Monday, February 13, 2012


பொடிமாஸ் - 02/13/2012

"தமிழகத்தில் சென்னை நீங்கலாக மற்ற அனைத்து இடங்களிலும் இனி எட்டு மணி நேர மின்வெட்டு" தமிழக மின்சார வாரியம் அறிவிப்பு. அது என்ன சென்னை நீங்கலாக? சென்னையில் வாழ்பவர்கள் மட்டும் தான் மனிதர்களா? பட்டுக் கோட்டையில் ஒரு லேத்துப் பட்டறை வைத்திருப்பவன், தஞ்சையில் ஒரு ப்ரௌஸிங் சென்டர் வைத்திருப்பவன், திருச்சியில் ஒரு வெல்டிங் கடை வைத்திருப்பவன் எல்லாம் என்ன செய்வது? கடையை மூடிவிட்டு தூக்கில் தொங்க வேண்டியது தானா?

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இங்கே கடும் பனிப்புயல் வீசியது. அதன் விளைவாக பல இடங்களில் மின்வெட்டு ஏற்பட்டது. அதை தொடர்ந்து தொலைக் காட்சியில் இங்கு மின்சாரம் வழங்கும் PEPCO நிறுவனத்தின் தலைவர் Thomas Graham உரையாற்றினார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் சில.

1.மொத்தம் எவ்வளவு வீடுகளுக்கு மின்வெட்டு ஏற்பட்டுள்ளது?
2.அதில் எவ்வளவு சரி செய்யப் பட்டுள்ளது?
3.மற்ற வீடுகளுக்கு ஏன் இன்னும் மின்வெட்டு சரி செய்யப் படவில்லை?
4.இரண்டு நாட்களாக இவ்வளவு பேர் மின்சாரம் இல்லாமல் இருந்திருக்கிறார்கள், நீங்கள் ஏன் முன்னரே தற்காப்பு நடவடிக்கை எடுக்க வில்லை? பனிப்புயல் வரும் என்றுதான் உங்களுக்கு முன்னரே தெரியுமே?
5.எவ்வளவு பேர் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுகிறார்கள்? ஏன் இவ்வளவு குறைவு?
6.மின்சாரம் இல்லாதவர்கள் தொலைபேசி செய்தால் ஏன் ஒருவரும் தொலைபேசியை எடுக்க வில்லை?
7.நீங்கள் எவ்வளவு தொலைபேசி அழைப்புகளை எடுத்தீர்கள்? எடுத்து அவர்களுக்கு என்ன கூறினீர்கள்? எடுக்கவில்லை என்றால் உங்களுக்கு வேறு என்ன வேலை?

இதை எல்லாம் எனது நினைவில் இருந்து எழுதுகிறேன். பாருங்கள் இரண்டு நாட்கள் மின்சாரம் இல்லை என்றால் அமெரிக்காவில் எப்படி விளைவுகள் வருகிறது என்று.

இந்தியா அமெரிக்காவின் 51 ஆவது மாநிலம் அல்ல. அது அமெரிக்கா போல மாறவும் வேண்டாம். இந்தியாவாகவே இருந்தாலே போதும். ஆனால் மக்களின் அடிப்படை வசதிகளை கவனிக்கும் விஷயத்தில் மட்டும் வளர்ந்த நாடுகளை பின்பற்றினால் நல்லது.சென்னை அணிக்கும் ட்வென்டி ட்வென்டி கிரிக்கெட் போட்டிக்கும் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. எல்லா போட்டிகளிலும் அபாரமாக விளையாடுகிறோம். அது IPL ஆக இருந்தாலும் சரி. CCL ஆக இருந்தாலும் சரி. சென்ற ஆண்டு IPL போட்டிகள் நடக்கும் பொழுது ஒரு நண்பர் சொன்னார், "IPL is a tournament in which eight to ten teams compete among each other to play the finals against Chennai Super Kings and lose." கிட்டத்தட்ட இது CCL க்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன். நாம் நிஜமாகவே நன்றாகவே ஆடினோம். குறிப்பாக ஸெமி ஃபைனல்ஸிலும் ஃபைனல்ஸிலும் நமது ஆட்டம் அபாரம்.

பொதுவாக பங்கேற்ற அனைத்து அணிகளுமே நல்ல தோழமையுடன் பங்கு பெற்றார்கள். ஆனால் கடைசி போட்டியில் கர்நாடகா தனது கேவலமான நடத்தையினால் கருப்பு புள்ளி ஒன்று அதற்கு வைத்து விட்டது. குண்டப்பா விஷ்வநாத்தின் கிரிக்கெட் ட்ரைனிங் அகாடமியில் நன்றாக விளையாடும் விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து, அவர்களை வைத்து ஒரே வாரத்தில் ஒரு திரைப்படம் எடுத்து, அவர்களை நடிகர்களாக சங்கத்தில் பதிவு செய்து, அவர்களை கொண்டு விளையாடிய கேவலத்தை செய்த அணிக்கு ரோஷம் ஒரு கேடா?

கடைசி ஓவரில் விக்ராந்த் செய்ததில் ஒரு தவறும் இல்லை. அதனால் ரோஷம் பொத்துக் கொண்டு பரிசளிப்பு விழாவில் பங்கு பெறாமல் அதை புறக்கணித்த கர்நாடகா அணியினரை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இவர்கள் அடுத்தடுத்து நடக்கப் போகும் CCL போட்டிகளில் தொடர்ந்து தோற்க வேண்டும் என்ற எனது விருப்பத்தை இங்கே பதிவு செய்கிறேன்.நேற்று Dhoni திரைப்படம் பார்த்தேன். படத்தினை பற்றி தனியாக விமர்சனம் எழுத தோன்றவில்லை. ஒரு சில உணர்வுகளை வார்த்தைகளில் விவரிக்க முடியாது. Dhoni யும் அப்படி ஒரு உணர்வு. அவசியம் படத்தை பாருங்கள். அரங்கில் எங்களையும் சேர்த்து ஆறு அல்லது ஏழு பேர் மட்டுமே இருந்தார்கள். அதில் வியப்பு ஒன்றும் இல்லை. ஏழாம் அறிவுக்கும், வேலாயுதத்திற்கும் 20 டாலர் கூட கொடுக்க தயராக இருக்கும் கூட்டம் இம்மாதிரி படங்களுக்கு 10 டாலர் கூட கொடுக்காமல் ஓசியில் நொங்கு சாப்பிடவே விரும்புகிறது. ஆனால் அந்த கூட்டத்திடமிருந்து நல்ல படங்கள் தமிழில் வருவதில்லை என்ற விமர்சனம் மட்டும் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். தமிழகத்திலாவது கூட்டம் கூடும் என்று எதிர் பார்ப்போம்.எஸ்.ரா. விழாவில் ரஜின் பங்கேற்றதை பார்த்து சாருவுக்கு பொச்செரிச்சல். கொலைவெறி மற்றும் சச்சின் பாடல்களினால் தனுஷ் பெற்ற புகழை பார்த்து சிம்புவிற்கு பொச்செரிச்சல். இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இது தான். ஒருவருக்கு திறமையினாலோ அல்லது அதிர்ஷ்டத்தினாலோ புகழ் கிடைக்கிறது. மற்றவருக்கு பொச்செரிச்சல் படுவதால் புகழ் கிடைக்கிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு சூப்புவதற்கு குச்சி ஐஸ் கூட கிடைப்பதில்லை. Moral of the story, பொச்சு இருப்பவர்கள் எல்லாம் பொச்செரிச்சல் படுங்கள்.Thalaivar is back. இன்று ஈராஸ் வெளியிட்டுள்ள புதிய போஸ்டர் இது. சிங்கம் சிங்கிளாக வந்தாலே தாங்காது. இம்முறையும் ரெஹ்மான், ரவிகுமார், தீபிகா என்று வலுவான கூட்டணியுடன் வருகிறது. இந்த கூட்டணியில் சவுந்தர்யா உப்புக்கு சப்பாணியா? இல்லை கில்லியா? என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும். அதே நேரத்தில் கமல், ஷங்கர், ஆஸ்கார் ரவிசந்திரன், ரெஹ்மான் என்ற ஒரு புதிய கூட்டணி உருவாக கூடும் என்றும் செய்தி வருகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதுவும் ஒரு மெகா கூட்டணி தான். பார்ப்போம் நடக்கிறதா என்று.

சட்ட சபையில் பிட்டு படம் பார்த்த பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா - செய்தி. "பிட்டுக்கு மண் சுமந்த பெருமானார்" கதையை தவறாக புரிந்து கொண்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். வாழ்க பாரதம், வளர்க ஜனநாயகம்.பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் காதலர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

3 Comments:

Vetrimagal said...

இந்த மாதிரி கேள்விகளுக்கு சாதாரணமாக தக்களுக்கு பதில் கிடைக்காது. ஆர் ,டீ, அய். மூலம் கேட்டால், பல மாதங்கள் கழித்து சொதப்பிய பதில் வரும்.

படித்த , மத்திய வர்க்கத்தினர் அனைவரும் பல தடவைகள் கேட்டால், ஒரு மாறுதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
தனி மனிதனைப் பற்றிய கவரைகள் யாருக்கும் இல்லையே!

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி வெற்றிமகள் மேடம். நீங்கள் நலமா? வெகு நாட்களுக்கு பின்னர் வந்திருக்கிறீர்கள்.

Vetrimagal said...

நலம்.

நீங்களும் நலம் என்று நம்புகிறேன்.

எப்படி பல நல்ல பதிவுகளை 'மிஸ்' பண்ணினேன் என்று தெரியவில்லை.
உங்கள் பெயரை பார்த்த போது'நல்ல பதிவு' என்று ஒரு ப்ளாஷ்!

உடனே படித்து , மார்க் செய்தாகி விட்டது!
உங்கள் பழைய பதிவுகளை நேரம் கிடைக்குத் போது படிக்க ப்ளான்!

நன்றி.