Tuesday, April 15, 2008


ரங்க பவனம் - VII

பார்கவ் தான் அவளது தேர்வு முடிவை முதலில் பார்த்தவன். மதியம் 12 மணிக்கே முடிவு வெளியானாலும், 2 மணிக்கு தான் IIM இணையதளம் உயிர்ப்பு பெற்றது. அவனுக்கு தெரியும், tension காரணமாக சௌம்யா முடிவுகளை பார்க்க வரமாட்டாள் என்று. அதனால் அவ்வளவு நேரம் பொறுமையாக இருந்து முதலில் பார்த்து அவளிடம் சொல்ல வேண்டும் என்பதற்காக கணிணி முன்பே அமர்ந்து இருந்தான். அவளது முடிவு தெரிந்த உடன் அவனுக்கு தலை கால் புரியவில்லை. 98.9 percentile வாங்கி இருந்தாள். அவள் முன்னரே குறிப்பிட்டது போல Verbal தவிர்த்து மற்ற பிரிவுகளில் எல்லாம் உச்ச மதிப்பெண்கள் பெற்றிருந்தாள். இதற்கு கட்டாயம் 3 interview calls ஆவது வரும் என்பது அவனுக்கு தெரியும். நேரில் சென்று சொல்லி சௌம்யாவின் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதால் அவளது வீட்டிற்கு சென்றான்.

தேர்வு முடிவை அறிந்த சௌம்யாவிற்கு உலகையே வெற்றி கொண்டது போன்ற ஒரு பெருமிதம் வந்தது. அவ்வளவு நிறைவாக சௌம்யா இருந்து பார்கவ் பார்த்ததே இல்லை. வழக்கமான சம்பிரதாய வாழ்த்துக்கள், treat கள் என்று அடுத்த ஒரு வார காலம் அமர்க்களப் பட்டது. அவன் நினைத்தது போலவே IIM C, L மற்றும் K என்று மூன்று இடங்களில் இருந்து interview call வந்தது. சௌம்யாவும் GD மற்றும் interview விற்கு தயாராவதில் கவனம் செலுத்தினாள். பார்கவ், தீபா இருவரும் அதற்கு பெரிதும் உதவினார்கள். C, L, K alumni list இல் இருந்து ஒரு சிலரின் மின்னஞ்சல் முகவரியை எடுத்து அவர்களிடம் அறிவுரை கேட்டு அதன் படி தன்னை தயார் செய்தாள்.

அவளது உழைப்பு வீணாகவில்லை. C, L, K ஆகிய மூன்றில் C மற்றும் L இரண்டும் convert செய்யப்பட்டன. IIM C யில் சேருவது என்று முடிவு செய்தாள். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது பார்கவிற்கு. அவனுக்கும் தீபாவிற்கும் நல்ல வேலை. நல்ல சம்பளம். சௌம்யாவிற்கோ அவன் கனவிலும் நினைத்து பார்க்காத வாய்ப்பு. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அவள் படிப்பு முடித்து நல்ல நிலைக்கு சென்று விடுவாள். திருமணம் செய்து கொள்ள ஒரு தடையும் இல்லை.

இன்பம் கடல்மற்றுக் காமம் அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது


என்கிறது குறள். ஆனால் இவனது காதலோ இன்பத்தை மட்டுமே தந்து இருக்கிறது. துன்பம் என்பது ஒரு துளி கூட இல்லை. இதை விட வேறு என்ன வரம் வேண்டும். மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான் பார்கவ்.

பார்கவ், தீபா, சௌம்யா, ராமனாதன் அனைவரும் தத்தம் பாதைகளில் பயணிக்க தொடங்கினர். பார்கவ் பெங்களுர் வந்தான். தீபாவும், ராமனாதனும் கூட அவனுடன் வந்தார்கள். ராமனாதன் வேலை தேடி அங்கு வந்தான். பார்கவ், ராமனாதன் மற்றும் பார்கவுடன் TI நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த அமுதன் அழகப்பன் மூவரும் ஒரே வீட்டில் வசித்தார்கள். அமுதன் படித்தது சென்னை IIT யில். பழகுவதற்கு மிகவும் இனிமையானவன். ராமனாதன் ஒவ்வொரு நேர்முக தேர்வுக்கும் செல்லும் போதும் பல அறிவுரைகள் கூறி அவனுக்கு உதவினான். அமுதனுடைய உதவியினால் ராமனாதன் இரண்டே மாதங்களில் பெங்களூர் Infosys நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தான்.

புதிய வேலை, புதிய நண்பர்கள், புதிய வாழ்க்கை, புதிய பழக்க வழக்கங்கள், பல நேரங்களில் மகிழ்ச்சியையும் சில நேரங்களில் அயர்ச்சியையும் கொடுத்தது பார்கவிற்கு. சௌம்யா வேறு இல்லாதது அவனுக்கு பெரிய துக்கமாக இருந்தது. ஆனாலும் அந்நேரங்களில் அமுதனும், ராமனாதனும், தீபாவும் அவனுக்கு துணையாக இருந்தார்கள். அது ஒரு வகையில் ஆறுதலாக இருந்தது.

சௌம்யாவோ போய் சேர்ந்த முதல் இரண்டு மூன்று வாரங்களில் தினமும் தொலைப்பேசியில் பேசியவள், பின்னர் வாரத்திற்கு ஒருமுறையாகி, இப்பொழுது மாதத்திற்கு ஒரு முறையானது. ஒரு முறை பார்கவ் அதற்காக கோபித்துக் கொண்ட போது, "Dont be kiddish, Bharghav! நான் ஒரு நாளைக்கு 3 மணி நேரம் தான் தூங்கறேன். எவ்வளோ வேலை இருக்கு தெரியுமா?" என்றாள். இவனும் அவளது நிலை உணர்ந்து அவளை அதிகம் தொந்திரவு செய்யாமல் இருந்தான். மாதத்திற்கு ஒருமுறையோ இல்லை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறையோ அவளிடம் இருந்து அழைப்பு வரும். "You know some thing, yesterday Vivek Paul came and took a session on Standardization Wars. It was awesome. Then we had a dinner and chat session with him. He appreciated my questions and gave me a firm hand shake. I felt infinitely delightful." என்று ஏதாவது கூறுவாள். அடுத்த முறை Vivek Paul என்பது வேறு ஒருவராக மாறி இருக்கும். இவனும் அதை கேட்டு "சந்தோஷம்", "Good luck", "Great" என்று ஏதாவது சொல்லி வைப்பான்.

அதே மாதிரி இவன் அன்பே சிவம் படத்தை பற்றி "ஆஹா! ஓஹோ!" வென்று புகழுவது அவளுக்கு அந்நியமானது. திருச்சியில் இருந்த போதும் சரி; இப்பொழுதும் சரி; பார்கவ் ஒரே மாதிரி தான் இருந்தான். அலுவலகத்திலும் வட நாட்டு நண்பர்களிடம் அவ்வளவாக பேசுவதில்லை. அலுவல் நிமித்தம் பேசுவதுடன் சரி. தமிழ் மக்களுடனேயே நட்பு கொண்டிருந்தான். அதே தமிழ் படம், அதே தமிழ் பாட்டு, அதே ஆனந்த விகடன், அதே சன் டி.வி. என்று எந்த மாறுதலுக்கும் ஆளாகாமல் அவன் இருந்தான். ஆனால் சௌம்யாவோ முழுவதுமாக மாறி இருந்தாள். IIM படிப்பு, கல்கட்டா வாசம், பல வட நாட்டு நண்பர்களின் நட்பு ஆகியவை அவளை முழுவதுமாக மாற்றி இருந்தது. "To be a successful entrepreneur you need to be successful in establishing contacts" என்பதில் அவள் தெளிவாக இருந்தாள். அதனால் பல புதிய நட்புகளை அவள் தேடிக் கொண்டாள். "In another 5 years I want to take decisions for big corporates" என்றாள்.

ஒரே வண்டியில் பூட்டப் பட்ட இரு வேறு குதிரைகளைப் போல ஒரே திசையில் பயணித்துக் கொண்டிருந்த இருவரின் மனங்களும் இப்பொழுது வேறு வேறு திசைகளில் பயணிக்க தொடங்கின.

13 Comments:

Vino said...

ஆ நான் தான் பர்ஸ்ட் கமெண்ட்டா?? குரல் இல்லை அண்ணே குறள்

Radha Sriram said...

பல சமயம் பழைய நண்பர்களை ஆர்வத்தோடு பாக்க போகும் போது.........அவங்க மொத்தமா மாறி போயிருக்கரத பாத்து நொந்து போயிருக்கேன்.அவங்க பார்வையில நாமளும் கண்டிப்பா மாறியிருப்போம்.. சுற்று சூழல் தான் எப்படி நம்மள மாத்துது?? பாவம் பார்கவ்வும் தீபாவும்....hope they find something common between them...:):)

Ramya Ramani said...

ஸொ வெவ்வேறு கிளையாக பிரிந்த அவர்கள் சேர்ந்தார்களா?Waiting for the next Part!

CVR said...

ம்ம்ம்
இவங்க காதல் ஆரம்பிக்கும் போதே எவ்வளவு நாளோன்னு நெனைச்சேன்!!

இவ்வளவு தூரம் வந்ததே பெருசு!!

To be frank,i had thought that this affair was a non-starter from day 1.
idhu start aagi evlo varusham poyiducchu??

Never give up said...

ரொம்ப நல்ல இருக்கு. அடுத்த பகுதியை எதிர்பார்கிறேன். கீதா

கோபிநாத் said...

ஆகா..என்ன தல..கதை திசைமாறும் போல!!!

SathyaPriyan said...

//
Vino said...
ஆ நான் தான் பர்ஸ்ட் கமெண்ட்டா?? குரல் இல்லை அண்ணே குறள்
//
சுட்டியதற்கு நன்றி தல. மாற்றி விட்டேன்.

//
Radha Sriram said...
பல சமயம் பழைய நண்பர்களை ஆர்வத்தோடு பாக்க போகும் போது.........அவங்க மொத்தமா மாறி போயிருக்கரத பாத்து நொந்து போயிருக்கேன்.அவங்க பார்வையில நாமளும் கண்டிப்பா மாறியிருப்போம்.. சுற்று சூழல் தான் எப்படி நம்மள மாத்துது??
//
சரியா சொன்னீங்க. மாற்றமே உலகில் மாற்றமில்லாதது இல்லையா?.

எழுத்து பிழைகளை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. இதுக்கெல்லாம் யாராவது கோவிச்சுக்குவாங்களா?

//
Ramya Ramani said...
ஸொ வெவ்வேறு கிளையாக பிரிந்த அவர்கள் சேர்ந்தார்களா?Waiting for the next Part!
//
நன்றி Ramya.

//
CVR said...
ம்ம்ம்
இவங்க காதல் ஆரம்பிக்கும் போதே எவ்வளவு நாளோன்னு நெனைச்சேன்!!

இவ்வளவு தூரம் வந்ததே பெருசு!!

To be frank,i had thought that this affair was a non-starter from day 1.

idhu start aagi evlo varusham poyiducchu??
//
தலைவா என்ன இப்படி சொல்லீட்டீங்க?

மேலோட்டமாக அப்படி தெரியலாம். ஆனால் நான் அறிந்த வரை அவர்களது காதல் உண்மையானதாகவும்; ஆழமானதாகவும் தான் இருந்தது.

//
Never give up said...
ரொம்ப நல்ல இருக்கு. அடுத்த பகுதியை எதிர்பார்கிறேன். கீதா
//
மிக்க நன்றி கீதா. தொடர்ந்து வாருங்கள்.

//
கோபிநாத் said...
ஆகா..என்ன தல..கதை திசைமாறும் போல!!!
//
ஆமாம் தலைவா. கொஞ்சம் off the track தான் இனிமேல் :-)

Karthika said...

ரொம்ப interestinga கொண்டு போறீங்க......அடுத்த பகுதி சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்

SathyaPriyan said...

//
Karthika said...
ரொம்ப interestinga கொண்டு போறீங்க......அடுத்த பகுதி சீக்கிரம் வரும் என்று எதிர்பார்க்கிறேன்
//
ரொம்ப நன்றி Karthika.

SathyaPriyan said...

Syam,

உங்கள் தனிமடல் கிடைத்தது. மெதுவாக உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது மின்னஞ்சல் அனுப்புங்கள். விரிவாக பேசலாம்.

Vino said...

அண்ணே பார்ட் எட்டு எப்போ?

Vino said...

தனிமடல் எந்த இமெயில் முகவரிக்கு அனுப்பவேண்டும்

SathyaPriyan said...

//
Vino said...
அண்ணே பார்ட் எட்டு எப்போ?
//
பதிவிட்டு விட்டேன். :-)

//
தனிமடல் எந்த இமெயில் முகவரிக்கு அனுப்பவேண்டும்
//
தங்கள் பதிவில் பின்னூட்டமாக எனது மின்னஞ்சல் முகவரியை தந்துள்ளேன்.