Wednesday, April 23, 2008


ரங்க பவனம் - IX

நாட்கள் மாதங்களாகி, வருடங்களாகி உருண்டோடின. வாழ்க்கை அனைவரையும் பந்தாடி ஒவ்வொருவரையும் ஒவ்வொரு மூலைக்கு உருட்டி தள்ளியது. அவர்களுக்கிடையில் இருந்த தொடர்புகள் மெதுவாக இற்று அறுந்து விலகிவிட்டன. அதற்கு பெரிதும் வித்திட்டவன் பார்கவ். கல்கட்டா பயணத்திற்கு பின்னர் அனைவரின் நட்பையும் படிப்படியாக துண்டித்துக் கொண்டான். "ரங்க பவனம் எல்லாம் இறங்கு.", என்ற கண்டக்டரின் குரலில் பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்தான் ராமனாதன். இதோ இன்று தீபாவின் திருமணம். தீபாவிடமிருந்து சுமார் நான்கு ஆண்டுகளுக்கு பின்னர் வந்த அவளது திருமண அழைப்பிதழை பார்த்ததும் அவசியம் தான் அவளது திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று முடிவு செய்தான். பழைய நினைவுகள் அவனுக்கு வலியையும் மகிழ்ச்சியையும் கலந்து அளித்தன. கண்டக்டர் அவனிடம் வந்து, "தம்பி இறங்குங்க. Stop வந்துருச்சு." என்றார். அது அவனது தாத்தாவின் பேரூந்து தான்.

மெதுவாக கீழே இறங்கியவன் அருகில் உள்ள சிருங்கேரி திருமண மண்டபத்தை நோக்கி நடக்க தொடங்கினான். மண்டபத்தில் நிழைந்த உடனே அவனை வரவேற்றது சௌம்யாவின் குரல் தான். "ஏய்! ராம்....." என்று கத்திக் கொண்டே ஓடி வந்து அனைத்துக் கொண்டாள். அவளது குரலில் உண்மையான உற்சாகம் வெளிப்பட்டது.

பின்னர் அவளே "வா டா வா. இப்போ தான் வர முடிஞ்சுதா?" என்றாள்.

"இல்லம்மா, கொஞ்சம் வேல இருந்துச்சு. அதான்."

"நீ எப்படி இருக்க?"

"ம். நல்லா இருக்கேன். Manager ஆயிட்டேன்."

"Wow! Congrats."

"நீ?"

"ம். Great. Super ஆ இருக்கேன்."

இந்த பதிலில் இருந்து சௌம்யா பார்கவை முழுவதுமாக மறந்து விட்டிருந்தாள் என்பது தெளிவானது. இருந்தாலும் 'அவனை பற்றிய பேச்சை தொடங்கலாமா?' என்று அவன் யோசித்துக் கொண்டிருக்கும் போதே அவள், "Bharghav எப்படி இருக்கான்? இன்னும் contacts இருக்கா?" என்றாள்.

"சுத்தமா இல்லை. இப்போ எங்க இருக்கான்னு கூட எனக்கு தெரியாது. நாலஞ்சு mail அனுப்பினேன். ஒன்னுக்கும் reply வரலே. இப்போ கூட இந்த கல்யாணம் பத்தி mail அனுப்பினேன். No response."

"சரி நீ போய் tiffin முடிச்சுட்டு கீழ வா. நாம அப்புறம் detailed ஆ பேசலாம்."

அன்று மாலை திருமணமெல்லாம் முடிந்து நண்பர்கள் அனைவரும் சென்ற உடன், சௌம்யா ராமனாதனின் அருகில் வந்து மலைக் கோட்டை தாயுமானவர் சந்நிதிக்கு செல்லலாம் வா என்று அழைத்தாள். சரி என்று கிளம்பிய அவன், "உன் husband வரலயா?" என்று யதார்த்தமாக கேட்டான்.

அதற்கு அவள் போகிற போக்கில், "அதுக்கு மொதல்ல கல்யாணம் ஆகனும்." என்று சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு அகன்றாள்.

அதிர்ச்சி அடைந்த அவன், "என்ன? இன்னும் உனக்கு கல்யாணம் ஆகலயா?" என்றான்.

"அத நான் இப்போ தமிழ்ல தானே சொன்னேன்?". அவளிடம் புன்னகை சிறிதும் குறையாமல் இருந்தது. கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்த பின்னர் ஒரு ஓரமாக அமர்ந்து மெதுவாக பேச்சை தொடங்கினான்.

"ஏன்?"

"இது என்ன கேள்வி? நான் Bharghav வ எவ்வளவு நேசிச்சேன்னு உனக்கு தெரியாதா?"

"அதான் முடிஞ்சு போச்சே?"

"இல்ல அது முடியல. அதோட ரணம் இன்னும் என் மனசுலயே இருக்கு.என்ன அவ்வளவு நேசிச்ச Bharghav வாலயே என்ன, என்னோட career ambition அ சரியா புரிஞ்சுக்க முடியல. இப்போ வேறொருத்தனோட இன்னொரு relationship start பண்ணி அதுவும் break-up ஆச்சுன்னா, என்னால தாங்கிக்கவே முடியாது. நான் கண்டிப்பா இன்னும் அவனையே நினைச்சுகிட்டு இல்ல. ஆனா அதே நேரத்துல இவ்வளவு easy யா ஒருத்தன் கருவேப்பிலை மாதிரி தூக்கி எறிஞ்சத நினைச்சா என் மேலயே எனக்கு ஆத்திரம் ஆத்திரமா வருது."

"ஆனா! நீ கல்கட்டா போனதுலேர்ந்து ரொம்ப மாறிட்டயே. அதானே அவன உன் கிட்டேந்து பிரிச்சுது."

"உண்மைதான், ஆனா அதுலே என்னுடைய தப்பு என்ன? பொறந்துலேந்து கையேந்தி பவன்ல சாப்புட்டு வளர்ந்தவன் ரெண்டு வருஷம் அமெரிக்கா போன உடனே மினரல் வாட்டர் கேக்கறான். Tissue இல்லேன்னா toilet போக மாட்டேங்கறான். அது மாதிரி தான் இதுவும். மனுஷன் பிறந்ததுலேர்ந்து சாகறவரைக்கும் ஒரே மாதிரியா இருக்க முடியும்? மாற்றம் ஒன்னு தானே மாற்றமில்லாதது. வாழ்க்கையில அனுபவம் கூடக் கூட மனுஷன் மாறிகிட்டே தான் இருப்பான். அதை கூட அவனால புறிஞ்சுக்க முடியலயே. என்னுடைய Career க்காக நான் நிறைய மாறி இருக்கலாம். ஆனா நான் அவன நேசிச்சது உண்மை. எனக்கு வருத்தமே அவன் இதையெல்லாம் explain பண்ணறதுக்கு கூட எனக்கு ஒரு opportunity குடுக்காம abrupt ஆ என்ன cut பண்ணினது தான். அந்த trip க்கு அப்புறம் என்னோட வேலையெல்லாம் விட்டுட்டு ஒரு நாளைக்கு 10 தடவ அவனுக்கு phone பண்ண try பண்ணி இருப்பேன். ஒரு ஆயிரம் mail அனுப்பி இருப்பேன். ஒன்னுக்கும் response இல்ல. ஏதோ பிடிக்காத செருப்ப தூக்கி எறியறது மாதிரி தூக்கி எறிஞ்சுட்டான். I don't think I deserved this kind of a treatment."

"சரி, இன்னும் எவ்வளவு நாளைக்கு தான் இப்படி இருக்க போறே?"

"எவ்வளவு நாள் முடியுமோ அவ்வளவு நாள்."

"உங்க வீட்டுல ஒன்னும் சொல்லலயா? Deepi எப்படி கல்யாணத்துக்கு ஒத்துகிட்டா?"

"இதையெல்லாம் சொல்லி அம்மா, அப்பா, Deepi மூனு பேரையும் convince பண்ணறதுக்கு நான் பட்ட கஷ்டம் எனக்கு தான் தெரியும். பாவம் என்னால தான் அவங்க ரொம்ப கஷ்டப் படறாங்க. நான் கேட்டதெல்லாம் வாங்கி குடுத்த அவங்களுக்கு என்னால இந்த குறைந்த பட்ச சந்தோஷத்த கூட குடுக்க முடியல."

"அதுக்காக இப்படியே இருந்துட முடியுமா?"

"எனக்கு இப்போ life லே ஒரே ஒரு பிடிப்பு தான். அது தான் என்னோட career. நல்ல responsible job. நிறைய friends. வேற ஒன்னுமே இல்ல. ஆனா நான் சந்தோஷமா தான் இருக்கேன். எப்போவாவது உன்ன மாதிரி யாரையாவது பாக்கும் போது பழைய நியாபகம் எல்லாம் வரும். Deepi இத பத்தி ஒன்னும் பேசவே மாட்டா. No one understands me better than her."

அன்று இரவு வீட்டிற்கு வந்த ராமனாதனுக்கு தூக்கம் வரவில்லை. ஏனோ காலையில் இருந்த உற்சாகம் இரவில் இல்லை. அதற்கு காரணம் சௌம்யா தான் என்பதும் தெளிவாகவே அவனுக்கு புறிந்தது.

சரி மறு நாள் சனிக்கிழமையன்று முதல் வேலையாக பார்கவின் வீட்டிற்கு சென்று அவனது தொலைபேசி எண் வாங்கி அவனுடன் உரையாடலாம் என்று முடிவெடுத்தான். அடுத்த நாள் அதி காலையிலேயே எழுந்து பார்கவின் வீட்டிற்கு சென்றான். அவனது வீட்டில் யாரும் இல்லை. அவனது பெற்றோர்கள் சென்ற வாரம் தான் அமெரிக்கா சென்று இருப்பதாகவும், அவனது தந்தை இன்னும் மூன்று வாரங்களில் வருவதாகவும், தாயார் வருவதற்கு மூன்று நான்கு மாதங்கள் ஆகும் என்றும் பக்கத்து வீட்டில் இருப்பவர் குறிப்பிட்டார். அவனுக்கு சிறிது ஏமாற்றமாக இருந்தாலும், தொடர்ந்து அவருடன் சிறிது நேரம் உரையாடி அமெரிக்க தொலை பேசி எண்ணை வாங்க முயன்றான்.

அவனை வாசலிலேயே நிற்க வைத்து விட்டு உள்ளே தொலைப் பேசி எண்ணை எடுத்து வர சென்றார் அவர். சிறிது நேர காத்திருப்பிற்கு பின்னர் வெளி வந்த அவர் கையில் இருந்த சீட்டில் அவனது தொலைப்பேசி எண் இருந்தது. சீட்டை பெற்றுக் கொண்டு அவருக்கு நன்றி கூறி விடை பெற்றான்.

அன்று இரவு அவனை தொலைபேசியில் அழைத்தான். மறு முனையில் மணியடித்தது. "Hello!" என்ற பார்கவின் குரலுக்கு மறு மொழியாக, "மச்சான்! நான் Ram பேசறேன்டா." என்று தொடங்கி ஒரு அரை மணி நேர மகிழ்ச்சியான உரையாடலுக்கு பின்னர் 'சௌம்யாவை பற்றிய பேச்சை தொடங்கலாமா?' என்று எண்ணிய ராமனாதனுக்கு, அவன் அன்று காலை தொலைப் பேசி எண்ணை பெற்றுக் கொண்டு புறப்பட தொடங்கும் போது, 'பேசும் போது மறக்காம, Bharghav, Bharghav சம்சாரம் ரெண்டு பேரையும் நாங்க விசாரிச்சோம்னு சொல்லுங்க தம்பி.' என்று அந்த பக்கத்து வீட்டுக்காரர் கூறியது நினைவிற்கு வரவே ஒன்றும் பேசாமல் அனைவரையும் பொதுவாக விசாரித்து விட்டு தொலை பேசியை துண்டித்தான்.

அவனது கண்களில் அவனையும் அறியாமல் இரு துளி முத்துக்கள் பூத்தன.

- முற்றும்.

22 Comments:

Usha said...

I really enjoyed reading this story. Very surprised with the way how this story ended..
May be because I was expecting a happy ending.

கோபிநாத் said...

தல

கையை கொடுங்க...கலக்கிட்டிங்க..அருமையாக கொண்டு போனிங்க..;)

யதர்த்தமான முடிவு என்றாலும்...மனசுல லேசா ஒரு சோகம் ;(

சரி விடுங்க அடுத்த தொடர்கதையில சரி பண்ணிடுங்க ;))

மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;)

ஜாம்பஜார் ஜக்கு said...

அட இத்தினி நாளா எப்பிடி உங்க கதைகள படிக்காம உட்டேன்? சூப்பர் தலீவா.

இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு

Karthika said...

சூப்பர் ஒ சூப்பர்.....ரொம்ப practicalaana கதை. அருமையா எழுதி இருக்கீங்க. தொடர்ந்து இது போல எழுத வாழ்த்துக்கள்.

- Karthika

SathyaPriyan said...

//
Usha said...
I really enjoyed reading this story. Very surprised with the way how this story ended..
May be because I was expecting a happy ending.
//
I am very happy to see this. Thank you Usha. Please do visit often.

//
கோபிநாத் said...
தல

கையை கொடுங்க...கலக்கிட்டிங்க..அருமையாக கொண்டு போனிங்க..;)
//
நன்றி தல.

//
யதர்த்தமான முடிவு என்றாலும்...மனசுல லேசா ஒரு சோகம் ;(
//
உண்மை தான்.

//
சரி விடுங்க அடுத்த தொடர்கதையில சரி பண்ணிடுங்க ;))
//
என்னது? அடுத்த கதையா? தாங்குவீங்களா? :-)

//
மனமார்ந்த வாழ்த்துக்கள் தல ;)
//
மீண்டும் நன்றி.

//
ஜாம்பஜார் ஜக்கு said...
அட இத்தினி நாளா எப்பிடி உங்க கதைகள படிக்காம உட்டேன்? சூப்பர் தலீவா.
//
ஆஹா! வாங்க ஜாம்பஜார் ஜக்கு. கதை பிடிச்சிருக்கா? மிக்க மகிழ்ச்சி.

//
Karthika said...
சூப்பர் ஒ சூப்பர்.....ரொம்ப practicalaana கதை. அருமையா எழுதி இருக்கீங்க. தொடர்ந்து இது போல எழுத வாழ்த்துக்கள்.
//
ரொம்ப நன்றி Karthika.

மாதங்கி said...

சத்தியப்ப்ரியன்,


ரங்கபவனம் குறித்து:

உரையாடல்கள் மிகவும் இயற்கையாக இருக்கின்றன.
கோர்வையாகவும் சுவாரசியமாகவும் எழுதியதற்கு வாழ்த்துக்கள் இதோ.

முடிவு நம்பும்படி இருக்கிறது. காலமும் சூழ்நிலையும் தரும் தற்செயலான கவனத்திருப்பல்கள்

விரைவிலேயே நிரந்தரமாக்கப்படுகின்றன.

தீபா, ராமனாதன் மனதில் நிற்கிறார்கள். பார்கவ், சௌம்யா இருவரும் பொம்மலாட்ட பொம்மைகளாக மாறிவிட்டது மாறிவரும் விழுமங்களைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள். யாரையும் யாரும் குற்றம் சொல்லாமல் அவரவர் வழியில்.

கல்கத்தா பயணத்தின் இறுதியில் பார்கவ் எப்படியாவது சௌம்யாவுடன் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம். இருந்தாலும் சரி இனி என் கேரியர்தான் எல்லாம் என்பது நல்ல முடிவு. அவள் வாழ்விலும் மாற்றம் வரலாம்.

சௌம்யா ஆயிரம் போன், மெயில் நிலைக்கு வருவதற்கு முன்பே பத்தில் ஒரு பங்கு அக்கறையாவது காட்டியிருக்கலாம்.

தீபா, ராமநாதன் இருவரின் கதாபாத்திரங்கள் மென்மை.

மாதங்கி said...

சத்தியப்ப்ரியன்,


ரங்கபவனம் குறித்து:

உரையாடல்கள் மிகவும் இயற்கையாக இருக்கின்றன.
கோர்வையாகவும் சுவாரசியமாகவும் எழுதியதற்கு வாழ்த்துக்கள் இதோ.

முடிவு நம்பும்படி இருக்கிறது. காலமும் சூழ்நிலையும் தரும் தற்செயலான கவனத்திருப்பல்கள்

விரைவிலேயே நிரந்தரமாக்கப்படுகின்றன.

தீபா, ராமனாதன் மனதில் நிற்கிறார்கள். பார்கவ், சௌம்யா இருவரும் பொம்மலாட்ட பொம்மைகளாக மாறிவிட்டது மாறிவரும் விழுமங்களைக் காட்டுகிறது. வாழ்த்துக்கள். யாரையும் யாரும் குற்றம் சொல்லாமல் அவரவர் வழியில்.

கல்கத்தா பயணத்தின் இறுதியில் பார்கவ் எப்படியாவது சௌம்யாவுடன் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம். இருந்தாலும் சரி இனி என் கேரியர்தான் எல்லாம் என்பது நல்ல முடிவு. அவள் வாழ்விலும் மாற்றம் வரலாம்.

சௌம்யா ஆயிரம் போன், மெயில் நிலைக்கு வருவதற்கு முன்பே பத்தில் ஒரு பங்கு அக்கறையாவது காட்டியிருக்கலாம்.

தீபா, ராமநாதன் இருவரின் கதாபாத்திரங்கள் மென்மை.

Radha Sriram said...

முடிவு என்ன இப்படி மட மடன்னு சீக்கிரமா வந்துருச்சு??.....இன்னும் ஒரு பதிவு நீட்டிருக்கலாம்னு தோண வச்சுட்டீங்க.முதல் முயற்சி நல்லாவே வந்திருக்கு.:):)பார்கவ் ரொம்ப தொட்டா சிணுங்கியா இருக்கானே.....சௌம்யாதான் அலட்ச்சிய படுத்தினானா இவன் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணிருக்கலாம்.....:(

SathyaPriyan said...

//
மாதங்கி said...

உரையாடல்கள் மிகவும் இயற்கையாக இருக்கின்றன.
கோர்வையாகவும் சுவாரசியமாகவும் எழுதியதற்கு வாழ்த்துக்கள் இதோ.

முடிவு நம்பும்படி இருக்கிறது.
//
மிக்க நன்றி மாதங்கி.

//
காலமும் சூழ்நிலையும் தரும் தற்செயலான கவனத்திருப்பல்கள் விரைவிலேயே நிரந்தரமாக்கப்படுகின்றன.
//
முற்றிலும் உண்மை.

//
கல்கத்தா பயணத்தின் இறுதியில் பார்கவ் எப்படியாவது சௌம்யாவுடன் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசியிருக்கலாம்.

சௌம்யா ஆயிரம் போன், மெயில் நிலைக்கு வருவதற்கு முன்பே பத்தில் ஒரு பங்கு அக்கறையாவது காட்டியிருக்கலாம்.
//
ஆமாம். நாம் பல நேரங்களில் நெருங்கிய நண்பர்களை, பெற்றோர்களை, உடன் பிறந்தவர்களை, காதலனை, காதலியை, கணவனை, மனைவியை taken for granted ஆக எடுத்துக் கொள்கிறோம்.

//
தீபா, ராமநாதன் இருவரின் கதாபாத்திரங்கள் மென்மை.
//
மீண்டும் நன்றி.

முதல் கதை முயற்சி என்பதால் எழுதும் பொழுது வயிற்றினுள் பட்டாம்பூச்சி பறந்தது உண்மை. தங்களின் அருமையான பின்னூட்டம் பார்த்த பிறகு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

SathyaPriyan said...

//
Radha Sriram said...
முடிவு என்ன இப்படி மட மடன்னு சீக்கிரமா வந்துருச்சு??.....இன்னும் ஒரு பதிவு நீட்டிருக்கலாம்னு தோண வச்சுட்டீங்க. முதல் முயற்சி நல்லாவே வந்திருக்கு.:):)
//
நன்றி Radha.

//
பார்கவ் ரொம்ப தொட்டா சிணுங்கியா இருக்கானே.....
//
புறிதலில் ஏற்படும் குழப்பமே இதற்கு காரணம்.

//
சௌம்யாதான் அலட்ச்சிய படுத்தினானா இவன் இன்னும் கொஞ்சம் ட்ரை பண்ணிருக்கலாம்.....:(
//
அதனை அலட்சியம் என்று ஒதுக்கிவிட முடியாது. அவள் அவனை taken for granted ஆக எடுத்துக் கொண்டாள். ஆனால் நீங்கள் கூறியது போல தவறு இருவர் மீதும் இருக்கிறது.

Vino said...

தலிவா கப்னு முடிச்சிட்டியே...! ஆனால் இதுவும் நடக்கும் நிஜ வாழ்க்கையில் மிக யாதர்த்தமான விவரிப்புகள்..உங்களுக்கு நன்றாக எழத வருகிறது

SathyaPriyan said...

//
Vino said...
தலிவா கப்னு முடிச்சிட்டியே...! ஆனால் இதுவும் நடக்கும் நிஜ வாழ்க்கையில் மிக யாதர்த்தமான விவரிப்புகள்..உங்களுக்கு நன்றாக எழத வருகிறது
//
தலைவா நன்றி நன்றி நன்றி.

CVR said...

எவ்வளவு தூரம் கற்பனை எனறு தெரியவில்லை!
படித்து முடிக்கும்போது "பாத்திரங்களை" நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!
அது உங்கள் எழுத்தின் வலிமை!!
மேலும் கதைகளை எதிர்பார்க்கிறேன்!! :-)

SathyaPriyan said...

//
CVR said...
எவ்வளவு தூரம் கற்பனை எனறு தெரியவில்லை!
//
உரையாடல்கள் அனைத்தும் கற்பனையே. நிகழ்வுகள் அனைத்தும் பெரும் பாலும் உண்மையானவை. ஆனால் இவை அனைத்தும் பல் வேறு கால கட்டங்களில் பல நண்பர்கள் வாழ்க்கையில் நடந்தவை. அனைத்தையும் தொகுத்து தந்துள்ளேன்.

அவ்வளவே.

//
படித்து முடிக்கும்போது "பாத்திரங்களை" நினைத்தால் வருத்தமாக இருக்கிறது!
அது உங்கள் எழுத்தின் வலிமை!!
//
ரொம்ப நன்றி தலைவா. மகிழ்ச்சியாக இருக்கிறது.

//
மேலும் கதைகளை எதிர்பார்க்கிறேன்!! :-)
//
கோபிநாத்துக்கு சொன்னதையே உங்களுக்கும் சொல்கிறேன். தாங்குவீங்களா? :-)

Ramya Ramani said...

சோகமான முடிவு என்றாலும் மிகவும் எதார்த்தமான முடிவு.சூழ்நிலை கைதிகளாக மனிதர்கள் மாறுவது இயல்பு என்றாலும், ரிலேஷன்ஷிப்-ல ஈகோ இருக்க கூடாதுங்கரத நன்றாக உணர்த்திய கதை! மேலும் நல்ல கதைகளை எதிர்பார்கிரேன்.

SathyaPriyan said...

//
Ramya Ramani said...
சோகமான முடிவு என்றாலும் மிகவும் எதார்த்தமான முடிவு.சூழ்நிலை கைதிகளாக மனிதர்கள் மாறுவது இயல்பு என்றாலும், ரிலேஷன்ஷிப்-ல ஈகோ இருக்க கூடாதுங்கரத நன்றாக உணர்த்திய கதை!
//
ஆமாங்க. 'நீ பெரியவனா?; நான் பெரியவனா?', என்ற கேள்வியே தேவையில்லாத்து இல்லையா?

//
மேலும் நல்ல கதைகளை எதிர்பார்கிரேன்.
//
ரொம்ப நன்றிங்க.

Divya said...

soumya charachter manathai vittu agala marukkirathu.....

மீக இயல்பான நடை, சிம்பிலி சூப்பர்ப்!!

சின்ன சின்ன உணர்வுகளையும், சம்பவங்களையும் ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!!!

பாராட்டுக்கள் சத்யா!!!

SathyaPriyan said...

//
Divya said...
soumya charachter manathai vittu agala marukkirathu.....
//
:-)

//
மீக இயல்பான நடை, சிம்பிலி சூப்பர்ப்!!

சின்ன சின்ன உணர்வுகளையும், சம்பவங்களையும் ரொம்ப அழகா வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!!!

பாராட்டுக்கள் சத்யா!!!
//
மிக்க நன்றி Divya. முதல் முயற்சியில் தேரிவிட்டேன் என்பதை அறியும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தொடர்ந்து கதையை படித்து ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.

Arun S said...

Just loved the story, your way of telling was very fine. Hope you write something in near future. Also, reading something in tamil was like a long forgotten memory for me, and you have rekindled my love for my mothertongue. Anyways, how do you blog in Tamizh? Hoping for more in future from you.

SathyaPriyan said...

//
Arun S said...
Just loved the story, your way of telling was very fine. Hope you write something in near future.
//
Thank you so much Arun.

//
Also, reading something in tamil was like a long forgotten memory for me, and you have rekindled my love for my mothertongue.
//
Wow. That makes me even more happy.

//
Anyways, how do you blog in Tamizh? Hoping for more in future from you.
//
There are so many tamil editors. Please visit

http://sathyapriyanpages.googlepages.com

Arun S said...

என்ன சத்ய பிரியன், ரொம்ப நாளா ஆளையெ கானும்? ஓரு நல்ல கதையை தயார் செய்து கொன்டிருக்கிரீரா?

மாதங்கி said...

http://blogintamil.blogspot.com/2009/04/6.html