Friday, January 25, 2008


சோழதேசம் திருச்சி


திருச்சி என் வாழ்வின் கால் நூற்றாண்டு கால நினைவுகளை சுமந்து கொண்டிருக்கும் ஊர். மெயின் கார்டு கேட்டிலும், திருவரங்கத்திலும், தில்லை நகரிலும், பாலக்கரையிலும், உறையூரிலும், கண்டோன்மென்டிலும், கே. கே. நகரிலும் நான் சுற்றாத இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.இன்றும் முகம் தெரியாத மனிதர்கள் "நீங்க திருச்சியா?" என்று கேட்கும் பொழுது மனதிற்குள் ஏதோ ஒன்று மலர்வதை என்னால் தடுக்க முடியாது. பதிவெழுத தொடங்கி ஒன்றரை ஆண்டுகள் ஆன பின்பும் ஏனோ திருச்சி பற்றிய பதிவு எழுத வேண்டும் என்று தோன்றவில்லை. வேறு யாரேனும் எழுதி இருக்கிறார்களா? என்பதும் தெரியவில்லை. ஆனாலும் இனிப்பு இனிப்பு தானே. எத்துனை முறை சுவைத்தால் என்ன? என் பங்கிற்கு நானும் கொஞ்சம் பரிமாறி விட்டு போகிறேன்.

முதல் முறை பொன்னியின் செல்வன் படித்த பொழுது (சுமார் 12 வயது இருக்கும்) சோழர்களின் வீரத்தை கண்டு திருச்சியில் பிறந்ததற்காக பெருமை அடைந்திருக்கிறேன். தமிழ் நாட்டின் மத்தியில் இருப்பதால், தஞ்சை/நாகை/மதுரை/நெல்லை என்று எங்கு நடக்கும் விழாக்களுக்கு உறவினர்கள் சென்னையிலிருந்து வந்தாலும் திருச்சியில் எங்கள் வீட்டில் ஒரு நாள் தங்காமல் போக மாட்டார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு முக்கொம்பு, கல்லணை, திருவாணைக்காவல், திருவரங்கம், மலைக் கோட்டை என்று ஊர் சுற்றிக் காண்பிக்கும் வேலை என் மீது விழுந்து விடும். இயல்பாகவே திருச்சி மீது அதீத காதல் கொண்டுள்ள எனக்கு அவர்கள் சென்னையில் "அது இல்லை; இது இல்லை; திருச்சி சொர்க்கம்" என்றெல்லாம் கூறுவதை கேட்கும் பொழுது பெருமை தாங்காது.

திருச்சியின் சிறப்பே அதன் தமிழ் தான். கொங்கு, மதுரை, நெல்லை, சென்னை போன்ற பல வகை தமிழ் உச்சரிப்புகளையும் கடந்து ஒருவிதமான Chaste தமிழை நீங்கள் இங்கு கேட்க முடியும்.

"கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம்" என்று கூறுவார்கள். ஆனால் தற்காலத்தில் கோவிலை விட கல்விக் கூடங்களும், தொழிற்ச்சாலைகளும், மருத்துவமனைகளும், சுற்றுலாத் தளங்களும், திரையரங்குகளும், உணவகங்களும், போக்குவரத்து வசதிகளும், வனிகச் சந்தைகளும், இன்ன பிற அடிப்படை தேவைகளும் இருந்தால் மட்டுமே ஒரு ஊரில் மக்கள் வசிக்க முடியும். இனி திருச்சியில் இந்த வசதி வாய்ப்புகள் எல்லாம் எவ்வாறு இருக்கின்றன என்று பார்ப்போமா?

கல்விக்கூடங்கள்: நான் அறிந்த வரையில் சென்னைக்கு அடுத்து தமிழ் நாட்டில் சிறந்த கல்விக் கூடங்கள் இருப்பது திருச்சியில் தான். E. R., Bishop Heber, St. Joseph's, National, SVS, Holy Cross, திருவரங்கம் (ஆண்கள்), திருவரங்கம் (பெண்கள்) போன்ற State Board பள்ளிகளும்; RSK, Saranathan, காமகோடி, அகிலாண்டேஷ்வரி, மஹாத்மா காந்தி போன்ற CBSE பள்ளிகளும்; Campion, Vestry போன்ற Matriculation பள்ளிகளும்; Bishop Heber, St. Joseph's, National, SRC, Holy Cross, Cauveri, Indira Gandhi போன்ற கலை கல்லூரிகளும்; REC பொறியியல் கல்லூரியும்; இன்னும் பல தனியார் பொறியியல் கல்லூரிகளும்; கி.ஆ.பெ. விஸ்வனாதம் மருத்துவக் கல்லூரியும் பல சிறந்த மாணவ/மாணவிகளை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. நான் மேற்கூறியவற்றுள் பல உயர் தரமான அரசு பள்ளிகள்/கல்லூரிகள் என்பதால் பல ஏழை மாணவர்களுக்கு அறிவுச் செல்வம் எளிதில் கிடைக்கின்றது. நோபல் பரிசு பெற்ற C.V ராமன் முதல் தற்கால விஞ்ஞானி அப்துல் கலாம் வரை பலரும் பயின்றது இக்கல்விக் கூடங்களில் தான்.

தொழிற்ச்சாலைகள்: துப்பாக்கி தொழிற்ச்சாலை, பாரதிய மிகு மின் நிறுவனம், Trichy Distilleries & Chemicals, டால்மியா சிமென்ட், FMC Sanmar போன்ற பல பெரிய நிறுவனங்கள் இங்கு உள்ளன. தற்பொழுது தகவல் தொழில் நுட்ப பூங்காவும் உருவாகவுள்ளதாக நான் கேள்விப் படுகிறேன்.

மருத்துவமனைகள்: திருச்சியில் உலகத் தரத்திற்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் உள்ளனர். இருதய அறுவை சிகிச்சை நிபுணர்கள் திரு. சென்னியப்பன், திரு. ஸ்ரீனிவாசன் போன்றவர்கள் ஒரு உதாரணம். மருத்துவமனைகளை பொருத்த வரையில் அரசு பொது மருத்துவமனை தவிர்த்து, CSI மிஷன் மருத்துவமனை, குழந்தை ஏசு மருத்துவமனை, Sea Horse மருத்துவமனை, St. Joseph's கண் மருத்துவமனை போன்ற பல சிறந்த மருத்துவமனைகள் உள்ளன.

சுற்றுலாத்தளங்கள்: ஆன்மீகப் பயணம் மேற்கொண்டவர்களுக்கு திருவாணைகாவல், திருவரங்கம், மலைக் கோட்டை, சமயபுரம் போன்ற கோவில்களும், மற்றவர்களுக்கு கல்லணை, முக்கொம்பு, துறையூர் அருகில் புளியஞ்சோலை, ஜெயங்கொண்டம் அருகில் கங்கை கொண்ட சோழபுரம், புதுக்கோட்டை அருகில் சித்தன்ன வாசல் போன்ற பல இடங்கள் உள்ளன. தமிழக வரலாற்றில் அதிகம் அய்வு செய்யப்பட்டவை சோழர்களின் வரலாறு என்பதால் வரலாறு பிடித்தவர்களுக்கு (அஜித் படம் இல்லை) பல புதிய செய்திகள் சேகரிக்க கிடைக்கும். இவை எல்லாமே எந்த விதமான கட்டணமும் வசூலிக்கப்படாத சுற்றுலாத் தளங்கள் என்பதால் ஏழை மக்கள் எளிதில் சென்று கண்டு மகிழலாம்.

திரையரங்குகள்: திருச்சியில் ஒரு காலத்தில் இந்தியாவிலேயே ஐந்து திரையரங்குகள் கொண்ட ஒரே வளாகம் என்று விளம்பரப்படுத்தப்பட்ட மாரீஸ் வளாகம் இன்று இரண்டே திரையரங்குகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இதை தவிர்த்து மெயின்கார்டு கேட் அருகில் உள்ள ரம்பா, ஊர்வசி; பாலக்கரையில் உள்ள காவேரி ஆகிய மூன்றும் குறிப்பிடத்தக்கவை. ஏனென்றால் இவற்றில் தான் ரஜினி படங்கள் வெளியிடப்படும். இதை தவிர்த்து மத்திய பேரூந்து நிலையத்தில் உள்ள கலையரங்கம், சோனா, மீனா போன்றவையும்; ஆங்கிலப் படங்கள் மட்டுமே வெளியிடப்படும் சிப்பியும் முக்கியமான திரையரங்குகள். திருவாணைக்காவல் வினாயகாவும் இப்பொழுது சிறப்பாக இருப்பதாக கேள்விப்படுகிறேன். ஆனாலும் திருச்சியில் இன்று வரை மல்டிபிளக்ஸ் திரையரங்கம் ஒன்று கூட இல்லை. தகவல் தொழில் நுட்ப வேலைவாய்ப்புகள் பெருகினால் ஒரு வேளை வரலாம். மற்றபடி கல்வி/சுற்றுலா/மருத்துவத்தை போன்று பொழுது போக்கும் இன்று வரை திருச்சியில் ஏழை/நடுத்தர மக்களால் அடைய முடிந்த தொலைவிலேயே இருப்பது மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கின்றது.

உணவகங்கள்: இவ்வளவும் சிறப்பாக உள்ள திருச்சியில் நல்ல உணவகங்களுக்கு பஞ்சமா, என்ன? சத்திரம் பேரூந்து நிலையத்திற்கு அருகில் Banana Leaf, Maya's, Ragunath, Vasantha Bhavan போன்ற உணவகங்களும், மத்திய பேரூந்து நிலையத்திற்கு அருகில் TAB, Gajapriya, Pukari, SMV (Sri Muniyandi Vilas), Raja போன்ற உணவகங்களும், Sangam, Femina, Jenny's போன்ற நட்சத்திர உணவகங்களும் திருச்சி மக்களுக்கு அறுசுவை உணவளிக்க்ன்றன. அசைவப் பிரியனான எனக்கு Pukari, SMV, Banana Leaf போன்ற உணவகங்களின் உணவுகளில் உள்ள சுவை வேறெங்கும் சுவைக்க முடிந்ததில்லை. இதை தவிர்த்து மதுபானம் உட்கொள்பவர்களுக்கு Dynasity, Madhupriya, Wildwest போன்ற குளிரூட்டப்பட்ட பார்களும் உள்ளன. இந்த பார்களில் உள்ள சிறப்பு என்னவென்றால் கடலை, சுண்டல், மிக்ஸர் போன்ற சைடு டிஷ்கள் இலவசமாக அளிக்கப்படும். வெள்ளி மற்றும் வார இறுதிகளில் வேக வைத்த முட்டை, ஆம்லெட்டுகள் கூட இலவசமாக அளிக்கப்படும். சென்னையில் எப்படி என்று தெரியவில்லை. பெங்களூரில் தண்ணீர் கூட காசு கொடுத்து வாங்க வேண்டும்.

"சரி! வயிறு முட்ட தின்றாகி விட்டது. திருச்சி வெயிலுக்கு ஐஸ் கிரீம் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?", இருக்கிறது ஒரு கடை.

Vanila - இரண்டு ரூபாய்
Fruit Salad - மூன்று ரூபாய்

இப்படி இருக்கும் அந்த கடையின் மெனு கார்டு. மைக்கேல்ஸ் என்ற அந்த கடை திருச்சியில் மிகவும் பிரபலம். 10 பேர் சென்று வயிறு முட்ட சாப்பிட்டாலும் 150 ரூபாய்க்கு மேல் பில் வராது.

இதை தவிர்த்து கேக்குகளுக்கென்றே பிரபலமான Bread Basket; ஒரு கரண்டி ஐஸ் கிரீம் குடுத்து பர்ஸை பிடுங்கும் Baskin & Robin; ஐந்து ரூபாய்க்கு ஐஸ்கிரீம் தரும் Rainbow's போன்ற கடைகளும் உண்டு.

போக்குவரத்து வசதிகள்: திருச்சியை பொருத்த வரை அரசுப் பேரூந்துகளுக்கு இணையாக தனியார் பேரூந்துகளும் கோலோச்சுகின்றன. சிறிய ஊர் என்பதால் ஒரு மூலையிலிருந்து மற்றொரு மூலைக்கு நீங்கள் விரைவாக சென்று விட முடியும். ஊரின் அனைத்து பகுதிகளும் திருவரங்கம்/தில்லை நகர்/பாலக்கரை/உறையூர்/மத்திய பேரூந்து நிலையம்/சத்திரம் பேரூந்து நிலையம் போன்ற முக்கியமான இடங்களுடன் நன்கு இணைக்கப்பட்டிருக்கின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பல இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு இருக்கின்றன.

வனிகச்சந்தைகள்: சரி திருச்சியில் வந்து இரண்டு மூன்று நாட்கள் தங்கி நன்றாக ஊர் சுற்றி பார்த்தாகி விட்டது. திரும்பி செல்லும் பொழுது ஏதாவது வாங்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? கவலையை விடுங்கள். வாருங்கள் திருச்சியின் ரங்கனாதன் தெருவான NSB (நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்) ரோட்டிற்கு. காது குத்து முதல் திருமணம் வரை உள்ள அனைத்து விழாக்களுக்கும் இந்த ஒரே தெருவில் பொருட்கள் வாங்க முடியும். துணி வாங்க வேண்டுமா? இருக்கிறது சாரதாஸ், ஆனந்தாஸ், சென்னை சில்க்ஸ் (நகரும் படிக்கட்டினை பார்ப்பதற்காகவே பலரும் இங்கு வருகிறார்கள் என்று கேள்வி.); பாத்திரம் வாங்க வேண்டுமா? இருக்கிறது மங்கள் & மங்கள், RMKV; புத்தகங்கள் வாங்க வேண்டுமா இருக்கிறது ஹிக்கின்போதம்ஸ், ராசி, சுமதி, ஆர்த்தி, சரவனாஸ் போன்ற கடைகள்; கலை பொருட்கள் வாங்க வேண்டுமா இருக்கிறது காதி கிராஃப்ட்; நகைகள் வாங்க வேண்டுமா இருக்கிறது ஒன்றிற்கு பத்தாக நகைக் கடைகள்; கவரிங் நகைகளுக்கு கல்யாணி கவரிங் கடையும் உண்டு; What else? You name it; you may get it :-)

திருச்சியில் மல்டிபிளக்ஸ் களும், மேரி பிரவுன்களும், பீசா கார்னர்களும், காஃபி டேகளும் இல்லாமல் போகலாம். ஒரு சராசரி மேல் தர/உயர் நடுத்தர சென்னை இளைஞனுக்கு திருச்சி பிடிக்காமல் போகலாம். ஆனாலும் அதே காரணத்திற்காகவே என்னால் அடித்து கூற முடியும் ஏழை/நடுத்தர மக்களின் சொர்க்கம் திருச்சி என்று.

பின்னர் சேர்த்தது: நம்ம பழூர் கார்த்தி திருச்சியை பற்றி மூன்று பாகமாக அருமையாக எழுதியுள்ளார். நேரம் கிடைத்தால் அங்கும் செல்லுங்களேன்.

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3

தகவல் நன்றி: Radha Sriram

31 Comments:

Radha Sriram said...

என்னங்க சத்யா ரொம்ப நாளா ஆள காணோம்?? நம்ம திருச்சிய பத்தி சூப்பெர் பதிவு போங்க.......மறந்து போனதெல்லம் நியாபகப் படுத்திட்டிங்க......மைகேல்ஸ் மறக்க முடியுமா ஒரு ரூபா ஐஸ்க்ரீம் அங்கதான் கிடைக்கும்.மெயிண்கார்ட் கேட், சத்திரம் பஸ் ஸ்டாண்ட்.......அப்பப்பா அதெல்லம் ஒரு காலம். சீ கிங்க்ஸ் இன்னும் இருக்கா தெரியல.சோபிஸ் புத்த்கக் கடை.பெரிய கடைத்தெருவுல பல பழைய புத்த்ககடை இருக்கும். அங்அ போயிதான் நாங்கெல்லாம் யூஸ்ட் புத்தகம் வாங்குவோம். நரசுஸ் காபிப் பொடி கடை. ஆண்டாள் தெரு அப்பளம், க்ருஷ்னா ரெடிமேட்ஸ், மலவாசப்படி பிள்ளையார்,அப்சராஸ் கிப்ட் ஸ்டோரெஸ்,கோட்டாரி ரெடிமேட்ஸ்,பொன்மலை ர்யில்வே காலனி,கல்லுக்குழி ஆஞ்ஞெனேயர்........லிஸ்ட் போயிகிட்டே இருக்கும்....திருச்சி திருச்சிதான்.!!

Karthika said...

Kalakiteenga Sathya....post read pannumpothe trichy poitu vantha effect. Neenga sonna mathiri namma oor karavungalukuthaan theriyum trichyoda arumai perumai. Ippo ellam neriya flightskuda trichyku varuthu....so its getting well connected by air as well. Looks like the IT park is coming up near airport area.....Ennaku romba pidicha pathivu ithu....

Me said...

பாலக்கரையில் பிரபாத தியேட்டர் அருகில் ஹக்கீம் என்றொரு பிரியாணி கடை இருக்கிறது. எனக்கு தெரிந்து திருச்சியிலே சிறந்த பிரியாணி கிடைக்கும் இடம் அதுதான்.


முல்லை, பிளாசா, கனி டீலக்ஸ், மன்னார்புரம் வெங்கடேஸ்வரா என கலைப்படங்களை மட்டும் திரையிடும் பல முக்கிய திரையரங்குகளை குறிப்பிட மறந்த சத்ய பிரியனை வன்மையாக கண்டிக்கிறேன் :)

CVR said...

வழக்கம் போல கலக்கியிருக்கீங்க!!
நீங்க எது பத்தி எழுதினாலும் அதை பற்றி முழுமையாக படித்தாற்போல் ஒரு திருப்தி வரும்!!
அதே திருப்தி இந்த பதிவிலேயும்!!


வாழ்த்துக்கள்!! :-)

Agathiyan John Benedict said...

திருச்சிக்கே கூட்டிக்கிட்டுப் போயிட்டீங்க போங்க!!!

//திருச்சி பற்றி வேறு யாரேனும் எழுதி இருக்கிறார்களா?//
ஆம். நான் படித்திருக்குறேன். அவர் பெயர் ஸ்ரீதர் என நினைக்கிறேன். வலைப்பதிவு பெயர் நினைவில்லை.

// மாரீஸ் வளாகம் இன்று இரண்டே திரையரங்க்குகளுடன் இயங்கிக் கொண்டிருக்கின்றது. //
அப்படியா??? என்னப்பா ஆச்சு? மற்ற மூன்றையும் மூடிட்டாங்களா? வருத்தமாயிருக்கே...

// ஏழை/நடுத்தர மக்களின் சொர்க்கம் திருச்சி //
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா?

ஆமாங்க... நானும் திருச்சி தான். அமெரிக்காவிலும் கூட நான் உங்க வீட்டிற்குப் பக்கத்தில் தான் இருக்கிறேன் (Annandale)!!! வாசிங்டன் தமிழ்ச் சங்கத்திற்கு எப்போதாவது நீங்கள் வந்திருந்தால், என்னைக் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் -:))

SathyaPriyan said...

//
Radha Sriram said...
என்னங்க சத்யா ரொம்ப நாளா ஆள காணோம்??
//
ஆணி ஜாஸ்த்திங்க. அதன் அப்பீட் அயிட்டேன். மத்தபடி கடந்த இரண்டு மாதங்களாக தொடர்ந்து எழுதிக் கொண்டு தான் இருக்கிறேன்.

//
நம்ம திருச்சிய பத்தி சூப்பெர் பதிவு போங்க.......மறந்து போனதெல்லம் நியாபகப் படுத்திட்டிங்க......
//
மிக்க நன்றிங்க.

//
சீ கிங்க்ஸ் இன்னும் இருக்கா தெரியல.
//
இருக்குங்க. ஸம்மர் ஹவுஸ் கடையைதான் மூடிவிட்டார்கள்.

//
பெரிய கடைத்தெருவுல பல பழைய புத்த்ககடை இருக்கும். அங்அ போயிதான் நாங்கெல்லாம் யூஸ்ட் புத்தகம் வாங்குவோம்.
//
அங்க போயிதான் நாங்க எங்க புத்தகமெல்லாம் விப்போம் :-)

//
திருச்சி திருச்சிதான்.!!
//
ரிப்பீட்டேய்!!!!!!!!!!!

//
Karthika said...
Kalakiteenga Sathya....

Ennaku romba pidicha pathivu ithu
//
மிக்க நன்றி Karthika. எனது மின்னஞ்சல் கிடைத்ததா?

//
Looks like the IT park is coming up near airport area.........
//
ஆமாம். Real Estate prices are sky rocketing in that place these days. Looks like Trichy is also going to be spoiled soon :-(


//
உறையூர்காரன் said...
பாலக்கரையில் பிரபாத தியேட்டர் அருகில் ஹக்கீம் என்றொரு பிரியாணி கடை இருக்கிறது. எனக்கு தெரிந்து திருச்சியிலே சிறந்த பிரியாணி கிடைக்கும் இடம் அதுதான்.
//
தகவலுக்கு நன்றி உறையூர்காரன். அடுத்த முறை திருச்சி செல்லும் போது அவசியம் சாப்பிடுகிறேன்.

//
முல்லை, பிளாசா, கனி டீலக்ஸ், மன்னார்புரம் வெங்கடேஸ்வரா என கலைப்படங்களை மட்டும் திரையிடும் பல முக்கிய திரையரங்குகளை குறிப்பிட மறந்த சத்ய பிரியனை வன்மையாக கண்டிக்கிறேன் :)
//
என்ன கொடுமை சரவணன் இது? மன்னார்புரம் வெங்கடேஸ்வரா அந்த வரிசையில் சேர்ந்து விட்டதா?
மற்றபடி எனது (நமது) கலை தாகத்தை தனித்த அந்த திரையரங்குகளை மறந்தது எனது தவறு தான். உங்கள் கண்டிப்பு ஏற்றுக் கொள்ள படுகிறது :-)

முதல் வருகைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

SathyaPriyan said...

//
CVR said...
வழக்கம் போல கலக்கியிருக்கீங்க!!
நீங்க எது பத்தி எழுதினாலும் அதை பற்றி முழுமையாக படித்தாற்போல் ஒரு திருப்தி வரும்!!
அதே திருப்தி இந்த பதிவிலேயும்!!
//
தல, உங்க வருகை இல்லேன்னா பதிவு எழுதிய திருப்தியே வர மாட்டேங்குது. இப்போ தான் லென்ஸ் செய்யர உங்க பதிவுக்கு போயிட்டு வந்தேன். இங்கே நீங்க. Coincidence :-)

//
வாழ்த்துக்கள்!! :-)
//
மிக்க நன்றி.

//
John Peter Benedict said...
திருச்சிக்கே கூட்டிக்கிட்டுப் போயிட்டீங்க போங்க!!!
//
நன்றிங்க.

//
அப்படியா??? என்னப்பா ஆச்சு? மற்ற மூன்றையும் மூடிட்டாங்களா? வருத்தமாயிருக்கே...
//
ஆமாங்க. விரைவில் அந்த இடத்தில் ஒரு மருத்துவமனை வரப்போகிறது என்று கேள்வி.

TST பேரூந்துகளும் இப்பொழுது இல்லை. சுமார் 30 பேரூந்துகள் ஓடிய நிறுவனத்தில் இன்று அரை டஜன் பேரூந்துகளே ஓடுகின்றன :-(

//
அமெரிக்காவிலும் கூட நான் உங்க வீட்டிற்குப் பக்கத்தில் தான் இருக்கிறேன் (Annandale)!!!
//
அட அப்படியா தெரியாமல் போச்சே.

//
வாசிங்டன் தமிழ்ச் சங்கத்திற்கு எப்போதாவது நீங்கள் வந்திருந்தால், என்னைக் கண்டிப்பாக உங்களுக்குத் தெரிந்திருக்கும் -:))
//
இல்லீங்க. நான் வந்தது இல்லை. உண்மையில் மாயவரம் சிவா பலமுறை அழைத்தும் அலுவல்/சோம்பல் காரணமாக என்னால் வர இயலவில்லை.

Radha Sriram said...

lazy geek சோம்பேறி பைய்யன் திருச்சிய பத்தி எழுதியிருக்கிறார்ன்னு நினக்கரேன்......மோஹன் தாஸ், தெக்கிகாட்டன்..லாமும் திருச்சின்னு தோணுது..:):) இல்ல கொஞச காலம் அங்க வசிச்சவங்களான்னு தெரியல.....இன்னொரு முறை பதிவ படிச்சு மனச ஆத்திகிட்டேன்......:)

Radha Sriram said...

அடாடா tst இல்லையா?? நாங்கெல்லம் அத தள்ளு சார் தள்ளுன்னு சொல்லி கிண்டல் பண்ண்ணுவோம்.....காஞ்சனா ஹோட்டெல் இன்னும் இருக்கா??

வேற ஏதாவது மறந்திருந்தேன்னா திருப்பியும் வருவேன்.....:):)

SathyaPriyan said...

//
Radha Sriram said...
lazy geek சோம்பேறி பைய்யன் திருச்சிய பத்தி எழுதியிருக்கிறார்ன்னு நினக்கரேன்......மோஹன் தாஸ், தெக்கிகாட்டன்..லாமும் திருச்சின்னு தோணுது..:):)
//
அட இத்தனை பேர் இருக்கிறார்களா.

//
இன்னொரு முறை பதிவ படிச்சு மனச ஆத்திகிட்டேன்......:)
//
:-)

//
அடாடா tst இல்லையா?? நாங்கெல்லம் அத தள்ளு சார் தள்ளுன்னு சொல்லி கிண்டல் பண்ண்ணுவோம்.....
//
நாங்களும் அப்படியே :-) ஆனால் TST செட்டியாரின் பேரன் எனது நெருங்கிய நண்பன் என்பதால் அவன் இருக்கும் பொழுது அப்படி சொன்னால் கடுப்பாகி விடுவான்.

//
காஞ்சனா ஹோட்டெல் இன்னும் இருக்கா??
//
தெரியலியே :-(

//
வேற ஏதாவது மறந்திருந்தேன்னா திருப்பியும் வருவேன்.....:):)
//
வாங்க வாங்க எத்தனை முறை வேணும்னாலும் வாங்க.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இரண்டு ஆண்டுகள் திருச்சியில் தங்கி பள்ளியில் படித்திருக்கிறேன். மைக்கேல்ஸ் கடை மறக்க முடியாதது. இப்ப திருச்சி போனாலும் அந்த கடைக்கு மறக்காமல் போவதுண்டு. அப்புறம், நினைவுக்கு வருவது சுமதி, ராசி என்று இரண்டு புத்தகக் கடைகள். பள்ளி புத்தகங்களை இங்கு தான் வாங்குவது. தெப்பக்குளம் பத்தியும் சொல்லி இருக்கலாம். திருச்சியில் ஒரே உறுத்தல் என்னவென்றால் கொச கொசவென்று இருக்கும் வீடுகள், குறுகலான சாலைகள், மட்டமான சாக்கடை வசதி.

G.Ragavan said...

திருச்சீல எங்கப்பா கொஞ்ச வருசம் வேலை பாத்தாங்க. சுந்தர் நகர்னு சொல்ற எடத்துல இருந்தோம். மெயின்கார்டு கேட்டு பக்கத்துல இருக்குற இம்பால ஓட்டலுக்குக் கூட்டீட்டுப் போவாங்க. அதே மாதிரி தெப்பக்குளத்தச் சுத்தியிருக்குற எடத்துல மாங்கா இஞ்சி விப்பாங்க. அதுவும் வாங்குவாங்க. எல்லாம் ரொம்பச் சின்னப் புள்ளைல நடந்ததா...அதுனால சரியாத் தெரியலை.

SathyaPriyan said...

//
ரவிசங்கர் said...
மைக்கேல்ஸ் கடை மறக்க முடியாதது. இப்ப திருச்சி போனாலும் அந்த கடைக்கு மறக்காமல் போவதுண்டு. அப்புறம், நினைவுக்கு வருவது சுமதி, ராசி என்று இரண்டு புத்தகக் கடைகள். பள்ளி புத்தகங்களை இங்கு தான் வாங்குவது.
//
சுமதி மற்றும் ராசி பற்றியும் குறிப்பிட்டுள்ளேன்.
நானும் அங்கு தான் பாடப் புத்தகங்கள் வாங்குவது வழக்கம்.

//
தெப்பக்குளம் பத்தியும் சொல்லி இருக்கலாம்.
//
மன்னிக்கவும் விடு பட்டு விட்டது. ஆனாலும் காவிரிப் பாலம் பற்றியும் மலைக் கோட்டை பற்றியும் சிறிது இந்தப் பதிவில் கூறியுள்ளேன். நேரமிருந்தால் பார்க்கவும்.

//
திருச்சியில் ஒரே உறுத்தல் என்னவென்றால் கொச கொசவென்று இருக்கும் வீடுகள், குறுகலான சாலைகள், மட்டமான சாக்கடை வசதி.
//
நகருக்குள் அது உண்மை தான். ஆனால் புறநகர் பகுதிகளில் அப்படி இல்லை. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

//
G.Ragavan said...
திருச்சீல எங்கப்பா கொஞ்ச வருசம் வேலை பாத்தாங்க. சுந்தர் நகர்னு சொல்ற எடத்துல இருந்தோம்.
//
சுந்தர் நகரா? அது நான் பிறந்து, வளர்ந்த கே. கே. நகருக்கு அருகில் தான் உள்ளது.

//
மெயின்கார்டு கேட்டு பக்கத்துல இருக்குற இம்பால ஓட்டலுக்குக் கூட்டீட்டுப் போவாங்க.
//
அது சின்னக் கடை வீதியில், மலை வாசலுக்கு எதிரே இருந்தது. இப்பொழுது இல்லை. நல்ல அசைவ உணவு வகைகள் கிடைக்கும்.

வெகுநாட்களுக்கு பிறகு எனது பதிவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

அமிழ்து - Sathis M R said...

//மெயின் கார்டு கேட்டிலும், திருவரங்கத்திலும், தில்லை நகரிலும், பாலக்கரையிலும், உறையூரிலும், கண்டோன்மென்டிலும், கே. கே. நகரிலும் நான் சுற்றாத இடங்களை விரல் விட்டு எண்ணி விடலாம்.//

அடியேனும் அப்படியே! எல்லாம் கல்லூரியில் படிக்கும்போது சைக்கிளில் திருச்சியின் மொட்டை வெயிலில் சுற்றியதன் விளைவு!

என்னக் காரணமோ இரயில்வேயை சுத்தமாக விட்டு விட்டீர்கள்! :)) திருச்சி இரயில் நிலையம், பொன்மலை பணிமனை...!

பாரதிய நவீன இளவரசன் said...

பதிவு பிரமாதம்.

நானும் திருச்சிக்குப் பல தடவை வந்திருக்கிறேன், போயிருக்கிறேன், என்றாலும் திருச்சியின் டோபோகிராப்பி மட்டும் பிடிபடவே மாட்டேன் என்கிறது. இத்தனைக்கும் தஞ்சையிலிருந்து இரண்டு முறை டூவீலரில் மத்தியப் பேருந்துநிலலயம், மெயின்கார்டு கேட், சத்திரம் பேருந்துநிலையம், திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம் என்று வேறு சுற்றியிருக்கேன்.

சத்யப்ரியன், உங்களுடைய இந்தப் பதிவைப் படித்ததில், திருச்சியையே வலம் வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.

SathyaPriyan said...

//
அமிழ்து said...
என்னக் காரணமோ இரயில்வேயை சுத்தமாக விட்டு விட்டீர்கள்! :)) திருச்சி இரயில் நிலையம், பொன்மலை பணிமனை...!
//
ஆஹா அது விடுபட்டுவிட்டதே. மறந்து விட்டேன்.
மன்னிக்கவும். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

//
பாரதிய நவீன இளவரசன் said...
பதிவு பிரமாதம்.

உங்களுடைய இந்தப் பதிவைப் படித்ததில், திருச்சியையே வலம் வந்தது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது.

தகவல்களைப் பகிர்ந்துகொண்டதற்கு நன்றி.
//
மிக்க நன்றி. கேட்பதற்கே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.

Vassan said...

திருச்சியை பற்றி செய்தி சுருக்கம் படிக்க நன்றாகவிருந்தது.

தொ.நு.கல்லூரியில் படித்த காலத்தில் கம்பரசம்பேட்டை நீர் சுத்தகரிப்பு நிலையத்திற்கு போனது 1981 ல், அதற்கு பின் போனதில்லை. அப்போது வெலிங்க்டன் கொட்டகையில் படம் பார்த்தோம். எனது அம்மாவும்,மனைவியும் படித்த எஸ்.ஆர்.சி கல்லூரி உள்ள ஊர் திருச்சி. நகரில் இயற்கை எரி வாயு விற்பனை செய்கிற நிறுவனத்தின் உரிமையாளர் எனது உறவினொருவர்.

இந்தியா போக நேர்ந்தால் திருச்சியும் போக வேண்டும்.

Unknown said...

Sathya

Pinni pedal eduthitinga, AWESOME article sathya about trichy. I am big time fan of BHUHARI hotel.Once in six months i will be in India to see trichy. Iam keep on reading about trichy article for more than 10 times.Trichy bars and the menu which you mentioned is absolutly fantastic and i couldn't stop laughing. Maris complex hospital plan was dropped coz the building is near to railway line, so it will distrub the patients it seems. Thanks for your perfect effort.
Keep going !!!!

TrichyBala

SathyaPriyan said...

//
Vassan said...
திருச்சியை பற்றி செய்தி சுருக்கம் படிக்க நன்றாகவிருந்தது.
//
மிக்க நன்றி Vassan.

//
இந்தியா போக நேர்ந்தால் திருச்சியும் போக வேண்டும்.
//
அவசியம் செல்லுங்கள். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.

//
balag2005 said...
Pinni pedal eduthitinga, AWESOME article sathya about trichy.
//
Thank you so much Bala.

//
Iam keep on reading about trichy article for more than 10 times.Trichy bars and the menu which you mentioned is absolutly fantastic and i couldn't stop laughing.
//
கேட்கவே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. மிக்க நன்றி.

//
Maris complex hospital plan was dropped coz the building is near to railway line, so it will distrub the patients it seems.
//
Wow. Good to hear. Thank you for your visit and comments. Please do visit often.

Unknown said...

நான் திருச்சிக்கு புதுசு. உங்கள் பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. btw மைக்கேல்ஸ் ஐஸ்க்ரீம் பார்லர் எங்கே இருக்கிறது.

good post
Siva

SathyaPriyan said...

//
siva said...
நான் திருச்சிக்கு புதுசு. உங்கள் பதிவு எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது.
//
அட இந்த பதிவிற்கு இப்படி ஒரு பலன் இருக்கிறதா? மிக்க மகிழ்ச்சி. வருகைக்கு நன்றி.

//
மைக்கேல்ஸ் ஐஸ்க்ரீம் பார்லர் எங்கே இருக்கிறது.
//
அது திருச்சியில் பல இடங்களில் உள்ளது. எனக்கு தெரிந்தவற்றை குறிப்பிடுகிறேன்.

1. திருச்சி தெப்பகுளம் தபால் நிலையம் அருகில்
2. சிங்காரத்தோப்பில்
3. சத்திரம் பேரூந்து நிலையம் காமாட்சியம்மன் கோவில் அருகில்
4. தில்லை நகர் ஷாஸ்த்திரி ரோடும் (சிப்பி தியேட்டர் இருக்கும் ரோடு) தில்லை நகர் 9th கிராஸும் சேரும் இடத்தில்
5. நல்லி சில்க்ஸ் அருகில் (இது தலைமை தபால் நிலையத்திற்கு எதிரில் உள்ள வளாகத்தில் உள்ளது)

சேது said...

மிக அறுமையா திருச்சி பற்றி சொல்லி இருக்கீங்க. சூப்பர். :)

SathyaPriyan said...

//
சேது said...
மிக அறுமையா திருச்சி பற்றி சொல்லி இருக்கீங்க. சூப்பர். :)
//
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேது. தொடர்ந்து வாருங்கள்.

Hariharan # 03985177737685368452 said...

திருவெறும்பூர் பாரத மிகு மின் நிறுவனத்தில் கல்லூரிப்படிப்பின் இறுதியாண்டில் ப்ராஜக்ட் செய்தபோது கேண்டீனில் 50 பைசாவுக்குள் சாப்பிட வைரைட்டியாக உணவு கிடைத்துவிடும்.

ஆண்டார் தெருவில் அன்பைச் சொல்லிவிட அபத்தமாக முயற்சித்து முட்டிக்கொண்டது..

நந்தி கோவில் தெரு புத்தகக் கடைகள்...சாரதாஸ் ஷோகேஸில் பராக்குப்பார்த்தது..மலைக்கோட்டை பாறையில் வெய்யில் சூடு ஆறுமுன்பாக அமர்ந்து திருவரங்க கோபுரம், ரயில், பேருந்து பாலங்கள்னு மாலை வெயில் முகத்தில் பட பலமுறை பார்த்து அனுபவித்தது....

வாணப்பட்டறை மாரியம்மன் கோவிலில் யாஷிகா கேமராவை வைத்து வேண்டிக்கொண்டது..

சிங்காரத்தோப்பில் பிரபலமான டெய்லர் கடையில் உடை தைத்து வாங்கிக்கொண்டது..

தெப்பக்குளத்தைச் சுற்றி பர்மா பஜாரில் ஸ்போர்ட்ஸ் ஷூ வாங்கி அணிந்து தரையில் இருந்து ரெண்டு இஞ்ச் மிதந்த அனுபவம்..

குறிஞ்சி, அபிராமி, வஸந்த பவனில் சாப்பிட்டு மகிழ்ந்தது..

சோனா, மீனா, கலையரங்கம், மாரிஸ், சிப்பின்னு படம் பார்த்தது..

கல்லணை முக்கொம்புன்னு பரந்த, பிரிந்த மண் மட்டும் ஓடிய கொள்ளிடக் காவிரியை பார்த்து அனுபவித்தது...

TSTயின் பள பளக்கும் புதிய பஸ்ஸில் அதன் ஓனரை விட பெருமையோடு சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மத்தியப் பேருந்து நிலையத்திற்கு பயணித்தது...

பனானா லீஃபில் சாப்பிட்டு பர்ஸ் ஓட்டையான மாதிரி உணர்ந்தது..

மாரிஸ் அருகிலிருக்கும் கோனிகா போட்டோ லாபினுள்ளே அதீத குளிர்ச்சி + வாசனை மிகுந்த காற்றுக்கு அங்கிருக்கும் குளிர்சாதனமா அல்லது ரிசப்ஷனில் மாட் ஃபினிஷ் என்று கவரில் எழுதி என்னிடம் ஃபிலிம் ரோலை வாங்கிப்போட்ட போட்டோஜெனிக் பிகரா என்று 20 ஆண்டுகளாக இன்னமும் முடிவுக்கு வரமுடியாத பல அனுபவங்களை எனக்கு 1986 முதல் 1994 வரை தந்த நகரம் திருச்சி!

திரும்பிப் பார்க்க வைத்ததற்கு நன்றி!

SathyaPriyan said...

//
Hariharan # 03985177737685368452 said...
பல அனுபவங்களை எனக்கு 1986 முதல் 1994 வரை தந்த நகரம் திருச்சி!
//
ஆஹா! என்ன அருமையா உங்க அனுபவங்கள சொல்லி இருக்கீங்க. உண்மையில் இவற்றுள் பல எனக்கும் நடந்து இருக்கின்றன.

//
திரும்பிப் பார்க்க வைத்ததற்கு நன்றி!
//
அதே. உங்கள் அனுபவங்களை அழகாக சொல்லி என்னை மீண்டும் திரும்பிப் பார்க்க வைத்ததற்கு மிக்க நன்றி!

Adiya said...

நல்ல பதிவு சத்தியன் !!!!
கிரேட் "accolades" நண்பா !!!

உங்க பதிவு தான் இப்போ பயங்கர "forward" மெயில் ஆ இருக்கு !!!

SathyaPriyan said...

//
Adiya said...
நல்ல பதிவு சத்தியன் !!!!
கிரேட் "accolades" நண்பா !!!
//
தலைவா நன்றி. எங்கடா நம்ம ஊர பத்தி எழுதி இருக்கோம் இன்னும் ஆள காணோமேன்னு பார்த்தேன்.

//
உங்க பதிவு தான் இப்போ பயங்கர "forward" மெயில் ஆ இருக்கு !!!
//
ஓ! இதெல்லாம் வேர நடக்குதா உலகத்துலே.

சரி உங்க ஊருலே பணிப் பொழிவெல்லாம் எப்படி இருக்கு? சமீபத்துலே ஊருக்கு போர திட்டம் இருக்கா?

Radha Sriram said...

//http://lazyguy2005.blogspot.com/2007/08/blog-post_23.html//
சத்யா இங்க போய் பாருங்க lazy guy க்கு பதிலா lazy geek ன்னு எழுதிட்டேன்.......திருச்சிய பத்தி 1,2,3 ன்னு பாகமா போட்ட்ருக்கார்.

SathyaPriyan said...

//
Radha Sriram said...
சத்யா இங்க போய் பாருங்க திருச்சிய பத்தி 1,2,3 ன்னு பாகமா போட்ட்ருக்கார்.
//
தகவலுக்கு நன்றி Radha. அருமையாக எழுதி இருக்கிறார். பதிவிலும் சுட்டிகளை சேர்த்துள்ளேன்.

Ramesh said...

Dear Friends,
Good to read the above. Nanum trichy than. Where ever we are , we wont forget the streets we roamed. Nan St Jospeh's la school padichean.
Maris, Michels ice creams, NSB, Sarathas, Sumathi Raasi, Old book house, Kearla mess, Raaasi wines, Holy cross,kaveri IG ponnunga , malaikootai, kalai kavery groups, kavery bridge, impala briyani, Saalai road, main guard gate la seel panra 1 ruppee samosa yethuvum maraka mudiyathu.

Innum oru vishayam, when you see the malai kootai from the kavery bridge, you can see pulliyar sitting position. Those who dont know, when you go try it.

Pesura tamila vaichu, ivan intha orru karanu sollidalam, aana trichy karangala mattum solla mudiyathu. Its kind of decent( chaste) tamil.

Trichyla oru hotel poi sappadu vaangi sariya sapidama vantheengana, antha hotel server unga amma mathiri yean pa sapadu nalla illaya illa unaku udambu sari illayanu aakaraiya keepadu.
Ithu than trichy.

Vera yangaium intha marriyathai, aanbu paka mudiyathu.

Varean nanba.

Maatha veendiya idangal trichyla niriya iruku.

SathyaPriyan said...

//
Ramesh said...
Trichyla oru hotel poi sappadu vaangi sariya sapidama vantheengana, antha hotel server unga amma mathiri yean pa sapadu nalla illaya illa unaku udambu sari illayanu aakaraiya keepadu.
Ithu than trichy.
//
ஆமாங்க. முற்றிலும் உண்மை. அதை கூற மறந்து விட்டேன். எனக்கே அந்த அனுபவங்கள் நிறைய உண்டு.

//
Varean nanba.
//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. தொடர்ந்து வாருங்கள்.