தரம் தாழ்ந்து செய்திகளை வெளியிடுவதில் புதிய சாதனை செய்து இருக்கும் குமுதம் ரிப்போர்ட்டரையும் அதன் ஆசிரியரையும் மனம் நெகிழ பாராட்டுகிறேன். செய்தியை படித்த திமுக மற்றும் திக தொண்டர்கள் உணர்ச்சி வசப்பட்டு போராட்டத்தில் ஈடு பட்டு அதில் தர்மபுரியை போல, மதுரையை போல அப்பாவி பொது மக்கள் சிலர் இறந்து போனால் நமக்கென்ன. நமக்கு எதற்கு சமூக பொறுப்பு? நமக்கு தேவை பரபரப்பு தலையங்கம் தானே.
இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.
இந்த நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.
10 Comments:
ஏன்?
எப்படி ஒரு கேவலமான தலைப்பு? பத்திரிக்கை விற்பனைக்கு இப்படி ஒரு தரம் தாழ்ந்த வேலை.
ஆயிரம் குற்றச்சாற்று குஷ்பூ
மீது இருந்தாலும் இது மிகவும் கண்டிக்கத்தக்கது.
குமுதம் குழுமத்துக்கு கலைஞரை திட்டினால் அம்மா அவர்களின் அருள் கிடைக்கும் என்று இதற்கு முன்பு கமல் பிரச்சினைக்கு காரணமே அவர் தன் என்று அம்மாவே யோசிக்காத அளவு பல assumptions they published..
இப்போ இது மிகவும் அருவருப்பான ஒரு செயல். :(
ஏன் இவனுகளுக்கு இந்த கொலைவெறி?!
ஊடக சுதந்திரம் காப்போம்.
கருத்து சுதந்திரம் காப்போம்.
எழுத்துரிமையை கைவிடோம்.
@வருண், @Siva,
கேவலமானவர்களிடம் கேவலத்தை தான் எதிர் பார்க்க முடியும். நமது எம்ஜிஆரில் கூட இவ்வளவு கீழ்தரமாக செய்தி போட யோசிப்பார்கள்.
@ஆஷிக் பாய்,
நீங்கள் இந்த பத்திரிக்கை செய்தியை மட்டும் மனதில் வைத்துக்கொண்டு சொன்னால் உங்கள் கருத்துடன் உடன் படுகிறேன். உங்கள் ஸர்காஸத்தை ரசிக்கிறேன்.
ஆனால் விஷ்வரூப விவகாரத்தை மனதில் வைத்து சொன்னால் எனது பதில் வேறு :-)
இது கேவலமான தலைப்பு என்பதில் எந்த சந்தேகமில்லை. ஆனால், இதன் பின்னால், திமுகா வில் குழப்பம் ஏற்படுத்த வேண்டும் என நினைக்கும் ஜெயாவோ, கேடி சகோதரர்களோ செய்திருக்கலாம். வாரிசு பிரச்சனையை முடிக்க வாரிசுகளில் ஒருவரே செய்திருக்கலாம். ஆழம் பார்க்க கருணாநிதியே செய்திருக்கலாம். நாம் நினைக்கிற அளவு இது கேவலமான ரிப்போர்டிங் மட்டும் இல்லை!
\\"குமுதம் ரிப்போர்ட்டருக்கு எனது பாராட்டுகள்"\\ thitta vendiyavarkalukku ippadi oru thalaippu vaithathu mattum sariyaa?
சரி, இந்த தலைப்பை யாரேனும் ஒரு நிருபரிடம் கேட்டால் நியாயப்படுத்தி விட்டு போகிறார்!. குறை சொல்லும் தாங்களும் தங்களைப்போன்றவர்களும் தான் வேறு வகையாக - பாலியல் ரீதியாக - தொடர்பு படுத்துகிறீர்கள்.
தி.க. வரலாற்றில் மானமிகு. மணியம்மையார் இந்த நோக்கத்தில் சித்தரிக்கப்படுவதில்லை மேலும் அவர் தொடர்பான நிகழ்வுகள் அந்த இயக்கத்தின் பிளவிற்கு காரணாமாகவே சுட்டப்படுகிறது.
//
நாம் நினைக்கிற அளவு இது கேவலமான ரிப்போர்டிங் மட்டும் இல்லை!
//
இருக்கலாம் bandhu. அதுவும் குறிப்பாக விஷ்வரூப விவகாரத்தில் அம்மையார் லூசுத்தனமாக பத்திரிக்கைகளுக்கு தமிழக காவல் துறையின் மொத்த ஓட்டைகளையும் சுட்டிக் காட்டிவிட்டார்.
இன்று உலகம் முழுதும் இருப்பவர்களுக்கு தமிழகத்தில் எந்த ஸ்கேலில் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தினால் தமிழக காவல் துறையால் அதை கட்டுப் படுத்த முடியாது என்பது விளங்கி இருக்கும்.
It was an effing example of a bad administrative decision.
//
thitta vendiyavarkalukku ippadi oru thalaippu vaithathu mattum sariyaa?
//
இது ஒரு ஸர்காஸ்டிக் பதிவு.
//
குறை சொல்லும் தாங்களும் தங்களைப்போன்றவர்களும் தான் வேறு வகையாக - பாலியல் ரீதியாக - தொடர்பு படுத்துகிறீர்கள்.
//
இல்லை அது எனது நோக்கம் அல்ல. கலைஞரும், குஷ்புவும் திருமணம் செய்வதும், செய்யாமலே சேர்ந்து வாழ்வதும் அவரகள் சொந்த விஷயம். அது மீதெல்லாம் எனக்கு கருத்து கிடையாது. கருத்து இருந்தாலும் சொல்வதற்கு எனக்கு உரிமை கிடையாது. அடுத்தவரின் சொந்த விஷயத்தில் மூக்கை நுழைப்பது அநாகரீகத்தின் உச்சம்.
ஆனால் எனது பதிவின் மையமே, இம்மாதிரி தலைப்பு வைத்து அதனால் ஏதேனும் போராட்டம் வந்து யாராவது அப்பாவிகள் உயிர் இழந்தால் அதற்கு யார் பொறுப்பு?
ஸ்டாலினுக்கு 60 சதவிகிதமும், அழகிரிக்கு 2 சதவிகிதமும் தொண்டர்கள் ஆதரவு இருக்கிறது என்று வெளியான செய்தியினால் மதுரையில் அப்பாவிகள் கொல்லப்பட்டார்களே.
நீதிமன்ற தீர்ப்பினால் தர்மபுரியில் மாணவிகள் உயிருடன் தீ வைத்து கொளுத்தப்பட்டார்களே.
தர்மபுரி சம்பவத்திலாவது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுரை சம்பவத்தில்? இன்றும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லையே. ஒருவேளை இறந்தவர்கள் அனைவரும் தங்களுக்கு தாங்களே நெருப்பு வைத்துக் கொண்டார்கள் என்று காவல் துறை நம்புகிறது போலும்.
இருந்தாலும் நீங்க அமெரிக்காவில் இருந்து கொண்டு ஊர்லே நடக்கிறதை பற்றி ரொம்பதான் கவலைபடுறிங்கஜீ, ஆனா ஊர்லே இருப்பவர்களுக்கு (அப்பாவி ஜனங்களுக்கு) இதைப்பற்றி கவலைப்பட நேரமில்லை.ஏன்னா முதல்லே எல்லாம் பட்ஜெட் வந்தா விலை ஏறும் என்பார்கள். இப்போது தினமும் உயரும் டீசல் விலையால், தினம் விலை உயர்வு என்ற சிக்கலில் மாட்டி முழி பிதுங்கி நிற்கிறார்கள்.
குமுதம் ரிபோர்டர் கருத்தும் படமும் கண்டனத்துக்குரியதெ.
பத்திரிக்கைகள் படிப்பதை நிறுத்தி நாளாகிறது. இப்போதெல்லாம் மீடியாக்களின் நோக்கமே எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதே. நடுத்தரமாக அலசி உண்மை செய்திகளுக்கு அவற்றை நம்புவது சரியல்ல.
Post a Comment