Wednesday, February 13, 2013


காதலர் தின நல்வாழ்த்துகள்





இது எனது முதல் முயற்சி. துப்புபவர்கள் பின்னூட்டத்தில் துப்பவும். வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது காதலர் தின நல்வாழ்த்துகள்.

8 Comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வாழ்த்துக்கள்...

நண்பா said...

காதலர் தின நல்வாழ்த்துகள்..

அந்த ரோஜாக்கள் படம் - கொடுபவருடைய உள் மனதின் குறியீடா?
:)
ஏனென்றால் அந்த ரோஜாவை மனைவிக்கு கொடுத்தால்
"அடிக்கிற அடியில் தாரை தப்பட்டைகள் கிழித்து தொங்கவிடுவார்கள்".. ;)

தங்கமணி இல்லை என்ற ஜோரில் இரண்டாவது செட் ரோஜாக்களை வேறு யாருகாவது கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அவர்கள் சார்பில் எச்சரிக்கிறேன் :)

Anonymous said...

துப்புபவர்கள் பின்னூட்டத்தில் துப்பவும்//

துதுதுதுதுதுதுது....-:)

காதலர் தின நல்வாழ்த்துகள்...

(I think your wife has gone to India...-:))



Avargal Unmaigal said...

தங்கமணி இல்லாததால் ஒருவர் கட்டுக்கடங்காமல் ஆட்டம் போடுவதாக தெரிகிறது. இந்த வருஷம் நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான் எடுத்திரிக்கீங்களா? இல்லை என்றால் உடனே பதிவை டெலீட் பண்னிடுங்க இல்லே தங்கமணி வந்தபின் நீங்க கண்டிப்பாக ஹாஸ்பிடல் போக வேண்டியிருக்கும்

SathyaPriyan said...

//
திண்டுக்கல் தனபாலன் said...
வாழ்த்துக்கள்...
//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன். தொடர்ந்து வாருங்கள்.

//
Siva said...
தங்கமணி இல்லை என்ற ஜோரில் இரண்டாவது செட் ரோஜாக்களை வேறு யாருகாவது கொடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று அவர்கள் சார்பில் எச்சரிக்கிறேன் :)
//
அண்ணாத்தே, நமக்கு மனசு ரொம்ப பெரிசா, அதுனால எத்தன பேருக்கு வேணா கொடுக்க மனசு இருக்கு. ஆனா பாருங்க, இந்த பொம்பளைங்களுக்கு மனசு ரொம்ப சின்னதா இருக்கு. அதுனால ஒருத்தரும் வாங்க மாட்டேங்கறாங்க :-(

//
ரெவெரி said...
துதுதுதுதுதுதுது....-:)
//
ஆஹா இப்படி துப்பிட்டீங்களே...

//
I think your wife has gone to India...-:)
//
அதுனால தானே இந்த ஆட்டம்.

//
Avargal Unmaigal said...
தங்கமணி இல்லாததால் ஒருவர் கட்டுக்கடங்காமல் ஆட்டம் போடுவதாக தெரிகிறது. இந்த வருஷம் நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ் ப்ளான் எடுத்திரிக்கீங்களா? இல்லை என்றால் உடனே பதிவை டெலீட் பண்னிடுங்க இல்லே தங்கமணி வந்தபின் நீங்க கண்டிப்பாக ஹாஸ்பிடல் போக வேண்டியிருக்கும்
//
என்னண்ணே இப்படி பயமுறுத்தறீங்க......... அப்போ ஆப்பு நிச்சயமா?

G.M Balasubramaniam said...


சாமியின் மன அலைகள் பகுதியில் உங்கள் கருத்துக்களைப் படித்தேன். காரசாரம். நான் என் பதிவில் பெண்களே நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள் என்று ஒரு பதிவு எழுதி இருந்தேன். நீங்கள் படித்தீர்களா. ?

SathyaPriyan said...

வருகைக்கு நன்றி GMB சார். உங்கள் பதிவை படித்தேன், பின்னூட்டமும் இட்டு விட்டேன். அருமையாக சொல்லி இருக்கிறீர்கள்.

கந்தசாமி சாரும் நான் மிகவும் மதிக்கும் பதிவர். அவரை தவறாக சித்தரிக்க நான் முயலவில்லை. அவரை போன்ற அனுபவஸ்தர்கள் பாதிக்கப்பட்டவர் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.

ஒவ்வொருவரும் எழுதும் போது, "என் வீடு பெண் கற்பழிப்புக்கு ஆளானால் நான் இம்மாதிரி தான் 'ராத்திரி ஏன் தனியா போனாய்?', 'ஏன் ஆண்களை கவர்வது போல் உடை உடுத்துகிறாய்?' என்றெல்லாம் கேட்டுக் கொண்டா இருப்பேன்." என்ற சுய கேள்வியை கேட்க வேண்டும்.

எடுத்தோம் கவிழ்த்தோம் என்று கருத்துகளை பதியக் கூடாது.

கடைசியாக, நீங்கள் உரிமையுடன் என்னை ஒருமையில் அழைக்கலாம். மதிப்பு கூட்டு விகுதிகள் எல்லாம் தேவை இல்லை.

கவியாழி said...

முயற்சிக்கு வாழ்த்துக்கள்