Tuesday, June 17, 2008


Asterix & Obelix - Part 1

சென்ற ஆண்டு எனது பிறந்த நாளன்று மாலை அலுவல் முடிந்து வீடு திரும்பிய பொழுது எனக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 20 நல்ல Asterix & Obelix கதைகள் Barnes & Nobles புத்தகக் கடையிலிருந்து வந்திருந்தன. சிறு வயதில் அன்னியிடம் கடன் வாங்கி அதனை படித்தது இன்றும் எனக்கு நினைவில் இருக்கிறது. ஒரு பக்கத்தில் கல்கி, ரா.கி., சோ, ஜெயகாந்தன், சுஜாதா, பாலகுமாரன் என்று படித்துக் கொண்டு இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் காமிக்ஸ் என்றும் சொல்ல முடியாமல் ஃபிக்க்ஷன் என்றும் சொல்ல முடியாமல் இருந்த இந்த கதைகள் என்னை படிக்கும் பொழுதே மிகவும் கவர்ந்தன.

எந்த புத்தகத்தையும் விலைக்கு வாங்கியே படிக்கும் பழக்கம் உடைய எனக்கு 200 ரூபாய் கொடுத்து நாற்பது பக்க படக்கதை ஒன்று வாங்கும் அளவிற்கெல்லாம் வசதி இல்லாததால் அந்த புத்தகத்தை விலைக்கு வாங்க முடியவில்லை.

வளர்ந்து வேலைக்கு சென்ற கால கட்டங்களில் அந்த புத்தகத்தை மீண்டும் வாங்க வேண்டும் என்ற ஆசை வந்த பொழுது 200 ரூபாய் என்பது 600 ரூபாயாக பெங்களூர் Landmark ல் உயர்ந்து விட்டது. 20 புத்தகங்களுக்கு 12000 ரூபாய் என்பது என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியாத தொகை. அந்த ஆசை நிறைவேறாமலேயே மனதின் மூலையில் தூங்கிக் கொண்டிருந்த பொழுது அந்த புத்தகங்கள் முழூ தொகுப்பாக நண்பன் ஒருவன் மூலம் CD வடிவில் கிடைக்க நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கணினியில் அதனை படிப்பதை வழக்கமாக்கிக் கொண்டேன்.

அமெரிக்கா வந்த பின்னர் அதனை புத்தகமாக வாங்க வேண்டும் என்று பல நாட்கள் நினைத்து வாங்காமல் விட்டது பிறந்த நாளன்று மனைவி மூலம் கை கூடியது. குழந்தையின் குதூகலத்துடன் இரண்டே நாட்களில் அனைத்து புத்தகங்களையும் மீண்டும் படித்து முடித்தேன்.

இக்கதையினை பற்றிய ஒரு சிறு குறிப்பு.

இக்கதையின் ஆசிரியர் Goscinny. ஓவியங்கள் வரைந்தவர் Uderzo. 1961 ஆம் ஆண்டு தொடங்கி 2005 ஆம் ஆண்டு வரை வெளிவந்த 33 புத்தகங்களில் முதல் 24 புத்தகங்களை எழுதியவர் Goscinny. அவரின் மரணத்திற்கு பிறகு Uderzo அடுத்த 9 புத்தகங்களை எழுதியும் ஓவியங்களை வரைந்தும் வெளியிட்டார்.

1961 ஆம் ஆண்டு முதலில் வெளிவந்த "Asterix the Gaul" கதையில் அனைத்து பாத்திரங்களும் அறிமுகப்படுத்தப்படும். அதில் கதையின் தொடக்கத்திலிருந்து இறுதிவரை கதா பாத்திரங்கள் ஒரே மாதிரி வரையப்படாமல் சிறிது சிறிதாக மாறுவதை கவனிக்கலாம். கதையின் இறுதியில் Uderzo ஒரு முடிவான சட்டத்திற்குள் (Frame) பாத்திரங்களை கொண்டு சென்று அதன் பின்னர் அனைத்து கதைகளிலும் ஒரே மாதிரி வரைந்திருப்பார்.

அடுத்து வெளிவந்த கதைகளை படித்து விட்டு இந்த கதையை பின்னர் படிப்பவர்கள் இதனை எளிதாக கண்டுணரலாம்.

இனி இக்கதையின் முக்கிய கதா பாத்திரங்களுக்கு வரலாம்.

Asterix: Asterix ஒரு போர் வீரன். எல்லா கதையின் நாயகர்களைப் போலவே இவனும் மிகுந்த அறிவுக் கூர்மை உடையவன்.

Getafix: இவர் ஒரு Druid (மந்திர சக்தி வாய்ந்த மருத்துவர் என்று வைத்துக் கொள்ளலாம்). இவர் ஒரு விதமான மந்திரக் கூழை தயார் செய்வதில் வல்லவர். அதனை அருந்தும் அனைவருக்கும் சிறிது காலம் உடல் வலிமை பல மடங்கு அதிகரிக்கும்.

Obelix: இவன் Asterix ன் உயிர் நண்பன். இக்கதையின் இரண்டாம் நாயகன். அறிவுக் கூர்மை சற்று குறைச்சலாக கொண்டவன். Wild Boar எனப்படும் ஒரு வகை பன்றிகளை வேட்டையாடி புசிப்பதும், ரோமானியர்களை பந்தாடுவதும் இவன் விருப்பத்துடன் செய்யும் செயல்கள். Getafix காய்ச்சிய மந்திரக்கூழ் அடங்கிய பாத்திரத்தில் சிறு குழந்தையாக இருந்த பொழுது இவன் விழுந்து விட்டான். அதனால் அதன் சக்தி இவன் மீது நிரந்தரமாக பதிந்து விட்டது.

மற்றும் சிறிதும் பெரிதுமாக பல பாத்திரங்கள். இவர்கள் Gauls என்ற பழங்குடியினர். இவர்கள் அனைவரும் வசிப்பது ஒரு கிராமத்தில்.

Getafix ன் மந்திரக் கூழின் உதவியுடன் ரோமானிய படையெடுப்பை இந்த கிராமத்தினர் முறியடிக்கிறார்கள். அவர்களின் மந்திர சக்தியை அறிந்து கொண்ட ஜூலியஸ் ஸீஸர் போரின் மூலம் அவர்களை வெல்ல முடியாது என்று முடிவு செய்து பல சதி திட்டங்கள் செய்கிறார். Getafix ன் மந்திரக் கூழின் உதவியுடன் Asterix மற்றும் Obelix இருவரும் எவ்வாறு அந்த சதிகளை முறியடிக்கிறார்கள் என்பது தான் கதை. ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு சதி. ஒவ்வொரு கதைக் களம்.

கதாபாத்திரங்களின் தன்மையை நன்கு உணர்ந்து படிப்பவர்கள் வரிக்கு வரி நகைச்சுவை தூவப்பட்டு இருப்பதை படித்துணரலாம்.

அடுத்த பகுதியில் நான் படித்த மற்றும் நான் பரிந்துரை செய்யும் கதைகள்.

27 Comments:

இராம்/Raam said...

சூப்பரு.... நானும் இதை வாங்கி படிக்கலாமின்னு லேண்ட்மார்க்'லே எடுத்து பார்த்தேன்...

பூராவும் இங்கிலிபிசு'லெ இருந்துச்சு... டிக்சனரியெல்லாம் எடுத்து வைச்சிக்கிட்டு எதுக்கு கஷ்டப்படனுமின்னு பேசமே வைச்சிட்டு வந்துட்டேன்... :)

வல்லிசிம்ஹன் said...

ஆஸ்ட்ரிக்ஸ் விசிறியா. ஆஹா. நல்வரவு.

பெரிய புத்தகங்கள் தானே?
ஏனெனில் ஒரு எழுத்து கூட விட்டுவிட முடியாதே.
அதுவுமில்லாமல் ஓபிலிக்ஸின் கோப முகம் பார்க்க வேண்டுமே:)
டாக்மாட்டிக்ஸ்!!
நன்றி சத்யப் ப்ரியன். உங்கள் மனைவியின் அன்பு வாழ்க.

Iyappan Krishnan said...

http://cool-mycollections.blogspot.com/search/label/Comics

SathyaPriyan said...

//
இராம்/Raam said...
சூப்பரு.... நானும் இதை வாங்கி படிக்கலாமின்னு லேண்ட்மார்க்'லே எடுத்து பார்த்தேன்...

பூராவும் இங்கிலிபிசு'லெ இருந்துச்சு... டிக்சனரியெல்லாம் எடுத்து வைச்சிக்கிட்டு எதுக்கு கஷ்டப்படனுமின்னு பேசமே வைச்சிட்டு வந்துட்டேன்... :)
//
:-) அதே அதே சபா பதே.

//
வல்லிசிம்ஹன் said...
ஆஸ்ட்ரிக்ஸ் விசிறியா. ஆஹா. நல்வரவு.
//
ஆமாம் மேடம்.

//
உங்கள் மனைவியின் அன்பு வாழ்க.
//
ஆஹா, இப்படியெல்லாம் சொல்லி உசுபெத்தி விடாதீங்க. அவங்க பிறந்த நாளுக்கு நமக்கு பெரிய ஆப்பு இருக்கு.

//
Jeeves said...
http://cool-mycollections.blogspot.com/search/label/Comics
//
நன்றி Jeeves. இந்த சுட்டி பலருக்கு பயன்படும்.

ஆனால் எனகென்னவோ புத்தகமாக படிக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி இதில் கிடைப்பதில்லை.

dondu(#11168674346665545885) said...

ஆங்கில மொழிபெயர்ப்புக்கே இப்படி கிறங்கிப் போகிறீர்களே. பிரெஞ்சு மூலத்தில் தூளோதூள் ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ambi said...

//Asterix ஒரு போர் வீரன்//


அதானே, இப்ப தெரியுது ஏன் நீங்க துடிச்சீங்கனு! :))

SathyaPriyan said...

//
dondu(#11168674346665545885) said...
ஆங்கில மொழிபெயர்ப்புக்கே இப்படி கிறங்கிப் போகிறீர்களே. பிரெஞ்சு மூலத்தில் தூளோதூள் ஆஸ்டெரிக்ஸ் காமிக்ஸ்.
//
வாங்க dondu சார்.

எல்லோருமே மூல மொழிகளை கற்று அதில் வரும் புத்தகங்களையே படித்து விட்டால், உங்களை போன்ற மொழி பெயர்ப்பாளர்களுக்கு வேலை இல்லையே? :-)

//
ambi said...
/Asterix ஒரு போர் வீரன்/
அதானே, இப்ப தெரியுது ஏன் நீங்க துடிச்சீங்கனு! :))
//
ஆஹா நீங்க குத்து மதிப்பாதான் கேட்டீங்களா? நானா தான் உளறிட்டேனா?

SP.VR. SUBBIAH said...

முப்பது வருடங்களுக்கு முன்பு ஆன்லுக்கர் மாதிரி பத்திரிக்கையில் தொடராக சில கதைகள் வந்தது
நானும் படித்திருக்கிறேன்
ஓவியங்கள் தரத்துடன் இருக்கும். அதுதான் சிறப்பு!
பதிவிற்கு நன்றி நண்பரே!

பெத்தராயுடு said...

ஆஸ்ட்ரிக்ஸ் படம் 'Astérix et Obélix contre César' பார்த்திருக்கிறீர்களா?
'உலகத்தரத்தில்' எடுக்கவேண்டும் என்று சூப்பர் நகைச்சுவையுடன், அருமையான க்ராபிக்ஸுடன் ப்ரெஞ்சுத் திரையுலகம் எடுத்த படம். படத்தை ப்ரெஞ்சு மொழியில் பாரிஸ் நகர திரையரங்கில் கண்டது மறக்க முடியாதது. ஹீரோயின் லட்டீஷியா கஸ்ட்டா படத்தோட டிவிடிய வாங்க வச்சிட்டாங்கன்னா பாருங்களேன்.

SathyaPriyan said...

//
SP.VR. SUBBIAH said...
முப்பது வருடங்களுக்கு முன்பு ஆன்லுக்கர் மாதிரி பத்திரிக்கையில் தொடராக சில கதைகள் வந்தது
நானும் படித்திருக்கிறேன்
//
வாங்க வாத்தியார் ஐயா. 30 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தில் இது பிரபலமா?

புதிய தகவலுக்கு நன்றி.

//
ஓவியங்கள் தரத்துடன் இருக்கும். அதுதான் சிறப்பு!
பதிவிற்கு நன்றி நண்பரே!
//
ஆமாம் ஐயா. ஓவியம் மற்றும் தாளின் தரத்திற்கு தான் அந்த விலை.

//
பெத்த ராயுடு said...
ஆஸ்ட்ரிக்ஸ் படம் 'Astérix et Obélix contre César' பார்த்திருக்கிறீர்களா?
'உலகத்தரத்தில்' எடுக்கவேண்டும் என்று சூப்பர் நகைச்சுவையுடன், அருமையான க்ராபிக்ஸுடன் ப்ரெஞ்சுத் திரையுலகம் எடுத்த படம்.
//
வாங்க பெத்த ராயுடு. இல்லையே நான் பார்த்தது இல்லையே.

நான் அங்கிலப் படங்களே அமெரிக்கா வந்த பிறகு தான் சிறிது பார்க்க தொடங்கி இருக்கிறேன். என்னிடம் போய் நீங்கள் பிரஞ்சு படத்தை பற்றி கேட்கிறீர்களே?

//
ஹீரோயின் லட்டீஷியா கஸ்ட்டா படத்தோட டிவிடிய வாங்க வச்சிட்டாங்கன்னா பாருங்களேன்.
//
ஆஹா அவங்க தான் படத்தோட selling point ஆ?

Unknown said...

//Obelix: இவன் Asterix ன் உயிர் நண்பன். இக்கதையின் இரண்டாம் நாயகன். அறிவுக் கூர்மை சற்று குறைச்சலாக கொண்டவன். // அண்ணன் ஒபிலிக்ஸ் அறிவை குறை சொன்னதற்காக அ.உ.ஒ.ர.ம. சார்பாக மென்ஹிர்கள் ட்ரக்கில் வருகின்றன.

//ஆனால் எனகென்னவோ புத்தகமாக படிக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி இதில் கிடைப்பதில்லை// அது என்னவோ உண்மை தான். சிறு வயதில் உறவினர்கள் வீடுகளில், லெண்டிங் லைப்ரரிகளில் விழுந்து விழுந்து படித்தது... இப்பவும் அப்படித் தான். இது, டின்டின், ஆர்ச்சி...ம்... அது ஒரு கனாக்காலம்.

நட்சத்திர வார வாழ்த்துக்கள்.

CVR said...

I still remember the sequence where caesar tries to outwit them by purchasing useless "Menhirs" ,thereby forcing them to make more and more of it!!
An awesome lesson in marketing!

பெத்தராயுடு said...

////
ஹீரோயின் லட்டீஷியா கஸ்ட்டா படத்தோட டிவிடிய வாங்க வச்சிட்டாங்கன்னா பாருங்களேன்.
//
ஆஹா அவங்க தான் படத்தோட selling point ஆ?//

படத்தில அவங்க வயதான மருத்துவர் Getafix-ஸோட இளம் மனைவி ;)
ப்ரெஞ்சுக்காரங்க குசும்பே தனிதான்.

வல்லிசிம்ஹன் said...

பெத்த ராயுடு ,

நானும் ஆஸ்ட்ரிக்ஸ் படம் ஒண்ணு பார்த்தேன்.
எனக்கென்னவோ காமிக்ஸில் கிடைத்த மகிழ்ச்சி படம் பார்க்கும்போது இல்லை.
இந்த என் டி ஆர் ,ராமன் கிருஷ்ணனைப் பார்த்துட்டு வேற யாரையும் ஏத்துக்க முடியாத மாதிரி:))

SathyaPriyan said...

//
கெக்கேபிக்குணி (05430279483680105313!) said...
அண்ணன் ஒபிலிக்ஸ் அறிவை குறை சொன்னதற்காக அ.உ.ஒ.ர.ம. சார்பாக மென்ஹிர்கள் ட்ரக்கில் வருகின்றன.
//
ஐயையோ......... வருங்கால அமெரிக்க ஜனாதிபதி அண்ணன் ஒபிலிக்ஸ் வாழ்க.

//
சிறு வயதில் உறவினர்கள் வீடுகளில், லெண்டிங் லைப்ரரிகளில் விழுந்து விழுந்து படித்தது... இப்பவும் அப்படித் தான். இது, டின்டின், ஆர்ச்சி...ம்... அது ஒரு கனாக்காலம்.
//
ஆமாங்க. சிறு வயது நியாபகம் பசுமையாக இருக்கின்றது.

//
நட்சத்திர வார வாழ்த்துக்கள்.
//
மிக்க நன்றி.

//
CVR said...
I still remember the sequence where caesar tries to outwit them by purchasing useless "Menhirs" ,thereby forcing them to make more and more of it!!
An awesome lesson in marketing!
//
Indeed.........

தல எங்க ஆளையே காணோம். ஆணி அதிகமா?

//
பெத்த ராயுடு said...
ப்ரெஞ்சுக்காரங்க குசும்பே தனிதான்.
//
:-)

//
வல்லிசிம்ஹன் said...
நானும் ஆஸ்ட்ரிக்ஸ் படம் ஒண்ணு பார்த்தேன்.
எனக்கென்னவோ காமிக்ஸில் கிடைத்த மகிழ்ச்சி படம் பார்க்கும்போது இல்லை.
//
வழிமொழிகிறேன் வல்லி மேடம்.

மங்களூர் சிவா said...

வாசிப்பு அனுபவம் அதை கொடுக்கும் விதம் அருமை.

ஜீவ்ஸ் சுட்டிக்கு நன்றி.

SathyaPriyan said...

//
மங்களூர் சிவா said...
வாசிப்பு அனுபவம் அதை கொடுக்கும் விதம் அருமை.
//
நன்றி சிவா.

இலவசக்கொத்தனார் said...

ஒவ்வொரு பெயரிலும் இருக்கும் நுண்ணரசியல் என்னை பிரமிக்க வைத்தது!! நானும் விழுந்து விழுந்து படித்த அணியைச் சேர்ந்தவன்.

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//ஆனால் எனகென்னவோ புத்தகமாக படிக்கும் பொழுது கிடைக்கும் மகிழ்ச்சி இதில் கிடைப்பதில்லை//

உண்மை சத்யா!
படமாக்கப்பட்ட பல நாவல்களும், புத்தகத்தில் கற்பனை விரிவது போல் விரியாது!
அதே நாவலை இணையத்திலோ, இல்லை கணிணியிலோ படிக்கும் போதும் சுவாரஸ்யம் பிடிபடாது!

தூங்கும் முன்னர் மல்லாக்க படுத்துக்கிட்டு படிப்பதும் ஒரு சுகம்!
பேருந்தில், தொடர் வண்டியில் அத்தனை பேர் மத்தியிலும் நானும்-ஃப்ரோடோவும் தனியாகப் பயணிப்பதும் ஒரு சுகம்!

இணையத்தில் ப்ரிண்ட் எடுத்தும் படித்துப் பார்த்தேன்! ஆனால் அந்த "நமக்கே-நமக்கு" மிஸ்ஸிங்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கூழை மாற்றிக் காய்ச்சி, அதனால் தாடி/மீசை வளர்ந்து கொண்டே போகும் ஃபார்முலா வரும் கட்டங்கள் பற்றிச் சொல்லலையே! அதே போல Cacofonix -உம் அவன் பாட்டும்! மரத்து மேல குடிசை போட்டவன் இவனாத் தான் இருப்பான்! இப்போ Tree House/Wood Pecker House என்றெல்லாம் வேற வேற டிசைன்கள் வந்துவிட்டன!

SathyaPriyan said...

//
இலவசக்கொத்தனார் said...
ஒவ்வொரு பெயரிலும் இருக்கும் நுண்ணரசியல் என்னை பிரமிக்க வைத்தது!! நானும் விழுந்து விழுந்து படித்த அணியைச் சேர்ந்தவன்.
//
ஆஹா! நீங்களுமா? ஒரு குரூப்பாதான்யா கிளம்பி இருக்கீங்க.

//
kannabiran, RAVI SHANKAR (KRS) said...
படமாக்கப்பட்ட பல நாவல்களும், புத்தகத்தில் கற்பனை விரிவது போல் விரியாது!
அதே நாவலை இணையத்திலோ, இல்லை கணிணியிலோ படிக்கும் போதும் சுவாரஸ்யம் பிடிபடாது!
//
அதே அதே சபா பதே.

//
தூங்கும் முன்னர் மல்லாக்க படுத்துக்கிட்டு படிப்பதும் ஒரு சுகம்!
//
பொன்னியின் செல்வனை அப்படி படித்து பல நாட்கள் ஆகி விட்டது.

//
கூழை மாற்றிக் காய்ச்சி, அதனால் தாடி/மீசை வளர்ந்து கொண்டே போகும் ஃபார்முலா வரும் கட்டங்கள் பற்றிச் சொல்லலையே!
//
மாற்றி காய்ச்ச மாட்டர்கள். வேண்டுமென்றே ரோமானியர்களுக்கு கொடுப்பதற்காக அப்படி காய்ச்சி விடுவார்கள்.

//
அதே போல Cacofonix -உம் அவன் பாட்டும்!
//
அடுத்த பதிவில் அது.

பெத்தராயுடு said...

நான் படிச்ச ஆஸ்ட்ரிக்ஸ் புத்தகம் என்னவோ ஒண்ணே ஒண்ணுதான். அதுக்கப்பறம் பாத்தது இந்தப் படத்ததான். அதனால நிறையப் பேர் இங்கு குறிப்பிடும் வாசிப்பனுபவம் எனக்கு இருந்ததில்ல :)

அதிலும் 1998ல ப்ரான்ஸ்ல இருந்தப்பபோ, இந்த 'ஒலகத்தர படமெடுக்கும்' ஆசை ப்ரெஞ்சுத் திரைத்துறையினரிடம் இருந்ததால், எங்களாலும் முடியும் என்று ஹாலிவுட்டிற்குக் காட்ட எடுக்கப்பட்ட படம். அதனால லோக்கல் மக்கள் படத்த பாருங்கன்னு சொல்லிட்டிருப்பாங்க.

உண்மையைச் சொன்னா தசாவதாரத்தவிட அந்தப்படத்தோட க்ராபிக்ஸ் அட்டகாசமா இருக்கும்.

இத்தோட என் சிற்றுரையை முடிச்சுக்கிறேன். உடு ஜூட்.

SathyaPriyan said...

//
பெத்த ராயுடு said...
உண்மையைச் சொன்னா தசாவதாரத்தவிட அந்தப்படத்தோட க்ராபிக்ஸ் அட்டகாசமா இருக்கும்.
//
இதுக்கு பேரு தான் உள் குத்தா??? :-))

CVR said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்
அநியாயத்துக்கு ஆணீஸ் ஆப் ஆன் ஆர்பர் ஆகிப்போச்சு அண்ணாச்சி!!!
ஒன்னும் சொல்றதுக்கில்ல....
:(

Jay said...

சிறுவயதில் சில புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன். சில காலத்திற்கு முன்னர் கார்டூனாக சிங்களத்தில் ரூபவாஹினி தொலைக்காட்சியில் காட்டுவார்கள்.

இதைவிட டின் டின் இன்னும் அருமை

SathyaPriyan said...

//
CVR said...
அவ்வ்வ்வ்வ்வ்வ்
அநியாயத்துக்கு ஆணீஸ் ஆப் ஆன் ஆர்பர் ஆகிப்போச்சு அண்ணாச்சி!!!
ஒன்னும் சொல்றதுக்கில்ல....
:(
//
ஆணிகள் தொல்லை விரைவில் நீங்க வாழ்த்துகிறேன்.

//
Mayooresan said...
சிறுவயதில் சில புத்தகங்கள் வாசித்திருக்கின்றேன். சில காலத்திற்கு முன்னர் கார்டூனாக சிங்களத்தில் ரூபவாஹினி தொலைக்காட்சியில் காட்டுவார்கள்.

இதைவிட டின் டின் இன்னும் அருமை
//
டின் டின் நான் படித்ததில்லை. படித்து விட்டு கருத்து சொல்கிறேன். வருகைக்கு நன்றி.

Anonymous said...

wooooooo.......... its my favourite comic book. i love obelix. hate asterix. i cant believe someone has spent time to write abt it. *clap* *clap* :-)

Am new to ur blog.. so commenting here though its late