Monday, December 19, 2011


பொடிமாஸ் - 12/19/2011

சசிகலா கோஷ்டியினர் ஒட்டு மொத்தமாக அதிமுகவிலிருந்து நேற்று நீக்கப்பட்டுள்ளனர். அம்மா எந்த சூழ்நிலையில் இப்படி ஒரு முடிவெடுத்தார் என்று தெரியவில்லை. பலரும் பலவற்றை யூகிக்கிறார்கள். இனி சசிகலா கோஷ்டியினர் மீது நில அபகரிப்பு புகார்கள் எழும். கைதும் நடக்கலாம். இதிலெல்லாம் நேரத்தை செலவிடாமல் இனியாவது மக்களுக்கு நல்லது செய்வதில் முதல்வர் நேரத்தை செலவிட்டால் அவருக்கும் நல்லது, அவரது கட்சிக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது. செய்வாரா?ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகளை செய்யும் டார்ச்சர் தாங்க முடியவில்லை. பேசவே முடியாத குழந்தைகளிடம் மைக்கை கொடுத்து பாடு பாடு என்று இம்சை செய்வதுடன் இதில் ராகம் நொள்ளை, தாலம் நொட்டை என்று டவுசரை கழட்டுகிறார்கள், பார்ப்பவர்களுக்கும் சேர்த்து. இதனிடையில் யாரேனும் வெளியேற்றப்பட்டால் ஒப்பாரி வேறு. குழந்தைகள் மனதில் சுய பச்சாதாபத்தை விதைக்கிறார்கள். இவர்கள் மீதெல்லாம் குழந்தைகள் வன்முறை சட்டம் பாய்ந்து கடித்து துப்ப வேண்டும். அப்பொழுது தான் புத்தி வரும்.அஜித் - விஜய் யார் படம் பெஸ்ட்? என்றொரு தொடர் விளையாட்டு தற்பொழுது நடந்து கொண்டிருக்கிறது. நம்மையெல்லாம் யார் ஆட்டைக்கு அழைக்கப் போகிறார்கள். பந்தக் கால பார்த்தாலே பந்திக்கு போகும் ஆள் நான். கூப்பிட்டால் தான் ஆட்டையில் சேரனுமா என்ன? இதோ அஜித் மற்றும் விஜய் படங்களில் எனது தேர்வு.

அஜித்: முகவரி, இதன் ஒரிஜினல் கிளைமேக்ஸுடன். அம்சமான படம். அருமையான கதை களம். நல்ல நடிகர்கள் தேர்வு. வாழ்க்கையில் எப்பொழுது எந்த விஷயங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை அருமையாக சொல்லி இருப்பார் இயக்குனர்.

விஜய்: லவ் டுடே. இதன் முடிவிலும் ஒரு சோகம் இருந்தாலும், படத்தினை பார்த்த அனைத்து இளைஞர்களையும் தனக்கும் இப்படி ஒரு அப்பா, இப்படி ஒரு நண்பர்கள் கூட்டம் கிடைக்காதா என்று ஏங்க வைத்த படம். "புக்க டிக்கில வச்சா டிகிரி எங்கடி வாங்கறது?", "பொண்ணுங்க படிப்ப ஃபாலோ பன்றாங்க; நம்ம பசங்க அவங்க இடுப்பு மடிப்ப ஃபாலோ பன்றாங்க", "வாந்தியோட சேர்ந்து வசந்தியும் வெளிய வந்துட்டா" போன்ற வசனங்கள் எவர்கிரீன்.இந்த மாதம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கவிருக்கும் இசைஞானியின் கான்சர்ட் டீசர்கள் ஜெயா டிவியில் வந்து கொண்டிருக்கின்றன. ஆவலை தூண்டுகிறது. நேரலை ஒளிபரப்பு செய்வார்களா என்று தெரியவில்லை. அதன் பேரில் "இசைஞானியின் இனிய பத்து" என்ற தலைப்பில் அவரின் பத்து பாடல்களை பட்டியலிட்டு அனுப்பி வைக்கும்படி கேட்டிருக்கிறார்கள். ராஜாவின் பாடல்களில் பத்தே பத்து பாடல்களை தேர்வு செய்வது நடக்கும் காரியமா? வைரத்தில் எந்த வைரம் உயர்ந்தது? எந்த வைரம் தாழ்ந்தது? எல்லாமே வைரங்கள் தான். எல்லாமே பொக்கிஷங்கள் தான். இருந்தாலும் எனது பத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

1. இளைய நிலா
2. பனிவிழும் மலர்வனம்
3. அந்தி மழை பொழிகிறது
4. என்ன சத்தம் இந்த நேரம்
5. இது ஒரு பொன்மாலை பொழுது
6. ராக்கம்மா கைய தட்டு
7. தூங்காத விழிகள் ரெண்டு
8. ஓ வஸந்த ராஜா
9. ராஜ ராஜ சோழன் நான்
10. பூ மாலையே தோள் சேர வாசரி ராஜாவின் பாடல் நினைவுகள் தந்த போதையில் ரெஹ்மானையும் கொஞ்சம் கவனித்து பதிவினை முடிப்போம். கீழே உள்ள பாடலின் ஆர்கெஸ்ட்ரேஷனை கொஞ்சம் கேளுங்கள். சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த படத்தில் செய்தது என்றால் நம்ப முடிகிறதா? சென்ற வாரம் வெளிவந்த பாடல் போல அவ்வளவு ஃபிரெஷ் ஆக இருக்கிறது. எனது வருத்தமே இது போன்ற முயற்சிக்கு கொடுக்காமல் ஜெய் ஹோ போன்ற மொக்கைக்கு ஆஸ்கார் கொடுத்தது தான்.


2 Comments:

ராஜ நடராஜன் said...

Embeded AV is the best of A.R.Rahman's music.

SathyaPriyan said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ராஜ நடராஜன். தொடர்ந்து வாருங்கள்.