Thursday, April 03, 2008


ரங்க பவனம் - III

தீபாவினுடைய நட்பு கிடைத்ததிலிருந்து தினமும் மாலை ஒரு மணி நேரமாவது இருவரும் தொலைப்பேசியில் உரையாடுவது வழக்கம். ஆனால் சௌம்யாவை பார்த்த அன்றைய தினத்திலிருந்து தினமும் தொலைப்பேசியில் தீபாவிற்கு "Hi!" சொல்லிவிட்டு சௌம்யாவுடன் பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டான். நான்கே நாட்களில் இருவரும் நெருங்கிய நண்பர்களாகி விட்டனர்.

"நாளைக்கு என்ன plan? Movie போலாம்னு சொல்லிட்டு ஒன்னுமே சொல்லாம இருக்கே?" வெள்ளிக்கிழமை அவனிடம் கிசி கிசுத்தாள் தீபா.

"நாளைக்கு matinee show படம் பார்த்துட்டு, அப்படியே evening dinner Sangam போறோம். I will be there to pick you tomorrow afternoon."

மறுநாள் அவளது வீட்டிற்கு தனது புதிய மாருதி எஸ்டீம் காரில் வந்தான் பார்கவ். பின்னர் மூவரும் அங்கிருந்து கிளம்பி சென்றார்கள். முன்னிருக்கையில் ஏற முற்பட்ட தீபாவை பின்னிருக்கைக்கு தள்ளி விட்டு, சௌம்யாவை முன்னால் அமர வைத்தான் பார்கவ். திரையரங்கிலும் சௌம்யாவின் அருகே அமர அவன் அடித்து பிடித்து ஓடியது தீபாவிற்கு சிரிப்பையே வரவழைத்தது.

படம் முடிந்த பின்னர் மூவரும் அங்கிருந்து கிளம்பி சங்கம் ஹோட்டலுக்கு சென்றனர். சௌம்யாவிற்கு அசைவம் பிடிக்கவே பிடிக்காது. பார்கவிற்கோ அசைவம் இல்லை என்றால் சாப்பிடவே பிடிக்காது. இதனைக்கும் அவனது வீட்டில் அனைவரும் சைவமே. ஆனாலும் சௌம்யாவிற்காக நல்ல பிள்ளையாக சைவமே சாப்பிட்டான். பிறகு வேண்டுமென்றே "Taste பார்க்கனும்" என்று சொல்லி சௌம்யாவின் ஐஸ்கிரீமையும் இரண்டு ஸ்பூன்கள் சாப்பிட்டான்.

இதையெல்லாம் கவனிக்க தவறவில்லை தீபா. அவளுக்கு இவனது மாற்றம் நெருடலாக இருந்த போதிலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. மற்ற பெண்களிடம் கடலை போடுவது போலத்தான் இவன் சௌம்யாவுடனும் கடலை போடுகிறான் என்றே அவள் நம்பினாள். 'சரி இன்று வேண்டாம் நாளை பார்த்துக் கொள்ளலாம்' என்று விட்டு விட்டாள்.

அன்று இரவு வீட்டிற்கு சென்றதும் வழக்கம் போல பார்கவ் தொலைப்பேச முயன்றான். தொலைப்பேசியை எடுத்த தீபா "என்ன விஷயம்? இவ்வளோ நேரம் ஒன்னா தானே இருந்தோம்." என்றாள்.

பார்கவ், "Saumi கிட்ட குடு Deepi" என்றான்.

"அவ தூங்கிட்டா. நாளைக்கு பேசு." என்று தொலைப்பேசி வைக்கப் பட்டது.

இத்தனை நாளில் தீபாவிடமிருந்து இப்படி ஒரு பதிலை அவன் பெற்றதில்லை. சட்டென்று கடந்த ஒரு வார காலமாக தீபாவை அவன் புறக்கனித்தது அவனுக்கு தெளிவாக தெரிந்தது. 'என்ன இருந்தாலும் Deepi is more important to me. No matter what happens she is my best friend. I can't afford to lose her. எனக்கு சௌம்யாவை பிடித்திருந்தால் அதை முதலில் தீபாவிடமல்லவா சொல்ல வேண்டும்? அவளிடம் எதற்கு மறைக்க வேண்டும்?' என்று முடிவு செய்த அவன் மீண்டும் தீபாவை தொலைப்பேசியில் அழைத்தான்.

தொலைப்பேசியை எடுத்த தீபா 'Hello!' சொல்வதற்குள் "Deepi! I want to meet you, now." என்றான்.

"என்ன உளர்றே? இப்போ time என்ன தெரியுமா? It's 10 O' Clock in the night."

"Doesn't matter. I want to tell you something really important. I will come there. நீ உங்க apartment வாசல்லயே wait பண்ணு." என்று சொல்லி அவளின் பதிலுக்கு காத்திராமல் தொலைப்பேசியை வைத்துவிட்டு யமஹாவை கிளப்பினான்.

இரவு நேரம் என்பதால் சாலை காலியாக இருந்தது. 5 நிமிடத்தில் தீபாவின் வீட்டை அடைந்த அவன், படிகளில் குடு குடு வென்று ஓடி ஐந்தாவது மாடியில் உள்ள அவளின் வீட்டை அடைந்தான்.

8 Comments:

கோபிநாத் said...

தல

நல்லா தான் பிரேக் போடுறிங்க...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))

SathyaPriyan said...

//
கோபிநாத் said...
தல

நல்லா தான் பிரேக் போடுறிங்க...அடுத்த பகுதிக்கு வெயிட்டிங் ;))
//
நன்றி தலைவா.

Radha Sriram said...

//மறுநாள் அவளது வீட்டிற்கு தனது புதிய மாருதி எஸ்டீம் காரில் வந்தான் பார்கவ்.//

இன்னும் படிச்சுகிட்டு தானே இருக்கான் இந்த பார்கவ்?? அதுக்குள்ள மாருதி எஸ்டீமா?? படா கில்லாடியா இருக்கானே??

SathyaPriyan said...

//
Radha Sriram said...

இன்னும் படிச்சுகிட்டு தானே இருக்கான் இந்த பார்கவ்?? அதுக்குள்ள மாருதி எஸ்டீமா?? படா கில்லாடியா இருக்கானே??
//
அவன் மிகப் பெரிய பணக்காரன். பாதி திருச்சி அவனுக்கு சொந்தம் :-)

Vino said...

//

இன்னும் படிச்சுகிட்டு தானே இருக்கான் இந்த பார்கவ்?? அதுக்குள்ள மாருதி எஸ்டீமா?? படா கில்லாடியா இருக்கானே??///

அவன் மிகப் பெரிய பணக்காரன். பாதி திருச்சி அவனுக்கு சொந்தம் :-)//


That was good catch.. Vaathiyar adikadi solluvar explain the usurroundings nutu :)

Vino said...

aaenungae transltor potti eppo poduvingae?

SathyaPriyan said...

//
Vino said...
/இன்னும் படிச்சுகிட்டு தானே இருக்கான் இந்த பார்கவ்?? அதுக்குள்ள மாருதி எஸ்டீமா?? படா கில்லாடியா இருக்கானே??

அவன் மிகப் பெரிய பணக்காரன். பாதி திருச்சி அவனுக்கு சொந்தம் :-)/

That was good catch.. Vaathiyar adikadi solluvar explain the usurroundings nutu :)
//
I have explained this in the first part :-) Please read below.

பார்கவினுடைய தந்தை திருச்சியில் உள்ள ஒரு பெரிய மகளிர் கல்லூரியின் தாளாளர். அது போக அவருக்கு முன்று பள்ளிகளும் ஒரு ஆண்கள் கலை கல்லூரியும் கூட இருந்தது. திருச்சியில் அவர் ஒரு VIP. இவன் அவருக்கு ஒரே மகன். நல்ல வசதியான குடும்பம்.

//
aaenungae transltor potti eppo poduvingae?
//
I will try to post it with in a couple of days.I am so sorry.

SathyaPriyan said...

Vino என்னால் அதை ப‌திவில் சேர்க்க‌ முடிய‌வில்லை. அத‌னால்
தமிழ் எழுதியின் சுட்டியை பதிவின் இடப்பக்கத்தில் சேர்த்துள்ளேன்.

இது த‌ங்க‌ளுக்கு ப‌ய‌ன்ப‌டும் என்று நினைக்கிறேன்.