Saturday, February 02, 2008


மரணங்கள் நமக்கு கற்றுக்கொடுக்கும் பாடம்

சமீபத்தில் படித்த இந்த செய்தியின் விளைவே இந்தப் பதிவு. சென்ற ஆண்டு தேன்கூடு சாகரன் மற்றும் இயக்குனர் ஜீவா ஆகியோரின் மரணங்களுக்கு பிறகே இதை எழுத முடிவு செய்தேன் ஆனாலும் அலுவல் காரணமாக என்னால் எழுத முடியவில்லை. இப்பொழுது இந்த செய்தியை படித்தவுடன் எழுதி விடுவது என்று முடிவு செய்து எழுதத் தொடங்குகிறேன்.

சமீப காலமாக 30 களில் உள்ள ஆண்கள் மாரடைப்பில் இறந்த செய்திகளை பல இடங்களில் கேட்க/பார்க்க/படிக்க முடிகிறது. விபத்துகள், இயற்கை சீற்றங்கள், கொலைகள், மற்ற அசம்பாவிதங்கள் போன்றவற்றினால் ஏற்படும் மரணங்களை தடுக்கும் சக்தி நம்மிடம் இல்லை என்ற போதும், நோய்களால் ஏற்படும் மரணங்களை ஓரளவு நம்மால் தடுக்க முடியும். ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள்; ஆரோக்கியமான வாழ்வியல் முறை போன்றவற்றினால் மட்டுமே அது முடியும் என்ற பொழுதும் நான் சொல்ல வந்தது அது இல்லை.

பின்னர் நான் சொல்ல வந்தது என்ன, என்கிறீர்களா? மரணத்தை வெற்றி கொள்வது எப்படி என்று தான் நான் சொல்ல முன்வந்தேன். மரணத்தை எப்படி வெற்றிகொள்ள முடியும், என்கிறீர்களா? முடியும். நம்மால் முடியும். மனம் இருந்தால் மார்கம் உண்டு.

ஒருவரின் மரணத்தினால் அவரது குடும்பத்திலும், உறவினர்களிடத்திலும், நண்பர்களிடத்திலும் ஏற்படும் வெற்றிடத்தை காலத்தினால் கூட நிரப்ப முடியாது என்ற போதிலும், அத்தகைய பாதிப்புகளை நம்மால் பெருமளவில் குறைக்க முடியும். குறிப்பாக ஒருவரின் மரணத்தினால் அதிகம் பாதிப்படைபவர்கள் அவரின் குடும்பத்தினர் மட்டுமே. பல குடும்பங்கள் அக்குடும்பங்களின் ஆணிவேராக இருப்பவரின் மரணத்திற்கு பிறகு சிதறி விடுவதை நாம் கண்கூடாக கண்டு இருக்கிறோம். இதற்கு பொருளாதார காரணிகளே முன்னிலையில் இருக்கின்றன.

நீங்கள் உங்கள் பெற்றோருக்கு ஒரே குழந்தையா? உங்கள் பெற்றோருக்கு மாத வருமானம் இல்லையா? மாதந்தோரும் நீங்கள் அனுப்பும் பணத்தை நம்பியே வாழ்கிறார்களா? நீங்கள் இல்லாமல் அவர்கள் நிலை என்ன?, என்று யோசித்து பாருங்கள். உடனே சென்று ஒரு நல்ல ஆயுட் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள்.

தங்கள் மக்கள் இறந்து தாங்கள் வாழும் கொடுமை ஒன்றே அவர்களுக்கு போதும். இரந்து வாழும் கொடுமையும் அவர்களுக்கு வேண்டாம்.

நீங்கள் உங்கள் பெற்றோருக்கு மூத்த குழந்தையா? உங்கள் சகோதர/சகோதரிகளின் கல்வி உங்களின் வருமானத்தை நம்பி இருக்கின்றதா? இதற்கும் ஆயுட் காப்பீடே சிறந்த வழி.

நீங்கள் திருமணமானவரா? உங்கள் வாழ்க்கை துணை வேலைக்கு போகவில்லையா? அவசியம் கவுரவம் கருதாமல் அவரது படிப்பிற்கு எந்த வேலை கிடைக்கிறதோ அந்த வேலைக்கு அவரை அனுப்புங்கள். அவருக்கு விருப்பம் இல்லையென்றாலும் நீங்கள் ஊக்கப்படுத்துங்கள். பணத்திற்காக மட்டுமே அல்ல. கல்வியும், வேலையும், பொருளாதார தன்னிறைவும் தரும் தன்னம்பிக்கையை வேறு எதுவும் ஒருவருக்கு தர இயலாது. உங்களுக்கு பிறகு தன்னையும், உங்கள் குழந்தையையும் ஒருவரின் உதவியும் இல்லாமல் தானே வளர்க்க இந்த தன்னம்பிக்கை மட்டுமே தேவை.

நான் 12 வகுப்பில் படித்த பொழுது எங்கள் சமஸ்கிரித புத்தகத்தில் (நான் முதல் மொழியாக எடுத்து படித்தது தமிழ் தான், என்றாலும் எங்கள் பள்ளி நண்பர்கள் சிலர் சமஸ்கிரிதம் படித்ததால் அவர்களின் புத்தகத்தை ஓரிரு முறை புரட்டி இருக்கிறேன்) இருந்த இந்த வாக்கியம் என்னால் மறக்க முடியாதது ஆகும். எனது வாழ்வில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் நான் பின்பற்றுவது இதை தான்.

Always hope for the best;
Be prepared for the worst.

இதன் மூலம், வாழ்வில் நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மரணத்தை நோக்கியே எடுத்து வைக்கப்படுகின்றது என்ற பொழுதும் நான் மரணத்தை நினைத்தே வாழுங்கள் என்று சொல்ல வரவில்லை. Worst Case Scenario விற்கு தயாராக உங்கள் குடும்பத்தினரை வைத்திருங்கள் என்று தான் குறிப்பிடுகிறேன்.

இதனை படித்த பிறகு நான் ஒரு pessimist ஆக தெரியலாம். இந்தப் பதிவே அநாகரீகமான பதிவாக தோன்றலாம். ஆனாலும் நான் முன்னரே குறிப்பிட்டது போல சமீக காலங்களில் நான் கேள்விப்படும் இத்தகைய மரணங்களின் விளைவாகவே இதனை எழுதினேன். ஆயினும் யாருடைய மனமேனும் புண்பட்டு இருந்தால் தங்கள் மன்னிப்பை கோருகிறேன்.

கடைசியாக ஒன்றே ஒன்று, Don't take your life for granted.

11 Comments:

இம்சை said...

Recommend everyone to take Critical Illeness plan, even though there is no maturity benefit you will get a very good cover for all critical Illness and life insurance.

வெட்டிப்பயல் said...

நல்ல பதிவு சத்யா...

CVR said...

//இதனை படித்த பிறகு நான் ஒரு pessimist ஆக தெரியலாம். இந்தப் பதிவே அநாகரீகமான பதிவாக தோன்றலாம்////
அப்படி எல்லாம் இல்லை அண்ணாச்சி!!
நியாயமான கருத்துக்கள் தான்!!

சரியாதான் சொல்லியிருக்கீங்க! :-)

SathyaPriyan said...

//
இம்சை said...
Good Post
//
Thank you.

//
Recommend everyone to take Critical Illeness plan, even though there is no maturity benefit you will get a very good cover for all critical Illness and life insurance.
//
Wow. Thanks for pointing it out. That would help most of us.

//
வெட்டிப்பயல் said...
நல்ல பதிவு சத்யா...
//
நன்றி வெட்டிப்பயல்.

//
CVR said...
நியாயமான கருத்துக்கள் தான்!!

சரியாதான் சொல்லியிருக்கீங்க! :-)
//
மிக்க நன்றி தல.

கோபிநாத் said...

\\CVR said...
//இதனை படித்த பிறகு நான் ஒரு pessimist ஆக தெரியலாம். இந்தப் பதிவே அநாகரீகமான பதிவாக தோன்றலாம்////
அப்படி எல்லாம் இல்லை அண்ணாச்சி!!
நியாயமான கருத்துக்கள் தான்!!

சரியாதான் சொல்லியிருக்கீங்க! :-)\\

வழிமொழிகிறேன்..;)

Divya said...

மிகச்சரியாக.......தெளிவாக கூறியிருக்கிறீர்கள், நல்லதொரு பதிவு சத்யா!

SathyaPriyan said...

//
கோபிநாத் said...
/
நியாயமான கருத்துக்கள் தான்!!
சரியாதான் சொல்லியிருக்கீங்க! :-)
/
வழிமொழிகிறேன்..;)
//
நன்றி தலைவா. எழுதும் போது வயிற்றில் சிறிது புளியை கரைத்தது போல் இருந்தது நிஜம்.

//
Divya said...
மிகச்சரியாக.......தெளிவாக கூறியிருக்கிறீர்கள், நல்லதொரு பதிவு சத்யா!
//
முதல் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Divya. தொடர்ந்து வாருங்கள்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//இதனை படித்த பிறகு நான் ஒரு pessimist ஆக தெரியலாம். இந்தப் பதிவே அநாகரீகமான பதிவாக தோன்றலாம்//

சத்யா
பள்ளியில் படித்த Non-detail பாடம் ஒன்று தான் நினைவுக்கு வருது!
There is nothing called pessimism!
Every pessimism has a hidden optimism for its future! :-)

When we dont take a cinema for granted and discuss so much abt it, How can we take life for granted? :-)
இயல்பாகவே சொல்லி இருக்கீங்க! எந்த நெருடலும் இல்லை!

SathyaPriyan said...

//
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
சத்யா
பள்ளியில் படித்த Non-detail பாடம் ஒன்று தான் நினைவுக்கு வருது!
There is nothing called pessimism!
Every pessimism has a hidden optimism for its future! :-)
//
முற்றிலும் உண்மை.

//
When we dont take a cinema for granted and discuss so much abt it, How can we take life for granted? :-)
//
மிக சரியாக சொன்னீர்கள்.

//
இயல்பாகவே சொல்லி இருக்கீங்க! எந்த நெருடலும் இல்லை!
//
மிக்க நன்றி. முதல் வருகைக்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

Arunkumar said...

//
Don't take your life for granted.
//
very well said..

//
இயல்பாகவே சொல்லி இருக்கீங்க! எந்த நெருடலும் இல்லை!
//
i felt the same too..

SathyaPriyan said...

//
Arunkumar said...
/Don't take your life for granted./
very well said..

/இயல்பாகவே சொல்லி இருக்கீங்க! எந்த நெருடலும் இல்லை!/
i felt the same too..
//
மிக்க நன்றி Arun.