Thursday, April 10, 2008


ரங்க பவனம் - V

"Hello!" என்றான் பார்கவ்.

"Hello! என்ன ரெண்டு நாளா phone பண்ணலே?

"சும்மா தான். Nothing unusual."

"Deepi வேற ஏதோ சொன்னா? Is it true?"

"அவ உன் தங்கை Saumi. அவ உண்மை சொல்றாளா பொய் சொல்றாளான்னு உனக்கு தானே தெரியும். எனக்கு எப்படி தெரியும்?"

"Be serious Bharghav."

"Okie, I'm serious. I love you Saumi. I love you with all my heart."

"Serious ஆ சொல்றியா?, இல்லை எப்போதும் மத்த பொண்ணுங்க கிட்ட விளையாடற மாதிரி விளையாடறயா?"

"100% serious."

"இதை பத்தி யோசிச்சு பார்த்தியா?"

"எதை பத்தி?"

"You are 2 years younger than me."

"Honestly I don't mind. I am 100% sure that you and only you can make my life happy."

"What about our parents?"

"We'll wait. We'll convince them."

"Thanks Bharghav."

"You mean....."

"Yes, I love you too."

காற்றில் மிதப்பது போல இருந்தது பார்கவிற்கு. அதன் பிறகு நாட்கள் நிமிடங்களாக ஓடின. காயத்ரீஸ், மும்தாஜ் போன்ற இடங்களில் பழியாக கிடந்தவன் அதன் பின் Rainbows, Baskin-Robbins, TAB என்று இடங்களை மாற்றிக் கொண்டான். கல்லூரி இருவருக்கும் வேறு வேறு ஆகையால் இருவரும் NIIT யில் JAVA சேர்ந்தார்கள். பாதி நேரம் இன்ஸ்டிட்யூட் போகாமல் ஊர் சுற்றினார்கள். நாளாக நாளாக இருவரின் காதலும் வேகமாக வளர்ந்தது. பார்கவ் வீட்டின் தொலைப் பேசி கட்டணம் 6000, 7000 என்று ஏறிக்கொண்டே போனது. தீபாவையும், ராமனாதனையும் மற்ற நண்பர்களையும் முழுவதுமாக மறந்தான் பார்கவ். தீபாவுடன் கல்லூரியில் பேசுவதுடன் சரி. தினமும் மூன்று மணி நேரம் சௌம்யாவுடன் தொலைப்பேசியில் பேசுபவன் தீபாவிற்கு "Hi" மட்டும் சொல்வான், அதுவும் அவள் தொலைப் பேசியை எடுத்தால் மட்டுமே. ராமனாதனையோ பார்ப்பதே இல்லை.

ஒரு நிலையில் தீபாவிற்கு இரண்டு சிறந்த நண்பர்களை இழந்துவிட்டோம் என்ற நினைப்பு வாட்ட தொடங்கியது. அதற்கு வடிகாலாக இருந்தவன் தான் ராமனாதன். பார்கவின் மூலமாக அறிமுகம் ஆனவன். பார்கவ் மற்றும் சௌம்யாவின் புறக்கணிப்புகள் தீபாவிற்குள் ஏற்படுத்திய காயங்களுக்கு மருந்தாக இருந்தவன் ராமனாதன்.

இருவருக்கும் இடையில் இருந்த நட்பு வளர்ந்தது. ஒரு கட்டத்தில் தீபாவிற்கு பார்கவைவிட நெருங்கிய நண்பனானான் ராமனாதன். இதை எதையுமே உணரும் நிலையில் பார்கவ் இல்லை. சௌம்யாவே உலகம் என்று இருந்தான். அவனது முதல் ஆண்டு படிப்பும் முடிந்தது. கூடவே சௌம்யாவின் இறுதி ஆண்டு படிப்பும் முடிவிற்கு வந்தது. சௌம்யாவின் வீட்டிலும் அவளுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.

"இப்போ என்ன பண்ணலாம் Bharghav?"

"We can't ignore them Saumi. We need to do something."

"அதான் என்ன?"

"Tell them you are not yet ready for the marriage. Tell them you want to do your post graduation. ஒரு 2 or 3 years ஓட்டலாம்."

"நல்ல idea. சொல்லி பாக்கறேன்."

"நான் படிப்பு முடிக்கறதுக்கே இன்னும் 3 வருஷம் ஆகும் Saumi. அதுக்கு அப்புறம் வேலை கிடச்சு ஒரு ரெண்டு வருஷமாவது ஆகும் settle ஆகறதுக்கு. So we need to make your parents wait for atleast another 5 years. அதுக்கு ஒரே வழி நீ ஏதாவது PG படிச்சுட்டு வேலைக்கு போறது தான்."

"இதுக்கு தான் இந்த வயசு வித்தியாசம் ஒரு பிரச்சினையாக இருக்கும்னு முன்னாடியே சொன்னேன். நீ தான் கேக்கலே."

"Forget it Saumi. இப்போ ஆக வேண்டியத பாரு."

ஒரு வழியாக வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் தனது எண்ணத்தை சொல்லி சம்மதம் வாங்கினாள் சௌம்யா. இதுவரை மேல்படிப்பு பற்றி வாயே திறக்காதவள் இப்பொழுது திடீரென்று தனது ஆசையை சொல்லியது அவர்களுக்கு வியப்பளித்தது. ஆனாலும் அவர்கள் பெரிதாக ஒன்றும் அவளை வற்புறுத்தவில்லை. அவளது விருப்பம் போலவே விட்டுவிட்டார்கள். அவளும் தான் படித்த அதே SRC கல்லூரியில் M.Com. சேர்ந்தாள். மீண்டும் காதல் தேர் அசுர வேகத்தில் பயணிக்கத் தொடங்கியது.

7 Comments:

CVR said...

அடடா!!
இந்த வயசு வித்தியாசம் மேட்டரு நான் இப்போதான் கவனிக்கறேன்!!

சாதாரணமாவே நம்ம ஊருல காதல்னா கஷ்டம்!! இதுல இது வேறையா??
என்ன நடக்குதுன்னு பாப்போம்.. :-)

கோபிநாத் said...

அய்யோ..தல சீக்கிரம் அடுத்த பகுதியை போடுங்க...செம ஸ்பீடு தல ;))

SathyaPriyan said...

//
CVR said...
அடடா!!
இந்த வயசு வித்தியாசம் மேட்டரு நான் இப்போதான் கவனிக்கறேன்!!

சாதாரணமாவே நம்ம ஊருல காதல்னா கஷ்டம்!! இதுல இது வேறையா??
என்ன நடக்குதுன்னு பாப்போம்.. :-)
//
உண்மை தான் தல. அந்த விஷயத்தில் சென்னையைவிட திருச்சி இன்னும் மோசம் :-)

//
கோபிநாத் said...
அய்யோ..தல சீக்கிரம் அடுத்த பகுதியை
போடுங்க...செம ஸ்பீடு தல ;))
//
நன்றி தலைவா. எல்லாம் உங்க தயவு தான்.

Vino said...

அண்ணே மிக்க நன்றிகள் உங்களுக்கு ... நானும் தமிழ்ல பின்னுட்டம் இட்டு தன்யன்யானேன்

Karthika said...

Romba nalla iruku Kathai.....thodaranthu eluthunga....

Was in India for 4weeks so need to catch up with your other posts, for now I just started reading Ranga Bhavanam....

- Karthika

SathyaPriyan said...

//
Vino said...
அண்ணே மிக்க நன்றிகள் உங்களுக்கு ... நானும் தமிழ்ல பின்னுட்டம் இட்டு தன்யன்யானேன்
//
நன்றியல்லாம் எதற்கு?. நீங்கள் தொடர்ந்து பதிவை படிப்பதே மகிழ்ச்சி.

//
Karthika said...
Romba nalla iruku Kathai.....thodaranthu eluthunga....
//
நன்றி Karthika.

//
Was in India for 4weeks so need to catch up with your other posts, for now I just started reading Ranga Bhavanam....
//
அப்படியா? என்னடா ரொம்ப நாளா ஆளயே காணோமேன்னு பார்த்தேன்.
பயணமெல்லாம் எப்படி இருந்தது?

BABU said...

Excellent!!

I really enjoyed your free flow in writing. Thanks to blogs for providing a platform for hidden talents in people like you.