இன்று எனது மனைவி ஒரு முக்கியமான அலுவல் காரணமாக அலுவலகம் சென்றுவிட காலையில் நான் இன்றைய பொழுதை தனியாக எப்படி கழிப்பது? என்ற கேள்வியுடனேயே எழுந்தேன். இன்றைய தமிழ்மணத்தில் பதிவுகள் முழுவதும் இந்தியாவின் தோல்வியை சுற்றியே இருக்கும் என்பதால் அதை கூடுமான வரை தவிர்த்திட முனைந்தேன். வேறு என்ன செய்வது? என்று இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்த போது தற்செயலாக என் கண்ணில் பட்டது ஜெயா TV யில் ஒளிபரப்பான இளையராஜாவின் Live-In Concert.
You Tube இல் சிறு சிறு துண்டுகளாக மொத்தம் 51 படங்கள். மொத்தத்தையும் இன்றே பார்த்து விட்டேன். அருமையான ஒரு நிகழ்ச்சி. நிகழ்ச்சி தொடர்ச்சியாக பார்க்க முடியவில்லை. எது முன்? எது பின்? என்று தெரியாமல் அனைத்தையும் பார்த்தேன். அதைப் பற்றிய ஒரு அலசல்.
முதலில் கடவுள் வாழ்த்தாக அவர் பாடிய "ஜணனி ஜணனி" பாடலை கேட்டவர் அனைவரும் மெய் மறக்க செய்தது என்றால் அது மிகை இல்லை. பலரது கண்கள் கலங்கி விட்டது. குறிப்பாக K.J. யேசுதாஸ் அவர்களின் துணைவியார் "ஜெகன் மோகினி நீ! சிம்ம வாகினி நீ!" என்று அவர் பாடிய போது அழுதே விட்டார். இந்த பாடலை இறை நம்பிக்கை இல்லாத கமல் எவ்வாறு ரசிக்கிறார் என்பதை அறிய ஆவலாக அவரை காட்டுகிறார்களா என்று பார்த்தேன். கடைசி வரை காட்டவில்லை.

கடவுள் வாழ்த்தை தொடர்ந்து தனக்கு நிகழ்ச்சியை நடத்த தெரியாததால் தனக்கு உதவ யுவன் மற்றும் கார்த்திக்கை அழைத்தார். அவர்கள் தயங்கவே வேறு யாராவது உதவ முடியுமா? என்று கேட்க மைக்குடன் வந்தார் பார்த்திபன்.
அதன் பிறகு நான் பார்த்தது இளையராஜா ச, ரி, க என்று மூன்று சுவரங்களை மட்டுமே கொண்டு இசையமைத்த ஒரு தெலுங்கு பாடல். அதை பாடியவர் ஷ்ரேயா கோஸல். பாடல் அருமையாக இருந்தது. இசை அறிவு இல்லாத எனக்கு ஏதோ ஒரு மிகவும் கடினமான காரியத்தை இளையராஜா சாதித்திருக்கிறார் என்பதை தவிர வேறு ஒன்றும் தெரியவில்லை.

பின்னர் சித்ராவின் குயில் குரலில் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன், மனோ மற்றும் சித்ரா பாடிய ஓ ப்ரியா ப்ரியா, SPB பாடிய மன்றம் வந்த தென்றல், மாங்குயிலே பூங்குயிலே, சுந்தரி கண்ணால் ஒரு சேதி, ஹரிஹரன் பாடிய கஜுரஹோ, என்னை தாலாட்ட வருவாளா?, ஜெயசந்திரன் பாடிய ராசாத்தி உன்ன, உமா ரமணன் பாடிய ஏ பாடல் ஒன்று போன்றவை அனைத்தும் ஒன்றை விட ஒன்று மிகச் சிறப்பாக இருந்தன.
அடுத்து ஷ்ரேயா கோஸல் குரலில் காற்றில் எந்தன் கீதம், ஸ்வர்ணலதா குரலில் அடி ஆத்தாடி, சாதனா சர்கம் குரலில் செண்பகமே செண்பகமே போன்றவை வித்தியாசமாகவும் அருமையாகவும் இருந்தன. குறிப்பாக ஷ்ரேயா கோஸல் முதலில் காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றை தோடுதே என்று பாடியவர் கடைசியில் தவறை உணர்ந்து தேடுதே என்று மாற்றிப் பாடினார். அவர் கடைசி முறை சரியாக பாடிய போது பலத்த கைத்தட்டல் அரங்கினுள் எழுந்தது. பாடி முடித்த பிறகு தவறுக்கு மன்னிப்பு கேட்கும் விதம் இது தமிழில் தனது முதல் மேடை நிகழ்ச்சி என்று குறிப்பிட்டார். ஆனாலும் அது ஒன்றை தவிர அவரது தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக இருந்தது. ஜானகி நிகழ்ச்சிக்கு வராத குறையை இது தீர்த்தது.
கடைசியாக நான் பார்த்தது இளையராஜா பாடிய நான் தேடும் செவ்வந்தி பூவிது பாடல். அருமையாக இருந்தது. நிகழ்ச்சியில் எனக்கு மிகவும் பிடித்தது இந்த பாடல் தான். எனது எண்ணத்தையே எங்கே இருந்த ரசிகர்களும் பிரதிபளித்தார்கள். Once more கேட்டு மீண்டும் ராஜாவை பாட செய்தார்கள்.
இளையராஜாவை பாராட்டி பேசியவர்களில் SPB அவரை அடிக்கடி இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துமாறு அன்புடன் கேட்டுக் கொண்டார். கமல் பேசிய போது தமிழ் நாட்டு மக்கள் பாரதியை கை விட்டதைப் போன்று இளையராஜாவை கை விடவில்லை என்றார். வாலி பேசும் போது இளையராஜாவின் இசை தாண்டிய திறமைகளை பட்டியலிட்டார்.
இளைய நிலா, ராஜ ராஜ சோழன், அந்தி மழை பொழிகிறது, பணிவிழும் மலர்வனம் பொன்ற பல பாடல்கள் இடம் பெறாவிட்டாலும் இது ஒரு அருமையான நிகழ்ச்சி. மொத்தத்தில் ஒரு விடுமுறையை அருமையான முறையில் கழித்தேன்.
பின்குறிப்பு : மாலை அலுவலகத்திலிருந்து வந்த எனது மனைவி கேட்ட துணி தோச்சியா? Tax return file செஞ்சாச்சா? வீட்டுக்கு phone செஞ்சியா? போன்ற கேள்விகளுக்கு நான் ஞே.. என்று முழித்ததால், "காலைலெ நான் போகும் போது எந்த எடத்தில் ஒக்காந்து கிட்டு இருந்தியோ அங்கியே இப்போ வரைக்கும் ஒக்காந்து கிட்டு இருக்கே. எப்போ பாத்தாலும் தமிழ்மணம் இல்லே ப்ளாக். மொதல்லே அது ரெண்டயும் fire wall போட்டு தூக்கனும். அப்போ தான் உருப்படுவே" என்பது போன்ற அர்ச்சனைகள் விழ ஆரம்பிக்கவே மக்களே நான் அப்பீட்டு..........
14 Comments:
என்னங்க, உங்க தமிழ் பயர்பக்ஸ்ச்சில் படிக்க முடியாமல் இருக்கு.
என்னவென்று கொஞ்சம் பாருங்க.
பலரும் அவ்வாறு தான் குறிப்பிடுகிறார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. யாராவது உதவ முடியுமா?
aha... ellam en favorite songsa irukke.. Link irukka? Illana search panni pakkaren..
janai janani eppa kettalum uruga vaikkara pattu.
Shreya Gosal voice chancey illa.. Neenga solra madhiri avanga ucharippum nalla dhan irukku.
//மாலை அலுவலகத்திலிருந்து வந்த எனது மனைவி கேட்ட துணி தோச்சியா? Tax return file செஞ்சாச்சா? வீட்டுக்கு phone செஞ்சியா? போன்ற கேள்விகளுக்கு நான் ஞே.. என்று முழித்ததால், "காலைலெ நான் போகும் போது எந்த எடத்தில் ஒக்காந்து கிட்டு இருந்தியோ அங்கியே இப்போ வரைக்கும் ஒக்காந்து கிட்டு இருக்கே. எப்போ பாத்தாலும் தமிழ்மணம் இல்லே ப்ளாக். மொதல்லே அது ரெண்டயும் fire wall போட்டு தூக்கனும். அப்போ தான் உருப்படுவே" என்பது போன்ற அர்ச்சனைகள் விழ ஆரம்பிக்கவே மக்களே நான் அப்பீட்டு..........
//
LOL..idhu nadakkadha veede irukkadhu pola irukke..
Enakku bayama irukku. Veetlayum firewall a?
Ayyo naanum innum tax return file pannala... :(
சத்யா
நான் அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்திருக்கிறேன். tamilgrounds.com சைட்ல முழுசா upload செஞ்சிருந்தாங்க. எனக்கு ஒரு லாகின் இருந்தது அப்போ.. இப்ப்போ இல்ல. கெடச்சா சொல்றேன்.
shreya goshal is my fav too. listen to her latest song in veyil "uruguthe maruguthe".. her voice is awesome.
"pani thuli pani thuli" -- kanda naal muthal
"onna vida" -- virumaandi
are some of her other songs !!
//மாலை அலுவலகத்திலிருந்து வந்த எனது மனைவி கேட்ட துணி தோச்சியா? Tax return file செஞ்சாச்சா? வீட்டுக்கு phone செஞ்சியா? போன்ற கேள்விகளுக்கு நான் ஞே.. என்று முழித்ததால், "காலைலெ நான் போகும் போது எந்த எடத்தில் ஒக்காந்து கிட்டு இருந்தியோ அங்கியே இப்போ வரைக்கும் ஒக்காந்து கிட்டு இருக்கே. எப்போ பாத்தாலும் தமிழ்மணம் இல்லே ப்ளாக். மொதல்லே அது ரெண்டயும் fire wall போட்டு தூக்கனும். அப்போ தான் உருப்படுவே" என்பது போன்ற அர்ச்சனைகள் விழ ஆரம்பிக்கவே மக்களே நான் அப்பீட்டு..........
//
arasiyalla (read:kudumba vaazkaila)
idhellam jagajam :)
Sathya, thanks for the link. Weekend pakkaren.
//
Priya said...
idhu nadakkadha veede irukkadhu pola irukke..
Enakku bayama irukku. Veetlayum firewall a?
//
நீங்க எதுக்கு பயப்படனும் ப்ரியா? ரங்கமணி தான் பயப்படனும். :-)
//
Ayyo naanum innum tax return file pannala... :(
//
சீக்கிரம் பன்னிடுங்க. சாம் மாமா (Uncle Sam) பிடிச்சுட போறான்.
//
Sathya, thanks for the link. Weekend pakkaren
//
பாத்துட்டு சொல்லுங்க.
//
Arunkumar said...
சத்யா
நான் அந்த நிகழ்ச்சியை முழுவதுமாக பார்த்திருக்கிறேன். tamilgrounds.com சைட்ல முழுசா upload செஞ்சிருந்தாங்க. எனக்கு ஒரு லாகின் இருந்தது அப்போ.. இப்ப்போ இல்ல. கெடச்சா சொல்றேன்.
//
Thanks Arunkumar. ப்ரியா தான் பாக்கனும்னு சொல்றாங்க. கிடைச்சா அவங்களுக்கும் சொல்லுங்க.
//
listen to her latest song in veyil "uruguthe maruguthe".. her voice is awesome.
//
முன்பே வா கேட்டதிலிருந்து அவர் என்னுடைய favourite :-)
//
"pani thuli pani thuli" -- kanda naal muthal
"onna vida" -- virumaandi
are some of her other songs !!
//
I saw both the songs too. Somehow they got missed up when I wrote the post.
//இந்த பாடலை இறை நம்பிக்கை இல்லாத கமல் எவ்வாறு ரசிக்கிறார் என்பதை அறிய ஆவலாக அவரை காட்டுகிறார்களா என்று பார்த்தேன்//
சத்யா எனக்கும் பெருசா கடவுள் நம்பிக்கை எல்லாம் இல்ல இருந்தாலும் அந்த பாட்ட இப்போ கேட்டாலும் ரசித்து கேட்பேன் :-)
//மாலை அலுவலகத்திலிருந்து வந்த எனது மனைவி கேட்ட துணி தோச்சியா? Tax return file செஞ்சாச்சா? வீட்டுக்கு phone செஞ்சியா? போன்ற கேள்விகளுக்கு நான் ஞே.. என்று முழித்ததால், "காலைலெ நான் போகும் போது எந்த எடத்தில் ஒக்காந்து கிட்டு இருந்தியோ அங்கியே இப்போ வரைக்கும் ஒக்காந்து கிட்டு இருக்கே. எப்போ பாத்தாலும் தமிழ்மணம் இல்லே ப்ளாக். மொதல்லே அது ரெண்டயும் fire wall போட்டு தூக்கனும். அப்போ தான் உருப்படுவே" என்பது போன்ற அர்ச்சனைகள் விழ ஆரம்பிக்கவே மக்களே நான் அப்பீட்டு..........
//
all தங்கமனிஸ் இப்படி தானா...இவுங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா :-)
//பலரும் அவ்வாறு தான் குறிப்பிடுகிறார்கள். என்ன செய்வது என்று தெரியவில்லை. யாராவது உதவ முடியுமா? //
இது எங்கயோ படிச்சு இருக்கேன்...template left align பண்ணனும்னு நினைக்கறேன்....you may get the more details here
http://wikipasanga.blogspot.com/
//
Syam said...
all தங்கமனிஸ் இப்படி தானா...இவுங்க எல்லாம் திருந்தவே மாட்டாங்களா :-)
//
அவங்க எல்லாரும் திருந்திட்டாங்கன்னா உலகமே அழிஞ்சுடும் Syam :-)
Same Blood.......
//பாத்துட்டு சொல்லுங்க.
Sathya, I totally enjoyed the program. உங்கள மாதிரி at a stretch பாக்க முடியாம ஏகப் பட்ட disturbance. ஆனாலும் ஒரே நாள்ல பாத்துட்டேன்..
//
Priya said...
Sathya, I totally enjoyed the program.
//
Good to know.
//
at a stretch பாக்க முடியாம ஏகப் பட்ட disturbance.
//
நீங்க ரங்கமணிய சொல்லலியே? :-)
Post a Comment