Tuesday, January 22, 2013


சாவடிக்கும் குளிர்

இன்றும், நாளையும், நாளை மறு நாளும் ஆர்டிக் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடும் பணிப் புயல் காரணமாக அமெரிக்கா மற்றும் கனடாவில் பல பகுதிகளில் கடுமையான குளிர்.

இன்று -11 டிக்ரீ செல்சியஸ் வெப்பம் பதிவானது. கடுமையான குளிர் காற்று வேறு. குளிர் காற்றினால் வெப்பம் இன்னும் குறைந்து -19 டிக்ரீ செல்சியஸ் ஆக மாறியது.

இந்த குளிரில் வீட்டை விட்டு வெளியில் செல்வதே பெரும் பாடாக இருக்கிறது. இதில் மாண்டியை தினமும் மூன்று வேளை வாக்கிங் அழைத்து செல்வதை நினைத்து பார்க்கவே முடியவில்லை. இன்று காலை வாக்கிங் செல்லும் போது குளிர் காற்று என் முகத்தில் தொடர்ந்து அடித்ததில் காது மடலும் முகமும் சிவந்து போய் விட்டன. இத்தனைக்கும் தெர்மல் வேர், தடியான ஜீன்ஸ், ஸ்வெட்டர், ஸ்வெட் ஷர்ட், பெரிய வுல்லன் கோட், கிளவுஸ், குல்லாய் என்று சுமார் ஒரு ஐந்து கிலோ பொதி மூட்டையுடன் தான் எனது பயணம் இருக்கிறது. அப்படி இருந்தும் இந்த நிலை.

எனது வீட்டிற்கு பின்பு ஒரு சிறு குளம் இருக்கிறது. அதன் நீர் முழுதும் உறைந்து போய் விட்டது. இன்று மாலை நான்கு சிறுவர்கள் அதில் ஐஸ் ஹாக்கி விளையாடிக் கொண்டு இருந்தனர். அவ்வாறு விளையாடுவது மிகவும் ஆபத்தானது என்ற பொழுதும், சிறுவர்கள் அல்லவா?, கேட்க மாட்டார்கள். நாம் சிறு வயதில் பெரியவர்கள் சொல்வதை கேட்டிருக்கிறோமா என்ன?

மதியம் சூடான உணவை வாங்கிக் கொண்டு அலுவலகம் வந்தேன். ஒரு ஐந்து நிமிட நடை தான் இருக்கும். ஆனால் அதற்குள் உணவு ஜில்லென்று ஆகிவிட்டது. அதை மீண்டும் அலுவலகத்தில் இருந்த மைரோவேவ் அவனில் சூடு செய்து சாப்பிட வேண்டியதாகி விட்டது.

அவ்வளவு ஏன்? தம் கூட நிம்மதியாக அடிக்க முடியவில்லை. இப்போது தான் ஒரு தம் அடித்து விட்டு வீட்டின் உள் நுழைகிறேன். கை விரல்கள் குளிரில் அப்படியே விரைத்து போய்விட்டன. வீட்டுக்குள் வந்த ஐந்து நிமிடங்களுக்கு கையை மூடி திறக்க முடியவில்லை.

அமெரிக்கா வந்த எட்டு ஆண்டுகளில் இப்படி ஒரு குளிரை நான் பார்த்ததில்லை. ம்.... இதுவும் ஒரு அனுபவம். அனுபவங்களை அனுபவிக்கும் போதே ஆவணப்படுத்திவிட வேண்டும். அந்த நோக்கத்துடன் இதோ பதிவெழுதி விட்டேன்.

5 Comments:

Anonymous said...

இந்த ஆண்டு கடுமையான குளிரே கனடாவிலும் பதிவாகியுள்ளது, டொராண்டோவில் கடும் குளிருக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொடுமையில் கொடுமை, இக் குளிரில் பேருந்துகளில் போவது தான் ..

Anonymous said...

முகமும் சிவந்து போய் விட்டன//

அப்ப FAIR N LOVELY செலவு மிச்சம்னு சொல்லுங்க...-:)

SathyaPriyan said...

//
இக்பால் செல்வன் said...
இந்த ஆண்டு கடுமையான குளிரே கனடாவிலும் பதிவாகியுள்ளது, டொராண்டோவில் கடும் குளிருக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கொடுமையில் கொடுமை, இக் குளிரில் பேருந்துகளில் போவது தான் ..
//
இந்த குளிரே என்னை சாவடிக்கிறது. கனடாவில் வாழ்பவர்களின் நிலையை என்னால் நினைத்து கூட பார்க்க இயலவில்லை. வருகைக்கு மிக்க நன்றி.

//
ரெவெரி said...
முகமும் சிவந்து போய் விட்டன//

அப்ப FAIR N LOVELY செலவு மிச்சம்னு சொல்லுங்க...-:)
//
ஆஹா! இதுல இப்படி ஒரு விஷயம் இருக்கா? தெரியாம போச்சே.

வருண் said...

You have a dog? Interesting. :) This winter seems little bit severe everywhere. You need to stay warm!

Recently 3 people (dad (36) and two children (sons)(10 & 8)) died when they went for hiking. When they went for about 8 miles hiking, unexpectedly the weather changed and temp dropped drastically, they did not wear proper clothing. He did not charge his cell-phone properly either and so it became useless when they needed it to call for help! While coming back, they took a wrong turn- they say- to come to the lodge they were staying, as it was very dark and, so they could not get back and got lost and may be going around and around. They all died due to "hypothermia".

After his wife reported, The police tried to rescue them that evening, but the rescuers could not able to locate them as it was dark. When they found them, only next day, the dad was dead and the kids died in the hospital. They all died of hypothermia as they could not maintain their body temp high enough to leave. All the organs shut down as their body got cold..It was terrible!

The kids playing on the ice is dangerous thing..What can you do?

Someone actually tried to give these three hikers a ride (mentioning that the weather changes and all), but the dad turned down his offer (ride home). It was stupid of that dad but he was working for air-force or something ..

Anyway, stay warm!

கார்த்திக் சரவணன் said...

தங்களது தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். முடிந்தால் சென்று பார்க்கவும். நன்றி

http://blogintamil.blogspot.in/2013/08/blog-post_17.html