Monday, December 05, 2011


பொடிமாஸ் - 12/05/2011

சென்ற வாரம் ஜெர்மனியில் சுமார் 1.8 டன் எடையுள்ள ஒரு குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அது மண்ணில் புதைந்து இருந்தது. இரண்டாம் உலகப் போரின் எச்சங்களில் இதுவும் ஒன்று. ஒரு நகரத்தையே அழிக்கும் சக்தி வாய்ந்தது அது என்று கூறுகிறார்கள். ப்ரிட்டிஷ் காரர்கள் விமானத்தில் இருந்து வீசி இருக்கலாம் என்று கருதுகிறார்கள். நல்ல வேளையாக அது செயலிழக்க செய்யப்பட்டது. உயிர் சேதம் ஒன்றும் இல்லை. வரலாறு ஹிட்லரையும் முஸோலினியையும் மட்டுமே கொடுங்கோலர்களாக காட்டுகிறது. சர்ச்சிலும், ருஸ்வோல்ட்டும், ஸ்டாலினும் அவர்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் இல்லை என்பதையே இம்மாதிரி குண்டுகள் எடுத்துக் காட்டுகின்றன.



இரண்டாம் உலகப் போர் என்றதும் நினைவிற்கு வருகிறது, இரண்டாம் உலகப் போரினை பற்றிய ஒரு தொடர் கட்டுரை எழுத வேண்டும் என்று நெடு நாட்களாக ஆசை. நேரம் கிடைக்க வில்லை. விரைவில் எழுத வேண்டும்.



சென்ற வார இறுதியில் ஒஸ்தி படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பார்த்தேன். ரெக்கார்டட் பாடல்களுக்கு லிப் சிங்க் செய்கிறார்கள். அதையே ஒழுங்காக செய்து தொலைத்தால் என்ன? ஏதோ டப்பிங் படம் பார்ப்பது போல இருந்தது. பார்ப்பதற்கு கண்றாவியாக இருக்கிறது. இதனிடையே டி.ஆர். அவர்களின் அலம்பல் வேறு. தாங்க முடியவில்லை. இதுவரை சிம்பு நடித்துள்ள படங்களில் கோவில், தொட்டி ஜெயா, மன்மதன், VTV தவிர்த்து வேறு எந்த படத்தையும் பார்க்க சகிக்காது. இதற்கே இந்த அலம்பல் என்றால் இவர் பெரிய வெற்றியெல்லாம் அடைந்து விட்டால் நம்மவர்களின் கதி?



"வாங்க சினிமாவை பத்தி பேசலாம்" நிகழ்ச்சி முதல் வாரத்தில் சுவாரஸ்யமாகவே தொடங்கியது. பிரபு சாலமன், சத்யா (எங்கேயும் எப்போதும் படத்தின் இயக்குனர்) மற்றும் ராதா மோகன் மூவரும் பாக்யராஜுடன் உரையாடினார்கள். இரண்டாம் வாரம் நடந்த வித்தகன் படத்தின் விமர்சனத்தை பற்றிய விமர்சனம் எதுவும் எனக்கு இல்லை. ஏனென்றால் நான் படத்தை பார்க்க வில்லை. ஆனால் மயக்கம் என்ன விமர்சனம் படு சொதப்பலாக இருந்தது. படத்தினை "காமெடி" என்ற ஒரே அளவு கோலை கொண்டு அளந்தார் பாக்யராஜ். அவரே நிகழ்ச்சி முழுதும் பேசிக் கொண்டு இருந்தார். செல்வராகவனையும், தனுஷையும் பேசவே விடவில்லை. சுவாரஸ்யமே இல்லாமல் இருந்தது. மனித உணர்வுகளின் பிறழ்வுகளை காட்சிப்படுத்திய இப்படத்திற்கு இம்மாதிரியான மொக்கை விமர்சனங்கள் உச்ச கட்ட அவமானம்.



அதே நேரத்தில் சன் டிவியின் "குழந்தை பராமரிப்பு" நிகழ்ச்சி அருமையாக இருக்கிறது. ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பு. அதில் கலந்துரையாட ஒரு குழந்தை மருத்துவர் மற்றும் ஒரு செலிப்ரிட்டி கப்பிள். நன்றாக நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். குறிப்பாக எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நிகழ்ச்சி நடத்துபவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.



சமீப காலமாக ஏதோ கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள் எல்லாம் மடையர்கள் போலவும் அது இல்லாதவர்கள் எல்லாம் அதி புத்திசாலிகள் போலவும் ஒரு தோற்றம் உருவாக்கப் படுகிறது. ஏதேனும் விவாதம் என்று வந்தால் உடனே விஞ்ஞானம் அனைத்தையும் சந்தேகத்தின் அடிப்படையில் அனுகி நிரூபிக்க வேண்டுகிறது, ஆனால் ஆன்மீகம் அனைத்தையும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்றுக்கொள்கிறது என்று உளறுகிறார்கள். ஐன்ஸ்டீனின் தியரி ஆஃப் ரிலேடிவிடிக்கு நிரூபணம் கிடையாது. பிதகோரஸ் தியரத்திற்கு நிரூபணம் கிடையாது. அவ்வளவு ஏன்? நம்மவர் ஆர்யபட்டா கண்டு பிடித்த வட்டத்தின் சுற்றளவிற்கு நிரூபணம் கிடையாது. விஞ்ஞானமும் அறிவியலும் பல நேரங்களில் நம்பிக்கையின் அடிப்படையில் பல விஷயங்களை ஏற்றுக் கொள்கின்றன. அய்யா அதி புத்திசாலிகளே! ஆன்மீகம் என்பது கலவியை போன்றது. அதில் ஈடு படாதவர்களால் அதன் இன்பத்தை உணர முடியாது. அதில் ஈடு பட்டவர்களால் அதன் இன்பத்தை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.



சரி, பதிவை எதற்காக ஸீரியஸாக முடிக்க வேண்டும்? மகிழ்ச்சியாக முடிக்கலாம். மகிழ்ச்சி என்றால் சந்தோஷம். சந்தோஷம் என்றால் ஜாலி. ஜாலி என்றால் காமெடி. காமெடி என்றால் வேறு யார்? தலைவர் கவுண்டர் தான். கவுண்டரின் பாட்டுக்கு இந்த பாண்டிய நாடே அடிமையப்பா.......... எஞ்ஜாய்



4 Comments:

Arunkumar said...

bro,
eppidi irukkinga? did not know that u r back in form !

- the bomb found in germany raised my eyebrows too... never got that much media attention i believe..

- pls do write it bro.. will help ppl like me to know more !

- regarding 'osthi'.. ennatha solla.. avan "underplay" panna mattum thaan padam hit aagum. idhula appidi theriyala..
kannadi maathiri adhu idhunu ennathayo solraan.. audience-ku sangu thaan-nu nenaikuren :-(

- i did not c the first episode.. i saw the 2nd one with 'mayakkam enna' crew.. i asked my wife "will danush
and selva ever get to talk" in this episode.. vimarsanam marana mokkai, padam inime thaan paakanum

- pass :-)

- enna porutha varaikum aanmeegam=nambikkai.. thats all.. ellathukkum proof venum-na DNA test paathuttu thaan ammavaye nambanum ! ponga boss...

- Gounder's video... blockd in office.. sathigaara aapicers :-(

bro, keep writing.. always a fan of ur style of writing in tamil !

-Arun

SathyaPriyan said...

வருகைக்கு நன்றி தலைவா.

//
bro,
eppidi irukkinga? did not know that u r back in form !
//
ரொம்ப நல்லா இருகேன். நீங்க எப்படி இருக்கீங்க?

//
- pass :-)
/

:-)

SathyaPriyan said...

சொல்ல மறந்து விட்டேன். நான் உங்களை பற்றி அறிந்த வரையில் மயக்கம் என்ன? உங்களுக்கு பிடிக்காது என்பதே எனது கருத்து. ஒரு வேளை தங்கமணியின் இன்ஃப்ளூயன்ஸினால் நீங்கள் இந்த மூன்றாண்டுகளில் மாறி இருந்தால் உங்களுக்கு பிடிக்கலாம். :-)

Watch it with a grain of salt.

சரவணகுமரன் said...

அட ஆமாம்!!! அப்படியே!!!