பேராசிரியர் திரு.சத்யசீலன் அவர்களின் மேடை பேச்சு சிறு வயதிலிருந்து என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. நான் படித்த பள்ளியின் தாளாளரின் நெருங்கிய நண்பர் அவர் என்பதால் இரண்டு மூன்று முறை எங்கள் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவிற்கு தலைமை தாங்கி உரையாற்றி இருக்கிறார். நகைச்சுவையுடன் கலந்து நல்ல கருத்துக்களை கூறுவார்.
இன்று பட்டிமன்றங்களில் கொடி கட்டி பறக்கும் திரு. சாலமன் பாப்பையா, திரு. திண்டுக்கல் லியோணி போன்றவர்கள் அவரது பள்ளியிலிருந்து வந்தவர்கள் தாம். திரு. சத்யசீலன் நடுவராக இருக்க, திரு. அறிவொளி, திரு. பாப்பையா, திருமதி. காந்திமதி போன்றோர் இருதரப்பிலும் வாதம் செய்யும் பட்டிமன்றங்களையும், வழக்காடு மன்றங்களையும் அந்நாளில் திருச்சி மற்றும் இலங்கை வானொலியில் ஒலிபரப்புவார்கள். அதையெல்லாம் நாள்தோரும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
இல்வாழ்க்கையை பற்றி அவர் உரையாற்றிய ஒரு சொற்பொழிவை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அதன் சில பகுதிகள் கீழே.
கணவன், மனைவி எவ்வாறு இருக்க வேண்டும் என்று திருக்குறள் குறிப்பிடுகிறது?
உடம்பொடு உயிரிடை என்ன மற்றன்ன
மடந்தையொரு எம்மிடை நட்பு
[3. காமத்துப்பால் --> 3.1 களவியல் --> 3.1.5 காதற்சிறப்புரைத்தல் --> குறள் : 1122]
அதாவது "உடம்பொடு உயிரிடை" என்கிறார் வள்ளுவர். அதன் பொருள் கணவன், மனைவி உடலும் உயிரும் போல இருக்க வேண்டும். என்ன ஒரு அழகான உவமை பாருங்கள். இதனை ஒரு சாதாரன உவமையாக மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. இந்த உவமைக்கு பின்னால் இருக்கும் கருத்தை பார்க்க வேண்டும். உடலும் உயிரும் என்றால், ஒரு உடலுக்கு ஒரு உயிர் தான் இருக்க முடியும். ஒரு உடலுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உயிரோ அல்லது ஒரு உயிருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உடலோ இருக்க முடியாது. இது அந்த உவமைக்கு பின்னால் இருக்கும் முதல் கருத்து.
அடுத்ததாக உடலும் உயிரும் தனித்தனியாக ஒன்றன் துணை இல்லாமல் ஒன்று இயங்க முடியாது. ஒரு உடலும், உயிரும் இனைந்தால் தான் மனிதன். உடல் தனியாக இருந்தால் அதற்கு பெயர் பிணம். உயிர் தனியாக இருந்தால் அதற்கு பெயர் பேய். இது அந்த உவமைக்கு பின்னால் இருக்கும் அடுத்த கருத்து.
என்ன அழகாக கூறி இருக்கிறார் பாருங்கள். ஒரு கணவனுக்கு பல மனைவியரும், ஒரு மனைவிக்கு பல கணவர்களும் இருக்கவே முடியாது. மேலும் கணவன் மற்றும் மனைவி இருவரும் ஒருவரை விட்டு மற்றவர் நீங்கவே கூடாது என்பதை "உடம்பொடு உயிரிடை" என்ற ஒரே உவமையில் கூறி இருக்கிறார்.
இனி இதை பார்த்ததும் எனக்கும் எனக்குள் இருக்கும் எனது இம்சைக்கும் (அதாங்க எனது மனசாட்சி) நடந்த உரையாடல்.
எ.ம. | : | டேய்! இத பாத்ததுல இருந்து ரொம்ப சந்தோஷமா இருக்குடா. |
நான் | : | எதுக்கு மச்சி? இவ்வளோ சந்தோஷப் பட இதுலே அப்படி என்ன சொல்லிட்டாரு? |
எ.ம. | : | என்ன சொல்லிட்டாரா? டேய் ஆப்ப சட்டி தலையா! அவரு புருஷன் பொண்டாட்டி எப்படி இருக்கனும்னு சொன்னாரு இல்லே. |
நான் | : | ஆமாம் அதுக்கு என்ன? |
எ.ம. | : | நீயும் உன்னோட பொண்டாட்டியும் எப்படி இருக்கீங்களோ அதையே சொல்லிட்டாருடா. சந்தோஷப் படாம இருக்க முடியுமா? |
நான் | : | நிஜமாவா மச்சி? குறளுக்கு இலக்கணமாவா நாங்க வாழறோம்? |
எ.ம. | : | பின்ன நான் உன் கிட்ட பொய் சொல்வேனா? |
நான் | : | எப்படி மச்சி? |
எ.ம. | : | அப்படி கேளுடா மைக்ரோவேவ் மண்டையா. அவரு என்ன சொன்னாரு? ஒரு பேய் கூட ஒரு பொணம் குடித்தனம் நடத்தறது தான் இல்வாழ்கைன்னு. அதே மாதிரி......... |
நான் | : | டேய்! @#$%^&*! |
என்று அவனை அடிக்க கை ஓங்க அதற்குள் அவன் சங்கத்தை கலைத்து விட்டு அப்பீட்டாகி விட்டிருந்தான். அவன விடுங்க மக்கள்ஸ். நம்ம கூடவே சுத்திகிட்டு திரியரதால அப்படிதான் அளவுக்கதிகமா நக்கல் விடுவான். சரி உங்க இல்வாழ்க்கை எப்படி? எங்கே வரிசையா வந்து சொல்லிட்டு போங்க. ரெடி ஸ்டார்ட் 1..2.....3..............
15 Comments:
//உங்க இல்வாழ்க்கை எப்படி?//
இதுக்கு நான் இப்ப ஒண்ணும் சொல்ல முடியாது.
ஆனா முதல் comment போட்டுட்டு உங்கள் அன்பு பரிசை கேக்க முடியும்.
நல்ல குறள், அருமையான விளக்கம்.
//அவரு என்ன சொன்னாரு? ஒரு பேய் கூட ஒரு பொணம் குடித்தனம் நடத்தறது தான் இல்வாழ்கைன்னு. அதே மாதிரி.........//
ஹா ஹா.. இத படிச்சிட்டு உங்க தங்கமணி இதுல யார் பேய்னு கேட்டு பூரிக் கட்டைய தூக்கப் போறாங்க.
உடலும் உயிரும் பிரிஞ்சா, வேற உடலையோ உயிரையோ சேர முடியாது. அப்படினா மறுமணம் தப்பா?
சரி, இப்படிலாம் எடக்கு மடக்க யோசிக்கக் கூடாது.
சத்யபிரியன்,
உங்க பதிவுகள் ஒவ்வொன்றும் மணி மணி.
திருக்குறள் "ideal" pair பற்றி பேசுகிறது. அந்த மாதிரி வாழ்க்கை நம்ம நினைச்சு அமைச்சிக்கிறது இல்லே. கொடுப்பினை வேணும். real world-ல் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஆயிரம் பிரச்சினைகள். இந்த பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, காலத்தினால தேயாதஅன்பு வைத்திருப்பவர்கள் மிகச் சிலரே இருக்க முடியும்னு நினைக்கிறேன்.
உங்க பேரோட எந்த பதிவு வந்தாலும் தவறாம ஒரு glance பண்ணுவேன். நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்
சத்யன் நீங்க திருச்சியா?? நானும்!
சின்னகடைதெருதான் அப்பல்லாம் எங்களோட downtown !!
அப்பரம் இன்னொரு விஷ்யம் சத்யசீலன் சார் கிட்ட இருந்து பரிசெல்லம் வாங்கியிருக்கேன்!! ரொம்ப நல்ல பேச்சாளர்!!
எனக்குத்தான் உங்க பதிவைப் படிக்க ரொம்ப மெனக்கிட வேண்டியதா இருக்கு. நெருப்புநரி மட்டுமே பாவிக்கும் எனக்கு எல்லாம் ஜாங்கிரி ஜாங்கிரியாத் தெரியுது. :(
//
Priya said...
ஆனா முதல் comment போட்டுட்டு உங்கள் அன்பு பரிசை கேக்க முடியும்.
//
வெறும் பரிசு என்று மட்டும் கேட்டிருந்தால் புளியோதரை, பொங்கல், பிரியாணி என்று ஏதாவது குடுத்து இருப்பேன். அதையும் கூட காசு குடுத்து வாங்க வேண்டாம். Syam பல பேரிடம் நிறைய புளியோதரை, பொங்கல், பிரியாணி எல்லாம் வாங்கி இருக்கிறார். அவரிடம் போய் இந்த மந்திரா பேடியின் படங்களை காமித்தால் தன்னிடம் உள்ள அனைத்து பொங்கல் பொட்டலங்களையும் நமக்கு தந்து விடுவார்.
ஆனால் அன்புப் பரிசு என்றல்லவா கேட்டு விட்டீர்கள். அன்பென்பதே விலை மதிக்க முடியாதது. தங்களுக்கு நான் தரக்கூடிய விலைமதிக்க முடியாத பரிசு என்ன இருக்கிறது?
ஆங்கிலத்தில் "Seven year's itch" என்பார்கள். அதாவது சராசரியாக ஒரு மனிதனுக்கு (ஆணோ, பெண்ணோ) ஏழு ஆண்டுகளில் தனது காதல் வாழ்க்கை சலித்து விடும். அந்நிலையில் சலித்துப் போன அந்த relationship இல் இருந்து கொண்டே வேறொரு relationship ஐ தேடத் தொடங்குவார்கள். Cheating நடப்பது இதனால் தான்.
நான் எனது மனைவியை காதலிக்க தொடங்கி ஏழு ஆண்டுகளுக்கு மேலாகிறது. நாளாக நாளாக எனது காதல் கூடுகிறதே அன்றி சிறிதும் குறையவில்லை. "Seven year's itch" என்பது என்னை பொருத்த வரை பொய்த்துப் போன ஒன்றாகிறது.
என்னை விடுங்கள், 20-30 ஆண்டுகளாகியும் காதல் சிறிதும் குறையாமல் அந்நியோன்யமாக இருக்கும் பல தம்பதிகளை பார்த்திருக்கிறேன்.
என்னை விட, நான் பார்த்த அவர்கள் எல்லோரையும் விட பல பல பல மடங்கு இனிதான இல்லற வாழ்க்கை உங்களுக்கு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்று இனிப்பும் சந்தோஷமும் நீங்காமல் நிறைந்து இருக்க வேண்டும்.
//
Priya said...
உடலும் உயிரும் பிரிஞ்சா, வேற உடலையோ உயிரையோ சேர முடியாது. அப்படினா மறுமணம் தப்பா?
சரி, இப்படிலாம் எடக்கு மடக்க யோசிக்கக் கூடாது.
//
அப்படி இடக்கு மடக்கு என்று தங்கள் கேள்வியை ஒதுக்கி விட முடியாது. அதற்கு பதில் கீழே யாழினி அத்தன் சொல்லி இருக்கிறார்.
//
யாழினி அத்தன் said...
உங்க பதிவுகள் ஒவ்வொன்றும் மணி மணி.
உங்க பேரோட எந்த பதிவு வந்தாலும் தவறாம ஒரு glance பண்ணுவேன். நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்
//
மிக்க நன்றி. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
//
திருக்குறள் "ideal" pair பற்றி பேசுகிறது. அந்த மாதிரி வாழ்க்கை நம்ம நினைச்சு அமைச்சிக்கிறது இல்லே. கொடுப்பினை வேணும். real world-ல் ஒவ்வொரு ஜீவனுக்கும் ஆயிரம் பிரச்சினைகள். இந்த பிரச்சினைகளையெல்லாம் தாண்டி, காலத்தினால தேயாதஅன்பு வைத்திருப்பவர்கள் மிகச் சிலரே இருக்க முடியும்னு நினைக்கிறேன்.
//
Very True.
//
Radha Sriram said...
சத்யன் நீங்க திருச்சியா?? நானும்!
//
ஆமாம். கடைசியாக திருச்சியை சேர்ந்த ஒருவரை வலையுலகில் பிடித்து விட்டேன். நான் திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்தவன். படித்தது E.R. பள்ளியில்.
நீங்கள்?
//
இலவசக்கொத்தனார் said...
எனக்குத்தான் உங்க பதிவைப் படிக்க ரொம்ப மெனக்கிட வேண்டியதா இருக்கு. நெருப்புநரி மட்டுமே பாவிக்கும் எனக்கு எல்லாம் ஜாங்கிரி ஜாங்கிரியாத் தெரியுது. :(
//
Unfortunately the PDF downloader in the "Thamizmanam Panel" isn't working for my blog either. I am very sorry.
கஷ்டப்பட்டாவது படிச்சுட்டு கருத்து சொல்லுங்களேன் :-)
//என்னை விட, நான் பார்த்த அவர்கள் எல்லோரையும் விட பல பல பல மடங்கு இனிதான இல்லற வாழ்க்கை உங்களுக்கு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரம் போன்று இனிப்பும் சந்தோஷமும் நீங்காமல் நிறைந்து இருக்க வேண்டும்.
//
அட அட அட... ஏதோ புளியோதரை, சுண்டல்னு கிடைக்கும்னு பாத்தா இப்படி செண்டியா தாக்கிட்டிங்களே. என்ன சொல்றதுனே தெரியல போங்க.. நன்றி நன்றி நன்றி..
நீங்களும் உங்கள் மனைவியும் இதே மாதிரி தினம் தினம் கூடும் அன்புடன் வாழ வாழ்த்துக்கள்!
அட அடா குறள பிரிச்சி மேஞ்சிருக்கீங்க.. ஆனா நல்ல கருத்து... இப்போதைக்கு நமக்கு இதப்பத்தி ஒன்னும் சொல்ல முடியாது...
உங்க மனசாட்சி பட்டைய கிளப்புது...
//
என்னை விட, நான் பார்த்த அவர்கள் எல்லோரையும் விட பல பல பல மடங்கு இனிதான இல்லற வாழ்க்கை உங்களுக்கு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்
//
கல்யாண மாலை பாத்த எஃபெக்ட் சத்யா :)
ப்ரியாக்கு பரிசு குடுத்த மாதிரி எனக்கும் அப்டியே ஒரு நல்ல தங்கமணி கிடைக்க வாழ்த்திருங்க..
உங்களுக்கு புண்ணியமா போகட்டும் :)
அப்பறம் நீங்க என்னோட ப்ளாக்ல. நான் இங்க , என்ன ஒரு டைமிங் :P
அப்பறம் உங்க முந்தின பதிவ இப்போதான் பாத்தேன்.. ஆங்கிலம் பேசுறது பெருமை கூட ஓகே ஆனா தமிழ் பேசுனா thinking and expressing மாறிடும்னு நினைக்குறது எல்லாம் ரொம்ப டூ மச் :(
//
இத படிச்சிட்டு உங்க தங்கமணி இதுல யார் பேய்னு கேட்டு பூரிக் கட்டைய தூக்கப் போறாங்க.
//
இல்லேனா மட்டும் சும்மாவா இருக்காங்க-னு சொல்றீங்களா சத்யா? :)
ஆனா மந்திரா பேடி லிங்க் குடுத்து எங்க தலைவரோட வீக் பாய்ண்ட்ல டச் பண்றது சரியில்ல :)
//
ப்ரியாக்கு பரிசு குடுத்த மாதிரி எனக்கும் அப்டியே ஒரு நல்ல தங்கமணி கிடைக்க வாழ்த்திருங்க..
உங்களுக்கு புண்ணியமா போகட்டும் :)
//
Arun Priya விற்கு நான் practical ஆன வாழ்த்துக்களை தெரிவித்தேன். "நல்ல தங்கமணி" உலகத்துல கிடையவே கிடையாது. எல்லாருமே இம்சைதான். நமது இல்லற வாழ்வின் சந்தோஷம் நாம் எந்த அளவிற்கு மொக்கையாக இருக்கிறோம் என்பதில் தான் இருக்கிறது. :-)
வாழ்த்துக்கள்.
என்னோட மனசாட்சி : டேய் சத்யா என்ன சொல்லிருகாருனு பாத்தியா...
நான்:பார்தேன்...
எ.ம்: ஏண்டா இது என்ன சினிமாவா சும்மா பாத்தேனு சொல்ல...அவரு கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...
நான்:ஏன் நான் உயிடோடு இருக்கறது உனக்கு புடிக்கலியா...
எ.ம:அடேய் ஆப்பிரிக்கா மண்டையா...உன்னோட கருத்ததான கேக்குறாரு சொல்லிட்டு போ...
நான்:எனக்கு டிக்கெட் வாங்கி குடுக்கறதுன்னு ஒரு முடிவோட இருக்க....கருத்து சொல்லி இருக்கற ஒரு உயிரும் போய்ட்டா அப்புறம் யாரு வந்து பிளாக் படிக்கறது...
:-)
//
எனக்கும் அப்டியே ஒரு நல்ல தங்கமணி கிடைக்க வாழ்த்திருங்க..
உங்களுக்கு புண்ணியமா போகட்டும் :)
//
பாருங்க Syam. நாம படர கஷ்டத்த பாத்துட்டு கூட Arun இப்படி கேக்கறாரு. என்ன செய்யலாம்?
//
எனக்கும் அப்டியே ஒரு நல்ல தங்கமணி கிடைக்க வாழ்த்திருங்க..
உங்களுக்கு புண்ணியமா போகட்டும் :)
பாருங்க Syam. நாம படர கஷ்டத்த பாத்துட்டு கூட Arun இப்படி கேக்கறாரு. என்ன செய்யலாம்? //
அது ஒரு சுத்தமான வீரனுக்கு அழகு
:-)
Post a Comment