Monday, August 04, 2008


ஒரு ஒப்பீடு; ஒரு வேண்டுகோள்; ஒரு மனமகிழ்ச்சி


வணக்கம் நண்பர்களே. கீழே உள்ள இரண்டும் Behindwoods தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட சிவாஜி மற்றும் தசாவதார சென்னை நகர வசூல் தகவல்கள்.


SIVAJI

Cast: Rajnikanth, Shriya, Vivek
Direction: Shankar
Music: A.R.Rahman
Production: AVM

The fans waited for a year and a half for Sivaji’s release and it seems they still haven’t had enough of their superstar even after two months. Sivaji’s breathtaking success at the box office has created a phenomenon.

Trade Talk:
When it rains, it pours.

Public Talk:
Rajini-Shankar-Rahman trio is beyond comparison and if there’s anything that the fans are complaining about the movie, it’s the tickets.

N.O. Weeks Completed: 9
No. Shows in Chennai over the last week: 204
No. Shows in Chennai over this weekend: 123
Average Theatre Occupancy over the last week: 41 %
Average Theatre Occupancy over this weekend: 51 %
Collection over the last week in Chennai: Rs.0.22 Crores
Collection over this weekend in Chennai: Rs.0.16 Crores
Total collections in Chennai by end of the tenth weekend: Rs.10.91 Crores

Verdict: Blockbuster (History rewritten)

DASAVATHARAM

Cast: Kamal Haasan, Asin, Mallika Sherawat, Jayapradha, Nagesh, Nepolean
Direction: K S Ravikumar
Music: Himesh Reshammiya
Production: V Ravichandran

Kamal’s dream of surpassing the Nadigar Thilagam came through with Dasavatharam. An exhilarating entertainer with distinct garb and makeup for each roles and an engaging script make the movie a treat to watch.

Trade Talk:
The movie has made enough and more profits for the producer and distributors in less than a week of its release.

Public Talk:
Dasavatharam has sparked a few discussions in the blogsphere about its relevance to Hindu mythology and other interesting comparisons.


No. Weeks Completed: 9
No. Shows in Chennai over this weekend: 93
Average Theatre Occupancy over this weekend: 40 %
Collection over this weekend in Chennai: Rs. 6,63,633

Total collections in Chennai by end of the tenth weekend: Rs.10.55 Crores

Verdict: Blockbuster

இன்றைய தமிழ்சினிமா சந்தை பெரியதாகி உலக அளவில் வரும் வருவாயினை கொண்டே கணிக்கப்படும் நிலையில், சென்னை என்ற ஒரு நகரினை மட்டும் sampling செய்தோ அல்லது படத்தின் தயாரிப்பு செலவு, விநியோகஸ்தர்கள் மற்றும் தியேட்டர்களின் லாபம் போன்ற எதுவும் தெரியாமல் தசாவதாரம் சிவாஜியை முந்தி விட்டது என்றோ அல்லது முந்தவில்லை என்றோ கூறுவது முற்றிலும் சரியாகாது என்ற போதும் கீழே உள்ள தகவல்கள் ஒன்றை மட்டும் தெளிவாக கூறுகின்றன.

ரஜினியை ரஜினியால் மட்டுமே முந்த முடியும் என்ற நம்பிக்கையை சற்று வலுவாகவே அசைத்திருக்கிறது தசாவதாரம். படம் ஒரு சில இடங்களில் சிவாஜியை முந்தி இருக்கலாம், ஒரு சில இடங்களில் முந்தாமல் இருக்கலாம். ஆனால் கமல் ரசிகர்களே எதிர்பார்க்காத அளவில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது என்பது மட்டும் உண்மை. இது ரஜினி ரசிகர்களுக்கிடையும் கமல் ரசிகர்களுக்கிடையும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ரஜினி ரசிகர்கள் பாபாவின் தோல்வியினால் பாதிக்கப்பட்டதை விட அதிகமாக தசாவின் வெற்றியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கமலின் ரசிகர்களோ இன்னொரு ஆளவந்தான் போல தசாவும் ஆகிவிடுமோ என்ற பயத்துடனேயே படத்தினை வெளியிடும் வரையில் இருந்து விட்டு, அதற்கு மாறாக இப்பொழுது பெற்ற பெரும் வெற்றியினால் என்ன செய்வது என்றே தெரியாமல் திக்கு முக்காடி கிடக்கிறார்கள்.

இன்றைய கால கட்டத்தில் வசூல் சக்கரவர்த்தியாக இருக்கும் ரஜினிக்கு நிகராகவோ, அல்லது சற்று அதிகமாகவோ அல்லது சற்று குறைவாகவோ (அதாவது ரஜினியின் திரைப்படங்களின் வசூலுடன் ஒப்பிடும் வகையிலாவது) ஒரு வசூலை தமிழ் கதாநாயகன் யாரேனும் கொடுக்க முடியும் என்றால் அது கமலால் மட்டும் தான் முடியும். ஆனால் கமல் அத்தகைய வெற்றியினை கொடுக்க கடின உழைப்பு வேண்டும். ரஜினியிடம் இருக்கும் crowd pulling capability கமலுக்கு நிச்சயம் கிடையாது.

இரண்டாண்டு காலம் உழைத்து, தனது உடலை வருத்தி, பல விமர்சனங்களையும் நீதிமன்ற தடைகளையும் கடந்து 'வெற்றி கிடைக்குமா?, கிடைக்காதா?' என்ற கவலையில் உழன்று, படத்தினை வெளியிட்டு கமல் பெறும் வெற்றியினை ரஜினி எளிதாக சிகரெட்டை சாக்லெட்டை வாயில் தூக்கி போட்டு பிடித்து கைத்தட்டல்கள் வாங்கி பெற்று விடுகிறார். ரஜினியின் திரைப்படங்களுக்கு ரஜினி இருப்பதே மிகப் பெரிய selling point. ஆனால் கமலின் திரைப்படங்களுக்கு அதனையும் கடந்து பல தேவைப்படுகின்றன. சிறந்த உதாரணம் சிவாஜி மற்றும் தசாவதாரம்.

ரஜினியின் திரைப்படங்கள் "Clean Entertainers" என்ற வகைப்படுத்துதலின் கீழ் வருவதால் அதனுடன் ஷங்கரின் பிரம்மாண்டம், விவேக் அல்லது வடிவேலுவின் நகைச்சுவை, A. R. ரஹ்மானின் அருமையான பாடல்கள், ஷ்ரேயாவின் கவர்ச்சி போன்ற அனைத்தும் சேரும் பொழுது ரஜினியின் ரசிகர்களுக்கு மட்டும் அல்லாது சராசரி தமிழ் சினிமா ரசிகனுக்கும் என்ன தேவையோ அது கிடைக்கின்றது.

ஆனால் கமலினை பொருத்த வரையில் கமலின் தீவிர ரசிகர்களை திருப்தி செய்யும் விதத்தில் படம் எடுத்தால் சராசரி ரசிகனை கவராது. தயாரிப்பாளர் தலையில் துண்டு தான். சராசரி ரசிகனை கவரும் விதத்தில் படம் எடுப்பதற்கு கமலின் ego இடம் கொடுக்காது. இரண்டு வகையினருக்கும் தீனி போட வேண்டும் என்றால் தனக்காக அல்லது தனது தீவிர ரசிகர்களுக்காக முதல் 15 நிமிடங்களும் சராசரி ரசிகனை கவர்வதற்காக மீதி இருக்கும் இரண்டரை மணிநேரங்களும் ஒதுக்கீடு செய்து திரைக்கதை அமைத்தால் படம் வெற்றி பெரும். அதனையே தசாவதாரம் படத்தில் கமல் வெற்றிகரமாக செய்திருக்கிறார்.

ஆனால் இதனை அவர் தொடர்ந்து செய்வாரா? என்பது அவருக்கு மட்டுமே தெரியும். நாம் ஊகிக்க முடியாது. நம்மால் முடிந்தது கமலின் வெற்றியில் மன மகிழ்ச்சி அடைவது தான். ரஜினி ரசிகர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள். கமலின் மாபெரும் வெற்றியினை கமல் ரசிகர்களை கொண்டாட விடுங்கள். நீங்கள் கொண்டாட ரஜினியின் வெற்றிகள் காத்திருக்கின்றன.

எனக்கு தோன்றுவது என்னவென்றால், கமலின் சமீபகால திரைப்படங்களில் சண்டை காட்சிகள் நிச்சயம் அருமையாக இருக்கின்றது (ஆளவந்தான், விருமாண்டி, வேட்டையாடு விளையாடு, தசாவதாரம்). அதனால் ஒன்று நிச்சயம் கமல் தனது ego வை ஒதுக்கிவிட்டு பக்கா கமர்ஷியல் மசாலா சண்டைப் படங்களோ அல்லது முன்போலவே பக்கா கமர்ஷியல் நகைச்சுவை படங்களோ கொடுத்தால் Rajini Vs Kamal என்ற Mass Vs Class equilibrium சற்று மாறினாலும் மாறலாம்.

11 Comments:

முரளிகண்ணன் said...

மிக்க மகிழ்ச்சி

Subash said...

ஃஃஃரஜினி ரசிகர்கள் பாபாவின் தோல்வியினால் பாதிக்கப்பட்டதை விட அதிகமாக தசாவின் வெற்றியினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஃஃஃஃஃ

ஆஹா, பத்தவச்சிருவாங்களோாாா?

ஆனா,பதிவு அருமை. கருத்தும் நியாயமே!!!

சுபாஷ்.
http://hisubash.wordpress.com

SathyaPriyan said...

//
முரளிகண்ணன் said...
மிக்க மகிழ்ச்சி
//
வருகை தந்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி முரளிகண்ணன்.

//
Aneslin said...
ஆஹா, பத்தவச்சிருவாங்களோ?
//
வாங்க Aneslin. இனி பத்த வைக்க என்ன இருக்கு? ஓர்குட் தளத்தில் இவர்களின் ரசிகர்கள் அடித்துக் கொள்ளும் அழகு இருக்கிறதே.......... படு மோசம்.

//
ஆனா,பதிவு அருமை. கருத்தும் நியாயமே!!!
//
மிக்க நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

Jayaprakash Sampath said...

சத்யப்பிரியன், நல்ல சுவாரசியமான அலசல். நன்றி.

இந்த கமல் எதிர் ரஜினியிலே இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.

பாபா படம் தோல்வி அடைந்த பொழுது, ஆளுக்காள் தான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேட்டி கொடுத்து, ரஜினிகாந்துக்கு வழியனுப்பு விழா நடத்திக் கொண்டிருந்தார்கள். Chandramuki proved them totally wrong. சரி கமல் இடமாவது காலியாகுமா என்று விக்ரம் சூர்யா கோஷ்டியினர் எதிர்பார்க்க, அதையும், தசா உடைத்து எறிந்து விட்டது.

ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காமல், கமர்ஷியல் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், சத்தமில்லாமல், சென்னை 28, பருத்திவீரன், பொல்லாதவன், சுப்பிரமணியபுரம் என்று சந்திலே சிந்து பாடும் அருமையான ஒரிஜினல் படைப்பாளிகள் ஒருபுறமும், குருவி, பில்லா என்று சொதப்பும் wannabe superstars ஒரு புறமுமாகக் களை கட்டிக் கொண்டிருக்கிறது.

இடையிலே கமலும் ரஜினிகாந்தும் மேற்கொள்ளும் role reversal இன்னொரு சுவாரசியம்.உண்மையில் தசாவதாரம் மாதிரியான மசாலா ரஜினிக்கானது. குசேலன் போன்ற கவிதை, கமலுக்கானது, இல்லையா? :-)

எழுபதுகளின் மத்தியிலே, எம்ஜிஆர், சிவாஜியின் தேய்பிறை காலத்தில், இது போன்ற crisis இலே மேலெழும்பி வந்தவர்கள் தான் இளையராஜா, பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா.

எம்.ஜி.ஆரை சிவாஜியை விடவும், கமலும் ரஜினிகாந்தும் புத்திசாலிகள் என்று தான் தெரியவருகிறது.

பார்ப்போம் :-)

SathyaPriyan said...

//
Prakash said...
சத்யப்பிரியன், நல்ல சுவாரசியமான அலசல். நன்றி.
//
மிக்க நன்றி Prakash.

//
பாபா படம் தோல்வி அடைந்த பொழுது, ஆளுக்காள் தான் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று பேட்டி கொடுத்து, ரஜினிகாந்துக்கு வழியனுப்பு விழா நடத்திக் கொண்டிருந்தார்கள். Chandramuki proved them totally wrong. சரி கமல் இடமாவது காலியாகுமா என்று விக்ரம் சூர்யா கோஷ்டியினர் எதிர்பார்க்க, அதையும், தசா உடைத்து எறிந்து விட்டது.
//
இன்று அவர்கள் இருவருக்கும் உள்ள புகழ் அவர்கள் வாங்கும் சம்பளம் போன்றவற்றை மட்டும் பார்ப்பவர்கள் அதன் பின் இருக்கும் அவர்களது உழைப்பை பார்ப்பதில்லை.

அவள் ஒரு தொடர் கதையில் கமல் கதாநாயகன் இல்லை. மூன்று முடிச்சு திரைப்படத்தில் ரஜினி தனது நண்பனையே காதல் நிமித்தம் கொலை செய்யும் கொடூரமான வில்லன்.

அவள் அப்படித்தான் படத்தில் இருவருக்குமே Negative Touch இருக்கும்.

இன்று இருக்கும் நாயகர்கள் பலரும் வில்லன் டேய் என்று திட்டிவிட்டாலே தனது இமேஜ் போய்விடும் என்று நினைப்பவர்கள்.

//
ஒருத்தருக்கு ஒருத்தர் சளைக்காமல், கமர்ஷியல் பட்டாசு வெடித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில், சத்தமில்லாமல், சென்னை 28, பருத்திவீரன், பொல்லாதவன், சுப்பிரமணியபுரம் என்று சந்திலே சிந்து பாடும் அருமையான ஒரிஜினல் படைப்பாளிகள் ஒருபுறமும், குருவி, பில்லா என்று சொதப்பும் wannabe superstars ஒரு புறமுமாகக் களை கட்டிக் கொண்டிருக்கிறது.
//
சரியாக சொன்னீர்கள்.

//
இடையிலே கமலும் ரஜினிகாந்தும் மேற்கொள்ளும் role reversal இன்னொரு சுவாரசியம்.உண்மையில் தசாவதாரம் மாதிரியான மசாலா ரஜினிக்கானது. குசேலன் போன்ற கவிதை, கமலுக்கானது, இல்லையா? :-)
//
ஆமாம் முற்றிலும் உண்மை. இருவராலும் இரண்டும் முடியும் அல்லவா.

//
எம்.ஜி.ஆரை சிவாஜியை விடவும், கமலும் ரஜினிகாந்தும் புத்திசாலிகள் என்று தான் தெரியவருகிறது.
//
MGR திரையில் தனது limitation தெரிந்து செயல்பட்டவர். அவரால் தனக்காக கதையினை யோசிக்க முடிந்தது. அவரது நாடோடி மண்ணன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் அதற்கு சாட்சி. அந்த ஒரு விஷயத்தில் அவரை கமல் சரியாக பின்பற்றுகிறார். கமலால் தனக்கென கதையினை யோசித்து தயாரித்து இயக்க முடியும்.

ஆனால் சிவாஜி இயக்குனர்களை நம்பியே இருந்தமையால், தனது கடைசி காலத்தில் பெரிதாக ஒன்றும் சாதிக்க முடியவில்லை. அவரது கடைசி கால படங்களில் முதல் மரியாதை, ஜல்லிக்கட்டு, தேவர் மகன் தவிர்த்து வேறு படங்கள் நினைவில் இல்லை.

ரஜினியும் அந்த விஷயத்தில் அப்படியே என்று நான் நினைக்கிறேன். என்று இயக்குனர்கள் ரஜினிக்காக கதையினை தயாரிப்பதில் இருந்து விலகுகிறார்களோ அன்று ரஜினியின் சகாப்தம் முடிவு பெரும்.

Arunkumar said...

Nice post sathya.. orkut-la adichikiradhu irukke... appappa.... kannu ketrudhu...

in my opinion, ppl fight only bcoz they take a stand... there is no need to take a stand wrt rajini and kamal.. both mass and class r needed in film industry.. these 2 ppl have ruled tamil cinema and there wont be anyone who can exhibit the same level of MASS/CLASS these ppl showed !!!

having said that, i can never believe dasa took over / equalled sivaji's collections just bcoz the repeat audience for rajini (and his movies esp like sivaji) are so so huge compared to kamal/dasa. anyway thats just my opinion..


//
ரஜினியின் திரைப்படங்களுக்கு ரஜினி இருப்பதே மிகப் பெரிய selling point. ஆனால் கமலின் திரைப்படங்களுக்கு அதனையும் கடந்து பல தேவைப்படுகின்றன. சிறந்த உதாரணம் சிவாஜி மற்றும் தசாவதாரம்.
//

very well said sathya...

SathyaPriyan said...

//
Arunkumar said...
Nice post sathya..
//
Thank you Arun.

//
i can never believe dasa took over / equalled sivaji's collections just bcoz the repeat audience for rajini (and his movies esp like sivaji) are so so huge compared to kamal/dasa. anyway thats just my opinion..
//
I beg to differ Arun. தசாவதாரம் கமலின் திரைப்படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு மசாலா அவதாரம். மக்களுக்கு அதன் உட்பொருள் புறிகிறதோ இல்லையோ நல்ல பொழுது போக்கு நிச்சயம். நல்ல சண்டை காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை, நல்ல நகைச்சுவை, பிரமாண்டம் எல்லாம் சேர்ந்த கூட்டுக் கலவை. அதனாலேயே "Repeat Audience" அதிகமாகி படம் பெரும் வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும் கமல் தமிழ் நாட்டில் பட்டும் அல்லாமல் (அதாவது தமிழர்கள் மட்டும் அல்லாமல்) கன்னடியர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், வட இந்தியர்கள் பலரும் ரசிக்கும் நடிகர். அங்கெல்லாம் நிச்சயம் ரஜினியை விட கமலுக்கு ரசிகர்கள் அதிகம் உண்டு. அதனாலேயே தெலுங்கு தசாவதாரம் மிகப் பெரும் வெற்றி பெற்றது. ஆந்திராவில் தொடர்ந்து ஐந்து வாரங்களுக்கு இரண்டாம் இடத்தில் இருந்ததாக செய்தி.

இன்னும் ஹிந்தி படம் வெளியிடப்படவில்லை என்பதை நினைவில் கொள்க. ஹிந்தியில் சுமாராக இரண்டு வாரங்கள் ஓடினாலும் நல்ல வசூலே.

நிச்சயம் சிவாஜியை விட தசா மிகப் பெரும் வெற்றி என்றே நான் நினைக்கிறேன். (முற்றிலும் எனது சொந்தக் கருத்து.)

Mohan said...

"சராசரி ரசிகன்", "கமல் ரசிகன்" what is the definition? Don't you think if you make movie for "சராசரி ரசிகன்", the so called "கமல் ரசிகன்" will like it? Do you agree the movies சென்னை 28, பருத்திவீரன், பொல்லாதவன், சுப்பிரமணியபுரம் are liked by the "சராசரி ரசிகன்"? You classify these movies as கமர்ஷியல் மசாலா சண்டை/நகைச்சுவை படங்கள்? This post does not have valid content, avoid these kind of writings. The initial comparison OK after that you completely lost focus.

SathyaPriyan said...

//
Saradha said...
"சராசரி ரசிகன்", "கமல் ரசிகன்" what is the definition?
//
சராசரி ரசிகன் - Those who like திருப்பாச்சி, சிவகாசி etc.

கமல் ரசிகன் - Those who like குணா, அன்பே சிவம், மஹாநதி or movies you mentioned சென்னை 28, பருத்திவீரன், பொல்லாதவன், சுப்பிரமணியபுரம்.

//
Don't you think if you make movie for "சராசரி ரசிகன்", the so called "கமல் ரசிகன்" will like it?
//
NO.

//
Do you agree the movies சென்னை 28, பருத்திவீரன், பொல்லாதவன், சுப்பிரமணியபுரம் are liked by the "சராசரி ரசிகன்"?
//
Yes.

//
You classify these movies as கமர்ஷியல் மசாலா சண்டை/நகைச்சுவை படங்கள்?
//
I classify them as Good movies.

//
This post does not have valid content, avoid these kind of writings. The initial comparison OK after that you completely lost focus.
//
May be :-)

கடைசியாக உங்கள் கேள்விகளுக்கெல்லாம் பொதுவான விடையளிக்கிறேன். சென்னை 28, பருத்தி வீரன், பொல்லாதவன் போன்ற திரைப்படங்களை எல்லாம் இனி கமலிடம் எதிர் பார்க்க முடியாது. அவர் அது போல பல படங்களை முன்பே கொடுத்து பல தோல்விகளை கண்டிருக்கிறார். அந்தப் படங்கள் எல்லாம் இரண்டு மூன்று கோடிகளில் எடுக்கப்பட்டவை. அதனாலேயே அந்தப் படங்கள் வெற்றி பெற்றன.

Peer pressure என்றால் என்ன வென்று தெரியுமா? தனக்கு பின்னால் அறிமுகமான ரஜினி தன்னை முந்தி 26 கோடி குசேலனுக்கு வாங்கும் போது தான் இரண்டு மூன்று கோடிகளில் படம் எடுக்க முடியாது.

Ŝ₤Ω..™ said...

சத்யா இந்தப் பதிவினை படிக்கும் போது வைரமுத்துவின் வரிகள் நினைவிற்கு வருகிறது...

"ரோஜாவோடு மல்லிகையை அல்ல
ரோஜாவோடு ரோஜாவையே ஒப்பிடாதே..
ஒவ்வொன்றிற்கும் சுயம் உண்டு."

SathyaPriyan said...

//
Sen said...
சத்யா இந்தப் பதிவினை படிக்கும் போது வைரமுத்துவின் வரிகள் நினைவிற்கு வருகிறது...

"ரோஜாவோடு மல்லிகையை அல்ல
ரோஜாவோடு ரோஜாவையே ஒப்பிடாதே..
ஒவ்வொன்றிற்கும் சுயம் உண்டு."
//
ஆஹா என்ன அருமையான கருத்து. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Sen. நீங்களும் சண்முகா என்று அறிந்ததில் கூடுதல் மகிழ்ச்சி.