Wednesday, June 20, 2012


கவிதை

சென்ற வாரம் தந்தையர் தினத்தை முன்னிட்டு ஆலிவ் கார்டனுக்கு சாப்பிட இரவு சென்றிருந்தோம். சாப்பாடு அருமையாக இருந்தது. அப்பொழுது பேச்சினிடையே அபி தனது தந்தை கவுதம் பற்றி ஒரு சிறிய பாடலை எழுதி இருந்தது தெரிந்தது. அதை அவன் படித்தும் காட்டினான். மிகவும் நன்றாக இருந்தது.

இன்று அவனிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது, மாண்டியை பற்றி ஒரு பாடல் எழுதும் படி சொன்னேன். அடுத்த பத்தாவது நிமிடம் வந்தது இந்த பாடல்.

My dog’s name is Monty; he always eats bounty
He is very very cute; but he’s always on mute
He’s really really small and not very tall
He is the best and keeps away pest
This is my song; it isn’t that long
He always licks my toe; and whenever I see him, he makes me glow.

-          Abhi

இப்பொழுது அபியின் வயது 11.

4 Comments:

Senthil Kumaran said...

சூப்பர். இந்த வயதில் இப்படி திறமையா? எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்து விடுங்கள்.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
11 வயதில் இத்தனை சரளமான சிந்தனையும்
மொழி லாவகமும் பிரமிக்க வைக்கிறது
எதிர்காலத்தில் நிச்சயம் போற்றத்தக்க
கவிஞனாக அபி விள்ங்கப்போவது நிச்ச்யம்
வாழ்த்துக்கள்

Arunkumar said...

I loved the last line bro... Abhi has great talent...

sridhar said...

அய்யா,நான் ஒரு அரசு பள்ளி ஆசிரியர்..பெயர் ஸ்ரீதர் சொந்த ஊர் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள காரிமங்கலம் என்ற ஊர்..இவ்வூரை நான் சொந்த ஊர் என்று சொல்லிக்கொண்டாலும் என் மனமெல்லாம் என் முன்னோர்கள் வசித்த ஸ்ரீரங்கத்தையே அனுதினமும் உச்சரிக்கிறது...நான் தற்போது பணி உயர்வில் தமிழ்நாட்டின் எந்த ஊருக்கு வேண்டுமானாலும் மாற்றிகொள்ளலாம் என்ற வாய்ப்பு வந்துள்ளது...தங்கள் பிளாக்கை எதேசையாக பார்த்து என் அதிர்ஷ்டம் என்றெண்ணி..தங்களிடம் ஒரு உதவி கேட்கிறேன்...எனக்கு ஸ்ரீரங்கம் பக்கமாக ஏதேனும் வசிக்க இடம் கிடைக்குமா?..அல்லது திருச்சியில் எனக்கு எதாவது நல்ல இடம் கிடைக்குமா...எனில் தயவு செய்து ஆலோசனை தரவேண்டும்...எனது ஈமெயில்....sridharseethu@gmail.com