Tuesday, April 01, 2008


ரங்க பவனம் - II

திருவாணைக்காவலில் இருந்து திருவரங்கத்திற்கு பத்தே நிமிடங்களில் வந்தான் பார்கவ். ரங்க பவனத்தில் இருக்கும் தீபாவின் வீட்டை அடைந்த பின்னர் தான் கவனித்தான் மணி இன்னும் 6:20 ஐ காட்டிக் கொண்டு இருந்தது. 'அடடா! மணி தெரியாமல் வந்து விட்டோமே.' என்று யோசித்தவன் சட்டென்று "டேய், Bharghav!" என்ற குரல் கேட்டு திரும்பினான். பார்த்தால் அவனது பள்ளித் தோழன் ராமனாதன். ராமனாதனின் தாத்தா திருச்சியில் மிகவும் பிரபலமான ஒரு பஸ் கம்பெனியின் முதலாளி.

"டேய்! இங்கே என்னடா பண்ணறே?", இது ராமனாதன்.

"சும்மா தான்டா"

"College லாம் எப்படி இருக்கு?"

"பரவா இல்லை. ஏதோ போய்கிட்டு இருக்கு."

"Ragging லாம்?"

"அதெல்லாம் சுத்தமா கிடையாதுடா. பாதி seniors நம்ம school தான். So no problem. உனக்கு?"

"உனக்கு என்னடா? நல்ல college. Campus placement லாம் இருக்கு. எனக்கு அப்படியா?"

"ஏய், தூ... செட்டியார் சேர்த்து வச்சுருக்கற சொத்துக்கு உக்காந்து தின்னாலே மூனு தலைமுறைக்கு வரும். இதுலே வேலைய பத்தி கவலை படறே."

ராமனாதனின் தாத்தாவை திருச்சியில் எல்லோரும் செட்டியார் என்று தான் அழைப்பார்கள். அதை தான் பார்கவ் குறிப்பிட்டான்.

"சரி வாடா போய் அந்த டீக்கடையிலே தம் போட்டு போலாம்." என்று அழைத்தான் ராமனாதன்.

"இல்லேடா. ஒரு friend வீட்டுக்கு dinner க்கு போறேன். வேணாம். நீ அடி." என்று மறுத்தான் பார்கவ்.

"யாருடா அது, எனக்கு தெரியாம உன் friend?"

"College friend டா. பேரு Deepa. Dinner க்கு கூப்பிட்டா. அதான் போறேன்."

"டேய்! உண்மைய சொல்லு. friend ஆ? இல்ல friendi யா?"

"அட ச்சீ. அதெல்லாம் ஒரு மண்ணும் கிடையாது. Just friend."

"சரி டா. நான் கிளம்பறேன். You carry on. உன்கிட்டே நிறையா பேசனும்டா. முடிஞ்சா saturday morning 10 O' Clock காயத்ரீஸ் வந்துடு." என்று கூறி விடை பெற்றான் ராமனாதன். அதற்குள் மணி 7 ஆகி விடவே, தீபாவின் வீட்டை நோக்கி சென்றான் பார்கவ்.

வண்டியை வேகமாக செலுத்தி தீபாவின் வீடு இருக்கும் ரங்க பவனம் தெருவில் திரும்புகையில் அவனது வேகத்தையும் மீறி அவனது கண்கள் அந்த தேவதையை படம் பிடித்தன. உருண்டை முகம், எலுமிச்சை நிறம், கன்னத்தில் சிரிக்கும் பொழுது லேசாக விழும் குழி, வகிடு எடுக்காமல் தூக்கி வாரிய முடி, peach colour சல்வார், கழுத்தை ஒட்டி பின்புறம் போடப்பட்ட துப்பட்டா, காதுகளில் அதற்கு பொருத்தமான முத்து பதித்த studs, வலது கையில் bracelet, இடது கையில் watch என்று அவளை அந்த ஒரு கணத்தில் முழுவதுமாக அளந்தன பார்கவின் கண்கள். 'ஒக்காமக்கா super figure' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான். வேறொரு நேரமாக இருந்தால் அவளை கடந்து சென்றிருக்கவே மாட்டான். அங்கேயே வண்டியை நிறுத்தி விட்டு அவளை தொடர்ந்து சென்று அவளது வீட்டை கண்டு பிடித்திருப்பான். ஆனால் இப்பொழுது தீபாவின் வீட்டிற்கு சாப்பிட செல்வதால் ஒரு நீண்ட பெருமூச்சுடன் அவளை கடந்தான்.

பார்கவ், தீபாவின் வீட்டின் அழைப்பு மணியை அமுக்கி காத்திருந்தான். கதவை திறந்த தீபா, "வாடா வா. 6 மணிக்கு கிளம்பி இங்கே வர்ரதுக்கு ஒரு மணி நேரமா? இப்போ தான் உங்க வீட்டுக்கு phone பண்ணினேன்."

"அதுக்குள்ளே CID வேலைய ஆரம்பிச்சுட்டியாக்கும். ராமனாதன பார்த்தேன். அதான் பேசிகிட்டு இருந்தேன்."

"யாரு அது?"

"அதான் சொல்லி இருக்கேனே, நம்ம செட்டியார் பேரன். என்னோட school mate."

"சரி சரி உள்ள வா."

உள்ளே சென்ற பார்கவிற்கு தீபாவின் தந்தையின் அறிமுகம் கிடைத்தது. அவர் இவன் நினைத்ததை விட இளமையாக இருந்தார். வரலாற்று பேராசிரியரான அவரிடம் இவன் பேசுவதற்கு பல விஷயங்கள் இருந்தன. நேரம் போவதே தெரியாமல் இருவரும் வரலாறு, பொருளாதாரம், இந்திய மற்றும் மேல் நாட்டு வாழ்க்கை, அரசியல், சமூகம் என்று சகலத்தையும் பேசி சலித்தெடுத்துக் கொண்டிருந்த போதுதான் இவனுக்கு சௌம்யாவின் நினைவு வந்தது. "Deepi, where is Saumya?" என்று கேட்டான். "அவளுக்கு ஏதோ project report spiral binding பண்ணனுமாம். அதான் போயிருக்கா. இப்போ வந்துடுவா." என்று சொல்லிக் கொண்டு இருக்கும் போதே அழைப்பு மணி ஓசை எழுப்பியது. கதவை திறந்து பார்த்த தீபா, "வா வா. உனக்கு ஆயுசு நூறு. இப்போ தான் Bharghav உன்னை பத்தி கேட்டுக்கிட்டு இருந்தான். Think of the devil." என்றாள். அதை கேட்டு சிரித்துக் கொண்டே உள்ளே வந்த சௌம்யாவை பார்த்து பார்கவ் மயங்கி விழாத குறை தான். பின்னே, வெளியே பார்த்து தவரவிட்ட அதே தேவதையை மீண்டும் பார்த்தால்? சம்பிரதாய அறிமுகப் படலத்தின் போது கை குடுத்த சௌம்யாவின் மென்மையான கையை 'ஹி! ஹி!' என்று வாயெல்லாம் பல்லாக இளித்துக் கொண்டே 5 நிமிடங்கள் விடாமல் பிடித்துக் கொண்டிருந்தான். பின்னர் பின் மண்டையில் திடீர் என்று ஒரு bulb எரிய decent ஆக நடிக்கத் தொடங்கினான்.

ஆனாலும் அதன் பின் அங்கே நடந்த உரையாடல்கள் எதிலும் அவனது கவனம் இல்லை. அவனது கவனம் எல்லாம் சௌம்யாவிடமே இருந்தது. சாப்பிடும் போது தீபாவின் அருகில் இருந்த இருக்கையில் வேண்டுமென்றே தண்ணீரைக் கொட்டிவிட்டு சௌம்யாவின் அருகில் போய் அமர்ந்தான். சௌம்யாவை பற்றி முழு விபரங்களையும் கேட்டறிந்தான். விடை பெரும் போது சௌம்யா "அடுத்து எப்போ meet பண்ணலாம்?" என்றாள். இதற்காகவே காத்திருந்தவன் போல சட்டென்று "How about a movie this weekend?" என்றான்.

"Sure. Which one?"

"காதல் கவிதை at Maris?"

"Okie. Catch you this saturday."

"Bye!"

"Bye! Good night. பார்த்து மெதுவா போ."

அன்று இரவு வீடு திரும்பிய பார்கவின் மனதில் இனம் புரியாததொரு மகிழ்ச்சி நிலவியது. அது எதனால் என்று அவனுக்கே தெரியவில்லை. இதற்கு முன்னர் எத்தனையோ அழகான பெண்களிடம் அவன் கடலை போட்டு இருக்கிறான். பெண் நண்பிகளும் அவனுக்கு நிறைய உண்டு. ஆனாலும் சௌம்யா அவனுக்கு 'Something Special' ஆக தெரிந்தாள். அவளது அழகையும் மீறி அவளிடம் இருந்த ஏதோ ஒன்று அவனை ஈர்த்தது. 'Is this love or infatuation?' அவனே அவனிடம் கேட்டுக் கொண்டான். வரப்போகும் சனிக்கிழமைக்காக ஏங்கியது அவன் மனம்.

4 Comments:

Radha Sriram said...

நன்றாக போய் கொண்டிருக்கிறது கதை..:)
பார்கவ் பயங்கர காசனோவாவா இருப்பான் போல??
அது சரி "காயத்ரீஸ்"ஸா?? அது எங்க இருக்கு??

SathyaPriyan said...

//
Radha Sriram said...
நன்றாக போய் கொண்டிருக்கிறது கதை..:)
//
நன்றி.

//
பார்கவ் பயங்கர காசனோவாவா இருப்பான் போல??
//
இதற்கு அவனிடமே கேட்டு பதில் சொல்லுகிறேன் :-)

//
அது சரி "காயத்ரீஸ்"ஸா?? அது எங்க இருக்கு??
//
அது ஒரு டீக்கடை. சத்திரம் பேரூந்து நிலையத்தில் இந்திரா காந்தி பெண்கள் கலைக் கல்லூரி எதிரில் உள்ளது. அங்கு எதற்கு போகிறோம் என்று கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் :-)

நீங்கள் சுட்டிக் காட்டிய இரண்டு எழுத்து பிழைகளையும் திருத்தி விட்டேன். நன்றி.

இரண்டாவதாக சுட்டிக் காட்டிய "Infatuation" பிழை உண்மையில் எழுத்து பிழை அல்ல. நான் பல காலம் அதனை அவ்வாறு தான் எழுதி வருகிறேன்.

Thanks for correcting me lest I be embarrassed somewhere :-)

CVR said...

ம்ம்ம்
அப்புறம்?? :-)

SathyaPriyan said...

//
CVR said...
ம்ம்ம்
அப்புறம்?? :-)
//
"அப்புறம் என்ன நடந்தது என்பதை வெள்ளித் திரையில் காண்க" அப்படீன்னு சொல்ல ஆசைதான்.

அடுத்த பதிவில் காண்க அப்படீன்னு மட்டும் சொல்லிக்கறேன் :-)