பதிவினை படிப்பவர்கள் அவசியம் பின்னூட்டங்களையும் படியுங்கள். அதில் பந்து, மதுவதணன் மற்றும் டாக்டர் புரூணோ மூவரும் இச்செயல்பாட்டை விளக்கி இருக்கிறார்கள். இது ஜீமெயிலின் குறைபாடு அல்ல என்றும் அது ஒரு வசதி என்றும் தெரிகிறது.
நண்பர்களே,
நீங்கள் ஜீமெயில் உபயோகிக்கிறீர்களா? உங்களது முகவரியில் புள்ளி (Dot) இருக்கிறதா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஜீமெயில் முகவரியில் உள்ள புள்ளியை அங்கீகரிப்பதில்லை.
உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், எனது மின்னஞ்சல் முகவரி sathya.priyan@gmail.com என்று வைத்துக் கொள்வோம். வேறு யாரோ ஒருவரின் முகவரி sathyapriyan@gmail.com என்று வைத்துக் கொள்வோம், எனது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களும் sathyapriyan@gmail.com முகவரிக்கும் அனுப்பப்படும். புள்ளி மின்னஞ்சலில் எங்கு எவ்வளவு இருந்தாலும் இதே செயல்பாடுதான். sath.ya.pri.yan@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் அனைத்து மின்னஞ்சல்களும் sathyapriyan@gmail.com முகவரிக்கும் அனுப்பப்படும்.
ஆனால் இதை கூகுள் அதிகாரப் பூர்வமாக இன்னும் அங்கீகரிக்கவில்லை. இதனை கூகுள் அங்கீகரித்து சரி செய்யும் வரை உங்கள் மின்னஞ்சலில் உள்ள புள்ளியை நீக்கி விடுங்கள். அது இயலாதென்றால் முக்கியமான வங்கி கோப்புகள், டீமேட் வர்த்தகங்கள் போன்றவற்றை யாஹூ, லைவ், ஹாட்மெயில் போன்ற வேறு வழங்கிகளுக்கு மாற்றி விடுங்கள்.
கூகுளை போன்ற நிறுவனம் இது போன்றதொரு அடிப்படை விஷயத்தில் சொதப்புவது கேவலமாக இருக்கிறது.
இவன்,
சத்யப்ரியன்
21 Comments:
நீங்கள் சொன்னபடி நடக்க வாய்ப்பு இல்லை என நினைக்கிறேன். sathyapriyan@gmail.com என்ற முகவரி இருக்கும்போது sathya.priyan@gmail என்ற முகவரி இருக்க முடியாது. sathya.priyan@gmail.com என்ற முகவரியை gmail அனுமதிக்காது
இது எனது நண்பர்கள் இருவருக்கு கடந்த ஆறு மாதங்களாக நடந்து கொண்டிருக்கும் செயல். முதலில் அவர்கள் வங்கியின் குறைபாடு என்று நினைத்துக் கொண்டிருந்தார்கள். பின்னர் தான் தெரிந்தது இது கூகுளின் குறைபாடு என்று. கூகுளிட்டதில் பலருக்கும் அதே அனுபவம் என்று தெரிகிறது. அதனால் தான் பதிவிட்டேன்.
கீழே உள்ள சுட்டியில் இருப்பது ஒரு உதாரணம், இது போல் சுமார் ஆயிரம் புகார்களுக்கு மேல் உள்ளது.
http://www.google.com/support/forum/p/gmail/thread?tid=7708c23ffef622e0&hl=en
நீங்கள் தந்த சுட்டியில், நான் சொன்னதையே அதன் மாடரேட்டர்கள் சொல்லியிருக்கிறார்கள். கவனித்தீர்களா?
இப்பொழுது தான் அதை கவனித்தேன். ஆனால் அப்படி நடக்கவில்லை என்பது தான் இப்பொழுதைய சிக்கலே. ஒரு வேளை இப்பொழுது புதிய மின்னஞ்சல் உருவாக்க முடியாமல் கூகுள் தடுக்கலாம். ஆனால் முன்னரே உருவாக்கிய மின்னஞ்சல்கள் அவ்வாறே இருக்கும்.
இன்று கூட எனது நண்பர்களுக்கு ICICI வங்கியிலிருந்து மின்னஞ்சல்கள் வந்தன.
yes.. that is a possibility.
Hi.Thanks for your information..
Good Work..Creating awareness among the people..
But i tried sent mail to mygmail id by removing the ".".
Actullay i received mail to mygmail id only.so i think
both "." mail id and with out"." mail id are mine only...
கார்த்திக் வருகைக்கு நன்றி. உங்கள் விஷயத்தில் புள்ளி இல்லாத முகவரி யாரும் இதர்கு முன்னர் உருவாக்கவில்லை. அதனால் அது உங்களுக்கே கிடைத்து விட்டது. இதனை உறுதி செய்து கொள்ள புள்ளி இல்லாமல் உங்கள் மின்னஞ்சலை கொடுத்து உங்களால் உள் நிழைய முடிகிறதா என்று பார்க்கவும்.
நான் சொல்ல வந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளி வைத்து ஒன்று புள்ளி இல்லாமல் ஒன்று என்று இரண்டு வேறு முகவரிகளை உருவாக இயன்றது. அவ்வாறு இரண்டு வேறு நபர்கள் முகவரிகளை உருவாக்கி இருந்தால் ஒருவரின் மின்னஞ்சல் மற்றவருக்கு சென்று சேரும்.
இந்தப் பதிவை வாசித்துவிட்டு பின்னூட்டங்களை வாசிக்காது போகும் வாசகர்களுக்கு நீங்கள் தவறான தகவல்களை வழங்குகிறீர்கள். ஜீமெயில் ஆரம்பத்திலிருந்தே இதை ஒரு இயல்பாக (feature) வைத்திருக்கிறது.
நீங்கள் mathuvathanan.mounasamy@gmail.com என்று முகவரியை பதிவுசெய்யதால் வேறு யாரும் mathuvathananmounasamy@gmail.com mathu.vathanan.mouna.samy@gmail.com .... என்று பதிவு செய்ய முடியாது. இடையில் dot போட்டு அனுப்பும் அனைத்து மின்னஞ்சல்களும் குறித்த முகவரிக்கே வரும். மேலும் mathuvathanan.mounasamy+work@gmail.com அல்லது mathuvathanan.mounasamy+home@gmail.com எல்லாம் குறித்த முகவரிக்கே வரும். இவையெல்லாம் உங்களுக்கு வரும் மின்னஞ்சல்களை ஒழுங்குபடுத்த ஜீமெயில் தரும் வசதி. அதையே குறை என்று சொல்லியிருக்கிறீர்கள்.
தயவுசெய்து பதிவில் பின்னூட்டங்களையும் முழுமையான விளக்கத்துக்கு பின்னூட்டங்களையும் வாசித்துவிட்டுச் செல்லுங்கள் என்ற வரியை சேர்த்துவிடுங்கள். புண்ணியமாய்ப் போகும்.
பின்னூட்டங்களைப் பெறுவதற்காக...
//நீங்கள் சொன்னபடி நடக்க வாய்ப்பு இல்லை என நினைக்கிறேன். sathyapriyan@gmail.com என்ற முகவரி இருக்கும்போது sathya.priyan@gmail என்ற முகவரி இருக்க முடியாது. sathya.priyan@gmail.com என்ற முகவரியை gmail அனுமதிக்காது//
Yes
If some one has created an addres brunomascarenhas@gmail.com, i cannot create bruno.mascarenhas@gmail.com
//ஆனால் முன்னரே உருவாக்கிய மின்னஞ்சல்கள் அவ்வாறே இருக்கும். //
I don't think so
Gmail allows only one registration for any given username. Once you sign up for a username, nobody else can sign up for the same username, regardless of whether it contains extra periods or capital letters; those usernames belong to you. If you created yourusername@gmail.com, no one can ever register your.username@gmail.com, or Your.user.name@gmail.com. Because Gmail doesn't recognize dots as characters within usernames, you can add or remove the dots from a Gmail address without changing the actual destination address; they'll all go to your inbox, and only yours.
This is the actual issue
--
There is not such a account.
It doesn't exist.
You are firstname.lastname and firstnamelastname.
If you get to firstnamelastname mails not for you, it is because a sender made a mistake.
He wanted to write to firstnamelastname1 and by mistake wrote to firstnamelastname.
--
Or the bank made the mistake
//நான் சொல்ல வந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளி வைத்து ஒன்று புள்ளி இல்லாமல் ஒன்று என்று இரண்டு வேறு முகவரிகளை உருவாக இயன்றது. அவ்வாறு இரண்டு வேறு நபர்கள் முகவரிகளை உருவாக்கி இருந்தால் ஒருவரின் மின்னஞ்சல் மற்றவருக்கு சென்று சேரும்.//
That is not at all possible
Can you please tell us
What is the intended recipient
and who is getting those mails
If you still have doubt
Try logging into that account with your password and you can do it
Getting a phone call because someone dialed the wrong number doesn't prompt one to contact the phone company and complain about two people having the same phone number.
Just to clarify, you are not receiving e-mail addressed to someone else, you are receiving e-mail intended for someone else but miss-addressed to you.
Check this
Labnol
//நான் சொல்ல வந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் புள்ளி வைத்து ஒன்று புள்ளி இல்லாமல் ஒன்று என்று இரண்டு வேறு முகவரிகளை உருவாக இயன்றது. அவ்வாறு இரண்டு வேறு நபர்கள் முகவரிகளை உருவாக்கி இருந்தால் ஒருவரின் மின்னஞ்சல் மற்றவருக்கு சென்று சேரும்.//
This facility is in GMail from 2006 itself
See here GMail Easter Eggs: Dot Blindess & Email Aliases
So
I don't think that you could have done this even three years ago
//கீழே உள்ள சுட்டியில் இருப்பது ஒரு உதாரணம், இது போல் சுமார் ஆயிரம் புகார்களுக்கு மேல் உள்ளது.
// All these are issues with the senders typing the wrong mail address
//அவ்வாறு இரண்டு வேறு நபர்கள் முகவரிகளை உருவாக்கி இருந்தால் ஒருவரின் மின்னஞ்சல் மற்றவருக்கு சென்று சேரும்.// It is not two different accounts boss
It is the same account only with same password :) :)
உண்மையில் பயனுள்ள தகவல்
Good info. Actually, karthik should not have gotten the email sent to his email id without dot. So , your point is true!
வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மதுவதணன், புரூணோ மற்றும் இதிமாயலோகம். நான் பதிவு செய்தது செய்ததாகவே இருக்கட்டும். உங்கள் கருத்துக்கள் படிப்பவர்களுக்கு உண்மையை உணர்த்தட்டும்.
Post a Comment