14, 2008


வாழ்த்துக்கள் - அனில் 'ஜம்போ' கும்ளே



இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடம் விடா முயற்சிக்கு ஒரு உதாரணம் கேட்டால் பெரும்பாலானவர்களின் பதில் "அனில் கும்ளே" என்று தான் இருக்கும். 2002 ஆம் ஆண்டு ஆன்டிகுவா டெஸ்ட் போட்டியில் தாடையில் அடிபட்டு, எலும்பு முறிவுடன் சற்றும் மனம் தளராமல் பந்து வீசி தலை சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவரான லாராவை ஆட்டமிழக்க செய்ததை யாரும் மறந்திருக்க முடியாது.

ஹீரோ கப்பின் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் 12 ரன்களே கொடுத்து ஆறு விக்கெட்டுகள் வீழ்த்தியதையும் யாரும் மறந்திருக்க முடியாது.

கடந்த 18 ஆண்டுகளில் இந்தியா வெற்றி பெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவ்வெற்றிகளுக்கான பங்களித்தவர்களின் பட்டியலில் எளிதாக முதல் இடத்தில் இருப்பவர் என்று இவரை குறிப்பிடலாம். பெங்களூரில் இருந்த நான்காண்டுகளில் அனில் கும்ளே சர்க்கிளை ஒவ்வொரு முறை கடக்கும் பொழுதும் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக பெரோஷா கோட்லா மைதானத்தில் ஒரே இன்னிங்ஸில் எடுத்த 10 விக்கெட்டுகள் என் நினைவிற்கு வரும்.

வேகப் பந்து வீச்சாளர்களால் ஆளப்பட்ட டெஸ்ட் போட்டிகளை சுழர் பந்து வீச்சாளர்களின் கையில் கொண்டு வந்த மும்மூர்த்திகளுள் (முரளீதரன், வார்னே மற்றும் கும்ளே) ஒருவர். தங்கள் சுழர் பந்து வீச்சினால் சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பேட்ஸ்மேன்களை திக்கு முக்காட செய்தவர்கள். முரளீதரனை பொருத்த வரையில் அவரது பந்து வீசும் முறை மீது சில விமர்சனங்கள் உண்டு. வார்னேவிற்கு மற்ற இருவர்களுக்கும் இல்லாத இரண்டு ஆதாயங்கள் உண்டு. ஒன்று அவர் தற்காலத்தின் சிறந்த பேட்டிங் வரிசைக்கு எதிராக பந்து வீச அவசியம் இல்லை. இரண்டு அவரது அணி பேட்ஸ்மேன்கள் எளிதாக எதிர் அணியினரை விட அதிக ஓட்டங்கள் எடுத்து விடுவதால் அவர் தோள்கள் மீது தேவையற்ற அழுத்தம் (Pressure?) இல்லை. இந்த இரண்டு காரணிகளையும் வைத்து பார்க்கும் பொழுது கும்ளே மற்ற இருவர்களையும் விட சுமார் 100 விக்கெட்டுகளுக்கும் மேல் குறைத்து பெற்றிருந்தாலும் அவர்களுடன் எளிதில் ஒப்பிடக்கூடியவர்.

இந்திய டெஸ்ட் போட்டிகளில் விளையாட தொடங்கி சுமார் 18 ஆண்டுகளுக்கு பின்னர் அணியின் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கிறார். ஏற்றவுடன் நடை பெற்ற முதல் டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வெற்றி கொண்டது அவரது ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.

அவரது பந்து வீச்சை போன்று அவரது அணித்தலைமை அவ்வளவு சிறப்பாக பிரகாசிக்கவில்லை என்ற போதும் தற்கால இந்திய கிரிக்கெட் சூழலையும், தலைமை பொறுப்பை ஏற்க டிராவிட், கங்குளி, சச்சின் போன்ற அணியின் மூத்தவர்கள் தயங்கி பின் வாங்கியதையும் மனதில் வைத்து பார்த்தால் அவரது செயல்பாடுகள் சிறப்பாகவே உள்ளன.

நாளை மறுநாள் பெர்த்தில் நடை பெறவுள்ள தனது 124 ஆம் டெஸ்ட் போட்டியில் அவர் விளையாட தொடங்கும் பொழுது அவர் டெஸ்ட் போட்டியில் 600 விக்கெட்டுகளை வீழ்த்த இன்னும் ஒரே ஒரு விக்கெட் மட்டுமே தேவைப்படும். ஆனால் கும்ளேவின் போராட்ட குணத்தை அறிந்த அவரது ரசிகர்களுக்கு தெரியும் நாளை மறுநாள் களத்தில் இறங்கும் பொழுது அவரது நோக்கம் அதுவாக இருக்காது, மாறாக போட்டியில் இந்திய அணி ஜெயித்து தொடரை தக்க வைத்துக் கொள்வதே அவரது நோக்கமாக இருக்கும் என்று. நாமும் அதையே வேண்டுவோம்.


பி.கு.1: கும்ளேவின் சாதனைகளை பட்டியலிட்டு தரும்படியான எனது வேண்டுகோளை ஏற்று ஒரே நாளில் பதிவேற்றிய எனது நண்பன் விஜய கிருஷ்ணாவின் பதிவையும் முடிந்தால் பாருங்கள்.

பி.கு.2: அவன் தமிழன் இல்லை என்பதால் அவனது பதிவை சிறிது மாறுதல்களுடன் தமிழ் படுத்தி இருக்கிறேன். இல்லையென்றால் அவனையே எழுத சொல்லி இருப்பேன்.

கும்ளேவின் சாதனைகளை அறிய இங்கே சொடுக்கவும்

7 Comments:

வினையூக்கி said...

அருமை அருமை ..போன வாரம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்..யாரேனும் கும்ப்ளே பற்றி எழுதுவார்களா என்று,இன்று இதைப் படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. ஒரு முறை ரவி சாஸ்திரி ஆட்ட நேரலை வர்ணனையின்போது கும்ப்ளே ஆட்டமிழந்த விதத்தை மோசமாக வர்ணித்ததால், வீறு கொண்டு தொடர்ச்சியாக மட்டைப் பயிற்சி மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியில் அசாருடன் இணைந்து 88 ரன்கள் குவிப்பார்.. அதுவும் தென்னாப்பிரிக்க அணிக்கெதிராக... அவரும் ஸ்ரீநாத்தும் வெற்றிபெறச்செய்த பெங்களூர் ஆட்டத்தை யாராலும் மறக்க முடியாது. பந்துவீச்சு மட்டுமல்லா பேட்டிங்கில் சோபிக்க வேண்டும் என்று சிரத்தையுடன் ஆடக்கூடிய ஆட்டக்காரர் கும்ப்ளே..
வாழ்த்துக்கள் கும்ப்ளே

SathyaPriyan said...

//
வினையூக்கி said...
அருமை அருமை ..போன வாரம் முழுவதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்..யாரேனும் கும்ப்ளே பற்றி எழுதுவார்களா என்று,இன்று இதைப் படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.
//
மிக்க நன்றி. அவர் 600 விக்கெட்டுகள் எடுத்த பிறகு எழுதலாம் என்று தான் நினைத்தேன். ஆனாலும் முன்னரே எழுதி விட்டேன்.

//
பந்துவீச்சு மட்டுமல்லா பேட்டிங்கில் சோபிக்க வேண்டும் என்று சிரத்தையுடன் ஆடக்கூடிய ஆட்டக்காரர் கும்ப்ளே.
//
ஆமாம் உண்மை. அவர் ஓவல் மைதானத்தில் கடந்த ஆண்டு இங்கிலாந்திற்கு எதிராக எடுத்த 110 ஓட்டங்கள் அதனை நிரூபித்தன.

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

SathyaPriyan said...

Congratulations Jumbo on crossing the landmark yesterday.

Anonymous said...

Sathya

Fantastic, Jumbo Kumble is always a great cricketer; Very nice wordings to express a classical cricketer like Anil. It is not easy thing as Indian Spin Bowler to achieve a 600 mark and also playing for past 18 years. Great effort sathya keep it up! Good article.

Bala (Prajin’s father)

SathyaPriyan said...

//
Bala said...

Fantastic, Jumbo Kumble is always a great cricketer; It is not easy thing as Indian Spin Bowler to achieve a 600 mark and also playing for past 18 years.
//
Very true Bala.

//
Very nice wordings to express a classical cricketer like Anil.

Great effort sathya keep it up! Good article.
//
Thank you so much.

Arunkumar said...

Kumble has always been a team man.. i like his spirited attitude.. am a good fan of him.

thx to u and ur friend for making a post...

SathyaPriyan said...

//
Arunkumar said...
Kumble has always been a team man.. i like his spirited attitude.. am a good fan of him.
//
நானும் அவருடைய தீவிர ரசிகன் தான் Arun. அவருடைய சாதனைகளுக்கு தகுந்த அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் எனக்கு அதிகம் உண்டு.