டிவியில் தமன்னா வந்து "ஒரே ஸ்பூன் அஜினோமோட்டோ; குழந்தை சாப்பாடு வேண்டாம்னு சொல்லவே மாட்டா" என்று ஏதாவது உளறுவதை பார்த்து மாதா மாதம் மளிகை சாமான் லிஸ்டில் மட்டும் இல்லாமல் தினமும் ரசம், சாம்பார், பிரியாணி என்று சகலத்திலும் அஜினோமோட்டோவை சேர்த்து கலந்து கட்டி அடிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்த பதிவு உங்களுக்கு தான்.
அஜினோமோட்டோ அல்லது சீன உப்பு என்று கூறப்படும் இதன் வேதியல் பெயர் "Mono Sodium Glutamate" ஆகும். இதை MSG என்று அழைப்பார்கள். இது ஒரு எக்ஸைடோடாக்ஸின் (excitotoxin) ஆகும். அதன் பொருள் என்னவென்றால் அது மூளையின் செல்களை எக்ஸைட் செய்து அவைகளை கொல்லும். அதனால் மூளை மற்றும் நரம்பியல் பாதிப்புகள் ஏற்படலாம். குழந்தைகளுக்கு பாதிப்புகள் அதிகம் ஏற்படக் கூடும். மூன்று வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இதை உணவில் கலந்து கொடுக்கவே கூடாது.
ஆய்வாளர்கள் இதனை உட்கொள்வதால் Seizures, Brain cell death, Brain damage, Allergies, Headaches, Strokes, Hypoglycemia, Brain Tumors, Chest Pain, Heart Palpitations, Nausea, Vomiting, Wheezing, Asthma போன்ற குறைபாடுகள் ஏற்படக் கூடும் என்று கருதுகிறார்கள். இவ்வளவு ஏன்? ஒரு சிலருக்கு, குறிப்பாக குழந்தைகளுக்கு மரணம் கூட ஏற்படலாம்.
அமெரிக்கா போன்ற நாடுகளில் MSG உபயோகித்து உணவு தயாரித்தால் அதற்கு கடுமையான சட்ட திட்டங்களும், அதனால் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க நுகர்வோர் பாதுகாப்பும் பெரும் அளவில் இருக்கிறது. அதனால் பெரும்பான்மையான உணவகங்களில் MSG பயன்படுத்துவது இல்லை. "NO MSG" என்று போர்டுகள் தொங்கும் உணவகங்கள் பலவற்றை நீங்கள் இங்கே பார்க்கலாம்.
ஆனால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்கள் பல இருந்தாலும் அவை எல்லாம் பெரும் அளவில் அமல்படுத்தப்படாத இந்தியா போன்ற நாடுகளில் நாம் தான் நம்மை பார்த்துக் கொள்ள வேண்டும். இன்று தமிழகத்தில் பெரும்பாலான உணவகங்களில் அஜினோமோட்டோ சேர்க்கப்படுவதாக தெரிகிறது. பலர் இல்லங்களில் இதை பயன் படுத்துகிறார்கள்.
இதை தயாரிப்பவர்கள் இது இயற்கையிலேயே பல உணவு பொருட்களில் சிறிய அளவில் இருக்கிறது என்று அதன் பயன்பாட்டை நியாயப் படுத்துகிறார்கள். இயற்கையில் கிடைக்கும் எல்லா பொருட்களும் நன்மையானதல்ல. கொக்கைன் கொக்கா இலையிலும், ஓபியம், ஹெராயின் போன்றவை பாப்பி மலரிலும், புகையிலை புகையிலை செடியிலும் இயற்கையாக கிடைக்கும் வஸ்துகள் தான். இயற்கையிலேயே கிடைப்பதால் இவை நன்மையானது என்று ஆகிவிடுமா? அப்படித்தான் MSG யும்.
அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிற்வாகத் துறை (United States Food and Drug Administration) இதனை பற்றி வெளியிட்டுள்ள அறிக்கை கீழே உள்ள சுட்டியில் இருக்கிறது. தயவு செய்து அதனை படித்து பாருங்கள். அப்படியே இதனை பற்றி கூகுளில் தேடுங்கள்.
http://www.fda.gov/ohrms/dockets/DOCKETS/02n0278/02n-0278-c000162-01-vol10.pdf
விழித்துக் கொள்வோம். அஜினோமோட்டோ என்னும் அரக்கனை ஒதுக்கித் தள்ளுவோம்.