Thursday, March 22, 2012


அமெரிக்கா போல் இந்தியா

கடந்த பல மாதங்களாகவே இதனை பற்றிய பதிவு ஒன்று எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபத்தில் கேபிள் சங்கரின் பதிவொன்றில் எனக்கும் வேறு ஒரு நண்பருக்கும் சிறு விவாதம் நடந்தது. அவர் இந்திய அரசு அலுவலகங்களின் செயல் பாட்டை விமர்சித்து அமெரிக்க அரசு அலுவலகங்கள் போல அவை செயல் பட்டால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தார். நான் அவரது கருத்தில் முழுதாக உடன் படுகிறேன் என்பதை முதலிலேயே சொல்லி விடுகிறேன். ஆனால் அதே நேரத்தில் பலர் இந்தியர்களுக்கு சுத்தம், சுகாதாரம், அடிப்படை நாகரீகம், மனிதநேயம் ஒன்றும் கிடையாது என்ற அளவில் கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கிறார்கள். இத்தகைய கருத்து என்னை மிகவும் சஞ்சலப் படுத்துகிறது.

பொத்தாம் பொதுவாக உலகின் ஆறில் ஒரு பங்கு மக்களை "நாகரீகம் தெரியாத பட்டிக் காட்டான்கள்" என்று கூறுவது, அதுவும் அவர்களில் தானும் ஒருவன் என்று தெரியாமல் கூறுவது எந்த வகையில் நியாயம்?

"இந்தியர்கள் அனைவரும் மடையர்கள்" என்று ஒரு இந்தியன் சொன்னால், அந்த கருத்தை சொல்லும் அவனும் மடையன் தானே. அப்பொழுது மடையனின் கருத்தை உண்மையாக எப்படி எடுத்துக் கொள்ள முடியும்? எடுத்துக் கொள்ள முடியாதல்லவா? சரி என்று, அப்படி நினைத்து இந்த கருத்தை மறுத்தால் இந்தியர்கள் மடையர்கள் இல்லை என்று பொருள் ஆகிறது. அதனால் அந்த கருத்தை சொன்னவனும் மடையன் இல்லை என்றாகிறான். அதனால் அவன் சொன்ன அந்த கருத்தை ஏற்க வேண்டி இருக்கிறது. It's becoming a liar's paradox.

நான் இந்தியாவில் பிரச்சனைகளே இல்லை என்று கூறவில்லை. அதே நேரத்தில் பூஜ்ஜியத்தை கண்டு பிடித்தவரே ஆர்யபட்டா தான் என்று பழம் பெருமையும் பேசவில்லை. நான் சொல்ல வந்தது ஒன்றே ஒன்று தான்.

என் வாழ்வில் நான் இது வரையில் பெற்ற வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் எனது இந்திய பெற்றோர்கள் மற்றும் இந்தியா எனக்கு அளித்த கல்வி. ஒரு வேளை என்னை 18 வயதில் வீட்டை விட்டு வெளியில் சராசரி அமெரிக்க பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் அனுப்பி இருந்தால் நான் இந்நேரம் தேனாம்பேட்டை சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பேன். இருபத்தியோரு வயது வரை குடும்ப கஷ்டங்கள் எதுவும் தெரியாமல் என்னை வளர்த்து ஆளாக்க அவர்கள் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். "Third world attitude towards education" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உண்மையில் அத்தகைய ஒரு ஆட்டிட்யூட் அவர்களுக்கு இருந்ததினால் மட்டுமே நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

அதே போல கல்வி. எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எனது பத்தாம் வகுப்பு புத்தகங்கள் ஒவ்வொன்றின் விலையும் 10 ரூபாய்களுக்கும் குறைவு. ஆனால் அதன் அடக்க விலை பல நூறு ரூபாய்கள். ஏறக்குறைய ஐநூறு ரூபாய் விலை உள்ள புத்தகங்கள் எனக்கு சுமார் ஐம்பது ரூபாய்களுக்கு கிடைத்தது. எனது ஆசிரியர் ஒருவர் தமிழ் நாடு பாட நூல் கழகத்தின் தலைவராக அப்பொழுது இருந்தார். அவர் சொன்ன செய்தி அது. அதே போல எனது பத்தாம் வகுப்பில் நான் கட்டிய பாடக் கட்டணம் இருநூறு ரூபாய்களுக்கும் குறைவு. இன்று சென்னையில் தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பிற்கு என்ன கட்டணம் வாங்குகிறார்கள் என்று தயவு செய்து ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.

எங்கிருந்து வந்தது அந்த பணம். யார் கொடுத்தது அது? ஒவ்வொரு தமிழனும் கட்டிய வரியில் தான் நான் படித்தேன். இன்று உங்களால் பட்டிக்காட்டான்கள் என்று கூறப்படும் ஒவ்வொருவனின் உழைப்பும் இன்று நான் உபயோகிக்கும் விலையுயர்ந்த பொருட்களில் இருக்கிறது.

உங்களில் இருந்து நான் அதிகம் வேறுபட்டவன் இல்லை என்பதால் என்னால் உறுதியாக இன்னும் ஒன்றையும் கூற முடியும். என்னை போலவே உங்களின் வெற்றிகளுக்கும் பல இந்தியர்கள், தமிழர்கள் அஸ்திவாரமாக இருந்திருப்பார்கள். அவர்களை தயவு செய்து கேவலப் படுத்தாதீர்கள்.

இதையும் மீறி உங்களுக்கு இந்திய மக்களை பார்க்க ஏளனமாகவும், கேவலமாகவும், வெறுப்பாகவும் இருந்தால் இந்திய குடியுறிமையையும், பாஸ்போர்டையும் இந்திய அரசாங்கத்திடம் மீண்டும் சமர்பித்துவிட்டு அகதியாக வெளி நாட்டில் வசித்துக் கொண்டு இந்தியாவையும் இந்திய மக்களையும் விமர்சனம் செய்யுங்கள்.

வெளிநாட்டு வீசாவை இந்திய பாஸ்போர்ட்டில் வைத்துக் கொண்டு, இந்தியாவில் பெற்ற பட்டப்படிப்பையும் வைத்துக் கொண்டு இந்தியாவையும் இந்திய மக்களையும் தரம் குறைவாக திட்டுவது மல்லாந்து படுத்து எச்சில் துப்புவதை போன்றது. ஒரு வேளை நீங்கள் அப்படி துப்பினாலும் அதை துடைத்து உங்கள் முகத்தை சுத்தப்படுத்த வரும் கை ஒரு சக இந்திய பட்டிக்காட்டானின் கையாகத்தான் இருக்கும்.

கடைசியில் ஒன்றை மட்டும் கூறி பதிவை முடிக்கிறேன், "ஏற்றிவிட்ட ஏணி அதே இடத்தில் தான் இருக்கும். நீங்கள் உயரே சென்று விட்டீர்கள் என்பதற்காக ஏற்றிவிட்ட ஏணியை ஏளனமாக பார்க்காதீர்கள்".

19 Comments:

Pebble said...

//என் வாழ்வில் நான் இது வரையில் பெற்ற வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் எனது இந்திய பெற்றோர்கள் மற்றும் இந்தியா எனக்கு அளித்த கல்வி. ஒரு வேளை என்னை 18 வயதில் வீட்டை விட்டு வெளியில் சராசரி அமெரிக்க பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் அனுப்பி இருந்தால் நான் இந்நேரம் தேனாம்பேட்டை சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பேன். இருபத்தியோரு வயது வரை குடும்ப கஷ்டங்கள் எதுவும் தெரியாமல் என்னை வளர்த்து ஆளாக்க அவர்கள் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். "Third world attitude towards education" என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். உண்மையில் அத்தகைய ஒரு ஆட்டிட்யூட் அவர்களுக்கு இருந்ததினால் மட்டுமே நான் இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.//
Excellent, I totally agree with youo.

Robin said...

எல்லா இடங்களிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.
மேலை நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியதும் உண்டு அதுபோல இந்தியாவிடமிருந்து மேலைநாடுகள் கற்றுக் கொள்ளவேண்டியதும் உண்டு.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கு நன்றி Pebble மற்றும் Robin.

//
எல்லா இடங்களிலும் நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு.
மேலை நாடுகளிலிருந்து நாம் கற்றுக் கொள்ளவேண்டியதும் உண்டு அதுபோல இந்தியாவிடமிருந்து மேலைநாடுகள் கற்றுக் கொள்ளவேண்டியதும் உண்டு.
//
நிச்சயம் நான் அதை மறுக்கவில்லை Robin. aanaal ஆனால் இந்தியர்களின் உழைப்பில் முன்னேறிவிட்டு இந்தியர்களை மிகவும் கேவலமாக பொதுவில் திட்டுவதை பலர், குறிப்பாக வெளி நாட்டில் வசிக்கும் இந்தியர்கள், கூறுவதை கேட்கும் பொழுது மனதிற்கு நெருடலாக இருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் இந்தப் பதிவு.

bandhu said...

அத்தனையும் உண்மை! நானும் பலமுறை உணர்ந்திருக்கிறேன்..

Nesan said...

If you watch history of America, you will know america had all the problems once that we have still have in india. They are able to resolve the problems by agreeing and finding solutions[ by exploring so many new different things ] which we don't that effectively. Thats what makes the difference.

ஒரு வேளை என்னை 18 வயதில் வீட்டை விட்டு வெளியில் சராசரி அமெரிக்க பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் அனுப்பி இருந்தால் நான் இந்நேரம் தேனாம்பேட்டை சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பேன்.
I don't think so.Not everybody does like that.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி bandhu மற்றும் test page.

//
If you watch history of America, you will know america had all the problems once that we have still have in india. They are able to resolve the problems by agreeing and finding solutions[ by exploring so many new different things ] which we don't that effectively. Thats what makes the difference.
//

I absolutely agree with you. I am also not denying the fact that there are tons and tons of things in India which need improvement. But it is nauseating to see obnoxious statements and conclusions drawn against Indians by Indians or former Indians.

"இந்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் முட்டாள்களின் கூடம்" என்று ஒரு அறிவு ஜீவி இங்கிலாந்தில் இருந்து கொண்டு சொல்கிறார். அந்த முட்டாள்களின் கூடம் தானே முதன் முதலில் இவர் இங்கிலாந்து செல்ல இவருக்கு பாஸ்போர்ட் கொடுத்தது. அவ்வளவு ரோஷம் இருந்தால் அதை கிழித்து விட்டு அகதியாக வாழ வேண்டியது தானே. செய்ய மாட்டார்கள். கீழே உள்ள பைபிள் வாசகம் அவர்களை போன்றவர்களுக்கு இறைவன் சொல்லியதாகவே தெரிகிறது.

"You hypocrites! You build tombs for the prophets and decorate the graves of the righteous. And you say, ‘If we had lived in the days of our forefathers, we would not have taken part with them in shedding the blood of the prophets.’ So you testify against yourselves that you are the descendants of those who murdered the prophets. Fill up, then, the measure of the sin of your forefathers!

//
ஒரு வேளை என்னை 18 வயதில் வீட்டை விட்டு வெளியில் சராசரி அமெரிக்க பெற்றோர்களை போல எனது பெற்றோர்களும் அனுப்பி இருந்தால் நான் இந்நேரம் தேனாம்பேட்டை சிக்னலில் பிச்சை எடுத்துக் கொண்டிருப்பேன்.
I don't think so.Not everybody does like that.
//

நிச்சயமாக அதுதான் உண்மை. அமெரிக்காவில் ஒருவன் 18 வயதில் வீட்டை விட்டு வெளியில் வந்தால் அவனால் வாரத்திற்கு 20 மணி நேரம் வேலை செய்து தனது கல்வியை தொடர முடியும். அவனால் வீட்டு வாடகை, கார் போன்ற செலவுகளை சமாளிக்க முடியும். பெற்றோர்களின் சிறிய பொருளாதார உதவி மட்டும் ஒன்று போதும்.

ஆனால் இந்தியாவில் 12 ஆம் வகுப்பு மட்டும் படித்த 18 வயது இளைஞனுக்கு என்ன வேலை கிடைக்கும்? அவனால் கல்வியை வேலை செய்து கொண்டே தொடர முடியுமா? ஒரு சிலரால் முடியலாம். அனைவராலும் அது இயலாது என்பதே உண்மை.

Anonymous said...

ஜெய் ஹிந்த்...

SathyaPriyan said...

Was that sarcastic? :-)

வருகைக்கும் கருத்திற்கு நன்றி ரெவெரி.

sriram said...

அன்பின் சத்யா,
இந்தியாவை நேசிக்கும் ஒரு இந்திய இளைஞனைக் காண்பதில் பெருமகிழ்ச்சி.

வேறு யாரையும் விட இந்தியாவை மிக மிக அதிகம் நேசித்தவன் நான். அதே இந்தியாவை வெறுக்க ஆரம்பித்திருக்கிறேன் - காரணம் - ஊழல் / லஞ்சம். ஊழல் புரையோடிப்போன ஒரு தேசமாக இந்தியாவை இன்று காண்கிறேன். நீங்க அனுபவிச்ச எல்லா உதவிகளையும் நானும் பெற்று இன்று ஒரு நிலையில் இருக்கிறேன். நாம படிச்ச காலத்தில் இருந்த இந்தியா இன்று இருக்கிறதா என்று மனசாட்சியிடம் கேட்டுப் பாருங்கள்.

எவனாவது ஒரு உத்தம அரசியல்வாதி வந்து இந்தியாவை ஆள மாட்டானா என்று ஏங்குகிறேன். ஆனால் இந்தியா Point of No Return க்கு போய் விட்டது (ஊழல் விசயத்தில் சொல்கிறேன்) என்பதே உண்மை.

எனக்கு இருப்பது வெறுப்பு அல்ல ஆதங்கம்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

விழித்துக்கொள் said...

sriram karuththukku udanpadugiren nandri
surendran

raghavendran said...

சத்யா கூறுவது சரி பதினைந்து ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த பின் குடியுரிமை விண்ணப்பித்தேன் குறிப்பாக அமெரிக்காவில் ராணுவ சேவைக்கு இளைஞர் தேவைப்படுவதால் பள்ளி இறுதி முடித்தவுடன் சில ஆண்டுகள் பணி புரிந்து பின் கல்வி தொடர்வது நடை முறை

DHANS said...

I agree with your post, yeah we do have lot of issues to address but it doesnt mean that we always wrong.

when someone says like this it hurts those who never been like that.

instead of blaming others we should concentrate on how to change those things right.

ராஜ் said...

உங்கள் கருத்துகளுடன் நானும் உடன் படுகிறேன்....
நீங்கள் சொல்லுற ஆளுங்களை "தமிழ் நாட்டில் இருந்து கொண்டே தமிழனை கேவலமாக பேசுவது, இந்தியவில் வசித்து கொண்டே Boycott India என்று பாடுவது" எல்லாம் தமிழ் ஆளுங்கள் தான். நான் வட மாநிலத்தில் உள்ள எல்லா ஊர்களிலும் வேலை பார்த்து உள்ளேன். அவங்க ஒரு தடவை கூட இந்தியாவை கேவலமா பேசி, இல்லாட்டி அவங்க மக்களை பேசி பார்த்தது இல்லை....
உ.தா: ஒரு சர்தார்ஜி கிட்ட போய் இந்தியாவை பத்தியோ, இல்ல அவங்களை பத்தியோ கேவலமா பேசி பாருங்க..உங்க முக்கை ஓட்டசிருவார். ஆனா தமிழ்நாட்டுல கூட சேர்ந்துகிட்டு ஓட்டுவாங்க. அது தான் தமிழனுக்கும் வட இந்தியருக்கும் உள்ள வித்தியாசம்.

Anonymous said...

வேறு யாரையும் விட இந்தியாவை மிக மிக அதிகம் நேசித்தவன் நான். அதே இந்தியாவை வெறுக்க ஆரம்பித்திருக்கிறேன்

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம் //

தவறு செய்வது தாயானாலும் தட்டிக்கேட்பது தானே முறை...

வெறுப்பது...சரியான நேரத்தில் உதறி விட்டு ஓடுவது.... இந்த தலைமுறைக்கே சொந்தமான பழக்கம் அல்லவா...

முடிந்த வரை கல்லெறிந்து பாருங்கள்...அந்த கண்ணாடி ஒட்டடைகள் உடையும்... அழியும்...உலகம் சிறுத்துவிட்டது...மனிதனும் சிறுத்துவிடாமல் இருந்தால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்தே உங்கள் நாட்டை திருத்த எவ்வளவோ செய்யலாமே..

குறைகள் நிவர்த்தி செய்த திருப்தி உங்களுக்கு வேண்டுமா..
யாரோ சுத்தம் செய்த பலன் அனுபவிக்கும் சுகம் வேண்டுமா...?

பல நேரங்களில் பன்னீரை விட வியர்வை இனிக்கும்...அனுபவியுங்கள் நண்பரே...

சக தமிழன் என்ற உரிமையோடு இதை எழுதுகிறேன்...

நன்றி..ரெவெரி

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி sriram, விழித்துக்கொள், raghavendran, Dhans, ராஜ். miiL varukaikku wanRi ரெவெரி.

sriram உங்கள் கருத்தை நான் மதிக்கிறேன். அதை, அதன் பின் இருக்கும் உங்கள் மன உணர்வை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நிச்சயம் உங்களை போன்றவர்களுக்கு எதிராக இந்த பதிவை நான் எழுதவில்லை என்பதை இங்கே பதிவு செய்கிறேன். உங்களுக்கும் புரிந்திருக்கும் என்றே நினைகிறேன்.

sriram said...

அன்பின் ரெவரி..
அதே பின்னூட்டத்தில் சொல்லியிருக்கிறேன். என் உணர்வை சரியாக பிரதிபலிக்கக் கூடிய வார்த்தை - ஆதங்கம்.

நான் கண்டிப்பாக உதறி ஓடுபவனில்லை.
அமெரிக்காவில் வாழ்ந்தாலும், தமிழக வாழ் மாணவர்களுக்கு என்னாலான உதவிகளை செய்து வருகிறேன். அடுத்த சந்ததியினர் ஊழலற்ற வகையில் நடந்து கொண்டால் மட்டுமே இந்தியாவை காப்பாற்ற முடியும் என்பதை தீவிரமாக நம்பி அவர்களை தயார் செய்வதில் என் பங்கை செய்து வருகிறேன்.

இந்தியாவின் அரசியல்வாதிகள் & அதிகாரிகளின் மீதான மரியாதை / நம்பிக்கை சுத்தமாகவே அற்றுப் போய்விட்டது. இந்தியாவில் புரட்சிக்கும் சாத்தியமில்லை - தீர்வுதான் என்ன என்று தெரியவில்லை.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

நண்பர் ஸ்ரீராம்...

என் Preaching ஐ Sportive ஆ
எடுத்துக்கொண்டதற்கு நன்றி...

தொடருங்கள் உங்கள் பணியை...உங்கள் முயற்சிகள் வீண் போகாது...

வாழ்த்துக்கள்...மறுபடி சந்திப்போம்...ரெவரி

Kalee J said...

Good article Mr.Sathyapriyan. I got interested in your blog details, only after reading the related o/discussion in cable Shankar's blog.

Good comment, Mr.Revari!

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி Kalee J. தொடர்ந்து வாருங்கள்.