குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
மனதில் உதித்தவை..!!..!!..!!
"உண்மையில் உங்களை பொன்னியின் செல்வனை விட கவர்ந்த புத்தகம் எது?", என்று வெட்டிப்பயல் அவர்கள் என்னை கேட்டார்கள். அதன் விளைவுதான் இந்த பதிவு.
நான் படித்த வரையில் பொன்னியின் செல்வனை விட எனக்கு அதிகம் பிடித்த நாவல் எதுவும் இல்லை. ஆனால் பொன்னியின் செல்வனை விட என்னை அதிகம் பாதித்த நாவல்கள் சில உண்டு. ஏன் 'சில' என்று குறிப்பிடுகிறேன் என்றால் நான் படித்தவைகள் மிகச் சிலவே.
1. நாவல்: சுழிக்காற்று, ஆசிரியர்: கௌசிகன்
1970 களில் கல்கியில் தொடராக வெளிவந்த இந்த நாவல் நான் படித்த துப்பறியும் நாவல்களுக்கெல்லாம் ஆசான் என்று கூறுவேன். விடுமுறையை தனது காதலியின் கிராமத்தில் கழிக்க சென்னையிலிருந்து அவளது கிராமத்திற்கு வரும் துப்பறியும் நிபுணன் சேகர், அங்கே நடக்கும் தொடர் கொலைகளை கண்டு, அதற்கான காரணங்களையும், அதை செய்தவர்களையும் அனைவருக்கும் அடையாளம் காட்டுவதே கதை. கதை ஒன்றும் புதிது இல்லை என்றாலும், கதைக்களமும், சம்பவங்களும், அதை ஆசிரியர் கூறும் விதமும் என்னை வெகுவாக கவர்ந்தன. முடிவில் எல்லா முடிச்சுக்களும் அவிழும் பொழுது நமக்கு அளவில்லா ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. குற்றவாளிகள் மட்டும் நமது ஆச்சரியத்தை கூட்டவில்லை, குற்றத்திற்கான காரணங்களும் நமக்கு வியப்பளிக்கிறது. கால் நூற்றாண்டுக்கு பிறகு இப்பொழுது படித்தாலும் சுவை குன்றாமல் இருப்பதே இதன் சிறப்பாகும்.
2. நாவல்: போராட்டங்கள், ஆசிரியர்: ர. சு. நல்லபெருமாள்
இதுவும் கல்கியில் தொடராக வந்த நாவலே. இக்கதையின் சம்பவங்கள் 1960 களில் நடக்கின்றன. கதையின் நாயகன் முரளி ஒரு பத்திரிக்கை ஆசிரியர். நேர்மையாக, தரம் வாய்ந்த பாரதமணி என்ற ஒரு பத்திரிக்கை நடத்த அவர் சந்திக்கும் போராட்டங்களே கதை. இந்தோ சீன போர் நடந்த கால கட்டங்களில் சம்பவங்கள் நடப்பதாலோ என்னவோ கம்யூனிஸ, சீன, ரஷ்ய எதிர்ப்புகள் கதை முழுவதும் இருக்கின்றன.
முடிவில் தனது சொத்துக்கள் அனைத்தையும் அவர் இழந்து வெளிநாட்டுக்கு செல்லும் பொழுது நமக்கு நெஞ்சு கனக்கிறது.
3. நாவல்: அந்தக் கணல் வீசும் நேரம், ஆசிரியர்: சுதாங்கன்
"The only story that can be claimed as the best and probably the worst" என்று இந்த நாவலை எனக்கு பரிசளித்த எனது சகோதரர் குறிப்பிட்டார். அதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். 1990 களில் ஆனந்த விகடனில் தொடராக வெளிவந்த இந்த நாவல், அப்பொழுது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆறு ஆண்டுகளாக இனை பிறியாமல் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன் மனைவியின் வாழ்க்கையில் புயலாக ஒரு கடிதம் வருகிறது. அது மனைவி கௌசல்யாவிற்கு அவளது கல்லூரித் தோழன் தீபக்கிடமிருந்து வருகிறது. அதில் அவர்கள் இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் தவறாக நடந்து கொண்டதற்கான குற்ற உணர்ச்சியை தீபக் வெளியிட அவர்கள் குடும்பத்தில் புயல் வீசுகிறது.
கதையின் கரு, 'மிகவும் தூய்மையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் தாங்கள் அறியாமல் எப்பொழுதோ செய்த தவருக்காக வாழ் நாளெல்லாம் குற்ற உணர்ச்சியில் தவிக்க வேண்டாம்', என்பது தான்.
ஆனால் இக்கதை ஒழுக்கமின்மையை ஆதரிப்பதாகவே நான் கருதுகிறேன்.
4. நாவல்: உண்மையே உன் விலை என்ன?, ஆசிரியர்: சோ
இது உன்மையில் ஒரு நாவல் கிடையாது. சோ அவர்களின் நாடகம் பின்னாளில் புத்தக வடிவில் எனக்கு கிடைத்தது.
கொலை குற்றம் சாட்டப்பட்ட தாமஸ் தியாகராஜன் உண்மையில் ஒரு நிரபராதி என்பதை அவனது confession இல் அறிந்து கொள்ளும் பாதிரியார் அருமை நாயகம் உண்மையை நிலை நாட்ட மேற் கொள்ளும் போராட்டங்களே கதை.
முடிவில் அவர் தனது உயிரை இழந்து உண்மையை நிலை நாட்டுகிறார். 'உண்மையின் விலை ஒரு நேர்மையான பாதிரியாரின் உயிர்' என்று தாமஸ் குறிப்பிடும் பொழுது நமக்கும் இச்சமூகத்தின் மீது வெறுப்பு வருகிறது.
5.நாவல்: கனவுத் தொழிற்சாலை, ஆசிரியர்: சுஜாதா
உங்களில் பலரும் படித்திருப்பீர்கள். புதிதாக சொல்ல ஒன்றுமில்லை. ஒரு தமிழ் திரைப்பட கதாநாயகனின் (அருண்) கதை. அருண் திரைத்துரையில் இருப்பதாலேயே அவனுக்கு பெண் கொடுக்க அவனது காதலியின் பெற்றோர்கள் மறுப்பதும், அதனால் ஆத்திரம் கொண்ட அவன் வேறொரு கதாநாயகியை திருமணம் செய்து கொள்வதும், தனது காதலியை திருமணம் செய்து கொண்டவன் அவளையும், அருணையும் சேர்த்து வைத்து சந்தேகப் படுவதையும் சுஜாதா தன் பாணியில் அழகாக குறிப்பிடுகிறார்.
அருணின் வாழ்க்கையை மட்டுமே பிரதானமாக கூறினாலும், என்னை அதிகம் கவர்ந்தது அவனது காதலியின் கதை மட்டுமே.
எவ்வளவு தான் அவள் மீது சந்தேகப்பட்டாலும், அடித்தாலும் இரவு புணர்வதை நாள் தவறாமல் செய்யும் கணவன். கர்ப காலத்தின் பொழுது கூட புணர்வதை நிறுத்தாத மிருகம். பிரசவம் முடிந்து இரண்டே மாதத்தில் அவள் மீது மிகுந்த அக்கரை கொண்டவன் போல் நடித்து அவளை மீண்டும் தனது வீட்டிற்கே அவன் அழைத்து செல்லும் பொழுது, அழும் அவளது தாயாரிடம் அவளது சகோதரன் கூறுகிறான், 'கவலைப் படாதே அம்மா. அவள் கூடிய சீக்கிரமே அடுத்த பிரசவத்திற்கு வந்து விடுவாள்'.
மனைவியை Sexual Machine ஆக கருதும் ஆண்களுக்கு இந்நாவல் ஒரு செருப்படி.
6. நாவல்: கோணல் பக்கங்கள், ஆசிரியர்: சாரு நிவேதிதா
சாருவின் பெரும்பாலான எழுத்தின் மீது எவ்வளவு தான் எனக்கு நல்ல கருத்து இல்லாமல் இருந்தாலும், அவரின் ஒரு சில படைப்புகள் மிக சிறந்தவை. அவரின் எழுத்தில் உள்ள சுய புராணத்தையும், மற்றவர்களை எள்ளி நகையாடுவதையும் ஒதுக்கி விட்டு பார்த்தோமானால் அவரின் பல எழுத்துக்கள் என்னை ஏதோ ஒரு வகையில் பாதிக்கவே செய்தன.
சமூகம் தம் மீது போர்த்திய பல கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்தவர் சாரு நிவேதிதா.
7. நாவல்: The Count Of Monte Cristo, ஆசிரியர்: Alexandre Dumas
நான் பொதுவாகவே ஆங்கில நாவல்கள் அதிகம் படிப்பது இல்லை. 1800 களில் ஐரோப்பாவில் நடக்கும் இக்கதை நான் படித்த வெகு சில ஆங்கில நாவல்களில் என்னை அதிகம் கவர்ந்தது.
நண்பர்கள் போல் நடித்த நான்கு துரோகிகளின் சதியால் வாழ்நாளெல்லாம் சிறையில் அடைபட்டு கிடக்கிறான் நாயகன். சிறையில் அவனுக்கு வேறொருவனது நட்பு கிடைக்க, அவன் சாகும் தருவாயில், அவனிடமிருந்து ஒரு புதையல் ரகசியத்தை அறிந்து கொண்டு, அவனது பிணம் போல் நடித்து சிறையிலிருந்து தப்பி செல்கிறான்.
14 ஆண்டுகள் கழித்து அவன் வெளிவரும் பொழுது, அவனுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. அவனது தந்தை பசியால் இறந்ததையும், தனக்கு துரோகம் செய்த நால்வரில் ஒருவனை தனது காதலி திருமணம் செய்து கொண்டதையும் அறிந்து கொதித்து போகிறான்.
அவன் எவ்வாறு அவர்களை பழி வாங்குகிறான், தனது காதலியை என்ன செய்தான் என்பது தான் கதை.
நெப்போலியன் காலத்திய ஐரோப்பிய கலாச்சாரத்தை அழகாக வெளிக் காட்டுகிறது இக்கதை.
நான் மேற்கூறியவை அனைத்தும் எந்த வித வரிசைப் படுத்துதலும் இன்றி எனது நியாபகத்தில் வந்தவாறு குறிப்பிட்டவையே ஆகும்.
இந்நிலையில் சற்றும் மாறாத ஒன்று, தங்களின் பிள்ளைகள் பொறியியல் கல்லூரிகளிலோ அல்லது மருத்துவ கல்லூரிகளிலோ படிப்பதே தங்களுக்கு பெருமை என்று பல பெற்றோர்கள் எண்ணிக் கொண்டிருப்பது. அவ்வாறு படிப்பதே அவர்களது வாழ்க்கையை நன்கு அமைக்கும் என்று நினைக்கிறார்கள்.
இதில் வேடிக்கை என்னவென்றால் சில மாணவ மாணவியரும் அவ்வாறு படிப்பதே பெருமை என்றெண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
பொறியியல் கல்லூரிகளிலோ வருடாந்திர கட்டணங்கள் ஆயிரங்களை தாண்டி லட்சங்களில் வந்து நிற்கிறது. பணம் படைத்த பெற்றோர்களுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டில்லை. ஆனால் ஏழை/நடுத்தர குடும்பத்தை சேர்ந்தோருக்கு?
VRS வாங்கிக் கொண்டு, வீட்டை விற்று, நகைகளை விற்று அவர்கள் தங்களது பிள்ளைகளை பொறியியல் கல்லூரிகளில் சேர்கிறார்கள். அவ்வாறு சேர்த்த கல்லூரி நன்றாக அமைந்தால் கவலையில்லை. ஆனால் 80% மேற்பட்ட கல்லூரிகள் அடிப்படை வசதி கூட இல்லாமலே இருக்கின்றன.
இதன் உச்ச கட்டமாக பல கல்லூரிகளில் இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதே கல்லூரியில் படித்து முடித்து வேறு வேலை கிடைக்காத முன்னாள் மாணவர்களை கொண்டே பாடம் நடத்துகின்றனர். நல்ல ஆசிரியர்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் இல்லாத காரனத்தினால் அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டங்களை படிப்பதற்கோ, தேர்வுகளில் அகிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெருவதற்கோ மாணவர்களால் இயலவில்லை.
உலகிலேயே அதிகமான பொறியியல் பட்டதாரிகளை தேர்விக்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரிகள் புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் தரும் முன் இனியாவது இதை கவனிப்பார்களாக. பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் பொறியியல் மீதான மோகம் நீங்கி பல புதிய துறைகளில் நுழைந்து படித்து சாதனை புரிவார்களாக.
அலுவலகத்தில் வேலை செய்கிறேனோ இல்லையோ, காலை முதல் வேலையாக அங்கே சென்று விடுவேன். அப்பொழுது தான் ஒரு நிம்மதி. எனது அலுவலகத்தில் உள்ள கழிவறையை தான் சொல்கிறேன். இன்றும் அவ்வாறே நான் சென்று அமர்ந்து இருந்த போது, பக்கத்து அரையிலிருந்து ஒரு குரல் வந்தது. | ||
குரல் | : | Hello! எப்படி இருக்கே? |
பொதுவாகவே கழிவரைகளில் எல்லாம் நான் பேசுவதில்லை. அதுவும் இது தெரியாத குரல். ஆனாலும் அந்த குரலை என்னால் ஒதுக்க முடியவில்லை. அதனால் சிறிது தயக்கத்துடனேயே பதில் கூறினேன். | ||
நான் | : | ம்.... நல்லா இருக்கேன். |
உடனே அதற்கு அடுத்த கேள்வி வந்தது. | ||
குரல் | : | வாழ்க்கை எப்படி போகுது? |
நான் | : | பரவாயில்லை. ஏதோ போய்கிட்டு இருக்கு. |
குரல் | : | அப்புறம், அங்கே என்ன செஞ்சுகிட்டு இருக்கே? |
என்னடா கேள்வி இது? இங்கே என்ன புதையலா எடுப்பாங்க? நீ செஞ்சுகிட்டு இருக்கறத தான்டா நானும் செய்யறேன், பரதேசி! | ||
நான் | : | ஹி ஹி...... சும்மா ஒக்காந்துகிட்டு இருக்கேன். |
குரல் | : | சரி, நான் அங்கே இப்போ வரட்டுமா? |
இதற்கு மேலும் என்னால் அவனுக்கு இடம் கொடுக்க முடியவில்லை. இத்துடன் பேச்சை முடித்து கொள்ளலாம் என்றெண்ணி, பின் வருமாறு கூறினேன். | ||
நான் | : | இல்லை. எனக்கு வேறு முக்கியமான வேலை இருக்கு. |
குரல் (சற்றே பதற்றமாக) | : | ஹேய்! நான் சொல்றத கேளு. நான் உனக்கு மறுபடியும் கால் செய்யறேன். இங்கே ஒரு முட்டாள் நான் உன் கூட பேசரதுக்கெல்லாம் பதில் சொல்லிக்கிட்டு இருக்கான். |
[நன்றி : எனக்கு இதை அனுப்பிய என் நண்பன் ராஜேஷ்] |
விடாது கருப்பு அவர்களின் "இஸ்லாமும் தீவிரவாதமும்" என்ற பதிவிற்கு வந்த பாராட்டு பின்னூட்டங்களை பார்த்தே, இந்த பதிவை நான் எழுதுகிறேன். கருப்பு அவர்கள் நடு நிலையாளர் என்றும், துணிச்சல் மிக்கவர் என்றும் பலர் குறிப்பிட்டுள்ளனர். பாராட்டியவர்களில் ஒரு சிலர் பிராமணர்கள். அதுதான் என்னை இது எழுத தூண்டியது. அதாவது இவர்களின் கூற்றுப்படி பிராமணனை பாப்பான் என்று சொல்பவர், இஸ்லாமியனை துலுக்கன் என்று சொன்னால் அவர் நடு நிலையாளர். என்னய்யா நியாயம் இது? பிராமணர்களை பாப்பான் என்றும், வந்தேறிகள் என்றும் குறிப்பிட்டது அவர்களுக்கு எத்துனை வேதனை அளித்திருக்குமோ அதே போன்ற வேதனை தானே இதை படிக்கும் ஒவ்வொரு இஸ்லாமியனுக்கும் ஏற்படும்?உலக மக்கள் தொகையில் இருபத்தி மூன்றரை சதவிகிதம்** இருக்கும் இஸ்லாமியர்களில் ஒரு சிலர் தீவிரவாதத்திற்கு துணை சென்றதால் அனைவரையும் தீவிரவாதி என்று பட்டம் கட்டுவது எந்த வகையில் நியாயம்? பிராமணர்களை ஆங்கிலேயர் ஆட்சியை விரும்பியவர்கள் என்றும், தேசப்பற்று இல்லாதவர்கள் என்றும், தமிழை வெறுப்பவர்கள் என்றும் கருப்பு கூறுவதற்கு மாற்றாக பாரதி முதல் வாஞ்சிநாதன் வரை ("ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்று கூறியவனை ஒரு பிராமணனாக அடையாளம் காட்ட எனக்கு துளியும் விருப்பம் இல்லை. ஆனாலும் வேறு வழி இல்லை ஆதலால் குறிப்பிடுகிறேன்!) எத்தனை பிராமணர்களை அடையாளம் காட்ட முடியுமோ, அதே போன்று இஸ்லாமியர்களை தீவிரவாதத்திற்கு துணை போகிறவர்கள் என்ற அவரது கருத்திற்கும் மாற்றாக காயிதே மில்லத் முதல் அப்துல் கலாம் வரை நம் நாட்டுக்காகவும் நம் நாட்டு மக்களுக்காகவும் பாடுபட்ட எத்தனையோ இஸ்லாமியர்களையும் அடையாளம் காட்ட முடியும். பிராமணர்களையாவது அவர் வந்தேறிகள் என்று தான் குறிப்பிட்டார். ஆனால் இஸ்லாமியர்களையோ, தீவிரவாதத்திற்கு துணை போகிறவர்கள் என்றார். அதுவும் எத்தகைய சூழ்நிலையில்? உலகமே தீவிரவாத்தின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில். இது எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டு! இவரைப் போன்றவர்களின் கருத்துக்களால், இன்று உலகமே இஸ்லாத்தை ஏதோ அறுவருக்கத்தக்க ஒரு சித்தாந்தமாக நோக்குகின்றது. மேலும் கருப்பு அவர்கள் தொடர்வது என்னவென்றால், "இஸ்லாமின் மீதுள்ள தீவிரவாதம் என்ற சொல் அழிக்கப்பட வேண்டுமென்றால் ஒவ்வொரு இஸ்லாமியரும் தங்கள் ஐந்துவேளைக் கடமையுடன் ஆறாவதாக தங்களையும், இஸ்லாமையும் அசிங்கப்படுத்தும் தீவிரவாதிகளை பிடித்துக் கொடுப்பதை ஆறாவது கடமையாக செய்யவேண்டும்." இது மிகவும் சரி. ஆனாலும் இந்த கடமை இஸ்லாமியர்களுக்கு மட்டும் அல்ல, ஒவ்வொரு இந்தியனுக்கும் இந்த கடமை உண்டு. "இன்றைய யதார்த்த நிலைமையை நிதானமாக ஆய்ந்து பார்த்தால் பார்ப்பன ஜாதியில் பிறந்த எல்லோரும் ஜாதி ஒழிப்புக்கு எதிர்ப்பு என்றோ, மற்ற ஜாதிகளில் பிறந்தவர்கள் எல்லாம் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்கள் என்றோ சொல்வதற்கு எத்தகைய ஆதாரமும் இல்லை. எல்லா ஜாதிகளிலும் ஜாதி ஒழிப்புக்கு ஆதரவாளர்களும் இருக்கிறார்கள்; எதிர்ப்பாளர்களும் இருக்கிறார்கள்." என்று திரு.ப.ஜீவானந்தம் அவர்கள் குறிப்பிட்டதையே இப்பொழுது நானும் குறிப்பிடுகிறேன் [நன்றி : தங்களது ஒரு பழைய பதிவில் பின்னூட்டம் இட்ட ஒரு அனானி]. இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு துணை போகின்றவர்கள் அல்ல என்பதை தயவுசெய்து புரிந்து கொள்ளுங்கள். ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒரு சமுதாயத்தையே குற்றம் சாட்டுவது பல ஆண்டுகளாகவே நடந்து வரும் ஒரு விஷயம் தான். அதற்கு சரித்திரத்தின் உதவி கொண்டு நாம் சிறிது பின்னோக்கி சென்றோமானால், 1. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமது வாழ்க்கை முறையாக மனு தர்மத்தை ஏற்றுக்கொண்ட பிராமணர்கள் இன்றும் ஜாதி வெறியர்கள் என்று குற்றம் சாட்டப்படுகிறார்கள். 2. ஹிட்லர் என்ற ஒரு ஃபாஸிஸ வெறியன் அரை நூற்றாண்டுக்கு முன்னர் செய்த செயலுக்காக இன்றும் ஜெர்மானியர் குற்றம் சாட்டப்படுகிறார்கள். 3. ஜீவகாருண்யத்தை தங்களது வாழ்வியல் முறையாக கொண்ட புத்த பிக்குகள் கால் நூற்றாண்டுக்கு முன்னர் இலங்கையில் செய்த தவறுகளால் இன்றும் தவறாக பார்க்கப் படுகிறார்கள். இத்தகைய நிலை இஸ்லாமியர்களுக்கு அதி விரைவில் வரக்கூடும். நமக்கு பல நூற்றாண்டுகளுக்கு பின்னர் வரும் தலைமுறைகள் அவர்களை ஒரு கொடுங்கோளர்களாக பார்க்கக் கூடும். நாம் தூவிய இந்த விதை வளர்ந்து ஒரு விழ விருட்சமாக மாறப்போவதை அறியாமல் நாம் தொடர்ந்து விதைகளை தூவிக் கொண்டே இருக்கிறோம். ** 2005 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 6313.78 மில்லியன். அதில் இஸ்லாமியர்கள் 1565.28 மில்லியன். |
பால காண்டம் --> மிதிலைக் காட்சிப் படலம் --> கன்னிமாடத்தில் நின்ற சீதையின் பேர் எழில்
பாடல் 23
பொன்னின் சோதி, போதினின் நாற்றம், பொலிவேபோல்
தென் உண் தேனின் தீம் சுவை, செஞ் சொற் கவி இன்பம்-
கன்னிம் மாடத்து உம்பரின் மாடே, களி பேடோடு
அன்னம் ஆடும் முன் துறை கண்டு, அங்கு, அயல் நின்றாள்.
பாடல் 28
அனையாள் மேனி கண்டபின், அண்டத்து அரசு ஆளும்
வினையோர் மேவும் மேனகை ஆதி மிளிர் வேற் கண்
இனையோர், உள்ளத்து இன்னலினோர்; தம் முகம் என்னும்
பனி தோய் வானின் வெண் மதிக்கு என்றும் பகல் அன்றே?
ஆரணிய காண்டம் --> சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் --> சீதையின் அழகை சூர்ப்பணகை விரித்துரைத்தல்
பாடல் 74
வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!
பொருள்:
சீதை, வில் போன்ற வளைந்த நெற்றியை உடையவள் என்றாலும்; வேல் போன்ற விழிகளை உடையவள் என்றாலும்; முத்துக்களை போன்ற வெண்மையான பற்களை உடையவள் என்றாலும்; பவழத்தை போன்ற சிவந்த இதழ்களை உடையவள் என்றாலும்; சொல் அழகாக இருக்குமே அல்லாது அதில் பொருள் இல்லை. "நெற்கதிரானது புற்களை போன்று இருக்கும்", என்று சொல்வதற்கு ஒப்பானதாகும் அத்தகைய உவமை.
பாடல் 75
இந்திரன் சசியைப் பெற்றான்; இரு-மூன்று வதனத்தோன் தன்
தந்தையும் உமையைப் பெற்றான்; தாமரைச் செங்கணானும்
செந் திருமகளைப் பெற்றான்; சீதையைப் பெற்றாய் நீயும்;
அந்தரம் பார்க்கின் நன்மை அவர்க்கு இலை உனக்கே; ஐயா!
இந்திரன் சசியையும்; ஆறுமுகன் தந்தையாகிய சிவன் உமையையும்; தாமரை மேல் வீற்றிருக்கும் பெருமாள் பாற்கடல் தந்த திருமகளையும் பெற்றது போல் நீயும் சீதையை உன் துனைவியாக பெற்றால் பெருமை அவளுகல்ல ஐயா! உனக்கே தான்.
மேற் கூறிய செய்யுட்களில் தெரிவது சீதையின் அழகா?,
இல்லை தான் பார்த்தே இராத சீதையின் அழகை தனது புலமையால் வெளிக்கொணர்ந்த கம்பனின் புலமையின் அழகா?,
இல்லை கம்பன் விளையாட களம் கொடுத்த தமிழின் அழகா?
............ தெரியவில்லை.
நாள் | : | புதன்கிழமை, ஜூலை 12, 2006 |
நேரம் | : | மாலை 5:51 |
இடம் | : | அவசர சிகிச்சை பிரிவு, கருணா மருத்துவமனை, மும்பை |
நான் | : | டேய் கொட்டை நாயே! எதுக்குடா காலங்கார்த்தால இம்சை பன்ட்ர? |
அவன் | : | இதுக்கு தான்........ |
நான் | : | டேய் மனசுல கை வச்சு சொல்லுங்கடா, எப்படி டா உங்களாலே இந்த ஜோகுக்கெல்லாம் சிரிக்க முடியுது? |
அவர்கள் | : | (கோரஸாக) இப்படித் தான்.......... |
அவர்கள் | : | ஏன் sir சாப்பாடு அப்படியே இருக்கு? நல்லா இல்லையா? |
நான் | : | அதெல்லாம் ஒன்னும் இல்லீங்க. ரொம்ப நல்லா இருந்துது. எங்களுக்கு தான் வயிரு fullஆ இருந்துது. அதான் சாப்பிடலே. |
அவர்கள் | : | நல்லா இல்லேன்னா சொல்லுங்க sir, right பன்னிக்கலாம். ஒங்களுக்கு புடிச்ச மாதிரி சமைக்கலாம். சொல்லுங்க sir |
நான் | : | ஐயோ, அதெல்லாம் சத்தியமா நல்லா இருக்குங்க. நேத்திக்கு நிறைய பேர் வெளில சாப்பிட்டாங்க அதான் சாப்பிடலே. எங்க வீட்டு சமையல் மாதிரி இருக்குங்க. (அம்மா என்னை மன்னித்து விடு.) |
அவர்கள் | : | என்ன sir, விலை வாசி விக்கர விலையில, நீங்க இப்படி சப்பாட waste செய்றீங்க. waste செய்யாதீங்க sir. |
இந்தியா | அமெரிக்கா (கிழக்கு) |
சொல் : |
அகராதி : |
|
காலா! உனை நான் சிறு |
புல்லென மதிக்கிறேன்; என்றன் |
காலருகே வாடா! |
சற்றே உனை மிதிக்கிறேன். |
-மஹாகவி பாரதியார் |