Monday, April 23, 2007


2. இந்தியப் போர்கள்

முதல் இந்திய - பாகிஸ்தானிய போர் (1947 - 1948) தொடர்ச்சி...

சுதந்திரம் பெற்ற மூன்றே மாதங்களில் தனது முதல் போருக்கு தயாரானது இந்திய இராணுவம். இங்கே நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அன்றைய கால கட்டத்தில் இந்திய இராணுவத்திலாகட்டும் இல்லை பாகிஸ்தான் இராணுவத்திலாகட்டும் அவர்களிடம் இருந்த யுத்த தளவாடங்கள் ஆங்கிலேயர்களால் விட்டு செல்லப்பட்டவையே ஆகும். மேலும் இருபக்க இராணுவத்திலும் வெகு சிலரே அத்தளவாடங்களை இயக்க போதுமான பயிற்சி பெற்றவர்கள்.

சுதந்திரம் பெற்று மூன்று மாதங்களே ஆன நிலை, பிரிவினை மற்றும் உள் நாட்டு மதக்கலவரங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்கள், இரண்டாம் உலகப் போரில் ஈடுபட நமது கஜானாவை முற்றிலும் சுரண்டிவிட்ட ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்ற பலவற்றிற்க்கு இடையே தான் இரு நாடுகளும் இப்போரை சந்தித்தன.

ஆக்கிரமிப்பை தடுக்க காஷ்மீர் பகுதிகளுக்கு இந்திய இராணுவம் சென்ற பொழுது பாகிஸ்தான் படையினர் முன்னரே 40 சதவிகித காஷ்மீரப் பகுதிகளை கைப்பற்றி இருந்தனர். காஷ்மீரின் பல பகுதிகளை ஆக்கிரமித்துக் கொண்டதோடு மட்டுமல்லாது பாகிஸ்தானிய படை ஸ்ரீ நகரை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. Uri, Baramulla பகுதிகளை கைப்பற்றியதைத் தொடர்ந்து அப்படையினருக்கு ஸ்ரீ நகருக்கான பாதை திறந்தது [பார்க்க படம் 1 மற்றும் 2].


மேலும் அப்படை வீரர்களால் காஷ்மீரத்தில் உள்ள இந்துக்கள் பலர் கற்பழித்து கொலை செய்யப்பட்டனர். Mirpur பகுதியை சேர்ந்த இந்துக்கள் ஒட்டு மொத்தமாக கொலை செய்யப்பட்டார்கள். அந்நிலையில் இந்தியப் படையினர் முதலில் பாகிஸ்தானப் படையினர் ஸ்ரீ நகரை அடையும் வழியை தடுக்க முனைத்தனர். Gulmarg, Uri, Baramulla பகுதிகளை மீண்டும் கைப்பற்றி ஸ்ரீ நகரை பாதுகாத்தனர். பாகிஸ்தான் படையினர் வசம் இருந்த Punch பள்ளத்தாக்கையும் மீண்டும் கைப்பற்றினர் [பார்க்க படம் 3].

அதைத் தொடர்ந்து நடந்த சண்டையில் Naoshera பகுதியை பாகிஸ்தானியரும், Chamb பகுதியை இந்தியரும் கைப்பற்றினர் [பார்க்க படம் 4]. இந்தியர்கள் தென் பகுதியில் Jhanger மற்றும் Rajauri பகுதியையும் கைப்பற்றினர்.



இந்தியப் படையினர் காஷ்மீரின் தென் பகுதியில் பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்ட பகுதிகளை மீட்க முனைந்து கொண்டிருந்த போது காஷ்மீரின் வட பகுதியில் அருமையாக திட்டமிட்டு Skardu (14-Aug-1948), Dras (06-Jun-1948), Kargil (22-May-1948), Khalatse (19-Jul-1948), Ladakh (26-Jun-1948) என்று வரிசையாக இந்தியா வசம் இருந்த காஷ்மீரப் பகுதிகளை கைப்பற்றினர் பாகிஸ்தானியர்கள். இதுவே அப்போரில் அவர்கள் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும் [பார்க்க படம் 5, 6 மற்றும் 7].


இடி மேல் இடி விழுந்த கதையாக 5-Sep-1948 அன்று இந்தியப் படையினர் Dras பகுதியை மீட்க முயன்று தோல்வி தழுவினர். மேலும் அதுவரை நம் வசம் இருந்த Punch பள்ளத்தாக்கையும் பாகிஸ்தானியர்கள் கைப்பற்றினர். அதுவரையில் இந்தியர்கள் இந்திய பீரங்கிப் படையினரை பெரிதும் பயன் படுத்த வில்லை. அவ்வளவு உயரத்தில் அக்காலத்தில் அவர்களை இயங்க வைக்க சாத்தியங்கள் இல்லை என்பது கண்கூடு. அந்நிலையில் தான் அவர்களின் உதவி இல்லாமல் போனால் நாம் காஷ்மீரை இழந்து விடுவோம் என்ற நிலையில் அவர்கள் களத்தில் இறங்கினர்.


பாகிஸ்தானியர்கள் சுமார் 12 மாதங்கள் போராடி கைப்பற்றிய Dras, Kargil, Khalatse, Ladakh பகுதிகள் மற்றும் Punch பள்ளத்தாக்கு பகுதி போன்ற அனைத்தையும் இரண்டே மாதங்களில் இந்தியப் படையினர் கைப்பற்றினர். மேலும் Ladakh வரையில் முன்னேறிய பாகிஸ்தானியர்கள் படுதோல்வி அடைந்து பின்வாங்கினர் [பார்க்க படம் 8, 9 மற்றும் 10].


அதே நிலை தொடர்ந்து இருந்தால் ஒரு வேளை இந்தியாவால் காஷ்மீர் பகுதிகள் முழுவதையும் எளிதாக பிடித்திருக்க முடியும். ஆனால் இந்தியர்களிடம் பீரங்கிப் படையினருக்கு தேவையான தளவாடங்கள் இல்லை. அவை வரும் வரை அவர்கள் கைப்பற்றிய பகுதிகளை விட்டு விடாமல் பாதுகாக்க முடிவு செய்தனர்.

ஆனால் அந்நேரத்தில் ஏதோ காரணத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை கோர முடிவு செய்தது நேரு அரசு. அதற்கு பொது மக்களிடத்தில் மட்டும் அல்லாது அவர்கள் அமைச்சரவையிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் இந்திய அரசு தனது முடிவில் பின்வாங்க வில்லை. போரை தற்காலிகமாக நிறுத்தி ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை நாடியது. பின்னர் இருதரப்பினருக்கும் அவர்கள் முன்பு நடைபெற்ற பேச்சுவார்த்தையினைத் தொடர்ந்து இந்தியாவும், பாகிஸ்தானும் போரை முற்றிலுமாக நிறுத்த வேண்டும் என்றும், அப்பொழுது அவர்கள் வசம் உள்ள பகுதிகளுடன் கூடிய ஒரு தற்காலிகமான எல்லை நிறுவப்பட வேண்டும் என்றும், பாகிஸ்தான் தனது படையினரை முற்றிலுமாக காஷ்மீரப் பகுதிகளில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும், ஆனால் இந்தியா தேவையான அளவு குறைந்தபட்ச படையினரை அப்பகுதியில் வைத்துக் கொள்ளலாம் என்றும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.


ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டினால் கையெழுத்தான அந்த ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்தியத் தரப்பில் 3000 உயிர்களையும், பாகிஸ்தான் தரப்பில் 5000 உயிர்களையும் பலிவாங்கிய முதல் இந்திய - பாகிஸ்தான் யுத்தம் ஒரு வழியாக 1948 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி முடிவிற்கு வந்தது. காஷ்மீரை சேர்ந்த 101387 சதுர கிலோமீட்டர் பகுதியை இந்தியாவும் 85793 சதுர கிலோமீட்டர் பகுதியை பாகிஸ்தானும் கைப்பற்றிக் கொண்டன. இந்திய வசம் இருந்த காஷ்மீரப் பகுதிகள் 1957 ஆம் ஆண்டு இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. தற்காலிக எல்லையாக அன்று நிர்னயிக்கப் பட்ட எல்லைதான் இன்றும் இந்திய எல்லையாக இருக்கிறது. நமது இராணுவத்தினர் வெற்றி மேல் வெற்றி பெற்றுக் கொண்டிருந்த அந்த நேரத்தில் இந்திய அரசு எடுத்த இந்த முடிவு பெரும் வரலாற்றுப் பிழையாக இன்றளவும் பார்க்கப்படுகிறது.


போர் ஒய்ந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்த நேரம். எல்லை பாதுகாப்பு பிரச்சனை என்பது நாட்டின் வட மேற்கு பகுதியில் பாகிஸ்தானால் மட்டுமே வர முடியும் என்று அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்க, முதல் இந்திய - பாகிஸ்தான் போர் முடிந்து 14 ஆண்டுகளுக்கு பின்னர் வட கிழக்கு பகுதியில் சீனாவின் வடிவில் இந்தியாவிற்கு வந்தது ஒரு மெகா சைஸ் ஆப்பு.


இன்னும் வரும்...

15 Comments:

Geetha Sambasivam said...

Everybody can said it is Nehru's Great Blunder. He thought his 'PANCHA SHELLA" (another great blunder) was a laudable one by the world. And by that time Patel was also no more. So Nehru took the decision of his own to get appreciation from the world leaders by showing himself as a Peace Mission. Still we are suffering. :((((((((((((((((((((((

Cheranz.. said...

Me the first?

~சேரன்

Cheranz.. said...

/ஆனால் அந்நேரத்தில் ஏதோ காரனத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை கோர முடிவு செய்தது நேரு அரசு. /

காரணம்.....திரு Mountbatten?

~சேரன்

Arunkumar said...

சத்யா, எப்பவும் போல பயங்கர டீடெய்ல்ஸோட பதிவு ரொம்ப நல்லா இருக்கு..

சின்ன வயசுல ஹிஸ்டரி எல்லாம் எவளோ முக்கியம்னு சொல்லிக்குடுக்காம ஜஸ்ட் அனதர் சஃப்ஜெக்ட் மாதிரி தான் சொல்லிக்குடுத்தாங்க... அதனால நானே இதெல்லாம் தெரிஞ்சிக்கனும்னு நெனச்சிட்டே இருப்பேன். உங்க பதிவு அதுக்கு சூப்பரா உதவுது. மிக்க நன்றி.

ஆனா எனக்கு ஒரே ஒரு பிரச்சனை தான்.. ஆண்டுகள் அப்பறம் சில நிகழ்வுகள் எல்லாம் அடிக்கடி மறந்து போயிடும் :-(

Sowmya said...

தங்களின் வரலாறுப் பதிவு மிக அருமை. நீண்ட நாட்கள் கழித்து, வரலாறு புத்தகம் படித்த திருப்தி. நன்று சத்யப்ப்ரியன் :)

மு.கார்த்திகேயன் said...

சத்யா, அருமையான விளக்கங்கள் படங்களுடன்..

மேல அருண் சொன்னதை முழுக்க முழுக்க நான் ஒத்துக்கொள்கிறேன்.. வரலாற்று பாடங்கள் வெறும் சப்ஜெக்டாக மட்டுமே சொல்லிக்கொடுக்கப்பட்டது பள்ளிக் காலங்களில்

மு.கார்த்திகேயன் said...

//இந்திய - பாகிஸ்தான் போர் முடிந்து 14 ஆண்டுகளுக்கு பின்னர் வட கிழக்கு பகுதியில் சீனாவின் வடிவில் இந்தியாவிற்கு வந்தது ஒரு மெகா சைஸ் ஆப்பு.
//

இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு புள்ளி அளவு மட்டுமே தெரியும். இப்போது அந்த புள்ளியில் இத்தனை விஷயங்களா என்று எண்ணி வியக்கிறேன்..

அருமையான தொகுப்பு.. அருமையான நடை சத்யா
அடுத்த பகுதிக்கு ஆவலுடன் வெயிட்டிங்

jekan said...

அதில் காஷ்மீருக்கு மற்ற மாநிலங்களுக்கு அல்லாத சில சிறப்பு சலுகைகள் அளித்து தனி அந்தஸ்து அளிப்பதாயின் இந்தியாவுடன் இணைய விரும்புவதாகவும், அப்பொழுது நடக்கும் படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் முறியடிக்க இந்திய இராணுவத்தின் உதவியையும் வேண்டினார்.
அதற்கு சம்மதம் அளித்தது நேரு அரசு.////

தற்காலிகமாக இந்தியாவுடன் இணைந்ததாகவும், பின்பு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேரு வாக்குறிதி வளன்கியதாகவும், பின்னர் ஏமாற்றி விட்டதாகவும் கேள்விப்படேன்... அது உண்மையா?

SathyaPriyan said...

//
கீதா சாம்பசிவம் said...
Everybody can said it is Nehru's Great Blunder. He thought his 'PANCHA SHELLA" (another great blunder) was a laudable one by the world. And by that time Patel was also no more. So Nehru took the decision of his own to get appreciation from the world leaders by showing himself as a Peace Mission. Still we are suffering. :((((((((((((((((((((((
//
There are so many other blunders created by Nehru which directly affects India till now. :-(

//
Cheran Parvai said...
Me the first?
//
இல்லீங்க. கீதா மேடம் தான் ஃபர்ஸ்ட். இருந்தாலும் ரெண்டாவதுக்கு பொங்கல் உண்டு.

//
/ஆனால் அந்நேரத்தில் ஏதோ காரனத்தினால் ஐக்கிய நாடுகள் சபையின் உதவியை கோர முடிவு செய்தது நேரு அரசு. /

காரணம்.....திரு Mountbatten?
//
இருக்கலாம் சேரன். எனக்கு தெரியவில்லை.

//
Arunkumar said...
அதனால நானே இதெல்லாம் தெரிஞ்சிக்கனும்னு நெனச்சிட்டே இருப்பேன். உங்க பதிவு அதுக்கு சூப்பரா உதவுது. மிக்க நன்றி.
//
நன்றியெல்லாம் எதுக்கு?, Arun.

//
sowmya said...
தங்களின் வரலாறுப் பதிவு மிக அருமை. நீண்ட நாட்கள் கழித்து, வரலாறு புத்தகம் படித்த திருப்தி. நன்று சத்யப்ப்ரியன் :)
//
நன்றி sowmya. முதல் முறையாக வருகிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

//
மு.கார்த்திகேயன் said...
சத்யா, அருமையான விளக்கங்கள் படங்களுடன்..

இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு புள்ளி அளவு மட்டுமே தெரியும். இப்போது அந்த புள்ளியில் இத்தனை விஷயங்களா என்று எண்ணி வியக்கிறேன்..
//
பதிவின் நோக்கமே அதுதான் மு.கா. நானும் பல புதிய செய்திகளை தெரிந்து கொண்டேன்.

//
jekan said...
தற்காலிகமாக இந்தியாவுடன் இணைந்ததாகவும், பின்பு வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நேரு வாக்குறிதி வளன்கியதாகவும், பின்னர் ஏமாற்றி விட்டதாகவும் கேள்விப்படேன்... அது உண்மையா?
//
அது உண்மை தான் jekan. நேரு செய்த எத்தனையோ தவறுகளில் வாக்கெடுப்பிற்கு ஒப்புக் கொண்டதும் ஒன்று.

ஏமாற்றுதல் என்று நீங்கள் எதை கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. பின்னாளில் இந்திரா மன்னர்களுக்கு அளிக்கப்பட்ட பல சலுகைகளை பிடுங்கி விட்டார். அதையா?

Radha Sriram said...

//அன்றைய கால கட்டத்தில் இந்திய இராணுவத்திலாகட்டும் இல்லை பாகிஸ்தான் இராணுவத்திலாகட்டும் அவர்களிடம் இருந்த யுத்த தளவாடங்கள் ஆங்கிலேயர்களால் விட்டு செல்லப்பட்டவையே ஆகும்//

இரண்டாவது பதிவும் நல்ல விறுவிறுப்பாக இருக்கு......தளவாடங்கள் என்றால் என்ன??

CVR said...

very interesting and informative post!!
Keep rocking!! :-)

SathyaPriyan said...

//
Radha Sriram said...
இரண்டாவது பதிவும் நல்ல விறுவிறுப்பாக இருக்கு
//
நன்றி.

//
தளவாடங்கள் என்றால் என்ன??
//
யுத்தத்திற்கு தேவையான துப்பாக்கிகள், பீரங்கிகள், குண்டுகள், இன்ன பிற பொருட்கள் போன்றவை.

//
CVR said...
very interesting and informative post!!
Keep rocking!! :-)
//
Thank you.

Anonymous said...

ம்.. சிந்திக்க வைக்கிறது.. உங்கள் பதிவுகள்..

நேசமுடன்..
-நித்தியா

Syam said...

சத்யா நீங்க சொன்ன மாதிரியே ரங்கராஜன் மாஸ்டர் சொல்லி குடுக்காத மேட்டர் இது....நமக்கு காஷ்மீர முழுசாத்தான் காட்டுனாங்க...ஆனா பாதி பாக்கிஸ்தான் கிட்ட இருக்குனு சொல்லவே இல்ல....அருமையான பதிவு.....

SathyaPriyan said...

//
நித்தியா said...
ம்.. சிந்திக்க வைக்கிறது.. உங்கள் பதிவுகள்..
//
மிக்க நன்றி. முதல் முறை வருகை தந்து இருக்கிறீர்கள். தொடர்ந்து வாருங்கள்.

//
Syam said...
நமக்கு காஷ்மீர முழுசாத்தான் காட்டுனாங்க...ஆனா பாதி பாக்கிஸ்தான் கிட்ட இருக்குனு சொல்லவே இல்ல....அருமையான பதிவு.....
//
நன்றி Syam. அடுத்தது இந்திய - சீன யுத்தம். அவர்கள் நம்மிடம் ஆட்டை போட்டது பற்றி.