பொதுவாக நான் பிற தளங்களில் இருந்து செய்திகளை அப்படியே எனது பதிவுகளில் தருவதில்லை. இருந்தாலும் நட்சத்திர வாரத்தில் பலரும் எனது பதிவுகளை படிக்கக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்பதால் நான் படித்து என்னை மிகவும் பாதித்த சில கட்டுரைகளை இந்தப் பதிவில் தொகுத்து தருகிறேன்.
தான் ஒன்பது வயதிலிருந்தே துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் மீனா, தனது முதல் அனுபவத்தை நடுக்கத்தோடு விவரிக்கிறார்: "கூடை நிறைய மலத்தைத் தலையில் சுமந்து கொண்டு நடந்தேன். அப்போது கால்கள் தடுமாறி கீழே விழுந்தேன். அழுது கொண்டிருந்த என்னைத் தூக்கிவிட யாரும் வரவில்லை. காரணம், கூடையிலிருந்த மொத்த மலமும் என் மேல் கொட்டியிருந்தது. இன்னொரு துப்புரவுப் பெண் வந்து தூக்கிவிடும் வரை நான் அழுதபடி அப்படியே கிடந்தேன். மொத்த உலகத்தில் மிகவும் துரதிர்ஷ்டமான பெண்ணாக என்னை அப்போது உணர்ந்தேன்."
மீனா போன்ற பல துப்புரவு தொழிலாளர்களின் அவல நிலை பற்றி அறிந்து கொள்ள இங்கே செல்லுங்கள்.
தலித்துகள் தலைவர்களானால் அவர்கள் மீது நடத்தப்படும் வன்கொடுமைகள் நிற்கும் என்ற நம் நம்பிக்கை தவறு என்று கூறுகிறது இந்தக் கட்டுரை.
பஞ்சாயத்து தலைவரான பிறகும்கூட சேர்வாரன், பஞ்சாயத்து அலுவலகத்தைப் பெருக்கி, கழுவி, சுத்தம் செய்யும் துப்புரவுப் பணி யாளராகவே இருக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். வட்டார ஊராட்சி அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் வந்தபோது, சனவரி மாதம் நடந்த கூட்டத்தில்தான் ஒரே ஒருமுறை மட்டும் அவர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார். தன்னைக் கேட்காமல் முடிவெடுப்பதால் உதவி தலைவரும், அவருடைய கணவரும், 'ஏண்டா சக்கிலியப் பயலே உனக்கெல்லாம் நாங்க பதில் சொல்லணுமோ, நீ கையெழுத்துப் போட்டாதான் நாங்க வேலை செய்யணுமா, இருலே உன்ன என்ன செய்யறேன்னு பாரு' என்று தொடர்ந்து மிரட்டப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க இங்கே செல்லுங்கள்.
இரட்டைக் குவளை மற்றும் இரட்டை இருக்கை முறைகளுக்கு எதிராக திண்டுக்கல் மற்றும் பழனி மாவட்டங்களில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் நடத்திய பிரச்சாரத்தில் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகளை பற்றிய கட்டுரை.
"பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு? தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம்?"
என்பது போன்ற கேள்விகள் தான் மிஞ்சின. முடிவில் பிரச்சாரத்தை முடிக்காமலே உயிருக்கு பயந்து திரும்பி வந்து விட்டனர் என்கிறது கட்டுரை.
சாதியின் கோர முகத்தை மென்மையான கரங்களால் பிய்த்து எறிய முடியாது. சாதி தனது இருப்பை என்றுமே மென்மையாக வெளிக் காட்டியதில்லை. கீழ் வெண்மணி, மேலவளவு, கயர்லாஞ்சி என எங்கும் நாம் கண்டது, சாதியின் கொடூர முகத்தை மட்டுமே. எதிர்ப்புகளும் போராட்டங்களும் மட்டும் எதற்கு மென்மையாய்?
என்று முடிக்கிறார் கட்டுரை ஆசிரியர்.
முழுதும் படிக்க இங்கே செல்லவும்.
ஆசிரியர் கையில் வைத்திருந்த பிரம்பு குத்தி பார்வையிழந்தவர்கள், உப்பு மீது முட்டிக்கால் போட வைத்ததால் கால் ஊனமான மாணவர்கள், ‘ஸ்குரு டிரைவர்' கொண்டு அடித்ததால் மண்டை உடைந்த மெக்கானிக் சிறுவர்கள்...
எனப் பள்ளிகளில், பணியிடங்களில், குடும்பங்களில் மற்றும் பல இடங்களில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.
இந்தியாவில் இந்து மதம் மேல் மற்ற மதங்கள் எல்லாம் கீழ்; இந்து மதத்தில் சாதியப்படி நிலைகளில் பார்ப்பனர்கள் மேல் மற்றவர் அனைவரும் கீழ்; ஆண்கள் மேல், பெண்கள் கீழ்; அதேபோல் பெரியவர்கள் மேல், குழந்தைகள் கீழ். எப்படி தலித் மக்களை ஒடுக்க சாதி இந்துக்கள் ஒன்று கூடுகிறார்களோ, பெண்களை அடக்க மதம், சாதி வேறுபாடுகளின்றி ஆண்கள் ஒன்று கூடுகிறார்களோ - அதைப் போலவே குழந்தைகளை சாதி, மத, பாலினப் பாகுபாடுகளைக் கடந்து அனைவருமே ஒடுக்குகிறார்கள். இது, மூத்தோர் ஆதிக்க உலகம் (Adult Chauvinism).
என்று அதற்கான காரணங்களையும் அழகாக பட்டியலிடுகிறார் கட்டுரை ஆசிரியர்.
மேலும்
இந்தியா, தனது மொத்த வருவாயில் வெறும் 3.5 சதவிகிதமே குழந்தைகளின் கல்விக்கும், உடல் நலத்திற்கும் செலவிடுகிறது.
போன்ற புள்ளி விபரங்களும் உள்ளன.
நீங்களும் படியுங்களேன்.
சண்டையா இருந்ததால நா புள்ளைங்கள ஸ்கூல்ல இருந்து கூட்டிக்கிட்டு வந்தேன். அப்போ திருநா மாதிரி வாட்டமா எதிர்க்க ஒரு கும்பல் வந்திச்சி. வழியில மாட்ன என்ன அவங்க அடிக்க வந்தாங்க. நா இந்துன்னு சொன்னா உட்டுடுவாங்கன்னு நெனச்சி, 'நான் இந்துங்க' ன்னு சொன்னேன். அப்போ கூட என்ன விடல அடிச்சாங்க. என் ஊட்டு ஓட்டயெல்லாம் கடப்பாறையால அடிச்சி நொறுக்கிட்டாங்க
என்று எறையூரில் மதம் மாறிய தலித் கிறிஸ்துவர்களுக்கு எதிராக நடந்த வன்கொடுமைகளை பட்டியலிடுகிறது இந்தக் கட்டுரை.
இவை அனைத்திற்கும் முத்தாய்ப்பாக நண்பர் ஆழியூரானின் சாதி சூழ் உலகு பதிவினை படியுங்கள்.
தலித் முரசு தளம் முழுவதும் HTML வடிவிலிருந்து PHP வடிவிற்கு மாறிவிட்டதால் எனது சேமிப்பில் இருந்த பல சுட்டிகள் வேலை செய்யவில்லை. அதனால் மீண்டும் தேடி எடுத்து சில சுட்டிகளை மேலே தந்துள்ளேன். இவை வெகு சிலவே.
"இந்தியாவில் சாதிக் கொடுமைகளெல்லாம் இப்பொழுது எங்கே இருக்கின்றது? வலைபதிவில் தான் எதற்கெடுத்தாலும் சாதி சாதி என்று கூறி கும்மியடிக்கிறார்கள்" என்று கூறுபவர்கள் அவசியம் மேலே உள்ள கட்டுரைகளை படித்து விட்டு வாருங்கள். உங்கள் மனதிற்குள் விவாதித்து தெளிவான முடிவெடுங்கள். நாளைய விடியல் நல்லதாக அமையட்டும்.

8 Comments:
உருப்படியான பதிவு
//
தமிழ்சினிமா said...
உருப்படியான பதிவு
//
நன்றி தமிழ்சினிமா.
எனது மற்ற பதிவுகளெல்லாம் உருப்படி இல்லை என்கிறீர்களா? :-)
அன்பு நண்பர் சத்ய ப்ரியனுக்கு
கீற்று தளத்தில் இருந்தும், தலித் முரசுலிருந்தும் நீங்கள் கொடுத்த இணைப்பிற்கு மிக்க நன்றி, அதில் பல வற்றை நான் ஏற்கனவே படித்துள்ளேன், சில்வற்றை நிச்சயம் படித்து விடுகிறேன்...நல்ல பதிவு....
நான் உங்களை கமல் திரைப் படம் பார்க்க வரும் பொழுது மிஸ் செய்து விட்டேன்?!
மயிலாடுதுறை சிவா...
//
மயிலாடுதுறை சிவா said...

நன்றி சிவா.

நானும் தான். ஆனால் நீங்களும் அந்த காட்சிக்கு வந்திருக்கிறீர்கள் என்பதிலிருந்து ஊகிக்கிறேன்.
நடு வரிசையில் அமர்ந்திருந்தீர்களா?
மடத்தில் குற்றவாளிகள் இருக்க மாட்டர்களா? என்ற கேள்வி வரும் பொழுது பெரிதாக கை தட்டியது நீங்கள் தானே? :-)
நல்ல பதிவு.
அப்ப மத்த பதிவெல்லாம் நல்லா இல்லையானு ரிப்ளை போடாதீங்க வித்தியாசமா முயற்சி பண்ணுங்க!!!!
:))))))))
"மடத்தில் குற்றவாளிகள் இருக்க மாட்டர்களா? என்ற கேள்வி வரும் பொழுது பெரிதாக கை தட்டியது நீங்கள் தானே? :-)
எப்படி சத்யன் மிகச் சரியாக கவனித்து உள்ளீர்கள்?! உங்களுக்கு ஒன்றும் அதில் வருத்தம் இல்லையே? ;-))
மயிலாடுதுறை சிவா...
உங்களின் பகிர்வுகள் மிகவும் பயனுள்ளவை.
நன்றி...!!
//
மங்களூர் சிவா said...
நல்ல பதிவு.
//
நன்றி சிவா.
//
அப்ப மத்த பதிவெல்லாம் நல்லா இல்லையானு ரிப்ளை போடாதீங்க வித்தியாசமா முயற்சி பண்ணுங்க!!!!
//
அதுக்கு ரூம் போட்டு தான் யோசிக்க வேண்டும் :-))
//
மயிலாடுதுறை சிவா said...
எப்படி சத்யன் மிகச் சரியாக கவனித்து உள்ளீர்கள்?!
//
ஒருவரை பற்றி அறிந்து கொள்ள அவரது எழுத்துக்களை தொடர்ந்து படித்து வந்தால் போதுமே :-)
//
உங்களுக்கு ஒன்றும் அதில் வருத்தம் இல்லையே? ;-))
//
எனகென்ன வருத்தம் சிவா? அவரது கூற்று உண்மை தானே.
உலகில் நல்லவர்கள் மட்டுமே இருக்கும் இடம் என்று எதுவுமே இல்லையே.
//
நிமல்/NiMaL said...
உங்களின் பகிர்வுகள் மிகவும் பயனுள்ளவை.
நன்றி...!!
//
நன்றி நிமல்.
Post a Comment