Thursday, August 21, 2008


மலை

மலை என்கிற விமல் கிருஷ்ணமூர்த்தி. என் உற்ற நண்பன். அவனை நான் முதலில் பார்த்தது புவனேஸ்வரில் அலுவல் பயிற்சிக்காக சென்ற பொழுது. காற்றடித்தால் விழுந்து விடுவானோ என்று தோற்றமளிக்கும் ஒடிசலான தேகம் அவனுக்கு. படிய சீவிய தலை முடி, தடித்த கண்ணாடி, மீசை என்று பாரதிராஜா பட நாயகனை நினைவு படுத்தும் தோற்றம்.

அங்கே வேலைக்கு சேர்ந்த 15 தமிழ் நண்பர்களில் 'திருச்சி' என்பதால் என் மனதில் பச்சக் என்று வந்து ஒட்டிக் கொண்டவன்.

"இவனை என்னால் வேறொரு மனிதனாக பார்க்கவே முடிய வில்லை. கண்ணாடியில் தெரியும் எனது பிம்பமாகவே இவன் எனக்கு தெரிவான். இவனுக்கும் எனக்கும் ஒற்றுமைகள் பல. இவன் திருவரங்கத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் திருச்சியில் பிறந்து வளர்ந்தவன். இவன் படித்தது திருவரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. நான் படித்தது திருச்சி இ. ரே. மேல்நிலைப்பள்ளி. இவன் மண்டல பொறியியல் கல்லூரியில் படித்தான், நான் சண்முகா பொறியியல் கல்லூரியில் படித்தேன். 'இதில் என்ன ஒற்றுமை?', என்கிறீர்களா. நாங்கள் இருவருமே வாழ்வின் பெரும் பகுதியை திருச்சியில் கழித்தவர்கள். நாங்கள் இருவருமே தமிழ் சினிமா வெறியர்கள். வெளிவரும் அனைத்து திரைப்படங்களையும் பார்த்து விடுவோம். அதே போல் இருவருக்குமே 'Patriotic Sense' என்பது அதிகம். இந்தியா மீதான பற்றுதலை நான் கூறவில்லை. பிறந்து வளர்ந்த ஊர், படித்த பள்ளி, படித்த கல்லூரி, வேலை பார்க்கும் அலுவலகம் போன்ற எதையும் நாங்கள் இருவருமே விட்டுக்கொடுக்க மாட்டோம். இவனிடம் பல சமயம் நான் கேட்பதுண்டு, 'மலை! life லெ எதையாவது நீ பரபரப்பா செஞ்சு இருக்கியாடா?' என்று. ஏனென்றால், அவன் அப்படி ஒரு slow coach. எல்லாவற்றையும் நிதானமாகத்தான் செய்வான். 9 மணி வண்டிக்கு 8:30க்கு வீட்டிலிருந்து கிளம்புவான். வீட்டிற்கும் ரயில் நிலையத்திற்கும் உள்ள தொலைவு 12 Km. இவனது இந்த போக்கால் நாங்கள் வண்டியை miss செய்த சம்பவங்களும் நடந்தேறி உள்ளன."

இது அவனை பற்றி எனது பழைய பதிவில் நான் குறிப்பிட்டது.

அவனுடன் ஒரே வீட்டில் வசித்த/பழகிய சுமார் நான்காண்டுகளில் ஒவ்வொரு நிகழ்விலும் எங்களிருவருக்கும் உள்ள ஒற்றுமையை நான் உணர்ந்திருக்கிறேன். எங்களுக்கிடையில் நடந்த விவாதங்கள், உரையாடல்கள், மற்ற தகவல் பரிமாற்றங்கள் போன்ற அனைத்திலுமே நான் எப்படி யோசிப்பேனோ, நினைப்பேனோ, செய்வேனோ அதனையே அவனும் செய்வதை கண்டிருக்கிறேன்.

பொதுவான விஷயங்களில் இவ்வாறு இருக்க, மற்ற அலுவல் சார்ந்த விஷயங்களில் அவன் எங்கோ, நான் எங்கோ. உதாரணத்திற்கு நான் கடை நிலை ஊழியனாக இருந்த காலத்திலேயே, என்னுடன் சேர்ந்த அவன் இரண்டு பதவி உயர்வுகள் பெற்றான். இப்பொழுதும் இந்தியாவின் சிறந்த கல்லூரி ஒன்றில் MBA முடித்து விட்டு உயர்ந்த பதவியில் இருக்கிறான்.

கல்லூரி முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்த அந்த இளம் வயதில் பலரும் பணம் பணம் என்று பறந்து கொண்டிருக்க அவன் மட்டும் "Serenity is more important" என்பான். "ஒரு வேலை விட்டு ஒரு வேலை மாறுவதற்கு பணம் கடைசி காரணமாக கூட இருக்க கூடாது" என்று 23 - 24 வயதில் கூறியவர்கள் அதிகம் பேரை நான் கண்டதில்லை.

அட்டகாசமான நகைச்சுவை உணர்ச்சி கொண்டவன். அவன் இருக்கும் இடம் எப்பொழுதும் கலகலப்பாக இருக்கும். நாம் அவனை எவ்வளவு ஓட்டினாலும் "இவன் ரொம்ப நல்லவன்டா" என்று சொல்வது போல சிரித்துக் கொண்டே இருப்பான். அவன் கோபம் கொண்டு நான் பார்த்ததே இல்லை. அவனது பர்ஸிலிருந்து பணத்தை மற்றும் அவனது வண்டியை அவனிடம் கேட்காமல் எத்தனையோ முறை எடுத்து சென்றிருக்கிறேன். ஒரு முறை கூட அவனிடம் கேட்கவேண்டும் என்று கூட எனக்கு தோன்றியதில்லை. அந்த உரிமை அவனாக கொடுத்ததா?, இல்லை நானாக எடுத்துக் கொண்டதா? என்பது தெரியாது. ஆனால் பள்ளி அல்லது கல்லூரிகளில் மட்டுமே கிடைக்கும் அத்தகைய நட்புரிமைகளை அலுவல் நண்பன் ஒருவனிடம் பெற்றது அரிது என்றே நான் நினைக்கிறேன்.

அவனிடமிருந்து நான் கற்றுக் கொண்டது ஏராளம். கற்றுக் கொள்ள நினைத்து முடியாமல் போனதும் ஏராளம்.

சரி, இன்று எதற்கு இந்த மலை புராணம்? என்றால், அதற்கு தகுந்தகாரணம் ஒன்று உள்ளது.

நாளை அவனுக்கு திருச்சியில் திருமணம் நடக்க இருக்கின்றது. மணமக்கள் இருவருக்கும் இந்த பதிவின் வாயிலாக எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன்.

14 Comments:

Ramya Ramani said...

உங்கள் நண்பனுக்கு வாழ்த்துக்கள் சத்யபிரியன்

வெட்டிப்பயல் said...

நாங்களும் உங்க பதிவு மூலமா வாழ்த்துகளை தெரிவிச்சிக்கறோம் :)

SathyaPriyan said...

//
Ramya Ramani said...
உங்கள் நண்பனுக்கு வாழ்த்துக்கள் சத்யபிரியன்
//
மிக்க நன்றி Ramya.

//
வெட்டிப்பயல் said...
நாங்களும் உங்க பதிவு மூலமா வாழ்த்துகளை தெரிவிச்சிக்கறோம் :)
//
மிக்க நன்றி வெட்டி. உங்கள் பதிவினையும் இப்பொழுது தான் பார்த்தேன். மிக்க மகிழ்ச்சி.

வாழ்வின் புதிய பதவி உயர்வுக்கு வாழ்த்துக்கள்.

Adiya said...

same pinch.
vimal's marriage went well and lots of interesting thing happened in this marriage. i glad about all the events happened.

very glad to share the happiness with the comment.

-a

SathyaPriyan said...

//
Adiya said...
same pinch.
vimal's marriage went well and lots of interesting thing happened in this marriage. i glad about all the events happened.

very glad to share the happiness with the comment.
//
பதிவுக்கு வந்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

நம்பினால் நம்புங்கள், இந்தப் பதிவினை எழுதும் பொழுது உங்களை பற்றித் தான் நினைத்துக் கொண்டேன். நீங்களும் இங்கே இருப்பதால் உங்களாலும் சென்றிருக்க முடியாது என்று நினைத்தேன்.

நீங்கள் நேரில் சென்று கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.

விடுமுறைக்கு இந்தியா சென்றிருக்கிறீர்களா? எவ்வளவு நாள் விடுப்பு? எப்பொழுது திரும்புவீர்கள்?

விநோத், தீபு, திலக் அனைவரும் நலமா?

Karthika said...

A very different way to wish a friend on the wedding day.

Very true....we don't get to meet best of friends once we are out of school/ college.

SathyaPriyan said...

//
Karthika said...
A very different way to wish a friend on the wedding day.
//
Thank you.

//
Very true....we don't get to meet best of friends once we are out of school/ college.
//
உண்மை. இன்று தகவல் தொழில் நுட்ப வேலை வாய்ப்புகள் அதிகமாகியுள்ளதாலும், பலரும் படித்த உடனேயே வேலைக்கு சென்று விடுவதாலும் (21 வயது) ஓரளவு நல்ல நட்ப்ய்கள் அலுவலகத்திலும் கிடைக்கின்றன.

என்றாலும், பலர் ஓரிரு வருடங்களிலேயே வேலை மாறி சென்று விடுவதால் அவை இற்று விலகி விடுகின்றன.

அரிதாக இருப்பவை சிலவே.

முரளிகண்ணன் said...

Belated wishse for our friend

SathyaPriyan said...

//
முரளிகண்ணன் said...
Belated wishse for our friend
//
வருகை தந்து வாழ்த்துக்களை தெரிவித்தமைக்கு நன்றிகள் முரளிகண்ணன்.

Sen said...

"Serenity is more important" எவ்வளவு உண்மையான‌ வார்த்தை... இப்பொ பாருங்க.. இவ்வளவு நெருங்கிய நண்பனின் திருமண நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ள முடியாத அளவு உங்க பணி நிர்பந்திக்குது...

My wishes to ur frnd...

SathyaPriyan said...

//
Sen said...
"Serenity is more important" எவ்வளவு உண்மையான‌ வார்த்தை... இப்பொ பாருங்க.. இவ்வளவு நெருங்கிய நண்பனின் திருமண நிகழ்ச்சியில் கூட கலந்துகொள்ள முடியாத அளவு உங்க பணி நிர்பந்திக்குது...
//
உண்மை Sen. சிறிது காலம் சென்ற பின்பு நாம் திரும்பி பார்க்கும் பொழுது நாம் பெற்றதை விட இழந்தது அதிகமாக இருக்கக் கூடாது என்பதே எனது அவா.

//
My wishes to ur frnd...
//
மிக்க நன்றி.

Vetrimagal said...

Best wishes to your friend on his marriage.

You are blessed to have a good friend. They are hard to come by now a days. May be you attract good friends by your nature?:-).

SathyaPriyan said...

//
Vetrimagal said...
Best wishes to your friend on his marriage.

You are blessed to have a good friend. They are hard to come by now a days. May be you attract good friends by your nature?:-).
//
Thank you Vetrimagal. It seems you have visited my blog after quiet a long time.

Thanks again.

Kavi Vino said...

Satyapriyan,
I've heard from my brother vimal about you and bubhaneshwar days.
Nice way to stay online and be in touch with all your friends.
Vinoth
(now in Portland,Oregon)