Sunday, February 10, 2013


பொடிமாஸ் - 02/10/2013

டோண்டு சாரின் மரணம் மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. தமிழ் வலையுலகமே அதை கண்டு அதிர்ந்து கொண்டிருக்கிறது. கடைசியாக எனக்கு தெரிந்து தேன் கூடு சாகரன் அவர்களின் மறைவுக்கு தான் வலையுலகம் இப்படி அதிர்ந்தது. டோண்டு - போலி டோண்டு - இரவுக் கழுகார் - ஸ்பெஷல் ஆப்பு - விடாது கருப்பு - ஸல்மா அயூப் - முரளி மனோஹர் - எல்லாவற்றுக்கும் மேலாக "தலித் கம்னாட்டி" இதையெல்லாம் நீங்கள் கடந்து வந்திருந்தால் டோண்டு கடந்து வந்த பாதையின் வீரியம் உங்களுக்கு விளங்கும்.

ஆனால் ஒன்று, இந்த போலி விவகாரத்தை பெரிதாக வளர்த்து விட்டதும் அவரே, அதனால் அதிகம் பாதிக்கப்பட்டதும் அவரே என்று மட்டும் நான் நிச்சயம் நம்புகிறேன். இந்த விவகாரத்தை அவர் சிறிது நாசூக்காகவும், டிப்ளமடிக்காகவும் கையாண்டிருக்க வேண்டும், ஆனால் செய்ய தவறி விட்டார். அவரும் பல பதிவர்களும் மூன்றாண்டுகளுக்கும் மேலாக சந்தித்த மன உளைச்சலுக்கு போலி டோண்டு எவ்வளவு காரணமோ, அதே அளவு அவரும் காரணம்.

Sir, You should have been remembered for your prodigious command over English, alluring memory power, abundant experience you carry, art of ruthlessly combining confrontation with negotiation, stubborn nature and many more.

Alas, it’s preposterous that you have been remembered for your jingoistic arguments with “Poli” Dondu and blatant display of abysmal craving for the lime light aka hits to your blog. The rationales behind which though are still unknown, I believe it is a sheer victory for “Poli” Dondu.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஷூச:

பொருள்: எல்லா பற்றுகளையும் விட்டு விட்டு என்னை தஞ்சம் அடை. உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் நான் காத்து உனக்கு மோக்ஷத்தை அளிக்கிறேன்.

டோண்டு சார், உங்கள் பெருமாள் பாபம் செய்தவர்களுக்கு கூட வைகுண்ட பதவி அளிக்கிறார். உங்களுக்கா அளிக்க மாட்டார். அங்கும் யாராவது பாப்பானை திட்டினால் அவனுடன் சண்டைக்கு போகாமல் அங்காவது நிம்மதியாக இருங்கள். RIP, good Sir.


இந்த வாரம் Parker மற்றும் Bullet to the head இரண்டு படங்களும் பார்த்தேன். இரண்டுமே ஒரு முறை பார்க்கலாம். வழக்கமான ஆக்க்ஷன் படங்கள். அடுத்த வாரம் Die Hard வெளியாகிறது. Skyfall DVD யும் வெளியாகிறது. இரண்டையும் பார்த்துவிட வேண்டும். இன்னும் ஒரு வார காலம் எவ்வளவு அராஜகம் செய்ய முடியுமோ அவ்வளவும் செய்து விட வேண்டும். ஆறு வார விடுப்புக்கு பின் தங்கமணி அடுத்த வாரம் வருகிறார். அதன் பிறகு கப் சிப் காரா பூந்தி தான்.


கடந்த வாரம் அலுவல் நண்பர் ஒருவருடன் (ஆந்திராவை சேர்ந்தவர்) பேசிக் கொண்டிருந்த போது அவர் "விஷ்வரூபம் தெலுங்கில் பார்க்க வேண்டும், படம் எப்படி இருக்கிறது?" என்று கேட்டார். நான் "நன்றாக இருக்கிறது, ஒரு முறை பார்க்கலாம்" என்று சொன்னேன். அவர் "குழந்தைகளை அழைத்து செல்லலாமா?" என்று கேட்டார். அதற்கு நான், "படத்தில் கையை வெட்டுவது, கழுத்தை அறுப்பது, நெஞ்சில் குத்தி கொல்வது போன்ற காட்சிகள் இருக்கின்றன, நீங்களே முடிவு செய்யுங்கள்" என்று சொன்னேன். உடனே அவர், "அதெல்லாம் பாதகம் இல்லை, செக்ஸ் காட்சிகள் இல்லையே?" என்றார்.

எனக்கு சிரிப்பதா இல்லை அழுவதா என்று தெரியவில்லை. வன்முறையையை விடவா, சக மனிதனை வெட்டிக்கொல்வதை விடவா செக்ஸ் ஆபத்தானது? செக்ஸ் என்றாலே கெட்ட வார்த்தை என்று கூறியே குழந்தைகளை வளர்ப்போம், பின்னர் கற்பழிப்பு குற்றங்கள் நடக்கும் போது அதனை கண்டித்து பதிவெழுதுவோம்.


அஜ்மல் கசாபை தொடர்ந்து அஃப்சல் குருவையும் போட்டாகி விட்டது. நமது அரசாங்கத்துக்கு இப்போது தான் முதுகெலும்பு இருக்கிறது என்பது கொஞ்சமாவது தெரிகிறது. இதை செயல்படுத்திய அரசாங்கத்துக்கு எனது நன்றிகள். பாராளுமன்ற தாக்குதலில் இறந்த ஏழு அப்பாவிகளின் குடும்பத்தினரும் இனி துளியாவது மகிழ்ச்சி அடைவார்கள். வழக்கம் போலவே ஒரு கூட்டம் இந்த தூக்கிற்கும் எதிராக கூச்சல் போட தொடங்கி இருக்கிறது. இந்த தூக்கு தண்டனை எதிர்ப்பாளர்கள் எல்லோரும் மேனகா காந்தி வகை பார்ட்டிகள். தெரு நாயினால் கடித்து குதறப்படும் சிறுமியின் பாதுகாப்புக்கு வராமல், நாயின் பாதுகாப்புக்கு வரும் கூட்டம் அது.


Dell நிறுவனம் தனது வீழ்ச்சியை சமாளிக்க இயலாத காரணத்தால் பங்கு வர்த்தகத்திலிருந்து வெளியேறி முழூ தனியார் நிறுவனமாக மாற இருக்கிறது. இதற்காக ஒரு தனியார் எக்விட்டியிடம் சுமார் 24 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் வாங்கி இருக்கிறது. 1997 ஆம் ஆண்டு Steve Jobs Apple நிறுவனத்தில் சேர்ந்த போது பத்திரிக்கையாளர்கள் "நீங்கள் Steve Jobs இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்?" என்று கேட்ட கேள்விக்கு Michael Dell பின்வருமாறு கூறினார்.

What would I do? I'd shut it down and give the money back to the shareholders.

அப்போது Apple நிறுவனம் வீழ்ச்சியின் உச்சியிலும், Dell நிறுவனம் வெற்றியின் உச்சியிலும் இருந்தன. ஆனால் இப்போது நிலைமை தலை கீழ்.

06-Aug-1997Today
Apple (price per share)$25.25$474.98
Dell (price per share)$81.62$13.63
Apple (market cap)$2.58B$446.03B
Dell (market cap)$27.3B$23.68B

"யாகாவாராயினும் நா காக்க" என்று அய்யன் வள்ளுவன் சொன்னது எவ்வளவு உண்மை.


சென்ற வாரம் முழுதும் தொலைக்காட்சியில் புரட்சி தலைவர் படங்களாக ஒளிபரப்பி தள்ளினார்கள். ஒரு நாள் நினைத்ததை முடிப்பவன், மறு நாள் குடியிருந்த கோவில், அதற்கு மறு நாள் பெரிய இடத்து பெண் என்று ஒரே ரகளையாக இருந்தது. அடிமை பெண் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. இணையத்தில் தேடிப் பார்க்க வேண்டும்.

இதை பற்றி நண்பர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, MGR படங்கள் எல்லாமா பார்ப்பீர்கள்? என்று வியப்புடன் கேட்டார். அவர் தலைவர் படங்களை பார்த்ததே இல்லையாம். அவரிடம் தலைவர் பற்றி என்ன கூறுவது. சிரித்துக் கொண்டேன். ஒரு சில அனுபவங்களை எல்லாம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அனுபவிக்க வேண்டும்.

அதிலும் பெரிய இடத்து பெண் படத்தில் "கட்டோடு குழலாட ஆட" பாட்டில் இரண்டு மாமன் பெண்களுடன் விரசமே இல்லாமல் கெட்ட ஆட்டம் போடுகிறார் தலைவர். என்ன ஆர்கெஸ்ட்ரேஷன், என்ன கொரியோக்ராஃபி, அடடா அருமையிலும் அருமை. P. சுசீலாவும் L. R. ஈஸ்வரியும் சேர்ந்து பாடிய பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது தான். புரட்சி தலைவரின் படங்களே பார்க்காத எனது நண்பரை போன்றவர்களுக்கு ஸ்டார்டராக "அன்பே வா" படத்தை பரிந்துரைக்கிறேன். நடிகர் திலகம் படங்களில் பரிந்துரைப்பது "ராஜபார்ட் ரெங்கதுரை".

11 Comments:

Senthil Kumaran said...

உங்கள் பதிவின் முதல் பத்தி எனக்கு ஒரு மண்ணும் விளங்கவில்லை. அதனால் கருத்து இல்லை.

ஆனால் பின்னூட்ட ஆசை என்பது அவ்வளவு பெரிய குற்றமா? இரங்கல் பதிவில் அதனை எழுத வேண்டிய அவசியம் என்ன?

நம்பள்கி said...

நடிகர் திலகம் படங்களில் பரிந்துரைப்பது "ராஜபார்ட் ரெங்கதுரை".

உண்மையாலுமா? இல்லை உள்குத்தா???

bandhu said...

முதல் பாரா கொடுமையான அஞ்சலிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்த விவரங்கள் எதுவும் நான் முழுமையாக அறியேன் என்றாலும், நான் அறிந்தவரை அவர் செய்தது மிக சரி என்றே நினைக்கிறேன். அப்படியே தவறாக இருந்தாலும், அதை எழுதும் சமயம் இதுவல்ல. அவர் இருந்தபோது எழுதியிருக்கவேண்டும். இப்போது அவர் பதில் அளிக்க சந்தர்ப்பம் இல்லாதபோது இதை எழுதியது தவறு. அதுவும் அஞ்சலி என்ற பெயரில்!

SathyaPriyan said...

@Senthil Kumaran, @bandhu,

டோண்டு சாரை பற்றி நான் இதற்கு முன்னர் பதிவிட்டது கிடையாது. இனியும் பதிவிட போவதும் கிடையாது. இதுவே முதலும் கடைசியுமான பதிவு. அதனால் சொல்ல நினைத்ததை நேர்மையாக சொல்லிவிட வேண்டும் என்றே சொல்லிவிட்டேன். அதுவும் கூட இவ்வளவு உயர்ந்த பண்புகளை உடையவர் இறுதியில் தகாத முறையில் அடையாளம் காட்டப்பட்டு விட்டாரே என்ற ஒரு ஆதங்கத்தில் எழுதியது தான். உங்கள் மனம் வருந்தி இருப்பின் என்னை மன்னிக்கவும்.

மற்றபடி அவர் செய்தது சரி என்று நான் நினைக்கவில்லை. தவறு அவர் மீதும் நிச்சயம் உண்டு. அதனால் ஏற்பட்ட ஒரு சில கசப்பான அனுபவங்களும் எனக்குண்டு.

பதிவின் கடைசி பத்தியில் நான் சொல்லியதையே இங்கே மீண்டும் சொல்கிறேன். ஒரு சில அனுபவங்களை எல்லாம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அனுபவித்தால் தான் அதன் வலி தெரியும்.

Senthil Kumaran said...

//
ஒரு சில அனுபவங்களை எல்லாம் வார்த்தைகளில் விவரிக்க இயலாது. அனுபவித்தால் தான் அதன் வலி தெரியும்.
//

சத்யன்,

உங்களை காயப்படுத்த அந்த கேள்வியை நான் கேட்கவில்லை. உண்மையாகவே தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் தான் கேட்டேன்.

bandhu said...

சத்யன்.. அஞ்சலி பகிர்வில் இது வேண்டுமா என்றே கேட்டேன்.. சரி தவறு என்பதை தாண்டி அதை கேட்கும் நேரம் என்று ஒன்று உண்டல்லவா? போகட்டும் விடுங்கள்.

SathyaPriyan said...

@bandhu,

நீங்கள் சொல்வது தான் சரி என்று இப்போது எனக்கு தோன்றுகிறது. ஆனாலும் சொல்லிய சொல்லையும், சிந்திய பாலையும் போலத்தான் எழுதிய பதிவும். அதை திரும்ப பெறுவதால் ஒரு நன்மையும் இல்லை. அதனால் எழுதியது எழுதிய படியே இருக்கட்டும். (இது கூட ஒரு முறை டோண்டு சொன்னதுதான்).

வருகைக்கு நன்றி.

@நம்பள்கி,

விளையாட்டுக்கு சொல்ல வில்லை. ஒரு நாடக நடிகனாக வந்து பல பாத்திரங்களில் அசத்தி இருப்பார். Hamlet பாத்திரத்தில் கூட ஒரு காட்சியில் வருவார். நடிகர் திலகத்தை பிடித்தவர்களுக்கு இந்த படம் மிகவும் பிடிக்கும்.

நண்பா said...

நான் வலை பதிவில் நுழைந்த நேரம் போலி டோண்டு issue ஆரம்பிச்ச நேரம். யாரு நல்லவங்க யாரு கெட்டவங்க தெரியல. அப்போ ரொம்ப interesting இருந்துச்சு. ஆனா அவருடைய guts till the end of the issue to the Cyber Crime we can appreciate'nu நினைக்கிறேன். Though I agree with your other observation.

RIP Dondu Sir..

SathyaPriyan said...

@Siva,

நான் சொல்ல வந்ததன் உட்கருத்தை விளங்கிக் கொண்டமைக்கு நன்றி.

பழூர் கார்த்தி said...

அருமையான பொடிமாஸ்..
டெல்-லைப் பற்றிய பகுதி சூப்பர்..
//"யாகாவாராயினும் நா காக்க" என்று அய்யன் வள்ளுவன் சொன்னது எவ்வளவு உண்மை//

படித்து, ரசித்தேன் :)

SathyaPriyan said...

வாங்க பழூர் கார்த்தி. ரொம்ப நாட்கள் கழித்து வந்திருக்கிறீர்கள். 'சோம்பேறி பையன்' நலமா? :-)

முதல் பத்தி எழுதும் போது உங்கள் நினைவும் வந்தது.