Monday, April 14, 2008


ரங்க பவனம் - VI

ஒரு 6 மாத காலம் கடந்த பிறகு, அந்த சனிக்கிழமை ராமனாதனை சந்தித்தான் பார்கவ். அவனிடம் அதுவரை நடந்த அனைத்தையும் கூறியவன் இத்தனை நாள் சொல்லாமல் விட்டதற்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டான். தீபா அதைப் பற்றியெல்லாம் அவனிடம் ஒன்றும் சொல்லாதது அவனுக்கு தீபாவின் மீது இருந்த மதிப்பை பல மடங்கு கூட்டியது. ஆனால் ராமனாதனோ அதனை சாதாரணமாக எடுத்துக் கொண்டான். அவன் முன்னரே ஊகித்த ஒன்று தான் என்பதால் அவனுக்கு அதில் ஒன்றும் வியப்பு இல்லை.

இப்படியே நாட்கள் கடந்தன. பார்கவ் தனது மூன்றாம் ஆண்டு படிப்பையும், சௌம்யா தனது M.Com. படிப்பையும் முடித்தார்கள். சௌம்யா தனது படிப்பை முடிக்கும் வரை தூங்கிக் கொண்டிருந்த அவளது கல்யாண பூதம் அதற்கு பிறகு மீண்டும் எழுந்தது.

இப்பொழுதும் ஏதாவது convincing ஆக சொல்ல வேண்டும் என்பதற்காக இம்முறை CAT preparation கையில் எடுக்கப்பட்டது. சௌம்யாவின் தந்தை பேராசிரியர் என்பதால் இம்முறையும் மிகவும் கஷ்டப்படாமல் அவர்களை சம்மதிக்க செய்ய முடிந்தது. IMS இன்ஸ்டிட்யூடில் சேர்ந்தாள் சௌம்யா.

முழு நேர வகுப்பு என்பதாலும், கல்லூரி முடிந்து அலுவலகமும் செல்லாததாலும் NIIT போல் அல்லாமல் இங்கே ஒழுங்காக வகுப்பிற்கு சென்றாள். நாளாக நாளாக அவளுக்கு அந்த படிப்பின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டு அதனை serious ஆக எடுத்துக் கொள்ள ஆரம்பித்தாள்.

திருமணத்தை தவிர்க்க வேண்டும் என்பதில் தொடங்கியது ஒரு கட்டத்தில் அவளது வாழ்க்கை லட்சியம் ஆனது. IIM இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்று எண்ணத் தொடங்கினாள். பொழுது போக்குகளை முழுவதுமாக தவிர்த்து பாடத்தில் மட்டும் கவனம் செலுத்தினாள். அது மேலும் தீவிரமாகி பார்கவுடன் மணிக்கணக்கில் பேசுவது, ஊர் சுற்றுவது போன்ற அனைத்தையும் கூட தவிர்த்தாள். பார்கவும் தனது இறுதி ஆண்டு படிப்பு, Campus Interviews, Final year project என்று busy ஆக இருந்தான். கேம்பஸ் தேர்வில் பெங்களூர் TI (Texas Intruments) நிறுவனத்தில் ஆண்டிற்கு 4.5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் அவனுக்கு வேலையும் கிடைத்தது. தீபாவிற்கும் பெங்களூரில் CISCO நிறுவனத்தில் அதே சம்பளத்தில் வேலை கிடைத்தது.

இந்நிலையில் CAT தேர்வு நாளும் வந்தது. முதல் நாள் சனியன்று காலை மலைக் கோட்டை தாயுமானவர் கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்து பிரார்த்தித்துக் கொண்டாள். பின்னர் தேர்வு எழுதுவதற்காக திருச்சியிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றாள். பார்கவும் அவளுடன் சென்றான். அடுத்த நாள் பார்கவ், தீபா, பெற்றோர்கள், மற்ற நண்பர்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் தேர்வு எழுத சென்றாள் சௌம்யா. தேர்வு நடந்து முடியும் வரை அவளுக்காக வெளியிலேயே காத்திருந்தான் பார்கவ். வெளியில் வந்த சௌம்யாவிடம் "எப்படி போச்சு?" என்றான். அவள் சிரித்துக் கொண்டே வந்தது இவனுக்கு ஒரு நம்பிக்கை கொடுத்தது.

"நல்லா போச்சு. DI, Quans and Anals ரொம்ப easy யா இருந்துது. Verbal லே சொதப்பிட்டேன். RC was ok. IIMs நம்பிக்கை இல்லை. May be வேறே ஏதாவது கிடைக்குதான்னு பார்க்கலாம்." என்று சொன்னவள் மீண்டும் தொடர்ந்தாள்.

"Question paper pattern அதே தான். But number of sectional questions கொஞ்சம் மாத்தி இருந்தாங்க. Last year மாதிரி இல்லே. But on the whole it wasn't that tough. இன்னும் கொஞ்சம் நல்லா படிச்சிருந்தா நல்லா பண்ணி இருக்கலாம் ப்ச்..." அவளது ஆதங்கம் வெளிப்பட்டது.

"கவலை படாதே Saumi. You have put in your 100%. You'll get what you deserve." என்று அவன் ஆறுதல் கூறினான்.

படிப்பு முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தால் அவன் GRE/TOEFL எதுவும் எழுதவில்லை. வேலைக்கு செல்வது, உடனே திருமணமும் செய்வது என்று முடிவு செய்தான். ஆனால் சௌம்யாவோ CAT தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து காத்திருந்தாள். அவள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த அந்த நாளும் வந்தது.

9 Comments:

Ramya Ramani said...

கதை நல்லா இருக்கு! நம்மலோட Close Friend இப்படி காதல் பண்ணும்போது ஒரு Loneliness வரும்.அதை நல்லா சொல்லிருக்கீங்க!

SathyaPriyan said...

//
Ramya Ramani said...
கதை நல்லா இருக்கு! நம்மலோட Close Friend இப்படி காதல் பண்ணும்போது ஒரு Loneliness வரும்.அதை நல்லா சொல்லிருக்கீங்க!
//
மிக்க நன்றி. அது ஒரு வகையான possessiveness என்று நினைக்கிறேன்.

வாங்க Ramya. முதல் முறை வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். தொடர்ந்து வாருங்கள்.

Vino said...

அண்ணே ரிசல்ட் என்ன ஆச்சு? ரொம்ப நாள் சஸ்பென்ஸ் வைக்காதிங்க

SathyaPriyan said...

//
Vino said...
அண்ணே ரிசல்ட் என்ன ஆச்சு? ரொம்ப நாள் சஸ்பென்ஸ் வைக்காதிங்க
//
மிக்க மகிழ்ச்சி Vino. புதன் கிழமைக்குள் அடுத்த பதிவை பதிந்து விடுகிறேன்.

Divya said...

ரொம்ப நல்லாயிருக்கு கதை,
தெளிவான நடை உங்கள் எழுத்தின் ப்ளஸ் பாயிண்ட் !!

எக்ஸாம் ரிசல்ட் என்னாச்சு??

கோபிநாத் said...

அடுத்த புதன் கிழைமை தானா அடுத்த பகுதி!!!அவ்வ்வ்வ்

சரி தல போடுங்க பார்ப்போம் ;))

SathyaPriyan said...

//
Divya said...
ரொம்ப நல்லாயிருக்கு கதை,
தெளிவான நடை உங்கள் எழுத்தின் ப்ளஸ் பாயிண்ட் !!
//
நன்றி Divya. கதை எழுதறதுல பதிவுலக சுஜாதா நீங்க. நீங்களே இப்படி சொல்லும் போது சந்தோஷமா இருக்கு.

//
எக்ஸாம் ரிசல்ட் என்னாச்சு??
//
புதன் கிழமை தெரிந்து விடும் :-)

//
கோபிநாத் said...
அடுத்த புதன் கிழைமை தானா அடுத்த பகுதி!!!அவ்வ்வ்வ்

சரி தல போடுங்க பார்ப்போம் ;))
//
தல என்னாதிது? சின்ன புள்ள மாதிரி எக்ஸாம் பத்தியெல்லாம் பேசிக்கிட்டு. நாம என்னிக்கு அது பத்தியெல்லாம் கவலை பட்டு இருக்கோம் :-)

Radha Sriram said...

ஆஹா செம இன்வால்வ்மெண்டோட எழுதரீங்க சத்யா...பரீட்சை டிஸ்கிர்ப்ஷன் இவ்ளோ தேவையா?? வயத்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குது....அப்புரம் காதல்ல கொழப்பம் வரபோகுதுன்னு பட்சி சொல்லுது.....சுபமா முடிச்சிடுங்க.:):)

SathyaPriyan said...

//
Radha Sriram said...
ஆஹா செம இன்வால்வ்மெண்டோட எழுதரீங்க சத்யா...
//
நன்றி.

//
பரீட்சை டிஸ்கிர்ப்ஷன் இவ்ளோ தேவையா??
//
தேவை இல்லையோ? அதிகமாக கொடுத்து விட்டேன் என்று நினைக்கிறேன்.

//
வயத்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குது....
//
எனக்கு பரீட்சைன்னா கம்பளி பூச்சியே நெளியும் :-)

//
அப்புரம் காதல்ல கொழப்பம் வரபோகுதுன்னு பட்சி சொல்லுது.....சுபமா முடிச்சிடுங்க.:):)
//
கல்யாணம் ஆனா சுபமா? இல்லை கல்யாணம் ஆகலேன்னா சுபமா?